தொடரும் தோழர்கள்

ஞாயிறு, செப்டம்பர் 06, 2015

விடுமுறை,சிரிமுறை!

வகுப்பறையில் இரு மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.


ஆசிரியர் வந்து அவர்களைக் கண்டித்துக் காரணம் கேட்டார்.


அவர்கள் சொன்னார்கள்”சார் கீழே பத்து ரூபாய் கிடந்தது.அதை மிகப் பெரிய பொய்யனுக்குக் கொடுப்பதாகத்  தீர்மானித்தோம்.யார் அது என்பதில்தான் வாக்குவாதம்.”



ஆசிரியர் சொன்னார்”பொய்யா?சே?என்ன மோசமான எண்ணம் உங்களுக்கு?நான் உங்கள் வயதில் பொய்யே சொன்னதில்லை.”


மாணவர்கள் அந்தப் பணத்தை ஆசிரியருக்கே கொடுத்து விட்டனர்.

 

************

10 கருத்துகள்:


  1. நகைச்சுவையை இரசித்தேன்‍! ஆனாலும் ஆசிரியர் ‘உங்கள் வயதில் பொய்யே சொன்னதில்லை’ என்று சொன்னதற்கு அந்த மாணவர்கள் அவருக்கு அந்த ரூபாயை கொடுத்தது சரியல்ல. ஏனெனில் அவர்களின் ஆசிரியர் அந்த மாணவர்கள் பிறக்காதபோது பொய்யே சொன்னதில்லை என்று சொன்னது சரியா தவறா எனத் தெரியாமல் அது பெரிய பொய் என எப்படி தீர்மானிக்கமுடியும்?

    பதிலளிநீக்கு
  2. எப்போ பொய் சொல்ல ஆரம்பித்தார் ,கல்யாணம் ஆனதில் இருந்தா :)

    பதிலளிநீக்கு