தொடரும் தோழர்கள்

வியாழன், மார்ச் 14, 2013

ஒன்பதுல குருவும் காரடையார் நோன்பும்!



ஒன்பதுல குரு எப்படி என நண்பர் கேட்டார்.

நன்றாகத்தான் இருக்கிறது என்றேன்.

லக்னத்துக்கு ஒன்பதில் குரு இருந்தால்,பொதுப்பலன்கள் இவைதாம்-சட்ட அறிவு,தத்துவ ஞானம் சிறப்பாக இருக்கும்.ஒன்பதில் இருக்கும் குருவை சுபக்கிரகங்கள் பார்த்தால் அநேக நிலம் வீடு வாங்கும் யோகம் இருக்கும்.உடன்பிறப்புகளிடம் அன்புடன் இருப்பார்.செல்வமும் புகழும் சேரும்.சந்திரனும் செவ்வாயும் குருவை வசீகரிக்குமானால்,ராணுவ உயர் அதிகாரி யாகலாம். சூரியனும் சுக்கிரனும் குருவோடு இணையுமானால்,நன்னடத்தை இல்லாமல் இருப்பார்.

இதாங்க ஒன்பதுல குரு!
………………………………………
இன்று காரடையார் நோன்பு எனும் பண்டிகை.

இது பற்றி ஏற்கனவே வை.கோ அவர்களும் இராஜராஜேஸ்வரி அவர்களும் எழுதி விட்டார் கள்.எனக்கு இப் பண்டிகையில் மிகப் பிடித்த விஷயம் இன்று செய்யப்படும் வெல்ல அடையும் உப்பு அடையும்தான்.வெண்ணையுடன் சேர்த்து அடை சாப்பிடும் சுகமே தனி!

நோன்புக்கான நேரம் எது?மாசியும் பங்குனியும் கூடும் நேரத்தில்,மாசி மாதத்திலேயே செய்ய வேண்டும்.
 இன்று மாலை 3.25 முதல் 3.45 வரை என்று சிலர் சொல்கிறார்கள்

 4.30 முதல் 4.55க்குள் என்று சிலர் கூறுகிறார்கள்.

ஏன் இந்த நேர வேறுபாடு.?

பஞ்சாங்கங்களே காரணம்.

திருக்கணிதம்,வாக்கியம் என்று இரண்டு வகைகள் உள்ளன.

வாக்கியப்பஞ்சாங்கப்படி(பாம்புப் பஞ்சாங்கம் )பங்குனி பிறக்கும் நேரம் இன்றுசூரிய உதயத்தி லிருந்து 24.20 நாழிகைகளுக்கு.(மீன ரவி 24.20 என்று போட்டிருக்கும்)

ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்;இரண்டரை நாழிகைகள் ஒரு மணி..

அப்படியென்றால். சூரிய உதயத்திலிருந்து 9மணி44 நிமிடத்துக்கு மாதம் பிறக்கிறது..

சூரிய உதயம் ஆறு மணிக்கு எனக் கொண்டால் மாலை 3.44 க்கு மாதம் பிறக்கிறது

எனவே மாதம் பிறக்கும் முன் கடைசி 15 அல்லது இருபது நிமிடங்கள் எனக் கொண்டால் 3.24 முதல் 3.44 வரை நோன்பு நேரம்!

ஆனால் திருக்கணிதப் பஞ்சாங்கத்தில் (மடம்) பங்குனி பிறக்கும் நேரமாகப் போட்டிருப்பது 26.21  நாழிகைகள்.அதாவது  2நாழிகை வித்தியாசம்;48 நிமிடங்கள்.எனவே நோன்பு நேரமும் மாறி விடுகிறது.

சரியான சூரிய உதய நேரத்தை எடுத்துக் கொண்டால் நேரம் இன்னும் 15 நிமிடங்கள் மாறிவிடும்.

அவரவர் எப்போதும்  அனுசரிக்கும் பஞ்சாங்கப்படி செய்து கொள்ளாலாம்!குடும்பப் புரோகிதர் சொல்வதைச் செய்யுங்கள்!

எத்தனை மணிக்கு செய்தாலும்,எனக்கு வர வேண்டிய இடங்களிலிருந்து அடை வந்தால் சரி(வெண்ணையுடன்)!

7 கருத்துகள்:

  1. தலைப்பு வித்தியாசமாக இருந்தாலும் பதிவில் தெரிந்துகொண்டது அநேகம். நன்றி!

    பதிலளிநீக்கு
  2. வெண்ணெய் வைத்த அடையோட, எங்க ஊரிலே(மதுரைப்பக்கம்) கொழுக்கட்டைனே சொல்வோம். பண்டிகை கொண்டாடியாச்சு. தலைப்பைப் பார்த்துட்டு ஓடோடி வந்தேன். நல்லதொரு பகிர்வு. பண்டிகை கொண்டாடறவங்களுக்கு அவசியமானதும் கூட.

    பதிலளிநீக்கு
  3. நான் ஐயா சினிமா விமரிசனம் எழுதியிருக்கிறார் என்று எண்ணி வந்தேன்! :))

    பதிலளிநீக்கு
  4. //எத்தனை மணிக்கு செய்தாலும்,எனக்கு வர வேண்டிய இடங்களிலிருந்து அடை வந்தால் சரி(வெண்ணையுடன்)!//
    இது சூப்பர்

    பதிலளிநீக்கு
  5. காரடையான் நோன்பு நல்லபடியாக முடிந்தது. நல்லதோர் பகிர்வு.

    பதிலளிநீக்கு