தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012

இன்னும் சில இழப்புகள்


நான் படித்த கல்லூரி,அதன் விடுதி இருந்தது மைலாப்பூரில்.வாரம் ஒரு படம் பார்ப்பது என்பது எழுதப்படாத விதியான காரணத்தால்,தூரத்தையும் பொருட் படுத்தாமல் சினிமா பார்க்கச் செல்வோம்.

சினிமா பார்க்கப் பேருந்து பிடிப்பதற்கு,லஸ்ஸில் ஏறாமல் ஜம்மி பில்டிங்கில் சென்று ஏறுவோம்—காரணம் அதுஅடுத்த ஸ்டேஜ்;கட்டணம் 4 பைசா குறைவு! 

படம் பார்க்க டிக்கெட் அநேகமாக 84 காசுகள்தான்.அதுதான் மிகக் குறைவு!

மைலாப்பூரிலேயே காமதேனு டாக்கீஸ் இருந்தாலும் அங்கு  அதிகமாகப் படம் பார்த்ததில்லை. ஏனென்றால் அங்கு புதுப் படங்கள் திரையிடப் படுவதில்லை. வேறு வழியில்லாத ஏதாவது நாளிலே அங்கும் படம் பார்ப்போம்.அப்படிப் பார்த்த ஒரு படம் “பூஜைக்கு வந்த மலர்”இன்று அது திருமண மண்டபமாகி விட்டது.

ஜெனரல் பேட்டர்ஸ் சாலையில் இருந்த அரங்கம்,வெலிங்டன்.அப்போதே பழைய அரங்கம்தான். அதிகப் படம் பார்த்ததில்லை.நினைவில் இருக்கும் படம்”பூம்புகார்”

அதே சாலையில் இருந்த இன்னொரு தியேட்டர் மிட்லேண்ட்.பல பெயர் மாறி இன்று மூடப்பட்டு விட்டது.

மவுண்ட் ரோடின் ஒரு கிளையில் இருந்தது கெயிட்டி.கேசினோவும் கெயிட்டியும்  அருகருகே இருந்தன.சென்னையில் நான் பார்த்த முத படம் “காதலிக்க நேரமில்லை ”கேசினோவில்(இன்னும் இயங்கும் தியேட்டர்)

கெயிட்டியில் பல படங்கள் பார்த்திருந்தாலும் மறக்க முடியாதது எஸ்.பாலசந்தரின்  ”பொம்மை”. அப்படம் ஒரு எதிர்பாராத ஹிட்.. எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய” தத்தித் தத்தி” என்ற பாடல் சூப்பர் ஹிட்..படத்தில் இடம்பெற்ற(நடித்த?) பொம்மையை அரங்கின் முகப்பில் வைத்திருந்தார்கள்..!

அநேகமாக நாங்கள் தமிழ்ப்படம் பார்ப்பதற்கு மவுண்ட்ரோடுப் பகுதியைத் தாண்டிச் சென்றதில்லை. விதி விலக்காகச் சில படங்கள் இருக்கலாம். அவற்றில் ஒன்று மக்கள் திலகத்தின் ”ஆயிரத்தில் ஒருவன்”.பார்த்த திரை அரங்கம், புரசைவாக்கம் மேகலா.மற்ற நண்பர்களுக்காக நானும் செல்ல வேண்டியதாயிற்று.(நான் சிவாஜி ரசிகன்;ஆனால் ஜெ ரசிகனுமாயிற்றே!)

 இதை நான் எழுதக்காரணம்,இப்போதெல்லாம் தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பதே யில்லை.புதிதாக வந்திருக்கும் அரங்குகள் எப்படியிருக்கும் என்றே தெரியாது--ஐனாக்ஸ் தவிர;ஒரு நண்பர் என்னை வற்புறுத்தி அவதார் படத்துக்கு அழைத்துச் சென்றார்.

பழைய சென்னையின் தியேட்டர்களை மட்டுமல்ல,பல் வேறு இடங்களையும் கூட நினைத்துப்பார்ப்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது!

I love you chennai!

36 கருத்துகள்:

  1. ஆமா சார் மூடக் கடியை விட்டுவிடீர்கலே... அன்னி கொஞ்சம் குனிசு உக்கருங்கன்னே மறைக்குது போன்ற வசனகளையும் இப்போதெல்லாம் கேட்க முடிவதில்லை.... எனக்ளுக்கி இப்படி என்றால்... உங்களை எல்லாம் கேட்கவா வேண்டும்

    பதிலளிநீக்கு
  2. @சீனு
    சீனு,ரொம்பப் பசியா?பல எழுத்துக்களை விழுங்கி விட்டீர்களே!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நான் +2 படிக்கும்போது, கெயிட்டியில் படம் பார்க்கபோய், டிக்கெட் கிடைக்காததால், கேசினோவில் என்ன படம் என்று விசாரிக்காமல் போய் உக்கார்ந்தால்...எப்பா அது பிட்டுப் படம்...ஸ்கூல் யூனிபார்ம் வேறு... கிடைத்த பட்டம் பிஞ்சுலே பழுத்ததுக...

    பதிலளிநீக்கு
  4. //நான் சிவாஜி ரசிகன்;ஆனால் ஜெ ரசிகனுமாயிற்றே!//
    இப்போது அப்படி சொல்லமுடியுமா? யாரையும் பெயரைச்சொல்லி கூப்பிடமுடியாது இப்போது.

    உண்மைதான். நினைத்துப்பார்ப்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  5. ஹா ஹா ஹா ஹா பித்தன் ஐயா....

    என்று இருந்திருக்க வேண்டும்

    ஆமா சார் மூட்டைக் கடியை விட்டுவிடீர்கலே... அண்ணே கொஞ்சம் குனிஞ்சு உக்கருங்கன்னே மறைக்குது போன்ற வசனகளையும் இப்போதெல்லாம் கேட்க முடிவதில்லை.... எங்கள்ளுக்கே இப்படி என்றால்... உங்களை எல்லாம் கேட்கவா வேண்டும்

    பதிலளிநீக்கு
  6. சீனு,ரொம்பப் பசியா?பல எழுத்துக்களை விழுங்கி விட்டீர்களே!-ஹாஹாஹா..

    பதிலளிநீக்கு
  7. ஆனால் ஜெ ரசிகனுமாயிற்றே!-சிறப்பு..

    பதிலளிநீக்கு
  8. பழையனவற்றை நினைத்துப்பார்ப்பதில் உள்ள சுகமே தனிதான்..

    பதிலளிநீக்கு
  9. 84 பைசாவா சினிமா சினிமா ஒரு அலசல் அற்புதம் ஐயா.

    பதிலளிநீக்கு
  10. நீங்கள் குறிப்பிட்ட சில படங்கள் பல பேருக்கு புதிதாக இருக்கும்...

    திண்டுக்கல் சோலைஹால் தியேட்டரில் வந்து ஆங்கிலப் படத்தைப் பார்த்தது, என் தளத்தில் உங்கள் கருத்துரை மூலம் தான் தெரியும்... (உலகம் சுற்றும் வாலிபர் சார் நீங்கள்... நன்றி...(TM 4)

    பதிலளிநீக்கு
  11. தியேட்டர்கள் காணாமல் போய் வரும் வேளையில் சிறப்பான நினைவுப் பகிர்வு! அருமை!

    இன்று என் தளத்தில்
    பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
    http://thalirssb.blogspot.in/2012/08/5.html

    பதிலளிநீக்கு
  12. இந்த நினைவுகளும் இனிமை கூட்டும் பின்னோக்கி பார்க்கும் தருவாயில் அய்யா ..
    உங்கள் நினைவுகளோடு நாங்களும் தொடர்கிறோம் , நீங்களும் தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  13. நாலணா டிக்கெட் வாங்கி (தரை டிக்கெட் ) படம் பார்த்தது கடலை கொறித்த வண்ணம் அதற்கு இணை எதுவும் இல்லை தான் ( என்னதான் Multiplex / Popcorn இருந்தாலும் ) ... வாசுதேவன்

    பதிலளிநீக்கு

  14. பழைய சென்னையின் தியேட்டர்களை மட்டுமல்ல,பல் வேறு இடங்களையும் கூட நினைத்துப்பார்ப்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறத//

    நிச்சயமாக
    தாங்கள் சொல்லும் டிக்கெட் விலை
    பஸ் டிக்கெட் விலையெல்லாம்
    இப்பொதைய இளைஞர்களுக்கு
    ஆஸ்சரியமூட்டுவதாய் இருக்கும்
    சுவாரஸ்யமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. அந்தக் கால தியேட்டர்கள், படங்கள், ரசிகர்கள் எல்லாமே ஒரு தனி உலகம்தான். நினைக்க நினைக்க இனிமைதான்.

    பதிலளிநீக்கு
  16. //நான் சிவாஜி ரசிகன்;ஆனால் ஜெ ரசிகனுமாயிற்றே!)//

    ஹி..ஹி..சீனியரே நானும் தான்..ஹி..ஹி..(ஆட்டோ கன்ஃபார்ம்!)

    பதிலளிநீக்கு
  17. எனது நெய்வேலி நினைவுகளைக் கிளறிவிட்டது உங்கள் பதிவு. இப்போதெல்லாம் தியேட்டர் சென்று படம் பார்ப்பதே இல்லை.

    பதிலளிநீக்கு
  18. நன்றி ஜூனியர்!(பயமுறுத்தறீங்களே!)

    பதிலளிநீக்கு