தொடரும் தோழர்கள்

சனி, மார்ச் 16, 2013

சிரித்து வாழ வேண்டும்!மகிழ்ச்சி என்பது பட்டாம்பூச்சி மாதிரி
துரத்தத் துரத்த விலகிப் பறக்கும்
கவனத்தை வேறு புறம் திருப்பினால்
தானே வந்து தோளில் அமரும்!

மகிழ்ந்திருக்க இடம் இதுதான்
மகிழ்ந்திருக்க நேரம் இப்போதுதான்!

இயலும்போதெல்லாம் சிரியுங்கள்
மாற்ற முடியாததை மாற்ற எண்ணி
மகிழ்ச்சியைத் தொலைக்காதீர்.

வாழும் நாள் சிறிது
வாழும் வரை மகிழ்ச்சியாய் இருங்கள்!

மகிழ்ச்சி ஒரு தொற்று நோய்;
உங்கள் மகிழ்ச்சி
சுற்றியுள்ளோரையும் மகிழ்ச்சியாக்கும்!

வயதானதால் நீங்கள் சிரிக்க மறக்கவில்லை;
சிரிக்க மறந்ததால் வயதானவராகி விட்டீர்கள்!

மற்றவர்க்காகத் துடிக்கும் இதயமே
மகிழ்ச்சி நிறைந்த இதயம்!

ஒரு நாள் எல்லாமே தெளிவாகும்
இன்று குழப்பங்களைக் கண்டு சிரியுங்கள்
கண்ணீரின் ஊடாகவும் சிரியுங்கள்
நினைவு கொள்ளுங்கள்
காரணம் இன்றிக் காரியம் நடப்பதில்லை!

10 கருத்துகள்:

 1. /// வயதானதால் நீங்கள் சிரிக்க மறக்கவில்லை;
  சிரிக்க மறந்ததால் வயதானவராகி விட்டீர்கள்! ///

  என்ன அனுபவ உண்மை...!

  முடிவில் அதை விட சிரிப்பின் சிறப்பு...

  வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 2. மகிழ்ச்சி ஒரு தொற்று நோய் .. அதனால் தான் மகிழ்ச்சியாக இருக்க யோசிக்கிறாங்க ஐயா. அழகாக சொன்னீங்க.

  பதிலளிநீக்கு
 3. // வாழும் நாள் சிறிது
  வாழும் வரை மகிழ்ச்சியாய் இருங்கள்!//

  சரியாகச் சொன்னீர்கள்!

  பதிலளிநீக்கு
 4. உண்மைதான்! மகிழ்ந்து மகிழ்ச்சிப்படுத்துவோம்! நன்றி!

  பதிலளிநீக்கு
 5. //மகிழ்ச்சி என்பது பட்டாம்பூச்சி மாதிரி
  துரத்தத் துரத்த விலகிப் பறக்கும்
  கவனத்தை வேறு புறம் திருப்பினால்
  தானே வந்து தோளில் அமரும்!//

  அழகான உவமை.

  பதிலளிநீக்கு
 6. //மகிழ்ச்சி ஒரு தொற்று நோய்;
  உங்கள் மகிழ்ச்சி
  சுற்றியுள்ளோரையும் மகிழ்ச்சியாக்கும்!
  //

  அட அந்த தொற்று நோய் பரவட்டுமே

  பதிலளிநீக்கு
 7. தேவைகள் அதிகமில்லை ஆனாலும் தேடல்கள் அதிகமாக இருகின்றன அதிலும் பயனற்ற தேடல்கள் பணத்தின் மீதான தேடல் எல்லை என்று எப்போதும் ஒன்று இருந்ததில்லை இந்த பணத்தின் மீதான தேடலும் பட்டாம் பூச்சி போலவே கிட்ட போக போக தேவை படும் தொகை கூடிகொண்டே போகும் எல்லையும் இல்லை முடிவும் இல்லை மகிழ்ச்சியும் இல்லை.

  பதிலளிநீக்கு
 8. மிகவும் சரியாகச் சொல்லப்பட்ட கருத்து.

  பதிலளிநீக்கு