தொடரும் தோழர்கள்

வியாழன், ஆகஸ்ட் 09, 2012

சென்னையை நெருங்கும் சுனாமி!

ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி ஞாயிறன்று  ஒரு சுனாமி சென்னையைத் தாக்கப் போகிறது!

உலகத்தமிழ்ப் பதிவர்கள் ஆழிப்பேரலையென சென்னையில் அன்று கூடப் போகிறார்கள்.

இது அழிக்கும் சுனாமியல்ல;ஆக்கும் சுனாமி!

சிறு மழைத்துளியாகத் தொடங்கிய முயற்சி இன்று அனைவரின்  ஒத்துழைப்பினால், ஆழிப்பேரலையெனத் திரண்டு விட்டது.பல கட்ட ஆலோசனைக்குப் பின், பலரது உழைப்பின் பலனாக நிகழ்ச்சிக்கு இறுதி வடிவம் கொடுக்கப் பட்டு,மின் அழைப்பிதழ் தயாராகி விட்டது.------


  இது அனைவருக்கும் விடுக்கப்படும் தனிப்பட்ட அழைப்பு!

  ஏனெனில்    இது நம்  வீட்டு விழா!

ஆழிப்பேரலையெனத்  திரண்டு வாருங்கள் நண்பர்களே!

சந்திப்போம் சென்னையில்!

நெஞ்சில் தொடங்கிய நட்பு அன்று கண்களிலும் கனியட்டும்!

வாழ்த்துகள்..

55 கருத்துகள்:

  1. உலகத்தமிழ்ப் பதிவர்கள் ஆழிப்பேரலையென சென்னையில் அன்று கூடப் போகிறார்கள்.

    இனிய வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  2. மின் அழைப்பிதல் தயார். 10,000 வாட்ஸ் ட்ரான்ஸ்பார்மர் சென்னை பித்தன் அவர்கள் தலைமையில்..கெட் ரெடி போல்க்ஸ்!!

    பதிலளிநீக்கு
  3. சுனாமியில் ஸ்வ்மிங் போட காத்திருக்கும் பித்தன் பாசறை

    பதிலளிநீக்கு
  4. நண்பர்களைக் காண ஆர்வமாக உள்ளேன்...

    பதிலளிநீக்கு
  5. சென்னையை நோக்கி திரண்டு வாருங்கள் பதிவர்களே..

    பதிலளிநீக்கு
  6. சென்னை பித்தன் .........

    பித்தன் என்று பெயர் காரணம் மற்றவர்களை பித்து பிடிக்க வைப்பதா ? தலைப்பை கண்டு பயந்துதான் வந்தேன் சுனாமியை எதிர்கொள்ள ..........ஆனால் நாம் கூட ஒரு அலையென வர நினைத்தேன் பின்பு நன்றி

    பதிலளிநீக்கு
  7. சந்திப்பு தித்திப்பாக வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. @ டெமோ
    //அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு//

    என்னது அனைத்து உலகவா?

    பதிலளிநீக்கு
  9. விழா இனிது நடைபெற வாழ்த்துக்கள்! அதில் கண்டுகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. சுனாமியாய் புறப்பட்டோம்.

    பதிலளிநீக்கு
  11. ஆள் ஆளுக்கு தலைப்பிலேயே மிரட்டுறீங்க. விழாவில் என்னென்ன ஆச்சரியம் காத்திருக்கோ?

    நாளை காலை "விழா பற்றி இதுவரை வெளிவராத தகவல்களுடன்" விரிவாய் பதிவிடுகிறேன்

    பதிலளிநீக்கு
  12. அனைவரையும் வருக வருகவென வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. வாழ்த்துக்கள் ஐயா....
    வருகிறேன் நானும்..
    சந்திப்போம் சென்னையில்..
    ஆவலுடன் ஒரு காத்திருப்பு..

    பதிலளிநீக்கு
  14. அருமையான தலைப்பு! அனைவரையும் படிக்க வைக்க! நன்றி!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  15. மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துவரும்
    சென்னைப் பதிவர்களைச் சந்தித்து
    நன்றி சொல்ல அவசியம் வருகிறோம்
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புலவர் ஐயா தலைமையில் ,உங்கள் முன்னிலையில்தானே கவிஅரங்கமே!
      எதிர்பார்ப்புடன்,
      நன்றி

      நீக்கு
  16. பதிவர் சந்திப்பு சிறப்புடன் வெற்றி பெற வாழ்த்துக்கள் அய்யா.

    பதிலளிநீக்கு
  17. எங்கெங்கு காணினும் சுனாமி அழைப்பு அதிரவைக்கிறதே தல...வாழ்த்துகள்...!

    பதிலளிநீக்கு
  18. கலக்கலாக நடக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. சிறப்புடன், வெற்றியுடன் அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு