தொடரும் தோழர்கள்

வியாழன், மார்ச் 28, 2013

யார் கவிஞன்?!கவிதை எது?!இறந்தகால இழப்புகளுக்காகவும்

எதிர்காலக் கனவுகளுக்காகவும்

வருத்தமும் கவலையும்........

இல்லாததற்காக ஏக்கம்.......

வாய் விட்டுச் சிரித்தாலும்

வலியின்றிப்போவதில்லை!

சோகமான நினைவுகளைச்

சுமந்தே வருகின்றன

நமது இனிமை மிக்க பாடல் எல்லாம்!
.................................................

குடதிசைக் காற்றே!

வருவதுரைக்கிறேன்

என் வார்த்தைகளை

எக்காள முழக்கமாய்

எடுத்துச் சொல்

விழிப்பில்லா உலகுக்கு!

 முன் வருங் கடுங் குளிரைப்

பின் தொடர்ந்து வாராதோ

வசந்த காலம்!
.......................................

ஆழ்கடலின் அடிமடியில்

ஒளிந்தே கிடக்கும் பல

ஒளி வீசும் ரத்தினங்கள்!

பாழ் வெளிப் பாலையிலும்

மலர்ந்து மணம் பரப்பிப்

பயனின்றி வாடி விடும்

இனிய மலர்கள் பல!
…………………………………….
இவை மூன்றும் பிரபலமான ஆங்கிலக்கவிதைகளின்  ஒரு பகுதியின் தமிழ் வடிவம்.

என்ன கவிதை,கவிஞன் யார் சொல்ல முடியுமா?!

.......................................................

பலர் என்னையே சொல்லச் சொல்லி விட்டார்கள்...
 இதோ.....

ode to a skylark--shelley
ode to the west wind-shelley
elegy written in a country churchyard-thomas gray


20 கருத்துகள்:

 1. நல்லாவும் இருக்குது புரியாதது போலவும் இருக்குது........
  தமிழ் கவிஞர்களையே எனக்குத் தெரியாது இதுல ஆங்கிலம் வேறயா........

  இந்தப் போட்டிக்கு நான் வரல்லை ஐயா.........:P

  பதிலளிநீக்கு
 2. வரிகள் அருமை...

  நீங்களே சொல்லிடுங்க ஐயா... (இராஜராஜேஸ்வரி அம்மா சொன்னது சரியோ..?)

  பதிலளிநீக்கு
 3. INSPIRATION க்கு கூட ஆங்கில பாடல்களை வாசிப்பதில்லை பித்தரே...-:)

  பதிலளிநீக்கு
 4. அசத்துங்க தலைவரே...
  யார் கவிதை என்று நீங்களே சொல்லிடுங்க

  பதிலளிநீக்கு
 5. யாரென்று தெரியவில்லை. நீங்களே சொல்லிவிடுங்கள்.

  பதிலளிநீக்கு
 6. பதில்கள்
  1. ரசிக்கும்படியாக இருந்ததல்லவா?அது போதும்.
   நன்றி கருண்

   நீக்கு
 7. பதில்கள்
  1. மூன்று கவிதைகள்;மூன்று பதில்கள் .அதே வரிசையில்
   நன்றி கவிஞரே

   நீக்கு