தொடரும் தோழர்கள்

சனி, மார்ச் 30, 2013

புனித சனி தெரியுமா?




புனித வெள்ளியன்று ஏசுநாதர் சிலுவையில் உயிர்நீத்த சோகத்தை நினைவு கூர்கிறோம்.

ஈஸ்டர் ஞாயிறன்று அவர் உயிர்த்தெழுந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறோம்.

இடையில் ஒரு நாள்,சனிக்கிழமை இருக்கிறதே அதன் முக்கியத்துவம் என்ன?

பெரும்பான்மையோர் என்ன செய்கிறார்கள்?

வெள்ளியன்று தேவாலயத்தில் சிறப்புத்தொழுகைகளுக்குச் சென்ற பின்,சனியன்று மறுநாள் ஈஸ்டருக்கான ஏற்பாடு செய்வதில்-சுத்தம் செய்தல்,விசேட உவு தயாரித்தல்,கடைசி நிமிட கடைக்குச் செல்லல்,உறவினர்களை எதிர்பார்த்தல்-என நாள் கழிகிறது.

அது சாதராண நாளல்ல;அது ஒரு நுழை வாயில் நாள்.நாளை நடக்கப்போவதைப் பற்றி நம்பிக்கை நிறைந்த நாள்

வாழ்க்கையில் சில நேரங்களில் நாம் தாங்கமுடியாத வலியில்,துன்பத்தில்,சோகத்தில் மூழ்கிப் போகிறோம்.அந்த நேரத்தில்,நாம் மீண்டும்  என்றாவது மகிழ்ச்சியாக இருப்போமா என்ற எண்ணம் ஏற்படுகிறது

வாழ்க்கையின் பல திருப்பு முனையான நேரங்களில்,நாம் பலவற்றை விட்டுக் கொடுக்க, விட்டு விலக நேரிடுகிறது---நமது அன்புக்குரியவர்களை,நம் உடமைகளை,நம் தாய் மண்ணை, நம் நம்பிக்கைகளை,நம் சுயத்தன்மையை,நம் பாதுகாப்பை, இவையெல்லாவற் றையும்-.அந்த நேரத்தில் எதிர் நிற்கும் பாதை இருண்தா நிச்சயமற்றதாக ,அவநம்பிக்கை அளிப்பதாத் தோன்றுகிறது .

புனித வெள்ளியன்று ஏசுநாதர் சிலுவையில் உயிர்நீத்தபின் அவரது சீடர்கள்,அவரைத் தொடர்பவர்கள்,அவர் மீது நம்பிக்கை கொண்டவர்கள்,அவரை நேசித்தர்கள்
 அப்படிப்பட்ட ஒரு நிலையில்தான் இருந்தனர்.என்ன செய்வதென்று தெரியாத நிலையில், அவருக்கு இது எப்படி நடந்து என்ற அவநம்பிக்கையில்.கேள்விகள் மட்டுமே நிறைந்த, பதில்கள் கிடைக்காத ஒரு நாள்தான் அவர்களுக்கு இந்த சனி.

ஆம் புனித சனி என்பதுஅப்படிப்பட்ட நாள்தான்.ஒரு இடைப்பட்ட நாள்;காத்திருப்பு நாள்;எதிர்காலம் பற்றி மௌனமாகச் சிந்திக்கும் நாள்;வழிகாட்டலுக்கும் ,ஒளிதருவதற்கும் பிரார்த்திக்கும் நாள்;ஏசு போதித்த மனித நேயத்தை.சக மனித அன்பை,ஒற்றுமையைப் பற்றிச் சிந்தித்து துன்பத்தில் இருக்கும்போது ஒருவருக்கொருவர் ஆதரவாகவும்,அன்புடனும் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் நாள்.அமைதியாக இறை நம்பிக்கையில் கழிக்க வேண்டிய நாள்.

எத்தனையோ இடர்களை இருண்ட பாதைகளைத்தாண்டி வர உதவிய,இறைவனுக்கு  நன்றி சொல்வோமாக.

(speakingtree)

10 கருத்துகள்:

  1. உங்களின் சிந்தனையில் சனிக்கிழமையின் புனிதம் புரிகிறது ஐயா...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  2. நல்ல வேல்லிகடுத்தது புனித சனியா?

    பதிலளிநீக்கு
  3. .கேள்விகள் மட்டுமே நிறைந்த, பதில்கள் கிடைக்காத ஒரு நாள்தான் அவர்களுக்கு இந்த சனி.//

    வேதாகமும் இதைத்தான் சொல்கிறது தல, அசத்தலான சிந்தனையை வெளிப்படுத்தி யோசிக்க வைத்து விட்டீர்கள்...!

    பதிலளிநீக்கு
  4. வித்தியாசமான சிந்தனை! ஆனால் உடன்பாடான சிந்தனை! ஆம்... புனித சனியையும் அமைதியான ஆழ்ந்த இறை நம்பிக்கையுடன் கழித்தலே சிறப்பு!

    பதிலளிநீக்கு
  5. வழிகாட்டலுக்கும் ,ஒளிதருவதற்கும் பிரார்த்திக்கும் நாள்
    எத்தனையோ இடர்களை இருண்ட பாதைகளைத்தாண்டி வர உதவிய,
    இறைவனுக்கு நன்றி சொல்வோமாக.

    நிறைவான நம்பிக்கைதரும் அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  6. வித்தியாசமான சிந்தனையில் உருவான அருமையான பதிவு! விளக்கம் சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு


  7. புதிய சிந்தனை! பொருத்தமானதே!

    பதிலளிநீக்கு
  8. புதிய சிந்தனை சிறப்பு நன்றி!

    பதிலளிநீக்கு
  9. காத்திருப்பதின் காரணத்தை விளக்கியமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு