இறந்தகால இழப்புகளுக்காகவும்
எதிர்காலக் கனவுகளுக்காகவும்
வருத்தமும் கவலையும்........
இல்லாததற்காக ஏக்கம்.......
வாய் விட்டுச் சிரித்தாலும்
வலியின்றிப்போவதில்லை!
சோகமான நினைவுகளைச்
சுமந்தே வருகின்றன
நமது இனிமை மிக்க பாடல் எல்லாம்!
.................................................
குடதிசைக் காற்றே!
வருவதுரைக்கிறேன்
என் வார்த்தைகளை
எக்காள முழக்கமாய்
எடுத்துச் சொல்
விழிப்பில்லா உலகுக்கு!
முன் வருங் கடுங் குளிரைப்
பின் தொடர்ந்து வாராதோ
வசந்த காலம்!
.......................................
ஆழ்கடலின் அடிமடியில்
ஒளிந்தே கிடக்கும் பல
ஒளி வீசும் ரத்தினங்கள்!
பாழ் வெளிப் பாலையிலும்
மலர்ந்து மணம் பரப்பிப்
பயனின்றி வாடி விடும்
இனிய மலர்கள் பல!
…………………………………….
இவை மூன்றும் பிரபலமான ஆங்கிலக்கவிதைகளின் ஒரு பகுதியின் தமிழ் வடிவம்.
என்ன கவிதை,கவிஞன் யார் சொல்ல முடியுமா?!
.......................................................
பலர் என்னையே சொல்லச் சொல்லி விட்டார்கள்...
இதோ.....
ode to a skylark--shelley
ode to the west wind-shelley
elegy written in a country churchyard-thomas gray
Walt Whitman..!
பதிலளிநீக்குபதில் சொல்லி விட்டேன் அம்மா!
நீக்குநன்றி
நல்லாவும் இருக்குது புரியாதது போலவும் இருக்குது........
பதிலளிநீக்குதமிழ் கவிஞர்களையே எனக்குத் தெரியாது இதுல ஆங்கிலம் வேறயா........
இந்தப் போட்டிக்கு நான் வரல்லை ஐயா.........:P
இது போட்டி இல்லை ஆத்மா!
நீக்குநன்றி
வரிகள் அருமை...
பதிலளிநீக்குநீங்களே சொல்லிடுங்க ஐயா... (இராஜராஜேஸ்வரி அம்மா சொன்னது சரியோ..?)
சொல்லி விட்டேன்
நீக்குநன்றி தனபாலன்
நீக்குINSPIRATION க்கு கூட ஆங்கில பாடல்களை வாசிப்பதில்லை பித்தரே...-:)
பதிலளிநீக்குஏன் இந்த வெறுப்போ!
நீக்குநன்றி ரெவெரி
அசத்துங்க தலைவரே...
பதிலளிநீக்குயார் கவிதை என்று நீங்களே சொல்லிடுங்க
சொல்லி விட்டேன்
நீக்குநன்றி சௌந்தர்
நீக்குயாரென்று தெரியவில்லை. நீங்களே சொல்லிவிடுங்கள்.
பதிலளிநீக்குபதிவிலேயே சொல்லிவிட்டேன்
நீக்குநன்றி ஐயா
தெரியலையே தல..
பதிலளிநீக்குரசிக்கும்படியாக இருந்ததல்லவா?அது போதும்.
நீக்குநன்றி கருண்
நல்ல கவிதைகள்
பதிலளிநீக்குநன்றி பிரேம்
நீக்குஅதுவா? இதுவா? எது அய்யா?
பதிலளிநீக்குமூன்று கவிதைகள்;மூன்று பதில்கள் .அதே வரிசையில்
நீக்குநன்றி கவிஞரே