தொடரும் தோழர்கள்

புதன், மார்ச் 27, 2013

பட்டிக்காட்டான் பட்டணத்தில்..மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்!.பட்டணத்தில் உயர் பதவியில் இருக்கும் மகன்.

வயதான தந்தை…  பட்டிக்காட்டில் தனியாக.

மகன் எத்தனையோ முறை அழைத்தும் வர மறுத்த தந்தை.

ஒரு முறை தானே பட்டணத்திலிருந்து பட்டிக்காடு சென்று  வலுக்கட்டாயமாகத் தந்தையைத் தன்னுடன் அழைத்து வரும் மகன்.

தந்தை மீது அன்புக்குக் குறைவில்லை.

மருமகளும் அது போலவே.தந்தைக்கும் மகிழ்ச்சியே.

பட்டணத்தின்  சொர்க்கத்தைக் காட்ட  ஒரு நாள் அவரை ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் செல்கிறான்.

பட்டிக்காட்டின் டீக்கடை தவிர எதையும் பார்க்காத மனிதர்.

பிரமிக்க வைக்கும் ஓட்டல்.

உணவு-கிண்ணங்களில்,தட்டுக்களில்,எப்படி எப்படியோ…

கூடவே கத்தியும், முள் கரண்டியும்.

மகன் பழக்கப் பட்டவன்.

விழிக்கும் தந்தை.கத்தி,கரண்டியை ஒதுக்கி விட்டுக் கையால் சாப்பிட ஆரம்பிக்கிறார்.
இருந்தும் நடுங்கும் கை-மேலெல்லாம் சிந்தும் உணவு .

மற்றவர்கள் கேவலமாக நினைப்பார்கள் என் எண்ணி வெட்கித் தலை குனியும் மகன்.
தந்தை மேல் அன்புக்குக் குறைவில்லை.

அதையும் பின் தள்ளி முன் வருகிறது மற்றவர்கள் அபிப்பிராயம் என்ற தேவையற்ற சிந்தனை.

கணவன் சொல்வான் “என் மனைவிக்கு நாலு பேருடன் பேசிப் பழகத் தெரியாது. அதனா லேயே  நான் அவளை பார்ட்டிகளுக்கு அழைத்துச் செல்வதில்லை.அவள் நடவடிக்கையைப் பார்த்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ?”

”என் தம்பி கொஞ்சம் மன நலம் குன்றியவன்;அதனால் நான் அவனை அழைத்துக் கொண்டு வெளியே செல்வதில்லை.மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?”ஓர் அண்ணன்.

இவர்களுக்கெல்லாம் அன்பு இல்லை என்பதல்ல,

தந்தையை,மனைவியை,தம்பியை நேசிப்பவர்கள்.

ஆனால் அந்த நேசமும் பாசமும் எங்கே போகின்றன?

காரணம் அவர்கள் அவர்களாக இருப்பதில்லை.

மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றே கவலைப் படுகிறார்கள்.

யார் அந்த மற்றவர்கள்? அவர்களின் நினைப்பு உங்கள் அன்பை ஏன் பின் தள்ளி முன் நிற்க 
வேண்டும்?அவர்கள் எண்ணத்தைப் பற்றி என்ன் கவலைப்பட வேண்டும்?அவர்களுக்கும் இருக்கலாம் எத்தனையோ குறைகள்!

யாரிடம்தான் குறைகள் இல்லை?


நாம் நாமாக இருக்கும் வரை மற்றவர்களின் எண்ணத்தைப் பற்றிக் கவலைப் படத் தேவை யில்லை.
.......................................................................

16 கருத்துகள்:

 1. //நாம் நாமாக இருக்கும் வரை மற்றவர்களின் எண்ணத்தைப் பற்றிக் கவலைப் படத் தேவை யில்லை.
  ///


  நல்ல கருத்து

  பதிலளிநீக்கு
 2. மிகச் சரி ஐயா. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்பட்டு வாழ ஆரம்பித்தால் நாம் நம்மைத் தொலைத்து விடுவோம் என்பதே உண்மை.ஒரு முதியவனும் அவன் மகனும் குதிரையும் சென்ற கதைபோலத்தானாகி விடும் வாழ்வு. அருமையான கருத்தைச் சொன்ன அழகிய பகிர்வு!

  பதிலளிநீக்கு
 3. மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாமல் நாம் நமக்காக வாழ்வோம் என்ற அருமையான கருத்தை தந்தமைக்கு, வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. உண்மை தான்... நாம் நமக்காக தான் வாழ வேண்டும் - முதலில்...

  பதிலளிநீக்கு
 5. அருமையான பதிவு ஐயா,மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நினைத்தால் நாம் சுதந்திரமாக முடிவெடுக்கும் ஆற்றலை இழந்து விடுவோம்

  பதிலளிநீக்கு
 6. நாம் நாமாக இருக்கும் வரை மற்றவர்களின் எண்ணத்தைப் பற்றிக் கவலைப் படத் தேவை யில்லை.//

  ஆஹா அருமையா சொல்லிட்டீங்க தலை....!

  பதிலளிநீக்கு
 7. அருமையா சொன்னீங்க! நாம் நாமாக இருப்பொம்! நல்லதொரு பகிர்வு! நன்றி!

  பதிலளிநீக்கு
 8. நாம் நாமாக இருக்கும் வரை மற்றவர்களின் எண்ணத்தைப் பற்றிக் கவலைப்
  படத் தேவை யில்லை.

  சிறப்பான சிந்தனை..!

  பதிலளிநீக்கு