தொடரும் தோழர்கள்

செவ்வாய், அக்டோபர் 18, 2011

நல்லது சொல்லிடுவேன்!


பிரார்த்தனை என்பது,காரின் உபரிச் சக்கரம் போல் அல்ல.பிரச்சினையில் இருக்கும் போது உபயோகிப்பதற்கு;

அது எப்போதும் வழி நடத்த உதவும் சக்கரத் திருப்பி போன்றது.(steeringwheel)

காரின் முன்புறக்கண்ணாடி பெரிதாகவும்,பின்னே பார்க்கும் கண்ணாடி சிறிதாகவும் இருப்பது எதை உணர்த்துகிறது தெரியுமா?நமது கடந்தகாலத்தை விட எதிர்காலமே முக்கியமானது.முன்னே பார்த்து முன்னேறுங்கள்.

நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.ஒரு சில விநாடிகளே போதும் எரிப்பதற்கு.ஆனால் எழுதுவதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம்.

வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமல்ல.இன்பம் வரும்போது அனுபவியுங்கள்;அது நீண்ட நாள் நிலைக்காது.துன்பம் வரும்போது கவலைப்படாதீர்கள்.அதுவும் நீண்ட நாள் நிலைக்காது.

பழைய நட்பு என்பது தங்கம் போன்றது.புதிய நட்பு என்பது வைரம் போன்றது.வைரம் கிடைக்கும்போது தங்கத்தை மறக்ககூடாது.ஏனெனில் வைரத்தைப் பதிக்கத் தங்கம் தேவை!

அநேக நேரங்களில் நாம் நம்பிக்கையிழந்து இதுதான் முடிவு என்று எண்ணுகிறோம். ஆனால் கடவுள் சொல்கிறார்—இது ஒரு திருப்பமே,முடிவல்ல என்று.

கடவுள் நம் பிரச்சினைகளைத் தீர்க்கும்போது அவரை நாம் நம்புகிறோம்.அவ்வாறு தீர்க்காதபோது அவர் நம்மை நம்புகிறார்.


மற்றவர்களுக்காக நீங்கள் பிரார்த்திக்கும்போது கடவுள் உங்கள் பிரார்த்தனை யைக் கேட்டு அவர்களுக்கு நன்மை செய்கிறார்.அது போல் உங்கள் நல்ல காலத்தில் நினைவு கொள்ளுங்கள்,மற்றவர்கள் உங்களுக்காகப் பிரார்த்தனை செய்திருக்கிறார்கள் என்று.


கவலைப்படுவது நாளைய துன்பங்களைத் தீர்க்காது;ஆனால் இன்றைய நிம்மதியைக் கெடுத்து விடும்.

31 கருத்துகள்:

  1. அருமையான பகிர்வு நன்றி அண்ணே!

    பதிலளிநீக்கு
  2. காரை வைத்து அருமையான கருத்துக்கள் சொல்ல உம்மால்தான் முடியும் நண்பரே... கலக்குங்க...

    பதிலளிநீக்கு
  3. அருமையான கருத்துக்கள். அதுவும் அந்த சக்கர திருப்பி என்ற தமிழாக்கம் அருமை. சொல் புதிது. பொருள் புதிது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான கருத்துக்கள். பகிர்வு நன்றி

    பதிலளிநீக்கு
  5. தன்னம்பிக்கை இல்லாதவன் தான் கடவுளை நம்புவான்... விவேகானந்தர் சொன்னதாக திரியும் செய்தி... சொன்னது அவர் தானான்னு தெரியாது ஆனா விஷயம் உண்மை என்பது தெரியும்

    பதிலளிநீக்கு
  6. அருமையான கருத்துக்கள் ஜயா

    அதிலும் இது///நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.ஒரு சில விநாடிகளே போதும் எரிப்பதற்கு.ஆனால் எழுதுவதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம்.////
    சூப்பர்

    பதிலளிநீக்கு
  7. //நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.ஒரு சில விநாடிகளே போதும் எரிப்பதற்கு.ஆனால் எழுதுவதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம். //

    அருமை சார்.

    பதிலளிநீக்கு
  8. நச் என்ற தொடக்கத்துடன் ஆரம்பித்து பதிவில் உள்ள அனைத்தும் அருமை ஐயா. த.ம.4

    பதிலளிநீக்கு
  9. அனைத்தும் ஆறுதலளிக்கும் வார்த்தைகள் ...

    பதிலளிநீக்கு
  10. பழைய நட்பு என்பது தங்கம் போன்றது.புதிய நட்பு என்பது வைரம் போன்றது.வைரம் கிடைக்கும்போது தங்கத்தை மறக்ககூடாது.ஏனெனில் வைரத்தைப் பதிக்கத் தங்கம் தேவை!//

    ஆஹா கலக்கல் தல!!!!!

    பதிலளிநீக்கு
  11. கவலைப்படுவது நாளைய துன்பங்களைத் தீர்க்காது;ஆனால் இன்றைய நிம்மதியைக் கெடுத்து விடும்.//

    மிக்க சரியாக சொன்னீர்கள் நன்றி...!!!

    பதிலளிநீக்கு
  12. என்ன தல, நீங்களும் தமிழ்மணத்துல இருந்து விலகிட்டீன்களா...????

    பதிலளிநீக்கு
  13. விக்கியுலகம் கூறியது...

    //அருமையான பகிர்வு நன்றி அண்ணே!//
    நன்றி விக்கி.

    பதிலளிநீக்கு
  14. தமிழ்வாசி - Prakash கூறியது...

    //எல்லாமே அருமையான வரிகள்.//
    நன்றி தமிழ்வாசி - Prakash

    பதிலளிநீக்கு
  15. கணேஷ் கூறியது...

    //காரை வைத்து அருமையான கருத்துக்கள் சொல்ல உம்மால்தான் முடியும் நண்பரே... கலக்குங்க...//

    நன்றி கணேஷ்.

    பதிலளிநீக்கு
  16. வே.நடனசபாபதி கூறியது...

    //அருமையான கருத்துக்கள். அதுவும் அந்த சக்கர திருப்பி என்ற தமிழாக்கம் அருமை. சொல் புதிது. பொருள் புதிது. வாழ்த்துக்கள்.//
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  17. //
    பிரார்த்தனை என்பது,காரின் உபரிச் சக்கரம் போல் அல்ல.பிரச்சினையில் இருக்கும் போது உபயோகிப்பதற்கு;

    அது எப்போதும் வழி நடத்த உதவும் சக்கரத் திருப்பி போன்றது.
    //

    அருமையான வரிகள்

    பதிலளிநீக்கு
  18. மனசாட்சி சொன்னது…

    //அருமையான கருத்துக்கள். பகிர்வு நன்றி//
    நன்றி மனசாட்சி .

    பதிலளிநீக்கு
  19. suryajeeva கூறியது...

    //தன்னம்பிக்கை இல்லாதவன் தான் கடவுளை நம்புவான்... விவேகானந்தர் சொன்னதாக திரியும் செய்தி... சொன்னது அவர் தானான்னு தெரியாது ஆனா விஷயம் உண்மை என்பது தெரியும்//
    உலகத்தில் பெரும்பான்மை மக்கள் தன்னம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பதுதான் விந்தை!

    பதிலளிநீக்கு
  20. K.s.s.Rajh கூறியது...

    //அருமையான கருத்துக்கள் ஜயா

    அதிலும் இது///நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.ஒரு சில விநாடிகளே போதும் எரிப்பதற்கு.ஆனால் எழுதுவதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம்.////
    சூப்பர்//
    நன்றி ராஜ்.

    பதிலளிநீக்கு
  21. செங்கோவி கூறியது...

    //நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.ஒரு சில விநாடிகளே போதும் எரிப்பதற்கு.ஆனால் எழுதுவதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம். //

    //அருமை சார்.//
    நன்றி செங்கோவி.

    பதிலளிநீக்கு
  22. M.R கூறியது...

    //நச் என்ற தொடக்கத்துடன் ஆரம்பித்து பதிவில் உள்ள அனைத்தும் அருமை ஐயா. த.ம.4//
    நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  23. koodal bala கூறியது...

    //அனைத்தும் ஆறுதலளிக்கும் வார்த்தைகள் ...//
    நன்றி பாலா.

    பதிலளிநீக்கு
  24. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    பழைய நட்பு என்பது தங்கம் போன்றது.புதிய நட்பு என்பது வைரம் போன்றது.வைரம் கிடைக்கும்போது தங்கத்தை மறக்ககூடாது.ஏனெனில் வைரத்தைப் பதிக்கத் தங்கம் தேவை!//

    //ஆஹா கலக்கல் தல!!!!!//
    நன்றி மனோ.

    பதிலளிநீக்கு
  25. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    கவலைப்படுவது நாளைய துன்பங்களைத் தீர்க்காது;ஆனால் இன்றைய நிம்மதியைக் கெடுத்து விடும்.//

    // மிக்க சரியாக சொன்னீர்கள் நன்றி...!!!//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  26. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    // என்ன தல, நீங்களும் தமிழ்மணத்துல இருந்து விலகிட்டீன்களா...????//
    இது வரை இல்லை.ஆனால் ஓட்டுப்பட்டை கொஞ்சம் நேரம் காணாமப் போயிடுச்சு!

    பதிலளிநீக்கு
  27. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

    //
    பிரார்த்தனை என்பது,காரின் உபரிச் சக்கரம் போல் அல்ல.பிரச்சினையில் இருக்கும் போது உபயோகிப்பதற்கு;

    அது எப்போதும் வழி நடத்த உதவும் சக்கரத் திருப்பி போன்றது.
    //

    //அருமையான வரிகள்//
    நன்றி ராஜா.

    பதிலளிநீக்கு
  28. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

    //இன்று என் வலையில்

    தமிழ்மணம் எங்களுக்கு SOLANUM TORVUM//
    பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  29. காரை வைத்து அருமையான கருத்துக்கள்...

    பதிலளிநீக்கு