தொடரும் தோழர்கள்

செவ்வாய், மார்ச் 05, 2013

கண்ணே உன்னால் நானடையும் கவலை கொஞ்சமா?!கண் மருத்துவரைப் பார்ப்பதை நீண்ட நாட்களாகத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன்.


நேற்று போவதென்று முடிவு செய்து மாலை 4 மணி அளவில் புறப்பட்டுச் சென்றேன்.

வரவேற்புப் பிரிவுக்குச் சென்று சொன்னேன்”வழக்கமான கண் பரிசோதனைதான்.”

ஒரு படிவம் கொடுத்தாள்;விவரங்கள் குறித்துக் கொடுத்தேன்.

சிறிது நேரத்தில் என் கையில் ஒரு அடையாள அட்டை கொடுத்தார்கள்.
”எப்போது வந்தாலும் இதைக் கொண்டு வாருங்கள்”

என்னை ஒரு அறைக்கு அழைத்து சென்றாள்.

அங்கு இருந்த இரண்டு கருவிகள் முன் அமர்ந்து சில சோதனைகள்.;

பின் முதல் மாடி;

ஒரு அறையில் ஒருவர் லென்ஸ்களை மாற்றி மாற்றிப் போட்டு எதிரில் இருக்கும் அட்டையில் இருந்த எழுத்துக்களைப் படிக்கச்சொன்னார்.

பின் மருத்துவர்.பெண்!இப்போதுதான் படிப்பை முடித்து விட்டு வந்திருப்பார் எனத் தோன்றியது!

அவரும் கண்ணில் டார்ச் அடித்துப் பார்த்தார்.

மீண்டும் முகவாய் பதித்து,நெற்றி அழுத்திவைத்துக்கொள்ள ஒரு கண் பரிசோதனைக்   கருவி.

எதிரில் டாக்டர் அமர்ந்து என் கண்களைப் பார்த்தார்

“என் வலது காதைப் பாருங்க!”

எதற்காகப் பார்க்கச் சொல்கிறார்?

பார்த்தேன்.காதில் அணிந்திருந்த ஜிமிக்கி புதிதாகத் தோன்றியது; இதற்காகத் தான் பார்க்கச் சொன்னாரோ?

”ஜிமிக்கி நல்லாருக்கு டாகடர்;ஜி.ஆர்.டி.யா?”

சார்!என் ஜிமிக்கியைப் பற்றிக் கருத்துக் கேட்கலை.என் வலதுகாதைப்  பார்த்தால் உங்கள் கண் இடது புறம் பார்க்கும்;பரிசோதனை செய்ய வேண்டும்.”

ஆயிற்று.

இப்போது இடது காது.

அதுவும் முடிந்தது!

அடுத்து முதலில் மேலே பின் கீழே பார்க்கச் சொல்வேன்.எதையாவது சொல்லித்  தொலைக் காதீர்கள்!”

பரிசோதனை முடிந்தது.

வெளியே போய் அமருங்கள்.கண்ணில் மருந்து விடுவார்கள்.பாப்பாவைப் பெரிதாக்கிப் பார்க்க வேண்டும்

எந்தப் பாப்பாவை எனக் கேட்கத்தோன்றியது!அடக்கிக் கொண்டேன்!

அடுத்தொரு அரை மணிநேரம் கண்ணை மூடித் தவம்.

ருத்ரம் சொல்லியவாறு நேரத்தை ஓட்டினேன்.

மீண்டும் பரிசோதனை.

முதலிலேயே நான் சொல்லியிருந்தேன் எனக்கு வலது கண் திரையில் சூரியச் சூடு இருப்பதாக மருத்துவர்கள் முன்பே சொல்லியிருப்பதை(சூரியக் கிரகணம் பார்த்தாதால் வந்த வினை!)

இப்போதும் அதையே சொல்லிய மருத்துவர்,விழித்திரை வல்லுநரையும் பார்த்துவிடச் சொன்னார்.

மீண்டும் தரைத்தளம்.

விழித்திரை வல்லுநரின் பரிசோதனை.

”திரையில் ஏதும் பிரச்சினை இல்லை.ஒரு கலர் ஃபோட்டோ எடுத்து விடலாம்!”

“இப்போது கருப்பு வெள்ளையே கிடையாதே;எல்லாம் கலர்தானே? ஃபோட்டோ எடுத்து அடையாள அட்டையில் ஒட்டிக் கொடுப்பார்களோ?” நினைத்தேன்

என்னை அழைத்துச் சென்ற பெண்ணிடம் சொன்னேன்”பாத்ரூம் போய் முகம் கழுவிப் பவுடர் பூசி வருகிறேன்.ஃபோட்டோ  எடுக்க வேண்டுமே!”

“அவள் என்னைப் பார்த்த பார்வை”அட,அல்பமே!”என்றது!

”சார்!ஃபோட்டோ உங்க கண்ணுக்குத்தான்!வாங்க மேலே போகலாம்”

மேலே போய், ஃபோட்டோ எடுத்து ,என்று எல்லாம் சொன்னால் மிக நீண்டு விடும்.

எனவே முடித்துக் கொள்கிறேன்!

இன்று மீண்டும் வரச் சொல்லியிருக்கிறார்கள்!31 கருத்துகள்:

 1. nakaisuvaiyaa sollideenga ayya...!

  udal nalampera vaazhthukkal ayyaaa...

  பதிலளிநீக்கு
 2. ”ஜிமிக்கி நல்லாருக்கு டாக்டர்;ஜி.ஆர்.டி.யா?”
  ஒருவேளை நீங்கள் பெண்ணாயிருந்தால் பதில் சொல்லியிருப்பாரோ என்னவோ! இருந்தாலும் உங்களுக்கு குறும்பு அதிகம் தான்.

  பதிலளிநீக்கு
 3. நானும் கண்புரை காரணமாக மருத்துவமனை போக வேண்டும். அடுத்த பதிவினை எதிrபார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடையார் வாசனில் சேவை அவ்வளவு திருப்திகரமாக இல்லை.
   உங்கள் ஊரில் ஜோசஃப் கண் மருத்துவமனை என பெயர்பெற்ற ஒன்று இருந்ததாக ஞாபகம்!
   நன்றி தமிழ் இளங்கோ சார்!

   நீக்கு
 4. உங்க குறும்பை சிரித்துக் கொண்டே ரசித்தேன்...

  பதிலளிநீக்கு
 5. ஹா..ஹா...

  சிரித்துக்கொண்டே இருக்கிறேன்.

  கண்ணுக்கு என்ன ஆயிற்று??

  பதிலளிநீக்கு
 6. மீண்டும் போய் வருக. மேலே கீழே பார்த்தாலும் எதுவும் சொல்ல வேண்டாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றுபோய் வந்தேன்;ஆனால் யாரையும் பார்க்கவில்லை,கோபம்தான் வந்தது,சேவைக் குறைபாட்டை நினைத்து.
   நன்றி அப்பாதுரை

   நீக்கு
  2. புரிகிறது. இது ஒரு பெரிய அட்ஜஸ்ட்மென்ட் இந்தியா வரும்போதெல்லாம். மிச்ச இடங்கள்ள ஒண்ணும் பிரமாதமா கிழிக்கலின்னாலும், consistentஆ இருக்கறதுனால எதிர்பார்ப்புகளை நாமே மேனேஜ் செய்ய முடியுது.

   நீக்கு
 7. முதலிலேயே நான் சொல்லியிருந்தேன் எனக்கு வலது கண் திரையில் சூரியச் சூடு இருப்பதாக மருத்துவர்கள் முன்பே சொல்லியிருப்பதை(சூரியக் கிரகணம் பார்த்தாதால் வந்த வினை!)//

  சூரிய புத்திரி முடிக்கவில்லையே ஐயா.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சூரிய புத்திரையை நினைவு படுத்தியதற்கு நன்றி ஓரிரு நாட்கள் நேரம் கொடுங்கள்.முடித்து விடுகிறேன்
   நன்றி

   நீக்கு
 8. தல! இதைத் தான் நாங்க எதிர்பார்த்துக் காத்திருந்தோம் இத்தனை நாளா!

  நல்ல நகைச்சுவை!

  பதிலளிநீக்கு
 9. அந்த டாக்டரே தேவலாம் சோதனைமேல் சோதனை இதுக்கு கமண்ட்ஸ் வேற க ...........

  --

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நகைச் சுவைக்காக,நகைச்சுவையாக எழுதிய நகைச்சுவைப் பதிவை,நகைச்சுவை உணர்வோடு மட்டும் பாருங்கள் பாலசுப்பிரமணியன் சார்!
   வருகைக்கு நன்றி

   நீக்கு
 10. மருத்துவமனைக்கு சென்று வந்ததை கூட இவ்வளவு நகைச்சுவையாக எழுத முடியுமா ?

  பதிலளிநீக்கு
 11. ஹா ஹா ஹா ஹா ஹா தல வந்தாச்சு....தல வந்தாச்சு...!

  என்னாது பாப்பாவை பார்க்க சொன்னாங்களா...? அப்போ என்னையும் கூட்டிட்டு போங்க தல நானும் வாறன் ஹி ஹி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் தூண்டுதலே நான் மீண்டும் எழுதக்காரணம் மனோ!
   நன்றி

   நீக்கு
 12. சமீபத்தி்ல் நானும்கூட வாசனுக்குச் சென்று கண் பரிசோதித்து கண்ணாடி பவர் மாற்றினேன். இதே அனுபவங்கள்தான். ஆனால் இவ்வளவு சுவையாகச் சொல்ல என்னால் முடியுமா என்று கேட்டால்... சான்ஸே இல்ல! அதாங்க தல அடையார் அஜீத்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நகைச்சுவை மன்னனுக்கு எவ்வளவு தன்னடக்கம்?!
   நன்றி கணேஷ்

   நீக்கு
 13. அடுத்த நாள் அனுபவத்தை சீக்கிரம் பகிருங்கள்...ஒரு கண் பரிசோதனையை கண்முன் கொண்டுவந்து நகைக்க வைத்து விட்டீர்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்று எழுதியிருக்கிறேன்;ஆனால் நகைச்சுவை இல்லை
   நன்றி சமீரா

   நீக்கு
 14. பதில்கள்
  1. இந்த சிறியோனைத் தலைவரே எனத் தாங்கள் அழைக்கலாமா அய்யா?
   நன்றி

   நீக்கு