தொடரும் தோழர்கள்

செவ்வாய், மார்ச் 26, 2013

ஒரு நாடகம் தொடங்குகிறது!



முன்பெல்லாம் நாடகம் தொடங்குமுன் திரைக்குப் பின் பூசை முடிந்து ஒரு பாட்டுப் பாடுவார்கள். அந்தப் பாட்டு முடிந்தவுடன் ஒரு மணி அடிக்க ,திரை தூக்கப்பட்டு முதல் காட்சி துவங்கும். இப்போதெல்லாம் அந்த வழக்கம் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. நான் சிவகாசி பள்ளியில் நடித்து,மன்னிக்கவும், படித்துக் கொண்டிருந்தபோது பள்ளி நாடகங்களில் நடித்திருக்கிறேன்.அந்த அனுபவம் பற்றி அறிய இந்தப் பதிவைப் பாருங்கள்!

எங்கள் நாடகம் தொடங்குமுன் பாடப்படும் பாடல் இன்னும் மறக்கவில்லை.தமிழ்மொழியின் சிறப்பைக்கூறும் அழகான பாடல்;அதன் காரணமாகவே என் நெஞ்சை விட்டு நீங்காத பாடல்

இதோ அந்தப் பாடல்........

”கன்னித் தமிழ் மொழியே!கலையுலகம் அதிர
முரசெழும் ஒலியே-(கன்னி---)

குறுமுனி அருள் தமிழ்க் குமரி என் தாயே
குறள் மறையால் உலகாள்பவள் நீயே!
கொடுமையாவும் நீங்க,சாந்த குணமும் யாவும் ஓங்க,வா,வா-(கன்னி--)

பண்ணியல் நாடகப் பரவசமருளே,
பலகலையிலுமுயர் நவரசப் பொருளே
பரத கதகளி மணிப்புரியும் பாராளுமோர் வகை செய்யும்-

கன்னித் தமிழ் மொழியே!கன்னித் தமிழ் மொழியே!கன்னித் தமிழ் மொழியே!”

இதைப் பாடியே இணைத்திருப்பேன்!

அவ்வாறு செய்யாததற்கு இரு காரணங்கள்......

1)பாடலைப் பாடி எப்படி இணைப்பது என்று எனக்குத் தெரியாது.

2)உங்களுக்குத் துன்பம் தர நான் விரும்பவில்லை!



சரிதானே!!.......:))

18 கருத்துகள்:

  1. முதல் காரணத்துக்குச் சுலபமான தீர்வு உண்டு.
    நன்றி சார் :-)

    பதிலளிநீக்கு
  2. உங்கள் பாட்டை நாங்கள் கேட்டு கருத்து ஏதும் சொல்லாதவரை நீங்களாக எப்படி அது துன்பமாக இருக்கும் என்று நினைத்துக்கொள்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் பாடி mp3 file-ஆக வைத்திருங்கள் ஐயா... இணைப்பது எப்படி என்று மெயிலில் தகவல் அனுப்புகிறேன்...

    பதிலளிநீக்கு
  4. தற்போது நாடங்களே கிடையாது அதற்கப்புறம் எப்படி பாடல்...


    நல்லது தலைவரே...

    பதிலளிநீக்கு
  5. தமிழ்மொழியின் சிறப்பைக்கூறும் அழகான பாடல்;அதன் காரணமாகவே என் நெஞ்சை விட்டு நீங்காத பாடல்

    பாடல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  6. நல்ல பாடல். முதல் காரணம் - சுலபமான தீர்வுண்டு! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன தீர்வுன்னு யாரும் சொல்ல மாட்டேங்கறாங்க!
      நன்றி வெங்கட்

      நீக்கு
  7. தமிழ்மொழியின் சிறப்பை கூறும் அழகான பாடல்.

    பதிலளிநீக்கு