தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஆகஸ்ட் 19, 2012

பதிவர் பாசறை-வகுக்கப்பட்ட வியூகங்கள்!


பாசறை என்பது என்ன?

ஏதேனும் ஒரு பணிக்காக கூட்டாக திட்டமிட்டு இயங்கும் இடம்.” என்பது அச்சொல்லின் விளக்கம்.திட்டமிட்டு இயங்கும் இடம் மட்டுமல்ல,திட்டமிடும் இடமுமாகும்.

அந்நாட்களில் போர்க்களத்தில் வீரர்கள் பாசறைகளில்தான் தங்குவர்.

அடுத்த நாள் போருக்கான திட்டம்,வியூகம் எல்லாம் தளபதிகளால் அந்தப் பாசறைகளில்தான் வகுக்கப்படும்.வெற்றி என்ற இலக்கை எட்ட அத் திட்டங்கள் தேவை.

கடந்த சில வாரங்களாக நம் பதிவர் நண்பர்கள் பலர்,கே.கே.நகர்.டிஸ்கவரி புத்தக மகாலில் ஞாயிறன்று மாலை பாசறை அமைத்து,பதிவர் மாநாடு சிறப்பாக நடைபெறத் திட்டங்கள் தீட்டி வருவது அனைவரும் அறிந்ததே.

அடுத்த ஞாயிறன்று  விழா நடக்க இருக்கையில் இன்று மாலை கடைசிப் பாசறைக் கூட்டம் நடைபெற்றது.

இத்தனை வாரங்களாக ஒரு கூட்டத்திலும் கலந்து கொள்ளாத நான் இன்று கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

கலந்து கொண்டவர்கள்-

1.புலவர் இராமானுசம் ஐயா---புலவர் கவிதைகள்
2.சிவகுமார்---மெட்ராஸ்பவன்
3ஆரூர் மூனா செந்தில்---தோத்தவன்டா
4.மோகன்குமார்----வீடு திரும்பல்
5.ஜெயகுமார்---பட்டிக்காட்டான் பட்டணத்தில்
8.பாலகணேஷ்-மின்னல் வரிகள்
9.மதுமதி---தூரிகையின் தூறல்
10.செல்வின்—அஞ்சா சிங்கம்
11.சீனு---திடங்கொண்டு போராடு
12.டி.என்.முரளிதரன்
13.சே.அரசன் ---கரை சேரா அலை
14.லதானந்த்
15.கௌதம்
(யாராவது விட்டுப் போயிருந்தால் மன்னிக்கவும்)

நான் என் காமிராவை எடுத்துச் செல்லவில்லை.தவறு.

கைபேசியில் எடுத்த  படங்கள் தெளிவாக இல்லாத காரணத்தால்  அதிக படங்கள் எடுக்கவில்லை

எடுத்த மோசமான படங்கள் இதோ!

                                             இந்தப்படத்துக்கு நன்றி-ஜெயகுமார்
என்ன பேசினோம்,என்ன திட்டம் தீட்டினோம் ,என்ன வியூகம் வகுத்தோம் என்பதெல்லாம், சிவகுமார்,மோகன் குமார் ,மதுமதி....................ஆகியோர் எழுதுவர்.எனவே நான் எழுதவில்லை.

D Day---26-08-2012

ஆரம்பமுதல் நிகழ்ச்சியின் வெற்றிக்காக அயராது உழைக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு ராயல் சல்யூட்!

36 கருத்துகள்:

 1. பாசமான பாசறைத் திட்டங்கள்.
  நீங்கள் கலந்து கொண்டது குறித்து மகிழ்ச்சி.
  களத்தில் சந்திப்போம்.நன்றி !

  பதிலளிநீக்கு

 2. பித்தன் அய்யா அதற்குள் சூடான ஒரு பதிவா... ஆமா ஆலோசனைக் கூட்டம் காரசாரமத் தான்பே இருந்தது, பின் ஏன் திடங்கொண்டு போராட வேண்டியவர் மிக சோகமாகக் காட்சியளிக்கிறார். ( இந்தக் கேள்வியை வேறொருவர் கேட்டு சீனுவை அசிங்கப் படுத்தும் முன்...... நமக்கு நாமே என்பது அருமையான திட்டம்....)

  பதிலளிநீக்கு
 3. ஆரம்பமுதல் நிகழ்ச்சியின் வெற்றிக்காக அயராது உழைக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு ராயல் சல்யூட்!

  பதிலளிநீக்கு
 4. பாசறைக் கூட்டம் முடிந்து அனைவரும் வீடு திரும்பும் முன்னரே படங்களோடு செய்தி வெளியிட்டுள்ளீர்கள். தகவலுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 5. பதிவர் சந்திப்பு சிறப்புற நடைபெற எனது வாழ்த்துகள்.!

  பதிலளிநீக்கு
 6. ருந்தாலும் நீங்கள் தான் எங்கள் முதல்வர. தங்களையும் தாண்டி விமர்சனங்கள் வரும்.

  பதிலளிநீக்கு
 7. பதிவர் சந்திப்பின் பாசறைக் கூட்டம் குறித்த
  செய்தியும் பாசறைக்கான விளக்கமும் அருமை
  பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 8. பதிவர் சந்திப்பு வெற்றிபெற வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு

 9. சூடாகவும் சுவையாகவும் தங்கள் பதிவே வழக்கம்
  போல் முதலில் வந்துள்ளது. நன்றி!

  பதிலளிநீக்கு
 10. அனைத்து நண்பர்களுக்கும் ஒரு ராயல் சல்யூட்...!

  விழா சிறக்க வாழ்த்துக்கள்... நன்றி...(TM 9)

  பதிலளிநீக்கு
 11. என்ன வேகம் இளைஞரே... அழகாய் பாசறை பற்றிய விவரங்களை அளித்து மகிழ்வை ஏற்படுத்தி விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 12. உங்கள் பதிவின் வேகமும், எழுதிய விதமும் நீங்கள் யூத் என்பதை பறைசாற்றுகிறன...:)

  பதிலளிநீக்கு
 13. @சீனு
  போராடிக் களைத்து விட்டார் போலும்!
  நன்றி

  பதிலளிநீக்கு
 14. @ஆரூர் மூனா செந்தில்

  உடன்பிறப்பே!போற்றுவோர் போற்றட்டும்,புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும். கலங்கிடாதே கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு இவற்றைக் கை விட்டிடாதே!
  (பாதி விழுங்கி விட்டீர்கள்!)
  நன்றி

  பதிலளிநீக்கு
 15. @புலவர் சா இராமாநுசம்
  நன்றி புலவர் ஐயா

  பதிலளிநீக்கு
 16. ஐயா நிகழ்வை கலக்கிடலாம் ... திருவிழா சிறப்பது உறுதி

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் ஐயா,
  நீண்ட நாட்களின் பின்னர் வந்தேன்,
  புதுப் பொலிவுடன் வலை அழகாக காட்சி தருகிறது.
  தங்களின் இனிய முயற்சி புத்தெழுச்சியுடன் இடம் பெற சிறியேனின் வாழ்த்துக்களையும் இப் பின்னூட்டம் வாயிலாகப் பகிர்ந்து கொள்கிறேன்.

  நன்றியுடன்,
  நிரூபன்

  பதிலளிநீக்கு
 18. மீண்டும் வாழ்த்துகிறேன் பதிவர் சந்திப்பு சிறப்பாக நடை பெற

  பதிலளிநீக்கு
 19. பகிர்வுக்கு நன்றி ஐயா!

  இன்று என் தளத்தில்
  அஞ்சு ரூபாய் சைக்கிள்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_20.html

  பதிலளிநீக்கு
 20. விழா சிறக்க வாழ்த்துக்கள்... நன்றி....

  பதிலளிநீக்கு
 21. Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

  பதிலளிநீக்கு
 22. நிகழ்ச்சியின் வெற்றிக்காக அயராது உழைக்கும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு