தொடரும் தோழர்கள்

சனி, ஆகஸ்ட் 18, 2012

இரயில் நிலையமா?அகதிகள் முகாமா?நெஞ்சு பொறுக்குதில்லையே!

சொந்த நாட்டுக்குள்ளேயே ஒரு மாநில மக்கள் அகதிகள் போல் அலையும் பரிதாபம் இன்று இந்தப் புண்ணிய பூமியில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

எங்கோ எழுந்த கலவரம்பெரிதாக வளர்ந்து.எரிகின்ற தீயை மேலும் சில விஷமிகள் ஊதிப் பெரிதாக்க ,பிற மாநிலங்களில் உள்ள அஸ்ஸாம் மாநில மக்கள்,தங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என உணர்ந்து ஆயிரக் கணக்கில் தங்கள் மாநிலத்துக்குத் திரும்பிக் கொண்டிருக்கி றார்கள். 


                                              ( படங்கள்:டைம்ஸ் ஆஃப் இந்தியா)
இந்த நாட்டைப் பற்றிச் சொல்லும்போது நேரு அவர்கள் சொன்னார்கள்-” unity in diversity “(வேற்றுமையில் ஒற்றுமை) என்று.எங்கே போயிற்று அந்த ஒற்றுமை?எங்கே போயிற்று அந்தப் பண்டைய பாரதப் பண்பாடு?சொந்த நாட்டிலேயே உயிருக்குப் பயந்து ஒரு மாநில மக்கள்,பிற மாநிலங்களில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டால், என்றாவது ஒரு நாள் diversity மட்டும்தான் இருக்கும்; unity  இருக்காது.பாரதம் இருக்காது.

இதில் இன்னும் வருத்தம் என்ன வென்றால்,வடகிழக்கு மாநிலங்களின்  மக்கள் அனைவரும் கிட்டத்தட்ட ஒரே முக அமைப்பு உள்ளவர்கள்.எனவே, மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆயினும் அவர்களும் இந்தப் புயலில் சிக்க வேண்டியதுதான்.

 இன்று இப்படி ஒரு நிலை வருகிறது என்றால் யார் யார் காரணம் என்பதை நாமறிவோம்;இந்த நாடறியும்.கைப்பூணுக்குக் கண்ணாடி தேவையில்லை.

”ஒரு கூட்டத்தில் நாங்கள் தனித்துத்தெரிகிறோம்.மங்கோலியர் போல் தோற்றமுள்ள எங்களை அனைவரும் இனம் கண்டு கொள்வர்.நான் ஒரு மாணவன்.என் போன்றோருக்குப் பல நண்பர்கள் இருக்கிறார்கள். செய்தித்தாள்,தொலைக்காட்சி,இணையம் என்று பல தொடர்புகள் உள்ளன, அதனால் எங்கு என்ன நடக்கிறது என அறிகிறோம்.எங்களால் அந்த அளவு அச்சமின்றி இருக்க முடிகிறது.ஆனால் கட்டிடத் தொழிலாளர்கள், கொத்தடிமைகளாய் இருப்பவர் ஆகியோரது நிலை?அவர்களுக்கு இந்த வசதிகள் இல்லை.அவர்களிடம் கைபேசி இருக்கலாம்.ஆனால் வதந்திகள் குறுஞ்செய்தி மூலமே அதிகமாகப் பரவி அச்சத்தை அதிகப் படுத்துகின்றன. எங்கள் மாநிலத்தில் அமைதி இல்லை என்று இங்கு வந்தால் இங்கும் அமைதி இன்றிப் போய்விட்டதே?”-இது சென்னையில் படிக்கும் ஒரு அஸ்ஸாமிய மாணவனின் குமுறல்(நன்றி :டைம்ஸ் ஆஃப் இந்தியா)

“கண்ணிலாக் குழந்தை கள்போல்-பிறர்
காட்டிய வழியிற்சென்று மாட்டிக்கொள்வார்”

நெஞ்சு பொறுக்குதில்லையே!

20 கருத்துகள்:

  1. உண்மையில் நெஞ்சு பொறுக்குதில்லை தான் .

    பதிலளிநீக்கு
  2. எங்கள் மாநிலத்தில் அமைதி இல்லை என்று இங்கு வந்தால் இங்கும் அமைதி இன்றிப் போய்விட்டதே?”

    அவரது நம்பிக்கை பொய்யானமைக்காக
    நிச்சய்ம நாமெல்லாம் வெட்கப் படத்தான் வேண்டும்
    சிந்திக்கத் தூண்டும் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. கைப்பூணுக்குக் கண்ணாடி தேவையில்லை.

    பதிலளிநீக்கு
  4. நெஞ்சு பொறுப்பதில்லைதான். ... பார்க்க பரிதாபமாக இருக்கிறது! எல்லோரும் திரும்பிப் போகிறோம் என்று மொத்தமாக சொந்த ஊரில் கூடினால் என்ன ஆகும் என்றும் யோசனையாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  5. இப்படியே போனா ஒற்றுமை அப்படிங்கிறது இல்லாம நாடே உடைஞ்சிரும்.

    பதிலளிநீக்கு


  6. யார் வைத்த தீயோ இப்படி பற்றி எரிகிறது! இது தொடர்கதையானால் ஏக இந்தியா என்பது உடைந்து
    விடும்் என்பதில் ஐயமில்லை!

    பதிலளிநீக்கு
  7. mumbai muslim vaitha thee edu.... ennum
    ethanai column than congress poli madacharbinmai enra peyaril muslimgaluku
    taaja cheyya povathai vidumo

    பதிலளிநீக்கு
  8. வேலையின் நிமித்தம் மும்பை, பெங்களூரு சென்றுவிட்டு சென்னை திரும்பியபோது சென்ட்ரல் நிலையத்தில் கண்ட காட்சிகள் மலைக்க வைத்தன. மும்பை கலவரம் நடந்தபின்னர் பெங்களூரில் வதந்தி திட்டமிட்டே பரப்ப பட்டது எதிர்கட்சி ஆளும் மாநிலம் என்பதால். பெங்களூர் சிட்டி ரயில் நிலையம் வந்தபோது அங்கு ஆயிரக்கணக்கில் இவர்கள் தங்கி இருந்தனர் தங்களின் அடுத்த ரயில்களுக்கு. அகதிகள் முகாம் போலவே இருந்தது. பின்னர் மாலை சென்னை வந்து இறங்கியபோதும், பெங்களூர் ரயில் நிலையத்தில் கண்ட அதே காட்சிகளை இங்கும் காண முடிந்தது. சாலைகளிலும் பார்க் ஸ்டேஷனிலும் கால் வைக்க இடமில்லாமல் இம்மக்கள் மூட்டை முடிச்சிகளுடன் இவர்கள் தங்களின் சொந்த மாநிலம் திரும்பும் நிலை.

    மதிய அரசு கொல்லிகட்டையால் தலை சொரிந்து கொண்டுள்ளது. இதன் விளைவுகள் மோசமாகவே இருக்கும். தமிழ் நாட்டை பொறுத்த வரை இங்கு அம்மா இருப்பதால் "தாஜா" செய்ய மாட்டார். கலககாரர்களை யாரையும் தொலை உரித்து தொங்க விடுவார். என நம்பலாம்.

    பதிலளிநீக்கு
  9. செய்திகள் மிகவும் வருத்தம் அளிக்கின்றன ஐயா.

    பதிலளிநீக்கு
  10. According to the latest News telecast in all the English channel SMSs/video clips have been uploaded in Pakistan.New type of cyber war leading to unprecedented violence and fear in the minds of those from North
    east.The exodus of people from North East from Bangalore has been such that the Home Minister of Karnataka had to rush to the Railway station to assure those leaving that they need not fear and that their safety is assured.This timely action has resulted in positive development and less number of people are leaving Bangalore now. But as you have nicely put we should do all in our powers to ensure Unity in Diversity is preserved.
    Services of celebrities like film stars could be enlisted to spread the message of non violence .
    MERA BHARATH MAHAN.Jai Hind.
    Vasudevan

    பதிலளிநீக்கு
  11. அஸ்ஸாமில் கலவரம் ஏற்பட காரணம் என்னவென்று அரசுக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் கையை கட்டிக்கொண்டு வெறுமனே வேடிக்கை பார்ப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கும் மண் மோகன் அரசு புதிதாக அதிரடியாக ஏதாவது செய்துவிடும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.ஓட்டுக்காக மதசார்பின்மை என்ற பெயரில் தீவிரவாதத்தை தூக்கிப்பிடிக்கும் மதவிஷமிகளை கண்டும் காணாதது போல இருப்பது ஆபத்தானது.இந்த கலவர சூழ்நிலைக்கு யார் காரணம் என்பது தெரிந்தும் நாமெல்லாம் சும்மா ஒதுங்கி போவதும் கூட நல்லதல்ல.இஸ்லாமிய தலைவர்கள் இதில் மனசாட்சியோடு தலையிட்டு நிலைமை சீராவதற்கு ஏதாவது செய்தால் (இது நடக்காத காரியம்) நலமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  12. என்ன செய்வது சார் வேற்றுமை மட்டும் தான் உள்ளது ஒற்றுமையத் தொலைத்து விட்டோம்

    பதிலளிநீக்கு
  13. செய்தியைப் படித்தபோது சொந்த நாட்டுக்குள்ளேயே மக்கள் அகதிகள் போல் இருக்கவேண்டிய நிலை அறிந்து வருத்தப்பட்டேன்.ஆனால் மற்ற மாநிலங்களைப் பார்க்கையில், நம் தமிழகத்தில் வேற்று மாநிலத்தவரை நாம் அன்னியராகப் பார்க்காமல் அரவணைத்துக்கொண்டு தான் இருக்கிறோம். யாரோ அனுப்பிய பொய் தகவலின் விளைவே இந்த நிலை. விரைவில் இது மாறி ஊர் திரும்பியவர்கள் மகிழ்ச்சியுடன் இங்கு வருவார்கள் என்பது உறுதி.

    பதிலளிநீக்கு
  14. உண்மைதான்! பஞ்சம் பிழைக்க வரும் மற்ற மொழி மாநில மக்களை இப்படி துரத்துவதும் விரட்டுவதும் கொடுமை!

    இன்று என் தளத்தில்
    திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1
    http://thalirssb.blogspot.in/2012/08/1.html

    பதிலளிநீக்கு
  15. செய்தியைப் படித்த பின், நெஞ்சு பொறுக்குதில்லையே!

    பதிலளிநீக்கு
  16. நானும் ரயில் நிலையத்தில் பார்த்தேன்..

    நெஞ்சு பொறுக்குதில்லையே... :(

    பதிலளிநீக்கு
  17. This is a shame to our country.Is has been noted that this is because of cyber war newly started by Pakistan.But we cannot escape by saying saying this .This is a false on Government also NOT to have the cautios step to be taken.Still stern effort steps should BE TAKEN against this war or the question is WHO IS THE BLACK SHEEP?by DK.,

    பதிலளிநீக்கு