தொடரும் தோழர்கள்

ஞாயிறு, மார்ச் 31, 2013

ஹாலிடே ஜாலிடே!

ஓரிளைஞன் ஓர் அழகிய இளம் பெண்ணைக் காதலித்து வந்தான்.ஒரு நாள், மறுநாள் தன் 

பிறந்தநாள் என்று அவள் அவனுக்கு அறிவித்தாள்..அவன் அவளிடம் சொன்னான், மிக 

அழகிய ரோஜாப்பூங்கொத்து,அவள் வயதுக்கு இணையான எண்ணிக்கையில் ரோஜாக்கள்  

 அடங்கியது,அவளுக்கு அனுப்புவதாக.ஒரு பூக்கடைக்குச் சென்று 21 ரோஜாக்கள் அடங்கிய 

அழகிய பூங்கொத்தை அவள் விலாசத்துக்கு அனுப்பச் சொன்னான். அந்தக் கடைக்காரன், 

அவனுக்குப் பழக்கமானவன்,தன் அன்பளிப்பாக கூடவே பத்து ரோஜாக்கள் வைத்து 

அனுப்பினான்.

அந்த இளைஞனுக்கு ஏன் தன் காதலி அவ்வளவு அதிகக்கோபம் கொண்டு தன்னை விரட்டினாள் என்று தெரியவேயில்லை!  

பாவம்!:-)

....................................................................... சிவா ட்ரயாலஜியின் மூன்றாவது புத்தகமான”the oath of the vayuputras"இன்று கைக்கு வந்து விட்டது..முன்பே இப்புத்தகம் பற்றி என் பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.இதைப் படித்து முடிக்கும் வரை வலைப்பூவுக்கு விடுமுறை அளிக்கலாமா என யோசித்துக் கொண்டிருக் கிறேன்!

பார்க்கலாம்!


...............................................


7 கருத்துகள்:

 1. ஹா... ஹா... (பிறகு...... கடைக்காரனை காதலிக்காமல் இருந்தால் சரி...!)

  விடுமுறை எல்லாம் அதிக நாள் கிடையாது என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...

  பதிலளிநீக்கு
 2. கடைக்காரன் காட்டி அதிக அக்கறை இப்படியும் பிரச்னையாகுமா என்ன..? ஹா... ஹா...

  அடிக்கடி விடுமுறைல்லாம் அளிக்கக் கூடாது வாத்யாரே! பதிவுகள் இடும் கால இடைவெளி வேண்டுமானால் கூடலாம்- மூன்று தினங்களுக்கு ஒன்று என்றோ நான்கு தினங்களுககு ஒன்று என்றோ அல்லது வாரம் ஒன்று என்றோ கூட! ஆனால் நோ விடுமுறை ப்ளீஸ்!

  பதிலளிநீக்கு
 3. அவன் தவறு செய்துவிட்டான். 21 பூக்களுக்கு பதிலாக 11 பூக்களை அனுப்ப சொல்லியிருக்கவேண்டும்!
  ”The oath of the vayuputras” படித்து வந்து எங்களுக்கும் சொல்லுங்கள்!

  பதிலளிநீக்கு
 4. ஹாஹா பாவம்ணே அந்த பொண்ணு!

  பதிலளிநீக்கு
 5. நல்ல ஜோக்.
  புத்தகத்தில் இருந்து பல விஷயங்கள் எங்களுக்கு கிடைக்கும் என்று எதிர் பார்க்கிறோம்

  பதிலளிநீக்கு