தொடரும் தோழர்கள்

சனி, மார்ச் 23, 2013

சிந்துகவியென்னும் லிமெரிக்கும்,நானும்,மற்றும் நிரூபனும்!

லிமெரிக் என்பது ஆங்கிலத்தில் ஒரு வகைக் கவிதை.

இதில் ஐந்து வரிகள் இருக்க வேண்டும் ஒன்று இரண்டு கடைசி வரிகளிலும்,மூன்று நான்கு வரிகளிலும் கடைசிச் சொல்லில் ஒலியியைபு இருக்க வேண்டும்.

இன்னொரு முக்கிய இலக்கணம் அவை சிறிது அசிங்கமாகவும்,அபத்தமாகவும் ஆனால் நகைச்சுவையாகவும் இருக்க வேண்டும்.

லிமெரிக்கில் முக்கியமே அந்த நகைச்சுவைதான்.

தமிழில் இது போன்ற கவிதைகள் அதிகம் இருப்பதாகத் தெரியவில்லை.

நான் அவ்வப்போது என் பதிவில் லிமெரிக் எழுத முனைந்திருக்கிறேன்.

அவற்றில் சிலவற்றை இங்கே தொகுத்து அளிக்கிறேன்.

இதில் நிரூபன் எங்கே வந்தார்....!

சொல்கிறேன்.

எனது லிமெரிக்குக்கு “சிந்துகவி “ன்ற அழகிய பெயர் சூட்டியவர் அவர்தான்.

இதோ லிமெரிக்குகள்.......


               1)”பாருக்குப் போனான் சுகுமார்
                    குடிக்க நினைத்தான் கொஞ்சம் பீர்
                   வந்தது பீர் இரண்டு பிட்சர்
                   கூடவே  கொறிக்கக் கொஞ்சம் மிக்சர்
                   பின்னாலே நடந்தது ஒரே ரப்சர்!



2)”கண்ணன் ஒரு வேலையில்லாத ஆளு
     கல்யாண ஆசை வந்தது ஒரு நாளு
     ராதா கிட்ட சொன்னான் ஆசை
     கிடைத்தது அவனுக்கு நல்ல பூசை
     இப்போ செய்வதில்லை அவன் ஓசை!



               3)சங்கரன் சின்ன மகள் சக்கு
                  பார்த்தாலே ஏறும் கிக்கு
                  பார்த்து மயங்கினான் மாது
                 விட்டான் தங்கையைத் தூது
                 இப்பத் தெருவெல்லாம் தூ,தூ’!





4)”சிங்காரி சரசு விட்டா ஒரு லுக்கு
     ரங்குவுக்கு ஏறிச்சு ஒரே கிக்கு
    போனான் உடனே அவ வீடு
    தங்கினான் சில நாள் அவளோடு
    இப்ப அவன் கையில் திருவோடு! 



5)“பக்கத்து வீட்டு வாசி ராமன்
   பார்ப்பதற்கு அவன் காமன்
   மணந்தான் அழகு மங்கை
   இணைப்பாய் அவள் தங்கை
   கேட்கிறார் தத்தம் பங்கை!


இந்த லிமெரிக்குகளில் இலக்கணத்தை நான் மீறியிருக்கிறேன்

கடைசிச் சொற்களின் ஒலியியைபு AABBA என்று வர வேண்டும்

ஆனால் நான்  AABBB என்று மாற்றியிருக்கிறேன்!

உதாரணத்துக்கு முதல் லிமெரிக்கின் கடைசி வரி”பின்னால் நடந்தது பெரும் போர்”  என்று இருக்கலாம்..

என்ன ஒரு லிமெரிக்குக்குப் போய் இவ்வளவு விளக்கமா என்கிறீர்களா  ?!

:) :) :)



             
                        
                              

 




5 கருத்துகள்:

  1. சென்னைப்பித்தன் எழுதினார் லிமரிக்கு
    படிக்க படிக்க ஒவ்வொண்ணும் சூப்பரப்பு!
    படிப்பவர் மனங்களில் பாயும் தேன்
    ரசித்துத் தான் படித்தேனையா நான்
    வலையுலகில் நீவீர் என்றும் டான்!

    பதிலளிநீக்கு
  2. முயற்சிக்கு வாழ்த்துக்கள்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு


  3. இதுவும் நல்லவே இருக்கு
    மதுவாய் மயக்கும் சரக்கு
    மெதுவாய் மென்றிட முறுக்கு
    பதமாய் சுவைத்த் நொறுக்கு!

    பதிலளிநீக்கு