தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஆகஸ்ட் 03, 2012

நான் பாடினால்? நிலா,நிலா,ஓடிப்போ!


நிலா!

நாம் வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்திலும் நம்முடன் இணைந்து அந்த வயதுக்கான உணர்வுகளுக்குத் துணை நிற்கும் ஓர்  அழகு.

தாய், நிலாவைக் காட்டிச் சோறூட்டும்போது பாடுகிறாள்.

“நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மேலே ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா”

எவ்வளவு அபஸ்வரமாகப் பாடினாலும் குழந்தைக்கு இனிக்கிறது.
நிலாவும் ஓடிப்போவதில்லை

கவிஞர்கள்தான் எத்தனை விதமாக நிலாவைப் பார்க்கிறார்கள்.
ஆனால் இந்த நாட்டுப்புறப் பாடலின் பார்வையே அலாதிதான்.

விண்மீன்களுக்கு நடுவே நிலா இருப்பது   எப்படித் தோன்றுகிறது

“சோளப்பொரி நடுவே சுட்டு வச்ச தோசையப் போல்”

என்ன இயல்பான உவமை!  யோசித்துப் பாருங்கள்

அதையும் இந் நிலா நின்று ரசிக்கிறது.

”வாராயோ வெண்ணிலாவே” என்று காதலர்கள் முறையிடும் போதும் நின்று கவனிக்கிறது நிலா.

ஆனால் நான் பாடியபோது ஓடிப்போனதேனோ?!

காதலியை நினைத்துத் “தூது நீ சொல்லி வாராய்,குளிர் நிலவே ”என்று பாடினேன்.

நிலா காணாமல் போய்விட்டது.!!

ஏன் இந்த ஓர வஞ்சனை.

நிகழ்ந்த ஆண்டு—1960,மே மாதம்.
இடம் -சிவகாசிப் பொருட்காட்சி நாடகமேடை.
ராஜராஜ நரேந்திரனாக நான்.(என் வயது 15)

ஒரு காட்சியில் இந்தப் பாட்டு .அது வேண்டாம் என நான் முடிவு செய்து,செட் அமைப்பாளரிடமும் சொல்லி விட்டேன்.ஆனால் அந்தக்காட்சி முடியும் நேரத்தில் இயக்குநர் உள்ளிருந்து என்னைப் பாடப் பணித்தார்.

வேறு வழியின்றி நான் பாடத் தொடங்கினேன்.

அதுதெரியாத அமைப்பாளர்  காட்சி முடிந்தது என எண்ணிஅதுவரை நிலவாக ஒளிர்ந்த விளக்கை எடுத்து விட்டார்.

நான் பாட,நிலா ஓட!! ஒரு வேளை உடனே தூது சொல்லப்போய் விட்டதோ!

பின் எப்போதும் நான் நிலாவை (என் காதலுக்கு) ஒரு துணையாக நினைக்கவேயில்லை!


39 கருத்துகள்:

 1. #நான் பாட,நிலா ஓட!! ஒரு வேளை உடனே தூது சொல்லப்போய் விட்டதோ!

  பின் எப்போதும் நான் நிலாவை (என் காதலுக்கு) ஒரு துணையாக நினைக்கவேயில்லை!#

  பழைய நினைவுகளை மீட்டிப் பார்ப்பதே ஒரு சுகம் தான். உங்கள் நினைவுகளில் நாங்களும் சற்று சுகம் கண்டோம். நன்றி.

  பதிலளிநீக்கு
 2. நல்லதொரு அனுபவ பகிர்வு ஐயா ஆனாலும் இந்த நிலாப் பாட்டுக்கு ரொம்பத்தான் ஆயுசு போல உங்க காலத்தில இருந்தே இந்த பாட்டு இருக்குதா ..

  (த மன .3)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிலா எந்நாளும் இருக்குமே(வளர்வதும் ,தேய்வதும்,காதலை வளர்ப்பதும்,தேய்ப்பதும்!)
   நன்றி சிட்டுக்குருவி

   நீக்கு
 3. //நான் பாட,நிலா ஓட!! ஒரு வேளை உடனே தூது சொல்லப்போய் விட்டதோ!//

  நல்ல நகைச்சுவை அனுபவம் தான்.

  பதிலளிநீக்கு
 4. நிகழ்சியை காட்சியாக எண்ணிப் பார்த்தேன்
  வெகு வெகு சுவாரஸ்யம்
  சுவாரஸ்யமான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. ரசித்துப் படித்தேன் ஐயா...

  நன்றி…
  (த.ம. 5)

  பதிலளிநீக்கு
 6. நாடக மேடையில் இதுபோன்ற ரஸமான அனுபவங்கள் பலருக்கு ஏற்பட்டதைப் பகிர்ந்த போதெல்லாம் ரசித்துப் படித்ததுண்டு. உங்களின் அனுபவமும் அவ்விதமே ரமணி ஸார் சொன்னது போல் மனதில் காட்சிப்படுத்திப் பார்த்து ரசிக்க வைத்தது. அருமை. (என்ன ஒரு கஷ்டம்.. உங்கள் சின்ன வயசு போட்டோவை பார்த்திராததால் இப்போதுள்ள பித்தரையே ராஜராஜ நநேந்திரனாக கற்பனித்தேன்.)

  பதிலளிநீக்கு
 7. ஆமாம் ஐயா நிகழ்வை கண்முன் நிறுத்திப் பார்த்தால் சிரிப்பு தாங்க முடியள.

  பதிலளிநீக்கு
 8. அன்று வந்தது மின்சார நிலா! இன்று வருவது என்றும் உள்ள நிலா!

  பதிலளிநீக்கு
 9. அனுபவத்தை
  அழகிய நகைச்சுவை கொண்டு
  விருந்தளித்த பதிவு ஐயா..

  பதிலளிநீக்கு
 10. படித்தேன் ருசித்தேன். நன்றி:)

  பதிலளிநீக்கு
 11. சுவையான அனுபவம்.... அடிகடி லவ் பீலிங் கதையா எழுத்ருரீங்கலே ... கொஞ்சம் ஓவர் பீலிங்கோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ”அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே,நண்பனே!”
   நன்றி சீனு

   நீக்கு
 12. சூப்பர் அண்ணா - 15 வயசுல ஓடிப்ப்போன நிலா இன்னிக்குவரைக்கும் திரும்ப வரலியா - பாவமே - ஆமா அப்புறம் எல்லாம் காதலுக்கு எதத் தூது விட்டீங்க அண்ணா - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் விட்டாலும் நிலா விடாதே சீனா .!

   ஒரு கவிதைக்குக் கரு தந்தீர்களோ!
   நன்றி.

   நீக்கு
 13. நீங்கள் வந்தபின், தான் தேவை இல்லை என்பதால் நிலவு ஓடியிருக்கும்!

  பதிலளிநீக்கு