தொடரும் தோழர்கள்

வியாழன், மார்ச் 07, 2013

பெண்கள்,பெண்கள்,பெண்கள்!




திருமணப்பதிவாளராக ஒரு பெண்,இருக்கையில் அமர்ந்திருக்கிறார்.அவர் முன் ஒரு இணை அமர்ந்திருக்கிறது.பதிவுத் திருமணம் செய்ய வந்தவர்கள்.

பதிவாளர்பேசுகிறார்”உங்கள் பெயர்(ஆணிடம்) விகாஸ் வர்மா.உங்கள் (பெண்ணிடம்) பெயர் சாந்தி பண்டிட்;திருமணத்துக்குப்பின் நீங்கள் சாந்தி வர்மா ஆகி விடுவீர்கள்!”

ஆண் இடை மறித்துச் சொல்கிறார்”இல்லை மேடம்;அவள் சாந்தி பண்டிட்டாகவே இருப்பாள் நான் என் பெயரை மாற்றி விடுவேன்...விகாஸ் பண்டிட்” என்று.

பதிவாளர் முகத்தில் ஒரு இளநகை!

குரல் ஒலிக்கிறது “காற்று மாறும்!”

இது தொலைக்காட்சியில் நான் பார்த்த ஒரு விளம்பரம்,மின் விசிறிக்கான விளம்பரம்.

இதில் அவர்கள் விசிறி பற்றி எதுவும் சொல்லவில்லை.ஆனால் கால மாற்றம் பற்றியும் அந்த விசிறியின் காற்று பற்றியும் விளம்பரம் சொல்லி விடுகிறது!

இந்த விளம்பரத்தில் சொல்லப்படும் செய்தியை கொஞ்சம் அலசிப் பார்ப்போமா?

காலம் மாறும்;பெண் ஆணுக்கு அடிமையில்லை(ஆனால் ஆண் பெண்ணுக்கு அடிமை?!)

மனைவி ஒரு கணவனின் பெயரையோ ,முதல் எழுத்தையோ  சேர்த்துக் கொள்வதனால் அடிமைத்தனம் வந்து விடுமா?கணவன் தன் மனைவியின் பெயரைச் சேர்த்துக் கொள்வ தனால் அவள் அடிமை இல்லாமல் அவன் அடிமையாகி விடுவானா?

திருமணத்துக்கு முன்னும் அவள் சாந்தி பண்டிட்டாகத்தான் இருந்திருக்கிறாளே தவிர,வெறும் சாந்தியாகவோ,சாந்தி கமலா வாகவோ இருக்கவில்லை.அப்படியென்றால் அவள் பிறப்பிலிருந்தே அடிமையா?

குமரி மாவட்த்திலும் கேரளாவின் சில பகுதிகளிலும் பெண்களின் தாயின்  பெயரின் முதல் எழுத்துக்களைச் சேர்த்துக் கொள்வதாக அறிகிறேன்!

பெயர் மாற்றத்திலோ,மாறாதிருப்பதிலோ வருவதல்ல பெண் விடுதலை.

வாழ்க்கை முறையில் வருவது.மனப் பாங்கில் வருவது.

இன்று பெருமளவில் மாற்றம் வந்திருந்தாலும் முழுமையான அளவில் இல்லை!

வர வேண்டும்!
‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
ஒரு பெண்ணின் புலம்பல்!
...............................................

என் புதிய ஆடையே!
நேற்று வாங்கும் முன்
அணிந்து பார்த்தபோது
என்னை அழகு படுத்திய நீ
இன்றென் வீட்டில் அணியும்போது
என்னை ஏன் அசிங்கமாக்குகிறாய்?!
………………………………………
ஏன் ஒரு பெண் திருமணம் என்ற பெயரில் முன் முகமறியாதவர்களுடன் வசிக்கச் செல்கிறாள்?

ஏனெனில் அவள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட தேவதை!!

இதுகாறும் இருந்த இடத்தை வண்ணமயமாகவும் ,மகிழ்ச்சியாகவும் செய்தவள்,இப்போது புதிய இடத்தையும் வண்ணங்களாலும் மகிழ்ச்சியாலும் நிரப்பப் போகிறாள்!

பெண்களின் அருமையை உணருங்கள்.

பெண்மையே உன்னை வணங்குகிறேன்!

................................................................

கொசுறு!

நான் படிக்க் காத்துக் கொண்டு இருக்கும் புத்தகம் கீழே……..



இப்போது புத்தகத்தை என் பெண் படித்துக் கொண்டிருக்கிறாள்.அவள் ஒரு புத்தகப் பைத்தியம். புதுப் புத்தகம் என்றால் ஃப்ளிப்கார்ட்மூலம் உடனே வாங்கி விடுவாள்.’ சிவா ட்ரயாலஜியின் முதல் இரண்டு புத்தகங்கள் படித்து விட்டேன்(அவள் கொடுத்ததுதான்!) இப்போது மூன்றாவதான இந்தப் புத்தகத்துக்காக் காத்துக் கொண்டிருக்கிறேன்.இப்புத்தக ஆசிரியர் அமிஷ் திரிபாதியின் அடுத்த புத்தக வரிசைக்கு வெஸ்ட்லேண்ட் பதிப்பாளர்கள் ரூபாய் 5 கோடி முன் பணம் கொடுத் திருக்கிறார்களாம்!
.............................................................

22 கருத்துகள்:

  1. மகளிர் தினம் சிறப்பு பதிவா...?

    கலக்குங்க தளதளபதி...

    பதிலளிநீக்கு
  2. //பெயர் மாற்றத்திலோ,மாறாதிருப்பதிலோ வருவதல்ல பெண் விடுதலை.

    வாழ்க்கை முறையில் வருவது.மனப் பாங்கில் வருவது.

    இன்று பெருமளவில் மாற்றம் வந்திருந்தாலும் முழுமையான அளவில் இல்லை!

    வர வேண்டும்!//

    உண்மைதான் சார்.

    மிகவும் அருமையான அலசல்.

    சிவா டிரயாலஜி பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. பெயரில் என்ன இருக்கிறது...? வாழ்க்கை முறையில் வருவது... மனப் பாங்கில் வருவது... என்று அருமையாக சொல்லி விட்டீர்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  4. மகளிர் தின வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. மகளிர் தினத்திற்கான அருமையான சிந்தனை. வாழ்த்துக்கள்.
    நீங்கள் ஏன் படித்த நூல்களை முழுமையாக மொழிபெயர்த்தொ அல்லது சுருக்கியோ தரக்கூடாது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவா ட்ரயாலஜியை மொழி பெயர்ப்பதோ,சுருக்குவதோ கடினம் ஐயா!
      நன்றி

      நீக்கு
  6. அவள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட தேவதை!!

    பதிவும் புத்தக அறிமுகமும் அருமை ..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  7. மகளிர் விடுதலை என்பது மனதில் தான் முதலில் வர வேண்டும் என்பதை அழகாகச் சொல்லிட்டீங்க. ஆங்கிலப் புத்தகம் படிக்கிற அளவுக்கு எனக்கு.பற்றாது என்பதால் உங்களிடம் அதைப் பற்றி பின்னர் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமென்றிருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  8. காலம் மாறிக் கொண்டிருக்கிறது. நல்ல மாற்றங்களைவரவேற்போம்.
    விளம்பரம் மூலம் விளைந்த நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
  9. //சென்னை பித்தன்....

    சிவா ட்ரயாலஜியை மொழி பெயர்ப்பதோ,சுருக்குவதோ கடினம் ஐயா!
    நன்றி//

    என்னை ரொம்ப புகழாதீங்க சார்.

    பதிலளிநீக்கு
  10. Dear Sir
    I think there is logic behind having fathers name as a surname.
    1. Biologically, only mothers gene can be traced back (the Eve Gene) for generations, not the fathers.
    ( http://www.bradshawfoundation.com/journey/eve.html)
    2. Socially only the mother knows who the biological father is.
    So to compensate both the above, we ought to have at least father’s name as surname.
    Thanks

    பதிலளிநீக்கு