தொடரும் தோழர்கள்

சனி, மார்ச் 02, 2013

என் காதலி!(தொடர்கிறாள்)

செவ்வாய், பிப்ரவரி 08, 2011

சென்னைக்காதல்-2

'காதலிக்க நேரமில்லை’ என்று ஆரம்பமாயிற்று என் சென்னைக் காதல்!

பத்தொன்பது வயது வரை சிற்றூர்களிலேயே வாழ்ந்து பழகிய ஒருவன்,இருபதாவது வயதில் நகரத்துக்கு வந்தால் பிரமிப்பு ஏற்படாதா?

அந்தத் திரை அரங்கம்,,ஓட்டல்,அவை தவிர முதன் முதலாகப் பார்த்த அலை மோதும் கடல்,பரந்த கடற்கரை எல்லாமே புதிய அனுபவம்தான்.கடலில் கால் நனைய நின்றது, தே.மா.ப.சு. சாப்பிட்டது,குழந்தையாக மாறி மணலில் ஓடியது எல்லாமே புது அனுபவம்தான்.எல்லாவற்றையும் விட வியப்பை எற்படுத்தியது,அவன் பார்த்த இளம் பெண்கள்,அவர்களின் நாகரிக உடை,அவர்கள் பேசிய ஆங்கிலம்.

மெஸ்ஸில் சுவை உணவு
லஸ்ஸில் விண்டோ ஷாப்பிங்
பஸ்ஸில் ஊர் சுற்றல்
மிஸ்ஸிங்—வேறென்ன படிப்புதான்!
(கடைசியில் மேக்கப் பண்ணிட்டோமுன்னு வச்சிக்குங்க!)

கல்லூரி விடுதியில் மிக அருமையான சைவ உணவு கிடைத்தது.ஞாயிறன்று தயாராகும் மோர்க்குழம்பு மிகப் பிரசித்தம்.வெண்டைக்காயை சிறு துண்டுகளாக வெட்டி,எண்ணெயில் வறுத்து,மோர்குழம்பில் போட்டிருப்பார்கள்!பீன்ஸ் பொரியல்,மைசூர் ரசம்,தயிர்.
சாப்பிட்ட சாப்பாடு செரிக்க வேறென்ன செய்வது?—ஊரைச் சுற்று!

லஸ்!மயிலையின்ரத்த நாளம்!இன்றும் இருக்கும் சுக நிவாஸ்-மங்களூர் போண்டா பிரமாதம்.இன்று இல்லாமல் போய் விட்ட சாந்தி விஹார்.அன்றைக்கு ’காஃபி டே’ யோ, ’ஜாவா க்ரீனோ’ ‘மோக்கா’ வோ இல்லை—சந்திப்பதற்கும்,சல்லாபிப்பதற்கும்.(இப்போதெல்லாம் இம்மாதிரி இடங்களில் எழுதுகிறார்கள்—’காஃபியும், பேச்சும்’,காஃபியும் அதற்கு மேலும்,’என்றெல்லாம்!

அப்போது எங்களுக்கு இருந்ததெல்லாம் சாந்தி விஹார் தான்.வெறும் காஃபி மட்டும் குடிப்பதற்காகக் கூட்டமாய்ப் போய் அரைமணிக்கும் மேல் அங்கு அமர்ந்து பேசி விட்டு(பார்த்து விட்டும்!) வருவோம்.இல்லையென்றால், குளக்கரையில் இருந்த உடுப்பியின் ரூஃப் கார்டனில், மணக்கும் நிகரற்ற குழம்பியுடன் ஊர் வம்பு!

வெள்ளியன்று,பக்தி அதிகமாகி விடும்!கபாலீச்வரரையும், கற்பகாம்பாளையும், பார்க்காமல் இருக்க முடியாது—நல்ல தரிசனம் அன்றுதானே கிடைக்கும்!!அந்தக் கோவில் அன்றும் என்னைப் பெரிதும் கவர்ந்தது,இன்றும் கவர்கிறது,என்றும் கவரும்!வேறுபாடு பார்வகளில்தான்!

லஸ்ஸிங்கும்(லஸ்ஸுக்குப் போய் சுற்றி விட்டுப் பார்த்து விட்டு வருவதற்கு நாங்கள் வைத்த பெயர்),கோவிலிங்கும் இல்லாத நாட்களில் இருக்கவே இருக்கிறது அழகிய சாந்தோம் கடற்கரை.(பீச்சிங்).முன்பே எழுதியது போல சிறிய, ஆர்ப்பாட்டமில்லாத ,அழகிய கடற்கரை.இன்று இல்லாமல் போய் விட்டாலும் என் நினைவில் நிற்கும்,நினைவில் கலந்து விட்ட கடற்கரை.கச்சேரி ரோடு வழியாக நடந்தே போய்க் கடற்கரையில் பொழுதைக் கழித்துவிட்டு நடந்தே திரும்பி வருவோம்.

இன்று பெரிய பெரிய வணிக வளாகங்கள் இருக்கலாம்.ஆனால் அன்று சிறிய ’லாக்ஸ் அண்ட் லாக்ஸ்’, கடையில் பொருள் வாங்கிய(அல்லது பார்த்துவிட்டு வாங்காமல் வந்த),சுகமே தனிதான்!அச்சிறிய கடையின் நெரிசல் நெருக்கங்கள்,எங்கள் அலட்டல்கள்(பட்ட மேற்படிப்பு மாணவர்கள் ஆயிற்றே!) ,கடைக்காரரின் தனிக் கவனிப்பு எல்லாமே மறக்க முடியுமா?

சனிக்கிழமை இரவுகள் விடுதியில் கட்டவிழ்த்து விட்ட இரவுகள். பெரும்பாலும் சினிமா பார்க்கும் நாட்கள்.இன்றில்லாத அரங்குகளான மினர்வாவில் ‘ஹடாரி’ குளோபில் முதல் நாள் முதல் காட்சி ‘ஃப்ரம் ரஷ்யா வித் லவ்” சஃபைரில் ‘க்ளியோபாட்ரா’,’மை ஃபேர் லேடி’,சஹானிஸ்(ராஜகுமாரி)யில் ’சரேட்’ ’டாக்டர்.நோ’’எல்ஃபின்ஸ்டன், ஓடியன் அரங்குகளில் பல ஆங்கிலப் படங்கள்,--மறக்க முடியுமா?

எல்லாவற்றிலும் முக்கியமானது இந்தச்சென்னையென்னும் பெண் என்னில் நிகழ்த்திய மாற்றங்கள்!

அவை பற்றிப் பின்னால் பார்ப்போம்!

(தொடர்கிறேன்)

26 கருத்துகள்:

  1. இனிய நினைவுகள்...

    மாற்றங்களை காண ஆவலுடன்...

    பதிலளிநீக்கு
  2. //நல்ல தரிசனம் அன்றுதானே கிடைக்கும்!!//

    ஹா.ஹா..

    //அந்தக் கோவில் அன்றும் என்னைப் பெரிதும் கவர்ந்தது,இன்றும் கவர்கிறது,என்றும் கவரும்!வேறுபாடு பார்வகளில்தான்!//

    உண்மை. சிறப்பாக இருக்கு.

    உங்களுக்குள் நிகழ்ந்த மாற்றங்களை தெரிந்துக்கொள்ள காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  3. //நல்ல தரிசனம் அன்றுதானே கிடைக்கும்!!//
    தரிசனம் கிடைத்ததும், ‘தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்ததொரு வார்த்தை சொல்லி விடம்மா - பாவி, அப்பாவி, உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா....’ என்று பாடியதுண்டோ?

    பதிலளிநீக்கு
  4. // வெண்டைக்காயை சிறு துண்டுகளாக வெட்டி,எண்ணெயில் வறுத்து,மோர்குழம்பில் போட்டிருப்பார்கள்!பீன்ஸ் பொரியல்,மைசூர் ரசம்,தயிர்.//

    பசுமை நிறைந்த நினைவுகளே!
    நன்றாக ரசித்து ருசித்து சாப்பிட்டு இருக்கிறீர்கள். நீங்கள் சொல்லும் இதே மெனுவை இங்கு திருச்சியில் (வை. கோபாலகிருஷ்ணன் சார் வீட்டுக்கு அருகில் இருக்கும்) மதுரா லாட்ஜ் சாப்பாட்டில் சாப்பிட்டு இருக்கிறேன். இப்போது யாரும் பழைய ருசியில் செய்வது கிடையாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெஞ்சில் நிற்கும் நினைவுகள்;கண்ணில் நிற்கும் அழகுகள்;நாவில் நிற்கும் சுவை;அந்தக்காலமே தனி!
      நன்றி தமிழ் இளங்கொ!

      நீக்கு
  5. மீள் பதிவு என்றாலும் பதிவை விட்டு மீளவிடாமல் செய்தது உங்கள் எழுத்து நடை! தொடருங்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  6. "வெள்ளி அன்று பக்தி அதிகமாகிவிடும் " ஹா..ஹா.... சுவையாக சொல்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  7. //அந்தக் கோவில் அன்றும் என்னைப் பெரிதும் கவர்ந்தது,இன்றும் கவர்கிறது,என்றும் கவரும்!வேறுபாடு பார்வகளில்தான்!//
    இதைப் படிக்கும் போது இன்றைய ஜோக்காளியின் 'நவக்கிரக நாயகி 'நினைவுக்கு வந்தாள் !சரியாயென்று நீங்கள்தான் சோல்லவெண்டும் !
    http://jokkaali.blogspot.in/2013/03/blog-post_1142.html

    பதிலளிநீக்கு
  8. //அந்தக் கோவில் அன்றும் என்னைப் பெரிதும் கவர்ந்தது,இன்றும் கவர்கிறது,என்றும் கவரும்!வேறுபாடு பார்வகளில்தான்!//இதைப் படிக்கும் போது இன்றைய ஜோக்காளியின் 'நவக்கிரக நாயகி 'நினைவுக்கு வந்தாள் !சரியாயென்று நீங்கள்தான் சோல்லவெண்டும் !://jokkaali.blogspot.in/2013/03/blog-post_1142.html

    பதிலளிநீக்கு
  9. 'லஸ்ஸிங்கும்,கோவிலிங்கும்,பீச்சிங்' வார்த்தைகள் புதுசா இருக்கு. வாழ்த்துகள் சார்.

    பதிலளிநீக்கு
  10. ஒரு நாள் சுக விலாஸ் கூட்டிட்டு போங்க சார்.

    பதிலளிநீக்கு
  11. //எல்லாவற்றிலும் முக்கியமானது இந்தச்சென்னையென்னும் பெண் என்னில் நிகழ்த்திய மாற்றங்கள்!//

    ஆட்டோக்ராப் மாதிரி நாலு பேரை லவ் பண்ணி இருப்பீங்க...சாரி உங்களை லவ் பண்ணி இருப்பாங்க போல??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாலு பேரைப் பண்ணினா அது லவ் இல்ல,நாலு பேர் பண்ணினா அதுக்கு நான் பொறுப்பில்ல!
      நன்றி சிவா

      நீக்கு
  12. மாற்றங்களை தெரிந்து கொள்ள காத்திருக்கிறோம்...

    பதிலளிநீக்கு