தொடரும் தோழர்கள்

சனி, ஆகஸ்ட் 25, 2012

உடன் பிறப்பே!உனக்கொரு கடிதம்!நாளை நமதே!


உடன் பிறப்பே!

வந்திடும்,வந்திடும் என்று நாம் காத்திருந்த  நாள் வந்து விட்டது.

நாளை என்பதை என்றுமே நாம் எண்ணியிருந்திட்டதில்லை.

ஒன்றே செய்,அதை நன்றே செய் அதுவும் இன்றே செய் என்பதே நமது கொள்கையாய் இருந்திட்டது.

ஆயினும்  ஒரு மாநாட்டை நடத்திடுவதற்கு நாள் குறித்துத்தானே ஆயிடல் வேண்டும். 

நாம் நாள் குறிப்பது,திதி,நட்சத்திரம், ராகு காலம் பார்த்தல்ல.

உடன் பிறப்புகள் அனைவருக்கும் உகந்த நாள் எதுவெனப் பார்த்திடுதல்  அவசியமாகிறதல்லவா?

அனைவருக்கும் உகந்த நாளாய் இந்த ஆகசுடு திங்கள் 26 ஆம் நாள் தேர்வு 
செய்யப்பட்டது.

கண்மணிகள் பலர் இந்த விழா ஒரு வரலாறு காணாத நிகழ்வாக இருந்திடுதல் வேண்டும் என்னும் அவாவில் மெய்வருத்தம் பாராது,பசி நோக்காது,கண் துஞ்சாது உழைத்திட்டிருக்கிறார்கள்.

நாளை விழாவின் வெற்றி அவர்கள் வெற்றி!உடன் பிறப்பே, உன் வெற்றி. 

அண்ணா (புலவர்)வழி நடந்திட்ட நம் அனைவரின் வெற்றி!

விழா சிறப்பாக நடந்திட நம் கடமைகளை,கண்ணியத்தோடும் கட்டுப்பாட் டோடும்  செய்திடுவோம்!

படையெனத் திரண்டு வா!

புதிய வரலாறு படைக்கவா!

நாளை நமதே!

இனி  நாளைய விழா பற்றிய தகவல்கள்



  வணக்கம் தோழமைகளே.. இன்றைய இரவு விடிந்தால் போதும் காலை சென்னையில் தமிழ் வலைப்பதிவர்களின் திருவிழா தொடங்கிவிடும்.இந்த விழாவிற்கு அயல்நாடுகளில் இருக்கும் பதிவர்கள் மற்றும் விழாவிற்கு கலந்து கொள்ள இயலாத பதிவர்களின் வாழ்த்துகள் வந்த வண்ணமே இருக்கிறது. இந்த விழாவை இன்னும் சிறப்பாக நடத்த வேண்டும் என்கிற வேட்கையை அது அதிகரிக்கிறது.

         இந்த மாபெரும் சந்திப்பில் கலந்து கொள்ள முடியாத அயல்நாட்டு பதிவர்கள் கூட பதிவர் சந்திப்பை குறித்து நல்லவிதமாகவும் ஆதரவாகவும் எழுதி வருவது கண்டு மகிழ்ச்சியடைகிறோம்.நன்றி.

         பதிவர்களுக்கு உணவு உட்பட சில ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாக இந்த விழாவில் கலந்து கொள்ள விரும்பும் பதிவர்கள் எம்மை தொடர்பு   கொண்டு தங்கள் வருகையை உறுதிபடுத்துமாறு கேட்டுக்கொண்டோம். அதன்படி பதிவர்கள் உறுதிபடுத்தியிருக்கிறார்கள்.

மண்டபத்திற்கு வரும் வழி

      
       சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வரும் தோழர்கள்  அருகிலிருக்கும் பூங்கா நகர்(பார்க் டவுன்) சென்று எலெக்ட்ரிக் ரெயில் ஏறி மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கலாம்.5 வது ரயில் நிறுத்தம் மேற்கு மாம்பலம்.

         இதேபோல் செங்கல்பட்டு,தாம்பரத்திலிருந்து வரும் தோழர்கள் எலெக்ட்ரிக் ரெயில் ஏறி மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கலாம். ஒரு ஆட்டோவைப் பிடித்து ஐந்து விளக்கு என்று சொல்லி அமர்ந்தால் 10 நிமிடங்களில் மண்டபத்தை அடையலாம்.
        சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பேருந்தில் வரும் தோழர்கள்    17 என்று குறியிட்டு வடபழனி,சாலிகிராமாம்,பூந்தமல்லி,ஐயப்பன் தாங்கல் போன்ற ஊர்களின் பெயர்களைத் தாங்கி வரும் பேருந்தில் ஏறி கோடம்பாக்கம் லிபர்டி என்ற நிறுத்தத்தில் இறங்கலாம்.

       இந்த நிறுத்தத்தில் இறங்கி  லிபர்டி தியேட்டர் செல்லும் வழியில் வந்தால் ரஜினிகாந்தின் ராகவேந்திரா கல்யாண மண்டபம் வரும். அதைத்தாண்டி வந்தால் ஐந்து விளக்குகளைக் கொண்ட மின்கம்பம் வரும். அதன் அருகிலேயே மணடபம் உள்ளது. 1 மணி நேரத்தில் மண்டபத்தை அடையலாம்.

      தாம்பரத்திலிருந்து பேருந்தில் வரும் தோழர்கள் கோயம்பேடு மற்றும் அதன் வழியாக செல்லும் பேருந்துகளில் ஏறி வடபழனி (சிக்னல்)காவல் நிலையம் நிறுத்ததில் இறங்கி சாலையைக் கடந்து வடபழனி ஆண்டவர் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வருகின்ற பேருந்துகளில் ஏறி லிபர்டி அல்லது மீனாட்சி கல்லூரி நிறுத்தத்தில் இறங்கலாம்.(நீங்கள் எலெக்ட்ரிக் ரயிலில் வருவதே சாலச் சிறந்தது)1 மணி நேரம் ஆகலாம்.

        பூந்தமல்லியிலிருந்து வருகை தரும் தோழர்கள் 25G,17E,17M என்று குறியிட்டு சென்ட்ரல் மற்றும் பிராட்வே செல்லும்  பேருந்துகளில் ஏறி கோடம்பாக்கம் லிபர்டி என்ற நிறுத்தத்தில் இறங்கலாம்.(கோடம்பாக்கம் மூன்று பேருந்து நிறுத்தங்கள் கொண்டது)இந்த நிறுத்தத்திற்கு மீனாட்சி காலேஜ் என்ற பெயரும் உண்டு.1 மணி நேரம் ஆகலாம்.

        கோயம்பேட்டிலிருந்து வரும் தோழர்கள் 27சி என்ற பேருந்தில் ஏறி லிபர்டி நிறுத்தத்தில் இறங்கலாம்.சாலிகிராமம் வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதியில் இருந்து 12 சி என்ற பேருந்தில் ஏறினால் 5 விளக்கு நிறுத்தத்தில் இறங்கலாம்.15 நிமிடங்கள் ஆகும்.

          தி. நகரிலிருந்து பேருந்தில் வருபவர்கள் போத்தீஸ் துணிக்கடையின் எதிர்புறம் இருக்கும் நிறுத்தத்தில் 12சி என்ற பேருந்து ஏறி 5 விளக்கு நிறுத்தத்தில் இறங்கலாம். 10 நிமிடங்கள் ஆகும்.

      திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து வருபவர்கள்  25G என்ற பேருந்தில் ஏறி லிபர்டி நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளலாம்.

வழிகாட்டி



பதிவர்களிடம் எதிர்பார்ப்பது என்ன?

1.அரங்கத்தில் புகைபிடித்தலை தவிர்த்துக் கொள்ளவும்.

2.மது அருந்திவிட்டு அரங்கிற்குள் நுழைவதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளவும்.

3.பெண் பதிவர்களின் அனுமதியின்றி அவர்களை புகைப்படம் எடுப்பதை தயவுகூர்ந்து தவிர்த்துக் கொள்ளவும்.அனுமதியோடு புகைப்படம் எடுக்கும் பட்சத்தில் அவர்கள் அனுமதியில்லாமல் வலையில் பதிவதை தவிர்த்துக் கொள்ளவும்.

4.ஒவ்வொரு பதிவரும் சபை நாகரீகத்தை கடைபிடிக்கவும்.






இந்த சந்திப்பில் முக்கிய நிகழ்வாக கவியரங்கம் மற்றும் மூத்த பதிவர்களுக்கான பாராட்டு விழாவும் இருக்கிறது.இந்த இரண்டுக்குமான பெயர்ப்பட்டியல் இறுதி செய்யப் பட்டிருக்கிறது.இறுதி செய்யப்பட்ட நிகழ்ச்சி நிரலை கீழே காணலாம்.

இறுதி செய்யப்பட்ட நிகழ்ச்சி நிரல்


     

       இந்த சந்திப்பில் கலந்து கொள்ள இயலாத பதிவர்களுக்காக நேரடி ஒளிபரப்பு செய்கிறோம்.தங்கள் வலைப்பக்கத்தில் இருந்த படியே நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். அதற்கான நிரலை எப்படி இணைப்பது என்பதை இங்கே சென்று பார்த்துக்கொள்ளவும்.

வருகை தரும் பதிவர்களின் பட்டியல்

சி.பி.செந்தில்குமார்(அட்ரா சக்க)ஈரோடு

நண்டு@நொரண்டு,ஈரோடு
சங்கவி,கோயம்புத்தூர
சுரேஷ் (வீடு)கோயம்புத்தூர்
பரமேஷ் ஓட்டுனர்(ஈரோடு)
கோவி(காதல்)கோயம்புத்தூர்
ஜீவா(கோவைநேரம்) கோயம்புத்தூர்
கோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்
அகிலா,கோயம்புத்தூர்

சீனா ஐயா(வலைச்சரம்)மதுரை
பிரகாஷ்(தமிழ்வாசி)மதுரை
ரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை
ராஜா(அடங்காத அக்கப்போரு)மதுரை
சௌந்தர்(கவிதை வீதி)திருவள்ளூர்
கருண்(வேடந்தாங்கல்)திருவள்ளூர்
ரஹீம்கஸாலி,அரசர்குளம்
பிரகதீஸ்(பெரியகுளத்தான்)பெரியகுளம்
கதிரவன்(மழைச்சாரல்)சேலம்


ரேகா ராகவன்,சென்னை
 கேபிள் சங்கர்,சென்னை
சுரேகா,சென்னை
உண்மைத்தமிழன் ,சென்னை
சசிகுமார்(வந்தேமாதரம்)சென்னை
சிவக்குமார்(மெட்ராஸ் பவன்)சென்னை
தத்துபித்துவங்கள்(பிரபாகரன்)சென்னை
மோகன்குமார்(வீடு திரும்பல்)சென்னை
ரிஷ்வன்,சென்னை
டி.என்.முரளிதரன்,சென்னை
வே.நடன சபாபதி(நினைத்துப் பார்க்கிறேன்)சென்னை
சீனு(திடம் கொண்டு போராடு)சென்னை 
இக்பால் செல்வன்,சென்னை
ஆரூர் முனா செந்தில் சென்னை
சிராஜுதீன்(டீக்கடை)  சென்னை
செல்வின் (அஞ்சா சிங்கம்) சென்னை
சென்னைப்பித்தன்(நான் பேச நினைப்பதெல்லாம்)சென்னை
புலவர் சா.இராமாநுசம்(புலவர் கவிதைகள்)சென்னை
பால கணேஷ்(மின்னல் வரிகள்)சென்னை
சசிகலா(தென்றல்)சென்னை
மதுமதி(தூரிகையின் தூறல்)சென்னை
ஸ்ரவாணி(தமிழ்க்கவிதைகள் தங்கச்சுரங்கம்)சென்னை
தமிழ்ராஜா,(தமிழ்தொட்டில்)சென்னை
அகரன்(பெரியார் தளம்) சென்னை
கணக்காயர்,சென்னை 
ஜெயக்குமார்(பட்டிக்காட்டான் பட்டினத்தில்)சென்னை
போளூர் தயாநிதி(சித்த மருத்துவம்) சென்னை
ராசின்(நதிகள்) சென்னை
புரட்சிமணி(கேள்வியும் நானே பதிலும் நானே)சென்னை 
அனந்து (வாங்க ப்ளாகலாம்) சென்னை
லதானந்த்(லதானந்த் பக்கம் ) சென்னை
தமிழ் அமுதன் (கண்ணாடி)  சென்னை
ஸாதிகா(எல்லாப் புகழும் இறைவனுக்கே) சென்னை
காவேரி கணேஷின் பக்கங்கள் சென்னை
மணிஜி(நானும் கொஞ்சம் பேசுறேன்)
குடந்தை அன்புமலர்(தகவல் மலர்) சென்னை
கார்க்கி(சாளரம்) சென்னை 
விதூஷ்(பக்கோடா பேப்பர்கள்) சென்னை
மென்பொருள்பிரபு,சென்னை
அமைதி அப்பா,சென்னை
ஆர்.வி.எஸ்(தீராத விளையாட்டுப் பிள்ளை) சென்னை
சீனிவாச பிரபு(பெட்டர்மாக்ஸ் லைட்)சென்னை
கௌதம்(ஜீவகிரீடம்)சென்னை
பெஸ்கி(ஏதோ.காம்) சென்னை
ராமு,சென்னை
ஷீ-நிசி கவிதைகள் சென்னை
வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை
மாடசாமி(வானவில்)சென்னை
இர.அருள்(பசுமைப்பக்கங்கள்) சென்னை
அண்ணல் (அண்ணல் பக்கங்கள்)சென்னை
இரா.தெ.முத்து(திசைச்சொல்)சென்னை
வில்லவன்கோதை(வேர்கள்)சென்னை
ரமேஷ்(சிரிப்புபோலீஸ்)சென்னை
குகன்(குகன் பக்கங்கள்)சென்னை
ஈகைவேந்தன்(என் மனவானில்)சென்னை
உங்களுள் ஒருவன் (இந்த உலகம் எங்கே செல்கிறது?சென்னை
சுப்புரத்தினம்(தமிழ் மறை தமிழ் நெறி)சென்னை
கிராமத்து காக்கை ,சென்னை
சிவலிங்கம்(போட்டோசாப் பாடம்)சென்னை
சேட்டைக்காரன் ,சென்னை
ருக்மணி சேஷசாயி(பாட்டி சொல்லும் கதைகள்)சென்னை
மணி(ஆயிரத்தில் ஒருவன்) சென்னை
குருபிரசாத்(இந்தியன் குரல்)சென்னை 
பொன்.வாசுதேவன் (அகநாழிகை)
உளவாளி,சென்னை
ஷர்புதீன்(வெள்ளி நிலா )
கோகுல்(கோகுல் மனதில்)பாண்டிச்சேரி
சினேகன் அசோக்(அசோக்கின் கிறுக்கல்கள்) - ஸ்ரீபெரும்புதூர்
மயில்வாகனா (முல்லைவனம்) - செங்கல்பட்டு
நா.சுரேஸ்குமார்(அறிவுக்கடல்)காஞ்சீபுரம்
சௌந்திரராஜன்(சென்னை வானொலியில்)கல்பாக்கம்
கண்மணிராஜன்(கண்மணி அன்போடு)சிவகாசி
நிலவு நண்பன்,திருநெல்வேலி
ஆளுங்க , நெல்லை
மாலதி(மாலதியின் சிந்தனைகள்)வேலூர்
சாம் மார்த்தாண்டன்,மார்த்தாண்டம்
ராஜா(என் ராஜபாட்டை)  பூம்புகார்
நாய் நக்ஸ் நக்கீரன் ,சிதம்பரம்
ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி
தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி
ராஜபாண்டி(தமிழன் வலை)அருப்புக் கோட்டை
கௌதமன்(கரிசல்குளத்தானின் வயக்காடு) வத்திராயிருப்பு
அருணன் கோபால்(கவிவனம்)
எண்ணங்களுக்குள் நான்(ஃபாரூக் முகமது)மங்கள நாடு) 
லெனின்(கேணக்கிருக்கன்)கீரமங்கலம்
தஞ்சை குமணன் (புன்னகை மன்னன்) - தஞ்சாவூர்


மயிலன்(மயிலிறகு)மயிலாடுதுறை
திண்டுக்கல் தனபாலன்,திண்டுக்கல் 
ஆர்.வி.சரவணன்(குடந்தையூர்)
அரசன்(கரைசேரா அலை)அரியலூர்
மணவை தேவாதிராஜன்,மணப்பாறை
சித்தூர் முருகேஷன்(அனுபவ ஜோதிடம்) சித்தூர்
ரஞ்சனி நாராயணன்,பெங்களூர்
பலே பிரபு(கற்போம்)பெங்களூரு
சுந்தர்ராஜ் தயாளன்,பெங்களூரு
கோலிவுட் ராஜ்(சினிமா சினிமா)ஹைதராபாத்
லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்
சைத அஜீஸ்,துபாய்
மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்
சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்
பாலராஜன்கீதா,சவூதி அரேபியா

தொடர்பு கொள்ள:          

                                 உங்களுக்கு மண்டபம் வருவதில் ஏதும் சிரமம் இருப்பின் கீழ்க்காணும் எண்களில் தொடர்பு கொண்டு பேசினால் நண்பர்கள் மண்டபம் வர உதவுவார்கள்/ வழி சொல்லுவார்கள் :


மெட்ராஸ் பவன் சிவகுமார் - 98416 11301
ஆரூர் மூனா செந்தில்            - 8883072993


வாருங்கள் தோழர்களே.. சென்னையில் சங்கமிப்போம்..

                                                                                                                                         அன்புடன்,

                                                                                                    சென்னை பித்தன்

24 கருத்துகள்:

  1. சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள் (TM 3)

    பதிலளிநீக்கு
  2. மிகவும் விளக்கமாகப் பதிவிட்டிருக்கிறீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நாளை தங்களைச் சந்திப்பதும்
    ஒரு முக்கிய நிகழ்வுதான்
    விழா சிறக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. சென்னையில் சங்கமிப்போம் வாருங்கள் பதிவர்களே..

    பதிலளிநீக்கு
  5. எங்களைப் போன்ற வெளிநாட்டுப் பதிவர்கள் கலந்துகொள்ளமுடியவில்லையே தவிர எங்களது எண்ணமெல்லாம் மாநாட்டைப் பற்றியே இருக்கும். விழா சிறப்புடன் நடைபெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. மாநாடு மலை போல் வெற்றியடைய மலேசியாவிலிருந்து வாழ்த்துகிறேன்...

    பதிலளிநீக்கு
  7. எழுச்சி மிக்க அழைப்பு. அழகு.
    உண்மையில் நாளை நமதே !

    பதிலளிநீக்கு
  8. நாளை நமதே நாளை சந்திப்போம்

    பதிலளிநீக்கு
  9. அண்ணன் அழைக்கும்போது உடன் பிறப்புகள் வராமல் இருக்கமுடியுமா? வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வருகின்ற தம்பிகள் இருக்கும் வரை கவலை ஏன்? விழா சிறக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. அருமையான நிகழ்வு சிறப்புடன் இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. விழா சிறப்பாக நடக்க எனது வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  12. விழா சிறக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. நாளை இந்த வேளைதான் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கும்

    பதிலளிநீக்கு
  14. அண்ணா தற்போது தான் விடுமுறைக்கு நம் தாய் நாடு வந்து திரும்பினேன்.
    விழா பற்றி அந்த சமயத்தில் எனக்கு தெரியவில்லை, அதனால் தோஹா திரும்பி விட்டேன்.
    நிச்சயம் அடுத்த முறை கலந்துக்கொள்வேன்.
    விழாவிற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
    http://dohatalkies.blogspot.com/2012/08/a-beautiful-mind.html

    பதிலளிநீக்கு
  15. திருவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் அய்யா!

    பதிலளிநீக்கு
  16. திருவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. உங்களையெல்லாம் நேரலையில் சந்தித்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  18. விழா சிறப்பாக நடக்க என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. திருவிழா நடந்து முடிந்திருக்கும் என நினைக்கிறேன்...நினைவுகளையும் நிகழ்வுகளையும் பகிருங்கள் ஐயா காத்திருக்கிறோம்

    பதிலளிநீக்கு