தொடரும் தோழர்கள்

செவ்வாய், மார்ச் 19, 2013

பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்!



பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்!

என்ன,தலைப்பு இப்படி இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா?

படித்துப் பாருங்கள்,புரியும்!

பிருந்தாவன்!மதுராவுக்கு அருகில் இருக்கும் ஊர்.

ஆனால் அங்கு அந்த ஊரின் பெயர்..விருந்தாபன்!’வும் வும் மாறி விட்டன.

ஆண்டு 1993.

அந்த ஊரில் இருக்கும் எங்கள் வங்கிக்கிளை ஆய்வு நிமித்தம் நான் அங்கு செல்ல நேர்ந்து.

ஆனால் தங்கிய இடம் மதுரா.

தினம் காலை மதுராவிலிருந்து ஃபட் ஃபட் இல் போய் மாலை மதுராவில்  என்   அறைக்குத் திரும்புவேன்.

அந்தக் கிளை மேலாளர் அங்கேயே தங்காமல் தினம் தில்லியிலிருந்து ஆக்ரா எக்ஸ்பிரஸ்ஸில் வந்து போய்க் கொண்டிருந்தார்.

எனவே பல நாட்கள் தாமதமாக வருவார்.மாலை சிறிது முன்பாகவே புறப்பட்டு விடுவார்!

ஆய்வு தொடங்கிய நாள் முதல் என்ன நடக்கிறது, ஆய்வாளர்கள் என்ன குறைகள் கண்டு பிடித்திருக்கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் எந்த வித அக்கறையும் இல்லாமல் வருவதும் போவதுமாய் இருந்தார்.

ஆய்வாளர்களுக்குத் தேவையான ஆவணங்கள்,பதிவேடுகள்,பேரேடுகள் கொடுப்பதற்கு எந்த வித ஏற்பாடும் செய்யவில்லை.

நாங்களே அதிகாரிகளை அணுகி தினமும் வேண்டிய ஆவணங்களை பெற்று ஆய்வைநடத்தி வந்தோம்.

என் வழக்கப்படி நான் தினமும் கிளை திறக்கும் முன்பே அங்கு சென்று விடுவேன்;ஆனால் எனக்கு வேண்டிய ஆவணங்கள் கிடைப்பது எப்போதுமே தாமதப்படும்.

ஒரு நாள் யிலும் தாமதம்,எனக்கு ஆய்வுக்கு வேண்டியவைகள் கிடைப்பதிலும் தாமதம். லேட்டாக வந்த மேலாளர் நேராகத் தன் அறைக்குச் சென்று அமர்ந்து விட்டார்.நீண்ட நேரத் தாமத்துக்குப் பின் ஒரு கடை நிளை ஊழியர் வந்து என்ன புத்தகங்கள் வேண்டும் எனக் கேட்டார்.

அதுதான் ஒட்டகத்தின் முதுகில் போட்ட கடைசித் துரும்பாகியது!

என் அலுவலக வாழ்க்கையிலேயே முதல் முறையாக நான் அளற்ற கோபம் கொண்டேன்.

மேலாளர் அறைக்குச் சென்றேன்

“என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.தாமதமாக வருகிறீர்கள் விரைவில் சென்று விடுகிறீர்கள்.  எப்படியோ போங்கள்?ஆனால் வங்கியில் ஆய்வு நடக்கிறதே ?அதாவது தெரியுமா?எங்களுக்கு ஆய்வு முடிப்பதற்குக் காலக் கெடு இருக்கிறது.உங்களைப் போன்ற ஒத்துழையாத மேலாளரை நான் பார்த்தில்லை.இதை பற்றி தலைமை அலுவலகத்துக்கு நான் ஒரு சிறப்பு அறிக்கை அனுப்பப் போகிறேன்.”

இரைந்து விட்டு வெளியே வந்து விட்டேன்.கிளை முழுவதும் அதை எதிர்பார்க்காததால் ஆடிப்போய் விட்டது.

இந்த நிகழ்வுகளால் நான் நொந்து போனேன்..பிருந்தாவனத்தில் நான் நொந்த குமாரனா னேன்!  (தலைப்பு வந்து விட்தா?!)

அன்று மாலை மேலாளர் என்னை உள்ளூர்க் கோவில்களுக்கு அழைத்துச் செல்வதாய் முதல் நாளே  முடிவு செய்திருந்தோம்!

அதன் படி அன்றுமாலை மேலாளர் என்னைக் கோவில்களுக்கு அழைத்துச் சென்றார். ஆனால் என் கோபமும் மன அழுத்தமும் குறையவேயில்லை.கோவிலுக்குச் சென்றால் நிம்மதி கிடைக்கும் என்ற நம்பிக்கையால் சென்றேன். அந்த ஊரில் பல கோவில்கள்.ஆனால் கோவில் அல்லாத ஒரு இடமும் உள்ளது.

அந்த ஊரில் ஒரு சிறிய நந்தவனம் உள்ளது.குட்டையான மரங்கள் நிறைந்தது.உள்ளே சிம்மாசனம் போன்ற ஒரு கட்டிடம் வேறு.நந்தனத்துக்குள் ஸ்வாமி ஹரிதாஸின் சமாதியும் இருந்ததாக நினைவு.

அங்கு நுழைந்தவுடன் என் மனம் அமைதியில் மூழ்கியது.என்னவென்று விவரிக்க இயலாத ஒரு பரவசம்.உலகத்து உயிர்களையெல்லாம் நேசிக்கும் ஒரு மனநிலை;விவரிக்க இயலாத ஒரு சாந்தி!

மேலாளர் அந்த இத்தைப் பற்றி அப்போது சொன்னார்.இப்போதும் இரவுகளில் கிருஷ்ணர் அங்கு வந்து கோபிகையர்களுடன் ஆடிப்பாடுகிறாராம்.அந்த ந்தவனத்தைச் சுற்றி மதிற் சுவர்.மாலை ஆறுமணிக்குக் கவைப் பூட்டி விடுவார்கள்.பின் உள்ளே யாரும் செல்ல முடியாது. அதையும் மீறி உள்ளே பதுங்கியிருந்த ஓரிருவருக்குப் பைத்தியம் பிடித்து  விட்டதாம் . இத்தனையும் சொன்ன மேலாளர் என்னைக் கேட்டார்”இங்கு வந்தது முதல் உங்கள் முகத்தில் ஒரு சாந்தம் தெரிகிறது; மிகவும் அமைதியாகி விட்டீர்கள்;என்ன நடந்தது?”

நான் சொன்னேன்”எனக்கே தெரியவில்லை.ஒரு விவரிக்க முடியாத மகிழ்ச்சி;அமைதி இவற்றால் மனம் நிரம்பியிருக்கிறது!”

ஆம்!கிருஷ்ண விழிப்புணர்வு நிலை என்பது அதுதான்! நான் கிருஷ்ணர் என்ற ஆனந்த அனுபவத்தின்  உடமையானேன்!நொந்தகுமாரனான நான்  ஆனந்த குமாரனானேன்  !

(அதை விளக்க முடியாது ;அது ஒரு அனுபவம்;அவரவர் ஆன்மீக  அளவைப் பொறுத்து மாறலாம்.)

ஹரே கிருஷ்ணா!

டிஸ்கி:தலைப்பு ஒரு பிரபல பதிவரின் வலைப்பூவின் பெயர்;நான் சொல்ல வந்த செய்திக்குப் பொருத்தமாக இருந்ததால் எடுத்துக் கொண்டேன்,நன்றியுடன்!

23 கருத்துகள்:

  1. அந்த என் வலைப்பதிவ நண்பர், என் எழுத்தாள நண்பரின் (பிகேபி) வைத்த நாவலின் தலைப்பை நன்றியுடன் தன் வலைப்பூவுக்கு எடுத்துக் கொண்டார். இப்போது அவரிடமிருந்து மற்றொரு நண்பரான செ.பி. நன்றியுடன் பயன்படுத்தியிருக்கீங்க. எப்படியோ... நான் ரசித்த ஒரு தலைப்பை மீண்டும் பார்ப்பது மகிழ்ச்சி. கடைசியில் நொந்த குமாரன் ஆனந்தகுமாரனானதும், அந்த அனுபவத்தை அனுபவித்து உணர்தலே சிறப்ப என்று முடித்ததும் அருமை! எனக்கும் அப்படி ஒரு அனுபவம் ஸி்த்திக்க வேண்டுமென்பதே அடிமன விருப்பம்!

    பதிலளிநீக்கு
  2. எப்படியோ தலைப்பு வரும்படி செய்துவிட்டீர்கள்! ‘அனுபவம் புதுமை’ என்று கூட தலைப்பை வைத்திருக்கலாம்.

    விருந்தாபனில் ‘ரங்க்ஜி’ கோவிலுக்குப் போனீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரங்கனாதர் கோவில்,பாங்கி பீஹாரி கோவில்,இஸ்கான் கோவில் எல்லாம் போனேன்.கிருஷ்ணப்ரேமி ஒரு கோவில் கட்டியிருக்கிறார்.
      நன்றி சபாபதி சார்

      நீக்கு
  3. அருமையான அனுபவம்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. தலைப்பை எப்படியெல்லாம் சிந்தித்து வைத்திருக்கிங்க. நான் அப்படியே ஏதோ வைத்துவிட்டேன். நல்ல அனுபவம் ஐயா.

    பதிலளிநீக்கு
  5. ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே போலவா?
    மறுநாளாவது ஏதாவது productivity உண்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுராவில்; தங்கியிருந்த ஒரு மாதமும் உள்ளம் ஆனந்தமயமாகத்தான் இருந்தது.
      நன்றி அப்பாதுரை

      நீக்கு
  6. அந்த நந்தவனம் மிகவும் மகிழ்ச்சி தரக் கூடிய இடம் தான்.....

    நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  7. கிருஷ்ண விழிப்புணர்வு நிலை என்பது அதுதான்! நான் கிருஷ்ணர் என்ற ஆனந்த அனுபவத்தின் உடமையானேன்!நொந்தகுமாரனான நான் ஆனந்த குமாரனானேன் !

    (அதை விளக்க முடியாது ;அது ஒரு அனுபவம்;அவரவர் ஆன்மீக அளவைப் பொறுத்து மாறலாம்.

    அழகான அனுபவம் ..!

    பதிலளிநீக்கு
  8. கண்ணன் மனநிலையே தங்கமே தங்கம்...   கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்..

    பதிலளிநீக்கு