தொடரும் தோழர்கள்

புதன், ஆகஸ்ட் 22, 2012

தண்ணி தொட்டி தேடி வந்த...........

ஜெகன்னாதன் வீட்டு வசதி வாரியத்திலிருந்து 1980 ஆம் ஆண்டு வாங்கிய ஒரு ஃப்ளாட்டில் 30 வருடத்துக்கும் மேலாகக் குடியிருப்பவர்.வெகு காலமாக அங்கேயே இருந்து விட்டதால் அங்கு வசிப்பதில் உள்ள குறைகள் முழுவதையும் மறந்தவர்.

அங்கு ஒவ்வொரு 100 குடியிருப்புகளுக்கும் உடைகளை அயர்ன் செய்து கொடுக்கும் தொழில் செய்பவர்கள்  நான்கு சக்கர வண்டியில் நிலையான  ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு, தங்கள் தொழிலை சிரத்தையுடன் செய்வதாக ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி,அயர்ன் செய்வது தவிர, லேவா தேவி, மனை,வீட்டுத் தரகு என்று பல வேலைகளையும், சட்டத்துக்கு விரோதமான  சில வேலைகளையும் பல காலமாகச் செய்து  சம்பாதித்து வந்தனர் பக்கத்தில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்களும் இதில் கூட்டு.

ஜெகன்னாதன் ஃப்ளாட் வாசலில் அயர்ன் வண்டி வைத்தி ருந்தவன் விநாயகம்.அவனும் மற்ற வண்டிக்காரர் போலத் தான். ஆனால்  காலை 8 மணிக்கு ஆரம்பித்து, இரவு 7 மணி வரை--ஒரு மணி நேர உணவு இடை வேளை தவிர-அயராது உழைத்தான்.அவனது ஊர்க் காரன்வ் ஒருவன்,பெயர் திருநீர் செல்வம்,அவனுக்கு உதவியாளனாக இருந்தான்.இவர்களுக்கு உழைப்பின் அலுப்பு நீங்க ஒரே மருந்துதான்--டாக்டர்.டாஸ்மாக் கொடுப்பது!விநாயகத்துக்கு மனைவி , குடும்பம் என்று இருந்ததால் அவனது இரவு வாழ்க்கை பற்றித் தெரியாது.

திருநீர்செல்வம் கதை அப்படியல்ல!ஊதாரி.பலவித உல்லாசத்தில் பணத்தை இழந்தவன். மனைவியால் விரட்டி யடிக்கப்பட்டவன்.வார ஊதியம் ரூ.1000 இல் பெரும் பகுதியை டாஸ்மாக்கில் இழப்பவன்.இரவு அந்த வண்டி அருகிலேயே வாழ்க்கை.குடிபோதை அதிகமானால்,உரத்த குரலில்,கர்ணகடூரமாகப் பாட்டு வேறு.

2010 நவம்பரில்தான் செல்வம் அந்த இஸ்திரி வண்டி அருகில் குடியேறினான். அந்தக்கால கட்டத்தில் ஒரு நாள் இரவு  9 மணியிருக்கும்.திடீரென்று”ஐயோ ! கொல்றாங்களே, காப்பாத்துங்க!” என்ற அபயக்குரல் கேட்டு டிவியில் ஆழ்ந்திருந்த ஜெகன்னாதன் வெளியே வந்தார். கத்திக்கொண்டே திருநீர் மாடிப்படியில் ஓடி வந்து கொண்டி ருக்க,கருத்த,தடித்த ஒருவர் அவனைத் துரத்தி வந்து கொண்டி ருந்தார்.

அந்த ஆளை நிறுத்தி  ஜெகன்னாதன் விசாரித்தார்.அவன் சொன்னான்”எங்க ஓனர் ஒரு பெரிய சங்கீத வித்வான்; அவரைக் கெட்ட வார்த்தையிலே திட்டிட்டான் இந்தப் பொறுக்கி.அந்த நாயை நாலு சாத்து சாத்தணும் அவன் நாக்கை அறுக்கணும் ”

அவனை வித்வானின் டிரைவர் எனப் புரிந்துகொண்ட  ஜெகன்னாதன்”நீங்க கீழே போங்க,அவனை நான் கூட்டிட்டு வரேன்.இங்க வந்த சப்தம் போட்டா, எல்லாருக்கும் இடைஞ்சல்”என்று சொல்லி விட்டு திருநீரையும் கண்டித்து விட்டுக் கீழே அழைத்து வந்தார். திருநீர் அங்கு வந்து ஒரு மாதமே ஆகியிருந்ததால்,அவன் யார் என்பதோ மற்ற எந்த விவரமோ அவருக்குத் தெரியாது.

அவனை விசாரிக்க,அவன் ,இஸ்திரி வண்டிக்குப் பக்கத்தில் படுத்துக் கொண்டிருக்கும்போது,சாலையில் பாகவதரும், டிரைவரும் கழித்தசிறுநீர்,காற்றில் பறந்து அவன் மீது தெளித் ததால் திட்டினதாகச் சொன்னான். பலமான வடகிழக்குப் பருவக்காற்று போலும்!

கீழே சென்ற ஜெகன்னாதன் அந்த பாகவதரைப் பார்த்ததும் “இவரா” என்று ஆச்சரியமடைந்தார் !

(நாளை முடியும்)

16 கருத்துகள்:

  1. ஆஹா... இங்கேயும் சஸ்பென்ஸ்... நடக்கட்டும். புதிய லே அவுட் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. யார் அவர் எனக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. சுவாரஸ்யமாக உள்ளது... நாளை தெரிந்து விடும்... (TM 5)

    பதிலளிநீக்கு
  4. தொடர்ந்தும் காத்திருக்கிறேன் ஐயா...
    சின்னதொரு விண்ணப்பம் படிப்பதில் எனக்கு சிரமாக உள்ளது எழுத்துக்களின் நெருக்கம்... மனதில் பட்டதை சொன்னேன் தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
  5. தொடரும்! இந்த சொல்லில்தான் எத்தனை அர்த்தங்கள். தொடரும் கதையின் சஸ்பென்ஸ் உடைபடுவதை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு
  6. புதிய டெம்ப்ளேட் நல்லா இருக்கு. ஆனா எழுத்துக்களை கூர்ந்து பார்க்கும்போது கண் வலிக்குது. என்னன்ன்னு பாருங்க ஐயா. சொன்னது தவறா இருந்தா மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
  7. @சிட்டுக்குருவி
    நன்றி.சரி செய்ய முயல்கிறேன்.சொன்னதில் தவறேதும் இல்லை.மாறாக நல்லதே!

    பதிலளிநீக்கு
  8. @ராஜி
    இதில் தவறென்ன இருக்கிறது.?சரி செய்ய முயல்கிறேன்
    நன்றி ராஜி

    பதிலளிநீக்கு