தொடரும் தோழர்கள்

வெள்ளி, மார்ச் 08, 2013

என் மனைவிதான் வேலை பார்க்கவில்லையே! மகளிர் தின சிறப்புப் பதிவு!
.....................................................

ஒரு கணவன் தான் ஒருவனே வேலை சென்று சம்பாதித்துக் குடும்பத்தைக் காப்பாற்றுவதால் மிகவும் சோர்வடைந்திருப்பதாக எண்ணினான்.

தன் மனைவி வேலைக்குச் செல்லாமல் வீட்டில் அமர்ந்து சுகமாகச் சாப்பிட்டுக் காலம் கழிப்பதாகவும் எண்ணினான்;இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக ஒரு மன நல மருத்துவரைப் பார்க்கப் போனான்.

அங்கு நடந்த உரையாடல்.....

மருத்துவர்:நீங்கள் என்ன செய்கிறீர்கள்,குமார்?

குமார்:ஒரு வங்கியில் அதிகாரி.

ம:உங்கள் மனைவி?

கு:அவள் வேலை பார்க்கவில்லை

ம:காலை உணவை உங்கள் வீட்டில் யார் தயார் செய்கிறார்கள்?

கு:என் மனைவிதான்;அவள்தான் வேலை பார்க்கவில்லையே!

ம:காலை எத்தனை மணிக்கு உங்கள் மனைவி எழுந்திருக்கிறாள் என்பது 
உங்களுக்குத் தெரியுமா?

கு:5 மணிக்கே எழுந்து விடுகிறாள் என நினைக்கிறேன்.ஏனென்றால் வீடு சுத்தம் செய்து குளித்து காலைப் பலகாரம் செய்து,பின் எல்லோருக்கும் கையில் கொடுப்பதற்கு மதிய உணவும் தயார் செய்ய வேண்டுமே!

ம:குழந்தைகள் பள்ளிக்கு எப்படிப் போகிறார்கள்?

கு:பள்ளி அருகில்தான் ;மனைவியே அழைத்துச் செல்வாள்;அவள்தான்  வேலை பார்ப்பதில் லையே!

ம:அதன் பின் உங்கள் மனைவி என்ன செய்வார்கள்?

கு:கடைக்குப் போவாள் திரும்பி வந்து துணி துவைப்பாள்;துவைத்த துணிகளை இஸ்திரி போட்டு வைப்பாள்.அவள்தான் வேலை பார்க்கவில்லையே!

ம:மாலை வீடு திரும்பியதும் நீங்கள் என்ன செய்வீர்கள்?

கு:நாள் முழுவதும் உழைத்தது களைப்பாக இருக்காதா?ஓய்வெடுப்பேன் ; தொலைக்காட்சி பார்ப்பேன்.

ம:உங்கள் மனைவி என்ன செய்வாள்?

கு:குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பாள்.இரவு உணவு செய்வாள் குழந்தைகளுக்கு உணவு கொடுத்துத் தூங்கச் செய்வாள்.பின் நான் சாப்பிடுவேன்.பின்னர் அவள் பாத்திரங்கள், சமையல் அறை சுத்தம் செய்து தூங்கப் போவாள்.

ம:இதிலிருந்து என்ன தெரிகிறது?

அதிகாலை முதல் இரவு வரை உழைக்கும் ஒரு பெண்ணை ”வேலை பார்க்க வில்லை” என்று சொல்கிறீர்கள்.அவர்கள் செய்யும் வேலையை நீங்கள் மதிக்கவில்லை!

ஒரு வீட்டை நிர்வகிப்பது என்பது கடினமான பணி;அதைச் செய்கிறாள் அவள்.வாழ்க்கை யென்னும் நாடகத்தில் மிக முக்கியமான பாத்திரம் மனைவி!
மனைவியைப் புரிந்து கொள்ளுங்கள்;பாராட்டுங்கள்.அவள் செய்யும் தியாகங்கள் கணக்கற்றவை!

பரஸ்பரப் புரிதல் இருந்தால் வாழ்க்கை இன்ப மயமாக இருக்கும்!

33 கருத்துகள்:

 1. இந்த புரிதல்கள் எத்தனை கணவர்களிடம் இருக்கிறது என்று விரல் விட்டு எண்ணிவிடலாம் அந்த எண்ணிக்கை அதிகமாகும் போது இந்த சமூகம் வளப்படும் இந்த நாளில் இந்த பதிவு சிறப்பாக இருக்கிறது நன்றி பித்தன்

  பதிலளிநீக்கு
 2. உனக்கென்ன வீட்ல சும்மா தான இருக்க.. என கேட்கும் ஆண்கள் உணர வேண்டும்.

  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 3. மனைவியைப் புரிந்து கொள்ளுங்கள்;பாராட்டுங்கள்.அவள் செய்யும் தியாகங்கள் கணக்கற்றவை!

  பரஸ்பரப் புரிதல் இருந்தால் வாழ்க்கை இன்ப மயமாக இருக்கும்!

  மகளிர்தினத்தை சிறப்பித்த அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 4. நல்லா சொல்லியிருக்கீங்க
  எப்படி சுகம் பாஸ் நீண்டநாட்களுக்கு பிறகு உங்கள் தளம் வருக்கின்றேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுகமே!எழுதாமல் ஒதுங்கியிருந்த என்னை உங்களைப் போன்ற நண்பர்களின் அன்பு மீ
   ந்டும் எழுத வைத்து விட்டது.
   நன்றி ராஜ்

   நீக்கு
 5. //பரஸ்பரப் புரிதல் இருந்தால் வாழ்க்கை இன்ப மயமாக இருக்கும்!//

  அதைத்தான் செய்யமாட்டேங்கிறாங்க... அதனாலதான் எவ்வளவு தொல்லை....

  பதிலளிநீக்கு
 6. உலக மகளிர் தினம்” ( INTERNATIONAL WOMEN’S DAY - முன்னிட்டு ஒரு சிறப்பு பதிவு! சிறப்பாகவே உள்ளது.!

  பதிலளிநீக்கு
 7. மகளிர் தின சிறப்புப் பதிவிற்கு சிறப்பான பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 8. என் மனைவியும் வீட்டு முதலாளிதான்.நான் மட்டும் வெளியில் தொழிலாளி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலாளி ஆயினும் அன்புடன் பணிவிடை செய்யும் தொழிலாளி!
   நன்றி கண்ணதாசன்

   நீக்கு
 9. //பரஸ்பரப் புரிதல் இருந்தால் வாழ்க்கை இன்ப மயமாக இருக்கும்!//

  உணமைதான் சார்.
  மிகவும் சிறப்பான பதிவுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 10. இன்றைய நாளில் நல்ல பகிர்வை தந்து சிறப்பித்துள்ளீர்கள்.

  அனைவருக்கும் மகளிர் தினவாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 11. பரஸ்பரப் புரிதல் இருந்தால் வாழ்க்கை இன்ப மயமாக இருக்கும்...//

  Well said...

  பதிலளிநீக்கு
 12. ஒரு வீட்டை நிர்வகிப்பது என்பது கடினமான பணி;அதைச் செய்கிறாள் அவள்.வாழ்க்கை யென்னும் நாடகத்தில் மிக முக்கியமான பாத்திரம் மனைவி!
  மனைவியைப் புரிந்து கொள்ளுங்கள்;பாராட்டுங்கள்.அவள் செய்யும் தியாகங்கள் கணக்கற்றவை!

  பரஸ்பரப் புரிதல் இருந்தால் வாழ்க்கை இன்ப மயமாக இருக்கும்!
  // அருமையான அறிவுரை! நல்ல பகிர்வு! நன்றிஐயா!

  பதிலளிநீக்கு
 13. உங்கள் பாணியில் மகளிர் தினத்தில் பெண்மையை மதிக்கும் சிறப்பான பகிர்வு. அருமை நண்பரே!

  பதிலளிநீக்கு
 14. Now the situation is worse than what you have written. Women have to work like a man in the office; still she is responsible for household chores. Looks like “"மாதராய் பிறப்பதற்கே மாபாவம் செய்திருக்க வேண்டும் அம்மா!". Wish this will change.

  பதிலளிநீக்கு
 15. 'நான் சும்மாதான் 'ஹவுஸ் வைஃப் ஆ இருக்கேன் என்று பெண்களே புரியாமல் பேசுகிறார்களே!
  உங்கள் பதிவைப் படித்தாவது அவர்கள் அவர்களது உண்மை மதிப்பை உணரட்டும்!

  பதிலளிநீக்கு
 16. அன்பின் சென்னை பித்தன் - மகளிர் தின சிறப்புப் பதிவு நன்று - ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் - உண்மை - வீட்டில் இருக்கும் பெண்கள் வேலை பார்க்கும் ஆண்களை விட அதிக நேரம் வீட்டு வேலை செய்கிறார்கள்.உண்மை. நல்லதொரு பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 17. வீட்டுவேலைக்கு பணிப்பெண்கள் வைத்திருக்கிறவர்களை மறந்துவிடுகிறீர்களே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "வீட்டுவேலைக்கு பணிப்பெண்கள்"

   These maids are women too. You deserve your name.

   நீக்கு
 18. இன்று மட்டுமல்ல... என்றுமே போற்றப்பட வேண்டியவர்கள்...

  பதிலளிநீக்கு