ஒரு மரணம்.
ஒருவர் தன் இரு மகள்களைத் தனியே விட்டு
மறைந்து விடுகிறார்.
இருவரும் சோகத்தில்
ஆழ்ந்திருக்கின்றனர்.
உறவினர்களும் நண்பர்களும் துக்கம் விசாரித்துச்
செல்கின்றனர்.
ஒரு பெரியவர்,அக்குடும்பத்துக்கு நீண்ட நாள் நண்பர் செல்லுமுன் சொல்கிறார்” எதற்கென் றாலும் என்னை அழையுங்கள்.நான் உடனே வந்து விடுகிறேன்”
இறைவனும் இதைத்தானே சொல்கிறான்!
நம் புராணக்கதைகள் இதை அழகாக விளக்கி
விடுகின்றனவே!
முதலை வாயில் மாட்டிக் கொண்ட யானையின்
கதறலைக் கேட்ட கடவுள்,உடன் வந்து துயர் தீர்க்கிறான்.
கௌரவர் சபையில் மானபங்கப் படுத்தப்படும் பாஞ்சாலி கதறும்போது எங்கிருந்தோ
ஆடை அனுப்பிக் காக்கிறான்!
ஒரு சிறிய கதை நினைவுக்கு வருகிறது.
தெருவில் ஒருவன் பாடியவாறு செல்கிறான்---
”ஓட்டைகைக்கும் அத்தினத்துக்கும் ஓராயிரம் காதம்
ஆனாலும் நடக்குதய்யா சேலை வியாபாரம்”
மன்னன் அவனை அழைத்துப் பொருள்
கேட்கிறான்.
அவன் சொல்கிறான்” துவாரகைக்கும்(ஓட்டை
கை),அத்தினாபுரத்துக்கும் இடையே ஓராயிரரம் காத தூரம்;ஆனாலும் பாஞ்சாலி அழைத்ததும்
கண்ணன்,அங்கிருந்து சேலை அனுப்பி விட்டான்”
இவை வெறும் கதையென்றேகொண்டாலும்
உள்ளிருக்கும் தத்துவம் ஒன்றுதான்!
அழைத்தால் வருபவன் அவன்.
நாம் உணர வேண்டும்-அவன் எப்போதும் நம்
அருகில்தான் உள்ளான் என்பதை.
ஊரை விட்டுச் செல்கிறோம்.
நம் கையில் கைபேசி இருக்கிறது;நாம்
குடும்பத்த்யுடன் எப்போது வேண்டுமென்றாலும் பேச முடிகிறது.
குடும்பம் அருகில் இருப்பது போன்ற
உணர்வு ஏற்படுகிறது.
அது போலத்தான்,அவனும் கூப்பிடு
தூரத்தில் இருக்கிறான்.
யானையோ பாஞ்சாலியோ வேறு யாரோ அழைத்தாலும்
அவனுக்குக் கேட்கிறது.
அழைப்பில் நம்பிக்கை இருக்க வேண்டும்.
மாணிக்கவாசகர் சொல்வது போல் ’சிக்கெனப்’
பிடிக்க வேண்டும்.
அவன் நம்முடன் இருக்கிறான் என்ற
நம்பிக்கையே நமக்கு ஒரு பெரும் சக்தியாக இருக்கிறது.
இது மதங்கள் கடந்த ஒரு நம்பிக்கை.
எவரேனும் என்னைப்பற்றிக்கேட்டால்
சொல்லுங்கள்,நான் அருகில்தான் இருக்கிறேன். அழைத்தால் உடன் வருவேன்
என்று”-------(குரான் 2:186)
”if god be for us,who
can be against us”-(bible romans 8:31)
இதைத்தான் தமது “Power of positive thinking” என்ற
நூலில் வலியுறுத்துகிறார் டா.நார்மன் வின்சென்ட் பீல் அவர்கள்.
என்ன பிரச்சினை வந்தாலும் இந்த
வாக்கியத்தை மனதில் கொண்டு நம்பிக்கையுடன் செயல் பட்டால்,பிரச்சினையைத்
தீர்க்கலாம் என்கிறார்.
ஆம்!
அவன் அருகில்தான் இருக்கிறான்.
நமக்காகத்தான் இருக்கிறான்.
கூப்பீட்டவுடன் வருபவன்தான்.
நம்பிக்கை நமக்கு வேண்டும்!
அதுவே முக்கியம்.
நம்பிக்கை நமக்கு வேண்டும்!
பதிலளிநீக்குசொன்ன உதாரணங்கள் அருமை ஐயா...
பதிலளிநீக்குமுக்கியம் முதலில் நமக்கு முக்கியம்...
எக்ஸலண்ட்! நம்பிக்கை மட்டும் இருந்தால் எதுவும் சாத்தியமே!
பதிலளிநீக்குசிறப்பான பகிர்வு.
பதிலளிநீக்குநம்பிக்கை தானே எல்லாம்!
அவன் நம்முடன் இருக்கிறான் என்ற நம்பிக்கையே நமக்கு ஒரு பெரும் சக்தியாக இருக்கிறது என்பது சத்தியமான வார்த்தை. அருமையான பதிவு.வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு“Power of positive thinking” -- பயனுள்ள நம்பிக்கை பற்றி
பதிலளிநீக்குஅருமையன பகிர்வுகள்.பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குநம்முள் வாழ்பவன் அவனே
கடவுள் நம்பிக்கை பற்றிய தங்களின் இந்தப்பதிவு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. மிக்க நன்றி.
பதிலளிநீக்குஅழைப்பில் நம்பிக்கை இருக்க வேண்டும்.//
பதிலளிநீக்குவேதாகமும் இதைத்தான் சொல்கிறது தல, நம்பிக்கை அதுவும் அசைக்கமுடியாத நம்பிக்கை இருப்பவனுக்கு தெய்வம் மிக அருகில் இருக்கிறானாம்....!
நல்ல பகிர்வு . நம்பிக்கைதான் வேண்டும்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவணக்கம்
கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.
நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது
ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.
இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.
நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.
இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.
திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.
உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.
அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.
இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.
அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.
லிங்க்ஐ படியுங்க.
http://tamil.vallalyaar.com/?page_id=80
blogs
sagakalvi.blogspot.com
kanmanimaalai.blogspot.in