தொடரும் தோழர்கள்

திங்கள், ஆகஸ்ட் 06, 2012

இரு கவுஜகள்!--உன் மீது கொண்ட மயக்கம்;நீயில்லாத வீதி!


உன் மீது கொண்ட மயக்கம் 
---------------------------------------

உன்னை  நினைக்குங் கணந்தொறும்

உள்ளம் இனிக்கிறதே-உன்

வண்ணம் என்னை மயக்க

எண்ணமெல்லால் உன் மணம் நிறைக்க

என்ன செய்வேன் நான்? தடுக்கிறதே

இந்தக் கட்டுப்பாடுகள்?

கவலைகள் ஏதுமின்றி

தடுப்பவர் யாருமின்றி

என்றுன்னை ருசிப்பேன்

என் இனிய மைசூர்பாகே!
 ---------------------------------------------------

நீ இல்லாத வீதி!(இது ஒரு மீ.ப)
--------------------------


நீ இல்லாத வீதி


வெறிச்சோடிக் கிடக்கிறது!


நேற்றிருந்த நிலைமையே வேறு;


நீ கருப்புதான்!


ஆனால் அதுவும் ஒரு அழகுதான்.


உரத்த குரல்தான் உனக்கு


ஆனால் அதுவும் ஒரு இனிமைதான்!


பயம்தான் பலருக்கு உன்னிடம்!


ஆனாலும் என்னிடம் உனக்கு


அன்பு அதிகம்தான்!


சிறுவர்கள் சீண்டினால் சீறுவாய்


பைக் இளைஞர்களை நீ சாடுவாய்!


கலகலப்பாய் இருந்த வீதி


இன்று களையிழந்து நிற்கிறது!


நீ இல்லாத வீதி வெறிச்சோடிக் கிடக்கிறது!


கார்ப்பரேஷன் நாய் வண்டி


நேற்றுன்னைப் பிடித்ததனால்!
----------------------------------------

14 கருத்துகள்:

 1. மைசூர்பாக்கு கவிதை பாகாக இருந்தது...
  மீள் பதிவு படித்ததில்லை... அருமை....
  நன்றி…(T.M.2)


  என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

  பதிலளிநீக்கு
 2. ஆஹா , இரண்டிலும் எதிர்பாராத ' ட்விஸ்ட் '
  கொடுத்து எங்களுக்கு கடுக்காய் , பல்பு
  தந்து விட்டீர்கள். இதல்லவோ கவிதை-கள் !

  விஜயம் செய்யவும் :
  புதுசு கண்ணா புதுசு ......இது என் தளத்தில்....
  ***** உறங்கா நோன்பு ***** ------ கவிதை கதை - பாகம் - 2
  http://sravanitamilkavithaigal.blogspot.in/

  பதிலளிநீக்கு
 3. நான் எருமையோ என்று நினைத்தேன் நாயாக மாறிவிட்டது

  பதிலளிநீக்கு
 4. பித்தருக்கு உடலில் ஷுகர் ஸ்டாக் இருக்கிறதோ... மைசூர்பா மீதெல்லாம் பா எழுதத் தோன்றுகிறதே... அருமையா இருந்துச்சு தல!

  பதிலளிநீக்கு
 5. மைசூர் மீதான காதல் அழகாகாத்தான் ஐயா இருந்தது.

  பதிலளிநீக்கு
 6. சுகர் பிரீ இருக்க கவலை எதற்கு..?
  இரண்டு மைசூர்பா வாங்கி சுவைக்கலாமே அய்யா!
  இப்படி ”பா” எழுதி சப்புக்கொட்ட வேண்டியதில்லையே..!ஹஹா!

  பதிலளிநீக்கு
 7. இரண்டு கவிதைகளுமே அருமை. வழக்கம்போல் ஆரம்பத்தில் ஆவலை உண்டாக்கி கடைசியில் சிரிக்க வைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. அய்யா வணக்கம்..

  கவிதையினால் சிந்திக்க மட்டுமல்ல சிரிக்கவும் முடிகிறது..

  பதிலளிநீக்கு
 9. எதிர்பாராத முடிவுகள் இரண்டு பொக்கிஷங்களிலும்........
  அழகாக ரசிக்கக் கூடியதாக இருக்கிறது ஐயா

  பதிலளிநீக்கு
 10. என்றுன்னை ருசிப்பேன்

  என் இனிய மைசூர்பாகே!//

  ஸ்ஸ்ஸ்ஸ் அபா......இன்னைக்கு விக்கியை காணோமே....தப்பிச்சுட்டானோ...?

  சூப்பர் தல.....!

  பதிலளிநீக்கு
 11. இரண்டாவது கவிதை நான் ஏற்கனவே உங்க பிளாக்கில் படிச்சுட்டேனே படிச்சுட்டேனே...!

  பதிலளிநீக்கு