தொடரும் தோழர்கள்

செவ்வாய், மார்ச் 12, 2013

இராமச்சந்திரன் மீது கொலை வழக்கு!



வழக்கு எண் 218/13”

நீதிமன்ற எழுத்தரின் குரல் ஒலித்தது.

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட இராமச்சந்திரனின் வக்கறிஞர் எழுந்தார்.

மை லார்ட்!என் கட்சிக்காரின் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்திருக்கிறோம்.அவரை ஜாமீனில் விடும்படித் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

அரசு வழிக்கறிஞர் எழுந்தார்குற்றவாளி…”

” மறுத்துரைக்கிறேன்,மை லார்ட்! அவர் குற்றவாளி அல்ல ;குற்றம் சாட்டப்பட்டவர்”வாதியின் வக்கீல்.

”திருத்திக் கொள்கிறேன்!குற்றவாளி எனக் குற்றம் சாட்டப்பட்ட வர் ,கோவில் திருவிழாவில் மூன்று பெண்களை இரக்கமின்றிக் கொன்றவர்!அவரை வெளியில் விட்டால் மேலும் கொலை கள் செய்யக்கூடும்!எனவே ஜாமீன் மனுவை எதிர்க்கிறேன்;ஜாமீன் வழங்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்” அரசு வழக்கறிஞர் சொன்னார்.

வாதியின் வழக்கறிஞர் சொன்னார்”என் கட்சிக்காரர் உடல் நலமின்றி இருக்கிறார். மேலும் உடல் நலம் பாதிக்கப்படும்.அரசு மருத்துவ மனையில் அவருக்கான  வசதிகள் இல்லை. ஜாமீனில் விட்டால் அவருக்கான விசேட சிகிச்சை அளிக்க முடியும்.இத்தனை ஆண்டுகளாக இறைவனின் பணியில் ஓயாது உழைத்தவர்.மக்களை மகிழ்வித்தவர்.உடல் நலமின்மை காரணமாகவே இது நடந்து விட்டது.நீதி மன்றம் இதைக் கருணையுடன் அணுக வேண்டும்”

”சமீபத்தில் திருவிழா நடக்க இருக்கிறது.இவர் அங்கு செல்வார்.மீண்டும் அசம்பாவிதம் நடக்கும். எனவே ஜாமீனில் விடக்கூடாது—அரசு வழக்கறிஞர்

மற்றவர் சொன்னார்”நாங்கள் உறுதியளிக்கிறோம்.அவருக்குச் சிகிச்சை அளிப்பதே எங்கள் நோக்கம்;அவர் திருவிழாவுக்கோ,வேறு எங்கும் வெளியிலோ போக மாட்டார்.கவனமாகப் பார்த்துக் கொள்வோம்”

நீதிபதி தீர்ப்புச் சொன்னார்”வாதியின் தரப்பில் 30 லட்சம் ரூபாய்க்கான பிணைப் பத்திரமும், இரண்டு தனி நபர் ஜாமீனும் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையில் ஜாமீன் வழங்கப் படுகிறது”

45 வயது நிரம்பிய  உயரமான.திடகாத்திரமான ,வலிமை வாய்ந்த  இராமச்சந்திரன் ஜாமீனில் விடப்ட்டார்.

யார் இந்த ராமச்சந்திரன்?

தெச்சிக்கோட்டுக்காவு இராமசந்திரனின் உயரம் 3.17 மீட்டர்(10 அடிக்கு மேல்!) .  

இந்தியாவிலேயே மிக உயரமானவர்.பீஹாரிலிருந்து கேரளா அழைத்து வரப்பட்டுத் தெச்சிக் கோட்டுக்காவுக் கோவில் பணியில் சேர்க்கப்பட்டவர்!

ஜனவரி27 ஆம்தேதி கோவில் திருவிழா நேரத்தில் மன நலம் குன்றி திருவிழாக் கூட்டத்தில் ஓடி மூன்று பெண்களின் சாவுக்குக் காரணமானார்அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

அவருக்குத்தான் ஜாமீன் வழங்கப்பட்டது

அப்படி என்ன சிறப்பு இந்த வழக்கில்?

இருக்கிறது……!

இராமச்சந்திரன் ஒரு……….
…………………..
…………………..
யானை!

 (செய்தி:இந்தியாவின் நேரங்கள்-12-3-2013)

23 கருத்துகள்:

  1. 10 அடி (!) உயர இராமசந்திரனின் அவர்களைப்பற்றி ஆவலுடன் காத்திருக்கிறோம் ஐயா...

    பதிலளிநீக்கு
  2. ஐயா உண்மையிலே ஏமாந்துவிட்டேன். இதுபோல் திருப்பங்களை முடிவில் வைக்க உங்களால்தான் முடியும்!

    பதிலளிநீக்கு
  3. கடைசியில் செம ட்விஸ்ட்! இப்படியும் எழுதலாம் என்று கற்றுக்கொண்டேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  4. குறும்பு.என்றாலும் கரும்பு! இனிக்கிறது

    பதிலளிநீக்கு
  5. சுவாரசியமாக படிக்க ஆரம்பித்தேன், என்ன கொலை வழக்கோ என்று. கடைசியில் திடுக்கிடும் திருப்பம். யானைக்கூட ஜாமின் உண்டா?

    பதிலளிநீக்கு
  6. இரண்டு தனி யானைகளும் ஜாமீன் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் யுவர் ஆனர்.

    பதிலளிநீக்கு
  7. ஹா ஹா ஹா ஹா யானைக்குத்தான் இம்புட்டு வாதம் பிரதிவாதங்களா...! நானும் பிகாரில் இருந்து தீவிரவாதி யாரோன்னுல்லா நினைச்சுபுட்டேன் ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
  8. அட...! யானைக்கெல்லாம் கேஸ் நடத்துவார்களா என்ன கோர்ட்டில்? மிக ஆச்சர்யமான விஷயம்! இப்படி நினைத்ததாலேயே கடைசியில் வந்த திருப்பத்தை எதிர்பாராததாக இருந்ததோடு ரசிக்கவும் முடிந்தது!

    பதிலளிநீக்கு
  9. ஹா... ஹா... இத்தனை நாட்களாக இந்த குறும்பினை நாங்கள் தவறவிட்டிருக்கிறோம் பாருங்கள்!

    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  10. ஆகா! யானைக்கும் அடி சறுக்கும் எமக்கும் சறுக்கிவிட்டதே முடிவில் :))

    பதிலளிநீக்கு