தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஆகஸ்ட் 19, 2012

ஹாலிடே,ஜாலிடே!-சந்து கிரிக்கெட்!ஒரு சிறிய சந்தில் ஒரு வயதானவர் வசித்து வந்தார்.ரவு நேரங்களில் அவர் வீட்டு வாசலில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி வந்தனர். அது அவருக்குத் தலை வேதனையாய் இருந்தது.

ஆனால் அவர்களிடம் சொன்னால் கேட்க மாட்டார்கள்;இன்னும் அதிகச் சத்தம் போடுவார்கள்.

ஒரு நாள் அவர் அவர்களிடம் சென்றார்.”எனக்குக் கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். என் வீட்டு வாசலில் நீங்கள் விளையாடுவது மகிழ்ச்சி யளிக்கிறது.தினமும் இரவு நீங்கள் விளையாடினால் உங்களுக்கு வாரத்துக்கு ரூ.25 தருவேன்” என்று சொன்னார்.

சிறுவர்களுக்கு மிக மகிழ்ச்சி.விளையாடிக் களிப்பதற்குக் கூலியும் கிடைக் கிறதே என்று.முதல் வார முடிவில் அர் அவர்களை அழைத்து ரூ.25 கொடுத்துப் பாராட்டினார்.

இரண்டாவது வார முடிவில் சிறுவர்கள் அவரிடம் சென்று பணம் கேட்டனர். அவர் 15 ரூபாய் கொடுத்து விட்டு அதற்கு மேல் கையில் இல்லை என்று சொல்லி விட்டார்.

அடுத்த வாரம்  பத்து ரூபாய்தான் இருக்கிறது என்று  கொடுக்கச்  சிறுவர்கள் ஏமாற்றத்துடன் வாங்கிக் கொண்டனர்.

அதற்கு அடுத்தவாரம் பணம் வருவது குறைந்து விட்டதால் இனி வாரத்துக்கு ரூ.5 தான் தர முடியும் என அவர் சொன்னார்.

சிறுவர்களுக்குக் கோபம் வந்தது.5 ரூபாய்க்கு வாரம் முழுவதும் எவன் விளையாடுவான் என்று சொல்லி விட்டுச் சென்று விட்டனர்.

அதன் பின் அங்கு விளையாடவில்லை!

கெட்டிக்காரப் பெரியவர்!

(எங்கோ,எப்போதோ படித்தது)

23 கருத்துகள்:

 1. உண்மையச் சொல்லுங்கள்அந்த சின்னப் பையன்கள் கூட்டத்திற்கு நீங்கள் தானே தலைவர்.....

  பதிலளிநீக்கு
 2. இதை நானும் படித்திருக்கிறேன். எத்தனை முறை படித்தாலும் அந்த பெரியவரின் கெட்டிக்காரத்தனத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 3. இதுதான்மாத்தி யோசி என்பதுவோ ?
  மனம் கவர்ந்த அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. சூப்பர் ஐடியா! அருமை!

  இன்று என் தளத்தில்
  திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1
  http://thalirssb.blogspot.in/2012/08/1.html

  பதிலளிநீக்கு
 5. நல்ல அறிவுள்ள நிகழ்வு... பகிர்ந்ததிற்கு நன்றி..

  ரம்ஜான் சிறப்பு கவிதை படிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 6. (எங்கோ,எப்போதோ படித்தது)/////
  படிப்பது நன்று.படித்ததைப் பகிர்வது அதை விட நன்று.

  நன்று
  மன்னிக்கவும் நன்றி.

  பதிலளிநீக்கு
 7. அட..வித்தியாசமா இருக்கே!!
  அந்த பெரியவர் நீங்க தானே?

  பதிலளிநீக்கு
 8. முன்பே படித்த நினைவு. மீண்டும் உங்கள் பக்கத்தில் படித்ததில் மகிழ்ச்சி....

  பதிலளிநீக்கு