தொடரும் தோழர்கள்

புதன், ஆகஸ்ட் 08, 2012

வாழ்க்கை வாழ்வதற்கே!


அது ஒரு சிறிய கடற்கரைக் கிராமம்.

அமைதி தவழும் இடம்.

அம் மக்களின் முக்கிய தொழிலே மீன் பிடிப்பதுதான்.ஆண்கள் கடலுக்குச் செல்வார்கள். தேவையான அளவு மீன் பிடிப்பார்கள்.தங்கள் உணவுக்கு வேண்டியதை வைத்துக்கொண்டு மீதியை விற்பார்கள்.அப்பணத்தில் தேவையான பொருட்கள் வாங்குவார்கள்.

வாழ்க்கையை மகிழ்ச்சியாகக்  கழித்து வந்தனர்.

ஒரு நாள் நகரத்திலிருந்து ஒருவர் அங்கு வந்தார்.

அங்கு கிடைக்கும் மீன்களின் தரம் கண்டு மகிழ்ந்தார்.

மீனவர்களிடம் கேட்டார்”மிக நல்ல மீன்கள் பெருமளவில் கிடைக்கிறதே! நீங்கள் என்ன செய்கிறீர்கள்?”

”எங்களுக்குத் தேவையான மீன்களைப் பிடிப்போம்.சமைப்போம்; சாப்பிடுவோம்.மனைவி மக்களுடன் இனிமையாகப் பொழுதைக் கழிப்போம்.  நண்பர்கள் கூடி அளவளாவுவோம்.நன்கு உறங்குவோம்.”

வந்தவர் கேட்டார்.”இங்கு அதிக அளவில் நல்ல நல்ல மீன்கள் இருக்கின்றன. இன்னும் அதிக நேரம் உழைத்து அதிக மீன்களைப் பிடிக்கலாமே?”

“பிடித்து?”மக்கள்

”உங்கள் நல்ல நேரம்.மேலாண்மைக் கல்வி பயின்ற நான் இங்கு வந்தது.நல்ல வழி நான் கூறுகிறேன்.
அதிக மீன்களை வெளிச் சந்தையில் நல்ல விலைக்கு விற்கலாம்.பணத்தைச் சேமிக்கலாம்.நல்ல எந்திரப் படகும்,கருவிகளும் வாங்கி இன்னும் அதிக மீன் பிடிக்கலாம்.இடைத் தரகர்கள் இன்றி மொத்த வியாபாரம் செய்து நீங்களே அதிக பொருள் ஈட்டலாம்”

“பிறகு?”

“பதப்படுத்தும் தொழிற்சாலை.மீன் எண்ணை தயாரிப்பு என்று தொழில் அபிவிருத்தி செய்து பெரிய பணக்காரர்களாக ஆகலாம்.”

“அதன்பின்?”

”பெரிய நகரத்தில் குடியேறி எல்லா வசதிகளுடனும் வசிக்கலாம்.மேலும் பொருள் ஈட்டலாம்”

“இதற்கெல்லாம் எத்தனை வருடம் ஆகும்?”

”இருபது முப்பது ஆண்டுகள் ஆகலாம்.’

“பிறகு?”

ஓய்வெடுக்க வேண்டியதுதான். சமுத்திரக்கரையில் ஒரு அழகிய இடத்தை வாங்கி,பெரிய மாளிகை கட்டி, உண்டு,உறங்கி,மனைவி மக்களுடன் இனிமையாகப் பொழுதைக் கழிக்கலாம்”

“அதைத்தானே நாங்கள் இப்போதே செய்து கொண்டிருக்கிறோம்!” என்றனர் அவர்கள்.

ஆம்! வாழ்க்கையில் எதை நோக்கிப்போக நினைக்கிறீர்களோ,அது இப்போதே உங்களிடம் இருக்கலாம்.

பணம் மட்டுமே வாழ்க்கையாகாது.

வாழ்க்கை உப்பு சப்பற்றுப் போகுமுன் உங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து விடுங்கள்!

(ணைய வரவு)

17 கருத்துகள்:

  1. வாழ்க்கையின் நியதி...

    குட்டிக்கதையில்..


    நிறையப்பேர் இப்படித்தான் பணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். அழகிய வாழ்க்கை அருகில் இருந்தும்...

    பதிலளிநீக்கு
  2. கருத்துள்ள கதை...

    இந்த பாட்டு ஞாபகம் வந்தது :

    "இருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி....
    எங்கெங்கோ அலைகின்றார்.... ஞானத் தங்கமே....
    அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே...."
    (படம் : திருவருட் செல்வர்)

    நன்றி ஐயா... வாழ்த்துக்கள்... (TM 5)

    பதிலளிநீக்கு
  3. வாழ்க்கை உப்பு சப்பற்றுப் போகுமுன் உங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து விடுங்கள்!//

    தற்போதைய சூழலில்
    அனைவருக்குமான
    கருத்தைச் சொல்லும் பதிவு அருமை
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. சபாஷ் சரியான ஆழமிக்க கருத்துக்கூறும் கதை வாழ்த்துக்கள்...:))

    பதிலளிநீக்கு
  5. வாழ்க்கையில் எதை நோக்கிப்போக நினைக்கிறீர்களோ,அது இப்போதே உங்களிடம் இருக்கலாம்.

    பணம் மட்டுமே வாழ்க்கையாகாது.

    வாழ்க்கை வாழ்வதற்கே!

    பதிலளிநீக்கு
  6. வாழ்க்கை உப்பு சப்பற்றுப் போகுமுன் உங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து விடுங்கள்!//
    நல்ல கருத்துள்ள குட்டிக்கதையைத் தந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. அருமையான பதிவு.நெத்தியடி பதில்.

    பதிலளிநீக்கு
  8. ஆஹா உன்னதாமான வாழ்க்கை கதை தல.....ஆசைகள்தான் மனிதனை தண்ணீரில்லா மேகமாக ஓட வைக்கிறது என்பதை அழகாக சொல்லிட்டீங்க...!

    பதிலளிநீக்கு
  9. வாழ்க்கை வாழ்வதற்கே,
    வாழ்ந்து பார்ப்போம்.
    அது முடிந்து போகும் முன்...

    பதிலளிநீக்கு
  10. வாழ்க்கை உப்பு சப்பற்றுப் போகுமுன் உங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து விடுங்கள்!

    வாழ்க்கைத் தத்துவம் அருமை அன்பரே.

    பதிலளிநீக்கு
  11. இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிக்க அலையும் மனிதனைப் பற்றிய சிந்தனைக் கதை.

    பதிலளிநீக்கு
  12. Idhe madhiriyaana kadhaiyai engeyo kettirukkiren. But, nalla arththamulla kadhai. Panam mattume vallvallave?
    Namma thalaththukkum vaangalen?
    http://newsigaram.blogspot.com

    பதிலளிநீக்கு