தொடரும் தோழர்கள்

வெள்ளி, அக்டோபர் 14, 2011

தாயே பராசக்தி!தட்டாமல் வரமருள்வாய்!

அன்றொரு நாள் இரவு நேரம்

கனவுக்கும் நனவுக்கும்

இடைப்பட்ட உறக்க நிலை.


படீரென்றோர் ஒளி வெள்ளம்

வெடித்த தென் னெதிரே!


ஜோதிப் பிழம்பாய்

தோன்றினாள் அன்னை சக்தி.

கைகூப்பித் தொழுது நின்றேன்

கருணையொடு பார்த்தாள் சக்தி.


”மகனே, உனக்கு வரமளிக்கவே வந்தேன்

என்ன வேண்டும் கேள்” என்றாள் என் அன்னை.


”அம்மா உன் அருளன்றி என்ன வேண்டும்

இருந்தாலும் சொல்லி விட்டாய் எனவே

நான் கேட்கின்றேன்.

என்றும் இறவா வரம் ஒன்றெனக்குத் தா!”


அன்னை சிரித்தாள்.

”பிறப்பும் இறப்பும் எழுதுபவன் பிரம்மதேவன்.

மறந்தும் நான் இதைத் தடுக்கக் கூடாது.

கேட்ட வரம் தராத காரணத்தால்

மூன்றாய்த் தருகின்றேன்வேறு

கேட்டு நீ பெற்றுக் கொள்!”

என்றுரைத்தாள் அன்னை பராசக்தி.


பத்துப் பனிரெண்டு தென்னை மரத்தோடு

காணி நிலம் கேட்கலாமா?

வேண்டவே வேண்டாம்.

தட்டிப் பரித்துத் தம் சொந்தமாக்க

கொட்டிக்கிடக்கும் குறுமதியோர் ஏராளம்!


பாட்டுக்கலப்பதற்குப்

பத்தினிப்பெண் கேட்கலாமா?

தேவையில்லை.


முகநூலில் முகமறைத்து நுழைந்தாலும்

முப்பதாய்க் கிடைக்குமது!


யோசித்தேன் இம்முறை நான்

எனக்கென்று கேட்டதுவோ கிடைக்கவில்லை

நாட்டுக்காய்க் கேட்டிடலாம் என

நல்லெண்ணம் நான் கொண்டேன்.


நான் கேட்டேன்.

”பனி பொழியும்காஷ்மீரில்

பிரச்சினைகள் உடன் தீர்ந்து

பாரதமும் பாகிஸ்தானும்

நல்லுறவு பேண வேண்டும்.”


“தமிழகமும் கர்நாடகமும்

தட்டாமல் கேரளமும்

தண்ணீர்ப் பிரச்சினையில்

தீர்வொன்று காண வேண்டும்.”


”அனைத்துக்கு மேலாக

அன்னையே நான் கேட்பதிது.

ஊழலே இல்லாத ஒரு

உயர்ந்த அரசு வேண்டும்.

உலகமே பார்த்து வியக்கும்

உன்னதமாய் அது திகழ வேண்டும்.”


திகைத்தாள் பராசக்தி.

இம்முறை அவள் யோசித்தாள்

”மரணமில்லாப் பெரு வாழ்வு தந்தேன்

உனக்கு பெற்றுக்கொள்”

என்றுரைத்தே அன்னையவள்

மறைந்தே போனாள்!

38 கருத்துகள்:

  1. ஹ ஹா, ஏற்கனவே எங்கோ வேற மாதிரி படிச்ச மாதிரி இருந்தாலும் கவிதையாய் அருமையாக இருந்தது

    பதிலளிநீக்கு
  2. ஃஃஃதட்டிப் பரித்துத் தம் சொந்தமாக்க
    கொட்டிக்கிடக்கும் குறுமதியோர் ஏராளம்!ஃஃஃஃ

    தமிழ்க் கோர்ப்பு மிக ரசிக்க வைக்கிறதுங்க..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்

    பதிலளிநீக்கு
  3. கடவுளே அல்றி அடித்து ஓடுமளவுக்கு இப்படியெல்லாம் வரம் கேட்கப்பிடாது.. அண்ணாச்ச்சி.

    பதிலளிநீக்கு
  4. இந்த விஷயத்தை கதை போல் நான் ஏற்கனவே படித்திருந்தாலும் ,தங்களின் கவிதை நடையில் தந்த போது ரசித்தேன் ,மிகவும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  5. கவிதையாய் வடித்த இந்த பகிர்வு மிக அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
  6. வார்த்தை ஜாலங்கள்
    கவிதை அருமை...
    வரம் கேட்டதும் பராசக்தி பறந்தே விட்டால்... ஹா ஹா ஹா
    ஊழலற்ற அரசு வேண்டும் என்பதே எம் வேண்டுகோள்..
    வரமருளுபவள் தான் எமக்கு பராசக்தி..

    அருமையான கவிதை ஐயா

    பதிலளிநீக்கு
  7. உங்கள் தமிழில் இனித்தது...

    பதிலளிநீக்கு
  8. பாரதி ஸ்டைலிலா? கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  9. திகைத்தாள் பராசக்தி.
    இம்முறை அவள் யோசித்தாள்

    தாயே பராசக்தி!தட்டாமல் வரமருள்வாய்!"

    அருமையாய் சம்யோசித்மான வரம்.

    பதிலளிநீக்கு
  10. ஹ ஹா, ஏற்கனவே எங்கோ வேற மாதிரி படிச்ச மாதிரி இருந்தாலும் கவிதையாய் அருமையாக இருந்தது அன்பரே!

    பதிலளிநீக்கு
  11. ஹா.ஹா.ஹா.ஹா.கடவுளே ஒடுகின்றார் நல்ல கவிதை ஜயா

    பதிலளிநீக்கு
  12. suryajeeva கூறியது...

    //ஹ ஹா, ஏற்கனவே எங்கோ வேற மாதிரி படிச்ச மாதிரி இருந்தாலும் கவிதையாய் அருமையாக இருந்தது//
    நன்றி சூரியஜீவா!

    பதிலளிநீக்கு
  13. ♔ம.தி.சுதா♔ கூறியது...

    ஃஃஃதட்டிப் பரித்துத் தம் சொந்தமாக்க
    கொட்டிக்கிடக்கும் குறுமதியோர் ஏராளம்!ஃஃஃஃ

    //தமிழ்க் கோர்ப்பு மிக ரசிக்க வைக்கிறதுங்க..//

    நன்றி ♔ம.தி.சுதா♔ .

    பதிலளிநீக்கு
  14. நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...

    அருமை. கூறியது...

    //அருமை.//
    நன்றி நண்டு @நொரண்டு -ஈரோடு .

    பதிலளிநீக்கு
  15. த. ஜார்ஜ் கூறியது...

    //கடவுளே அல்றி அடித்து ஓடுமளவுக்கு இப்படியெல்லாம் வரம் கேட்கப்பிடாது.. அண்ணாச்ச்சி.//
    ஹா,ஹா! நன்றி த. ஜார்ஜ்.

    பதிலளிநீக்கு
  16. M.R கூறியது...

    //இந்த விஷயத்தை கதை போல் நான் ஏற்கனவே படித்திருந்தாலும் ,தங்களின் கவிதை நடையில் தந்த போது ரசித்தேன் ,மிகவும் ரசித்தேன்//
    //thamil manam 3//
    நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  17. வெங்கட் நாகராஜ் கூறியது...

    //கவிதையாய் வடித்த இந்த பகிர்வு மிக அருமை ஐயா...//
    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  18. மகேந்திரன் கூறியது...

    //வார்த்தை ஜாலங்கள்
    கவிதை அருமை...
    வரம் கேட்டதும் பராசக்தி பறந்தே விட்டால்... ஹா ஹா ஹா
    ஊழலற்ற அரசு வேண்டும் என்பதே எம் வேண்டுகோள்..
    வரமருளுபவள் தான் எமக்கு பராசக்தி..

    அருமையான கவிதை ஐயா//

    நன்றி மகேந்திரன்.

    பதிலளிநீக்கு
  19. ரெவெரி கூறியது...

    //உங்கள் தமிழில் இனித்தது...//
    நன்றி ரெவெரி.

    பதிலளிநீக்கு
  20. shanmugavel கூறியது...

    //பாரதி ஸ்டைலிலா? கவிதை அருமை.//
    நன்றி சண்முகவேல்.

    பதிலளிநீக்கு
  21. இராஜராஜேஸ்வரி கூறியது...

    திகைத்தாள் பராசக்தி.
    இம்முறை அவள் யோசித்தாள்

    தாயே பராசக்தி!தட்டாமல் வரமருள்வாய்!"

    //அருமையாய் சம்யோசித்மான வரம்.//
    நன்றி இராஜராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  22. மாய உலகம் கூறியது...

    // ஹ ஹா, ஏற்கனவே எங்கோ வேற மாதிரி படிச்ச மாதிரி இருந்தாலும் கவிதையாய் அருமையாக இருந்தது அன்பரே!//
    நன்றி ராஜேஷ்.

    பதிலளிநீக்கு
  23. வைரை சதிஷ் கூறியது...

    //அருமை பாஸ்//
    நன்றி சதீஷ்.

    பதிலளிநீக்கு
  24. K.s.s.Rajh கூறியது...

    // ஹா.ஹா.ஹா.ஹா.கடவுளே ஒடுகின்றார் நல்ல கவிதை ஜயா//
    நன்றி ராஜ்.

    பதிலளிநீக்கு
  25. //முகநூலில் முகமறைத்து நுழைந்தாலும்
    முப்பதாய்க் கிடைக்குமது!//

    இதிலே நகைச்சுவை இழையோடினாலும் யதார்த்தம் கவலை கொள்ள வைக்கிறது.

    கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்! அன்னை பராசக்தியே உங்கள் முன் தோன்றியுள்ளார். அதனால் தான் கவி காளிதாசன் அன்னையின் அருள் பெற்று பாடியதுபோல், நீங்களும் கவிதை புனைந்துள்ளீர்கள். கவிதை நடை அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  26. கவிதையும், கற்பனையும் களைகட்டி நிற்கிறதிங்கே!

    பதிலளிநீக்கு
  27. வே.நடனசபாபதி கூறியது...

    //முகநூலில் முகமறைத்து நுழைந்தாலும்
    முப்பதாய்க் கிடைக்குமது!//

    //இதிலே நகைச்சுவை இழையோடினாலும் யதார்த்தம் கவலை கொள்ள வைக்கிறது.

    கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்! அன்னை பராசக்தியே உங்கள் முன் தோன்றியுள்ளார். அதனால் தான் கவி காளிதாசன் அன்னையின் அருள் பெற்று பாடியதுபோல், நீங்களும் கவிதை புனைந்துள்ளீர்கள். கவிதை நடை அருமை. வாழ்த்துக்கள்.//
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  28. FOOD கூறியது...

    //கவிதையும், கற்பனையும் களைகட்டி நிற்கிறதிங்கே!//
    நன்றி சங்கரலிங்கம்.

    பதிலளிநீக்கு
  29. மாலதி கூறியது...

    //கவிதை அருமை...//
    நன்றி மாலதி.

    பதிலளிநீக்கு
  30. அப்பாதுரை கூறியது...

    //tops!//
    நன்றி அப்பாதுரை.

    பதிலளிநீக்கு
  31. தெனாலி ராமன் வரம் கேட்டது போல் உள்ளது ..சாவா வரம் கிட்டினும் இப்பிரச்சினைகள் தீரா... வாசுதேவன்

    பதிலளிநீக்கு