தொடரும் தோழர்கள்

வெள்ளி, மார்ச் 29, 2013

விஷக்கிருமிகள் பரவி விட்டன!



”நாட்டில் விஷக் கிருமிகள் பரவி விட்டன”(virus has spread)

இது முன்னொரு காலத்தில் மிகப் பிரபலமான வாக்கியம்.

ஆண்டு 1967.

அது வரை தமிழ்நாட்டை ஆண்டு வந்தது காங்கிரஸ் கட்சி,இப்போதுள்ள காங்கிரஸ் அல்ல.முதல் காங்கிரஸ்

நல்லாட்சியைத் தூக்கி எறிந்து விட்டு,நாப்பறை கொட்டியவர்களை நாடாள அழைத்து விட்டார்கள்  மக்கள் .

பெருந்தலைவர் காமராசரே தேர்தலில் தோற்றுப்போனார்.

அப்போது முதலமைச்சராக இருந்த திரு பக்தவத்சலம் அவர்கள் தோல்வி பற்றித் தெரிவித்த கருத்து இது.

இப்போது இந்த வாக்கியத்தைச் சொல்ல வேண்டிய நிலைமை எற்படுமோ என ஓர் அச்சம் !

உலகில்  புதிய விஷக்கிருமிகள் ,அதி நுண்ணுயிர்கள்(virus) பரவி விட்டன” என்று சொல்ல வேண்டிய நிலை ஏற்படுமோ?

விஷக் கிருமி பரவி விட்டால் அது விளைவிக்கும் நாசம் அதிகம் .

அரிதான ஆனால் மிகக்கொடிய ”குவனாரிடோ” என்ற விஷக்கிருமிகள் அடங்கிய ஒரு குப்பி,,அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் மிகப் பாதுகாப்பான ஆய்வுக் கூடத்திலிருந்து காணாமல் போயிருக்கிறது .

வெனிசுலாவில் பிறந்த இந்த நுண்ணியிர் எலி,பெருச்சாளிகளின் மூலம் பரவக்கூடியது. மனிதர்களின் உள்ளுறுப்புகளில் குருதி வடியச் செய்யும். முப்பது விழுக்காடு மரணம் ஏற்படுத்தக்கூடியது.

யாராவது திட்டமிட்டு எடுத்துச் சென்றிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.பயங்கரவாதிகள் கையில் அது சிக்கியிருந்தால் உலகில் எத்தகைய அழிவை விளைவிக்கும் ஆயுதமாகும்! 

நினைக்கவே அச்சமாக இருக்கிறது.

விஞ்ஞானிகளிலேயே பலர் இந்த நுண்ணுயிர் பற்றி அறிய மாட்டார்களாம்,அத்தகைய அரிய
வகை.

என்ன நடக்கப் போகிறதோ!

இந்த ஆய்வுக்கூடத்தில் மேலும் பல நுண்ணுயிர்கள்எபோலா,ஆந்த்ராக்ஸ்,பிளேக்— இருக்கின்றனவாம்!

அவைகள் பாதுகாப்பாக இருக்கப் பிரார்த்திப்போம்!
......................................................

எத்தனையோ பறவைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

யானைப் பறவை தெரியுமா?

அழிந்து விட்ட உயிரினங்களில் ஒன்று.

உலகிலேயே மிகப் பெரிய பறவையாக இருந்தது.

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இதன் புதை படிவமாகிய ஒரு முட்டையை ஏலம் போடப் போகிறார்கள்!

இது கோழி முட்டையைப் போல் 100 மடங்கு பெரியதாம்.

ஏலத்தில் எதிர்பார்க்கப்படும் தொகை என்ன தெரியுமா?

20000—30000!

ரூபாய் அல்ல!

பவுண்ட் ஸ்டெர்லிங்!

இன்றைய நிலவரப்படி 16.52 இலட்சத்திலிருந்து,24.79 இலட்சம் வரை!

அம்மாடியோ!

.................................................................





14 கருத்துகள்:

  1. இப்போது பரவுவது இல்லை... வாழ்ந்து கொண்டிருக்கின்றன... குவனாரிடோ அங்கிருந்தால் நல்லது... ஹிஹி...
    .....................

    100 மடங்கு பெரியதா...? ஐயோ... சாமீ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வாழ்ந்து கொண்டிருக்கின்றன//.’வலுப்பெற்று’ என்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் தனபாலன்
      நன்றி

      நீக்கு
  2. அரசியல் விஷக்கிருமிகள் செய்த நாசத்தை விடவா இந்த விஷக்கிருமிகள் நாட்டை நாசப்படுத்தப்போகின்றன?

    பதிலளிநீக்கு
  3. தமிழர்களாகிய நமக்கு "கிருமிகளுடனேயே"
    வாழ்ந்து பழகிப்போனதால் எதிர்பு சக்தி அதிகம்
    என் நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. இன்றைய வாழ்க்கை சூழலே விஷக்கிருமியாகத்தானே தெரிகிறது. நாசத்தையும் வரவேற்போம் வேறென்ன செய்ய இயலும் ?

    பதிலளிநீக்கு

  5. விஷக் கிருமி பரவி விட்டால் அது விளைவிக்கும் நாசம் அதிகம்

    பதிலளிநீக்கு
  6. நடன சபாபதியோடு நானும் ஒத்து போகிறேன்..

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்.

    உங்கள் தகவலை நானும் இரண்டொரு நாட்களுக்கு முன்னே படித்தேன்.

    நான் அறிந்த தகவல்களில் அந்த இன்ஸ்டிட்யூட் சொல்வதைப்பார்த்தாலே அந்த்ராக்ஸ் கிருமிகளை விட‌
    இவை கொடியது அல்ல. மேலும் இவை ரொடன்ட்ஸ் என்று சொல்லப்படும் எலி வர்க்கங்களில் தான்
    உயிருடன் தொடர்ந்து இருக்க இயலும்.
    மேலும் அந்த கிருமி இருக்கும் வியாலை ஏதோ ஒரு சயன்டிஸ்ட் தவறுதலாக எரிந்திருக்கக்கூடும் என்று
    தான் இப்பொழுதைக்கு நினைக்கிறார்கள்.
    Fortunately, losing a vial of Guanarito is not as threatening as losing a vial of anthrax,

    புலியை விட புலி வரும் என்னும் கிலி தான் மோர் த்ரெட்டனிங்.

    ஹலோ !! வாசகர்களே !! அதிக அச்சம் தேவையில்லை. எஃப்.பி.ஐ. இதைப்பற்றிய விசாரணையையும்
    மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

    எப்படியும் ஒரு நாள் போகத்தான் போகிறோம்.

    போனால் போகட்டும் போடா.. இந்த ப்பூமியில் நிலையாய் வாழ்ந்தவன் யாரடா.?

    அது இருக்கட்டும் சாரே !!

    டில்லி ஹாஸ்பிடல்லே ஒரு சூபர் பக் இருப்பதாக சில மாதங்களுக்கு முன்னே ஒரு புரளி வந்ததே .. படித்தீர்களா ?

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  8. விஷக்கிருமிகள், யானைப் பறவை...ஆச்சர்யம்....!

    பதிலளிநீக்கு
  9. மக்கள் தொகை குறைந்து பூமி இலகுவாக கண்ணன் மகாபாரத யுத்தத்தை நடத்தியதாக கதையில் வரும். இந்த நவீன காலத்தில் கிருமிகள் கிருஷ்ணன் பாகத்தை எடுத்துக் கொள்கின்றனவோ என்னவோ... சென்னைவாசிகள் இந்தக் கிருமியையும் ஜீரணித்து விடுவார்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஹி... ஹி... யானைப் பறவை என்பது புதிய தகவல்!

    பதிலளிநீக்கு


  10. அறிய வேண்டிய தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  11. அரிய தகவல்கள்! இன்றைய அரசியல் நிலைக்கு தங்கள் தலைப்பு பொருத்தம்!

    பதிலளிநீக்கு