தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஆகஸ்ட் 17, 2012

”நான்”--- ஒரு பார்வை


’நான்’ ஒரு விறு விறுப்பான திரைப்படம்.

சஸ்பென்ஸ் படம்.

மறக்க முடியாத படம்.

ஒரு பெரிய சொத்துக்கு வாரிசு யார் என்று கண்டுபிடிக்கப் போட்டிகள் வைப்பார்கள்.

அதில் ரவிச்சந்திரன்,மனோகர்,நாகேஷ் ஆகியோர் தாங்கள்தான் வாரிசு என்று சொல்லிக் கொண்டு வருவார்கள்.

அவர்கள் யாருமே வாரிசு இல்லை ,முத்துராமன்தான் வாரிசு என்பதே சஸ்பென்ஸ்!

(அய்யய்யோ! சஸ்பென்ஸை உடைத்து விட்டேனே!)

உண்மையான வாரிசைத் தேர்ந்தெடுக்க  மூன்று பேர் கொண்ட ஒரு குழு இருக்கும்.

அவர்கள்தான் ஜட்ஜ்—ராக் ஸ்டார்,எவர் ஸ்மைலிங், ப்ப்ளி –போல.

அந்தக் குழுவில் ஒருவர்தான் கன்னையா!

ஒரு நிறுவனத்தின் பெயரோ,ஒரு பாத்திரத்தின் பெயரோ பல நடிகர்களுடன் ஒட்டிக்கொள்ளும்.

இங்கு,கன்னையாவுக்கு,அவர் அப்படத்தில் பேசிய வசனமான ”என்னத்த” என்பதே பெயருடன் சேர்ந்து அவர் என்னத்தக் கன்னையாவாகவே அறியப்பட்டார்.

பல படங்களில் நடித்தாலும் மீண்டும் ஒரு நினைவில் நிற்கும் பாத்திரம் அவர் டாக்சி ஓட்டுநராக வடிவேலுவுடன் வந்து கலக்கும் பாத்திரம்.

என்னத்தே என்ற வசனம் எவ்வளவு பிரபலமோ ,அந்த அளவுக்குப் பிரபலம்”வரும், ஆனா வராது “ என்ற வசனமும்.

கன்னையா அவர்கள் சமீபத்திதான் காலமானார். மறக்க முடியுமா அவரை?

கன்னையாவை என்னத்தே கன்னையாக்கிய படம் “நான்”

ஒரு மறக்க முடியாத படம்தானே!



26 கருத்துகள்:

  1. சஸ்பென்ஸை உடைத்து விட்டீர்களே !

    சிறப்பான விமர்சனம் ..

    பதிலளிநீக்கு
  2. "நான்" அப்போ இது புதிய படம் இல்லையா .... விஜய் அண்டோனி ஹீரோ இல்லையா....?

    ஹி ஹி ஹி

    பதிலளிநீக்கு
  3. தங்களின் குறும்பை ரசித்தேன் ஐயா... நன்றி... (TM 2)

    பதிலளிநீக்கு
  4. நடிகர் என்னத்தே கன்னையா மேல் வரிசை பற்கள் மட்டும் தெரியும்படி, கண்களை ஒருமாதிரி வைத்துக் கொண்டு பழைய எம்ஜிஆர் (ராஜா ராணி கதைப் ) படங்களில் வருவார். ”நான்” படத்தில் அவருடைய ”என்னத்தே” வசனம் பற்றிய உங்கள் மலரும் நினைவுகள் அருமை!

    பதிலளிநீக்கு
  5. இரண்டு தடவைக்கு மேல் நான் பார்த்த படம் ‘நான்’. உண்மைதான் என்னத்த கன்னையா அவர்களையும் மறக்க இயலாது ‘நான்’ திரைப்படத்தையும் மறக்க இயலாது.

    பதிலளிநீக்கு
  6. மிகச்சிறந்த எனக்கு மிகவும் பிடித்தமான படம். அந்த என் சிறிய வயதில் நான் ஒரு இருபது முறை இதே படத்தைப்பார்த்துள்ளேன். ஒவ்வொரு சீனும் இன்றும் ஞாபகத்தில் உள்ளது.


    பாடல்கள் அத்தனையும் நன்றாக இருக்கும்.
    இன்றும் நினைவில் உள்ளவை:

    ராஜா கண்ணு போகாதடி போனால் நெஞ்சுக்கு ஆகாதடி..... லேஸா சொக்கா போடாதடி....

    போதுமோ இந்த இடம்.....கூடுமோ அந்த சுகம்
    எண்ணிப் பார்த்தால் சின்ன இடம் ... இருவர் கூடும் நல்ல இடம் [ஃபீயட் காரில் அதுவும் மழையில்]

    அம்மன்னோ சாமியோ அத்தையோ மாமியோ ....
    கம்பனூர் நீதியோ ... கல்யாண சேதியோ .......


    அசோகன், மனோஹர், ஜெயலலிதா, ரவிச்ச்ந்திரன், நாகேஷ் போன்ற அனைவரின் நடிப்பும் சிறப்பாக இருக்கும்.

    ”என்னத்த நடிச்சு என்னத்த உங்களுக்குப் புடிச்சு” என்கிறீர்களா?

    நாகேஷின் அம்மாவும் நாகேஷ் தான்.
    ”குமட்டுல குத்துவேன்” என்று சொல்லும் போதெல்லாம் எவ்ளோ சிரிப்பாக இருக்கும்.

    பகிர்வுக்கு நன்றி, சார்.

    பதிலளிநீக்கு
  7. அடடா நான் இதுவரை நான் வியஜ் அண்டனியின் படமென்றிருந்தேனே.... :(

    பதிலளிநீக்கு
  8. என்னால் மற்க்க ம்உடியாத நகைச்சுவைகளில் ஒன்று வரும் ஆனா வராது......

    பதிலளிநீக்கு
  9. நான் பேச நினைப்பதெல்லாம் அழகாக தோற்றமளிக்கிறது...... ஐயா

    பதிலளிநீக்கு
  10. மறக்கமுடியாத படம்! மறக்க முடியாத நடிகர்! வரும் ஆனா வராது என்று அவர் வடிவேலுடன் நடித்ததையும் எளிதில் மறக்க முடியாது!

    இன்று என் தளத்தில்
    திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
    குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html




    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சொந்தமே!நானும் விஐய் அன்ரனி இலங்கை பாடலாசிரியர் அஸ்மினின் வரிகளில் பாடல் அமைந்த படம் என்றல்லவா நினைத்தேன்.பறவாயில்லை.பழையது தான் எனக்கு புதிது.வாழ்த்துக்கள் சொந்தமே!

    இன்னும் சொல்லுவேன் சத்தமாய்! ..!!!!

    பதிலளிநீக்கு
  12. @சிட்டுக்குருவி
    இரண்டு நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  13. வருவேன் ஆனால் வரமாட்டேன் என்று எமனுக்கு டேக்கா கொடுத்திருக்கலாம் .. நகைச்சுவையில் தனக்கு என்று ஒரு பாணியை உருவாக்கியவர் .. வாசுதேவன்

    பதிலளிநீக்கு