தொடரும் தோழர்கள்

சனி, செப்டம்பர் 05, 2015

நல்லாசிரியர் யார்!

ஆசிரியர்கள் பலவிதம்

சிலர் வெறும் கற்றுச் சொல்லிகள்

சிலர் கற்பிப்பவர்கள்,பாடங்களை மட்டும்

சிலர் பாடங்களோடு நற்பண்புகளையும்  அளிப்பவர்கள்

சிலர் இவற்றோடு பொது அறிவையும்   விரிவு படுத்துபவர்கள்.

சிலர் அனைத்துக்கும் மேலாய்,மாணவ,மாணவிகளைத் தங்கள் பிள்ளைகளாய் வழி நடத்துபவர்கள்.


கடைசியாய்ச் சொல்லப்பட்டவர்கள்,வெறும் ஆசிரியர்கள் அல்ல;குரு ஆவார்கள். இதற்குச் சரியான எடுத்துக்காட்டாக,இன்றைய நாளுக்குப் பொருத்தமான ஒரு மீள் பதிவு (16-02-2011) இதோ.....
*****
//”என்ன பிள்ளைகளா,மதிய உணவு சாப்பிட்டீர்களா?’-டீச்சர்

”டீச்சர்,மழை பெய்யுதில்லையா,கூரை ஓட்டை வழியாத் தண்ணி கொட்டித் தட்டுலே இருந்த சோறெல்லாம் நனஞ்சு போச்சு”-மாணவன்.

இதுதான் இன்று வரை அந்த மதிய உணவுக் கூடத்தின் நிலை.

உடைந்த அஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ்,அந்தக் கட்டிடம்.சமையல் வெட்ட வெளியில் .
இப்படித்தான் இயங்கி வந்தது அந்த மதிய உணவு மையம்!-இத்தனை நாள்.

இனியில்லை!

அழகிய புதிய கட்டிடம்,சமையல் அறை ,ஸ்டோர் ரூம் வசதியுடன் தயாராகி விட்டது!

அரசு புதுக் கட்டிடம் கட்டிக் கொடுத்துவிட்டதா?

அல்லது யாராவது வள்ளல் ஏற்பாடு செய்தாரா?

இல்லை!இல்லை!

கோடிக் கணக்கில் இலவசங்களுக்குச் செலவழிக்கும் அரசுக்கு இந்தச் சிறிய விஷயத்தைக் கண்டு கொள்ள நேரமிருக்குமா என்ன?

அது தவிர இதனால் என்ன பயன்?அந்த மாணவர்கள் ஓட்டுப் போடப் போகிறார்களா என்ன?

பின் எப்படி நடந்தது?

11 ஆண்டுகளுக்கு முன் பள்ளிச் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற,தற்போது 63 வயதாகும் ஓர் ஆசிரியையின் கருணை உள்ளம்!

29 ஆண்டு சேவைக்குப் பின் ஓய்வு பெற்ற அந்த ஆசிரியை,தனது ஓய்வூதியத்தை, இத்தனை நாள் சேமித்து வந்த பணம்-ரூபாய்3.5 லட்சம்,அதைப் பள்ளி நிர்வாகத்துக்குக் கொடுத்து தான் இந்தச் செயல் நடக்க உதவியிருக்கிறார் அந்த ஆசிரியை

“.பள்ளி மாணவர்களெல்லாம் என்குழந்தைகள்தான்”என்று கூறும் பரந்த மனம் அவருக்கு இருக்கிறது!

”2009ஆம் ஆண்டு பார்கின்சன் வியாதியால் மரணமடைந்த என் கணவரின் நினைவாக இதைச்செய்கிறேன் என்று அவர் சொல்லியிருக்கிறார்!

மதிய உணவு மையம் இருக்கும் பள்ளி---பல்லாவரம் கண்டோன்மெண்ட் அரசு உயர்நிலைப் பள்ளி.

அந்த மகத்தான செயல் புரிந்த ஆசிரியை—அந்தப் பள்ளியில் பணி புரிந்து ஓய்வு பெற்ற நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த திருமதி.லலிதா.

தாயே!உங்களுக்குத் தலை மண்ணில் பட வணங்குகிறேன்!//

******

இந்த ஆசிரியர் தினத்தில் என் எல்லா ஆசிரியர்களையும் நினைவு கூர்கிறேன்.

வணங்குகிறேன்

“ஆசார்ய தேவோ பவ”

(வடமொழிக்கு மன்னிக்க!)

22 கருத்துகள்:

  1. வணக்கம்!! திருமதி லலிதா அவர்கள் போற்றப்படவேண்டியவர்!! அனைத்து ஆசிரிய பெரு மக்களையும் வணங்குகிறேன்!! நன்றி!!

    பதிலளிநீக்கு
  2. இவர்கள் தான் முன்னோடி ஆசிரியர்கள்!! நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
  3. திருமதி லலிதாவுக்கு எமது வணக்கங்களும் போற்றப்படக்கூடியவரே...

    பதிலளிநீக்கு
  4. “ஆசிரியர்கள் பலவிதம்..ஒவ்வொருவரும் ஒரு விதம்.”...ஏகலைவன் கட்டவிரலை குரு தட்சனையாக கேட்ட ஆசிரியர்தான் எனக்கு நினைவுக்கு வருகிறார் அய்யா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதிகாசத்தைப் பற்றி எண்ணாமல்,நிகழ்காலத்துக்கு வாருங்கள்
      நன்றி

      நீக்கு
  5. நல் ஆசிரியை லலிதா அவர்கள் போற்றப்பட வேண்டியவர்....
    அருமையான பகிர்வு.
    நல் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினத்தில் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. //“ஆசார்ய தேவோ பவ”

    (வடமொழிக்கு மன்னிக்க!)//

    ரோஜாவை எந்த பெயரில் அழைத்தாலும் அது நறுமணத்தோடு தான் மணக்கும் என்பது போல் ஆசிரியர்கள் இறைவனுக்கு ஒப்பானவர்கள் என்பதை வடமொழியில் சொன்னாலும் பொருள் ஒன்றுதானே . புரியாதா என்ன?

    தனது மாணவர்களுக்காக தனது ஓய்வூதியத்தை செலவிட்ட ஆசிரியர் பற்றிய தகவலை ஆசிரியர் நாளன்று மீள்பதிவிட்டதும் பொருத்தமானதே. தகவலுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. அந்த பள்ளியில் நல்லாசிரியர் விருது பெற்றவர்களும் செய்யாத மகத்தான செயலுக்கு ,பல தலைமுறை பிள்ளைகளும் நன்றி கூறுவார்கள் !

    பதிலளிநீக்கு
  8. நல்லாசிரியை லலிதா அவர்களுக்கு எங்கள் வாழ்த்துகள்! மீள் பதிவு என்றாலும் இது போன்றவை மீள் பதிவாவதில் தவறு இல்லையே! நல்ல பகிர்வு...ஆசிரியர் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகள்! பதிவர்கள் ஆசிரியர்களாக இல்லை என்றாலும் பதிவின் மூலம் சிந்திக்க வைத்தால் அவர்களும் ஆசிரியர்களே! நீங்கள் உட்பட!!! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  9. தாயே!உங்களுக்குத் தலை மண்ணில் பட வணங்குகிறேன்!//

    உங்களோடுநானும் தலை மண்ணில் பட வணங்குகிறேன்

    பதிலளிநீக்கு
  10. ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்.

    நல்ல மனிதர்களை போற்றுவோம் வாழ்த்துக்கள் ஐயா. த.ம 9

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  12. அவரை நினைத்து கண்கள் கலங்கின பெருமிதத்தில் அவர் புகழ் ஓங்கட்டும். நானும் தலை மண்ணில் பட வணங்குகிறேன் ...!

    பதிலளிநீக்கு
  13. திருமதி லலிதா போற்றுதலுக்கு உரியவர்
    போற்றுவோம்
    தம+1

    பதிலளிநீக்கு