தொடரும் தோழர்கள்

வியாழன், ஏப்ரல் 24, 2014

வாக்களிப்பதால் வரும் நன்மைகள்!



எனது சனநாயக உரிமையை நிலைநாட்டி,கடமையை நிறைவேற்றி விட்டேன்.

சென்றேன்;வாக்களித்தேன்; வந்தேன்.காத்திருப்பே இல்லை!

காலை மணி 9.25.ஒட்டுப்போட்டு விட்டு வரலாம் என முடிவெடுத்தேன்; புறப்பட்டேன். 

எதிர்ப்பட்ட எங்கள் குடியிருப்புப் பெண்மணியிடம் கேட்டேன்கூட்டம் எப்படி?”
பதில் நம்ம பூத்தில் கூட்டமில்லை

ஞாயிறு, ஏப்ரல் 20, 2014

ஹாலிடே,ஜாலிடே!



ஒருவன் மது அருந்தகத்தில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தான்,

அருகில் அமர்ந்திருந்த ஒருவனின் செய்கை விசித்திரமாகப் பட்டது.

அந்த மனிதன் ஒரு பெக் பிராந்தி குடித்து விட்டுத் தொடர்ந்து ஒரு கோப்பை பீர் அருந்தி  விட்டுப் பின் தன் சட்டைப்பைக்குள் பார்ப்பான்.

இவ்வாறே அவன் தொடர்ந்து செய்து கொண்டிருந்தான்.

இவன் பொறுக்க முடியாமல் அவனைக் கேட்டான்”ஏன் இவ்வாறு செய்கிறாய்”

அவன் சொன்னான்”சட்டைப்பைக்குள் என் மனைவியின் புகைப்படம் இருக்கிறது,எப்போது அவள் அழகாக இருக்கிறாள் என்று தோன்றுகிறதோ அப்போது போதை ஏறி விட்டது என்று பொருள்..குடிப்பதை நிறுத்தி விடுவேன்!”

வெள்ளி, ஏப்ரல் 18, 2014

தேர்தல் பிரசாரமும் வாக்குப்பதிவும்!



ஒரு அரசியல்வாதி  விபத்தில் இறந்த பின் அவர் உயிர் மேலுலகம் சென்றது.

அங்கு வாயிலில் ஒரு தேவதை நின்று கொண்டிருந்தது.

தேவதை சொன்னது”நீங்கள் மிகப் பிரபலமானவர்.எனவே எங்கு செல்வது-சொர்க்கமா, நரகமா-எனத் தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.ஒவ்வொரு இடத்திலும் ஒரு நாள் இருந்து தாங்கள் முடிவு செய்யலாம்”

தலைவர் சொன்னார்”பார்க்கவே வேண்டாம்.நான் சொர்க்கத்துக்கே செல்ல விரும்புகிறேன்”

வியாழன், ஏப்ரல் 17, 2014

தேவலோக மயிலை!



நான் சென்னை மயிலை விவேகானந்தா கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்த காலத்தில், மயிலையை ஒரு தேவ லோகம் என்றே நான் சொல்லி வந்தேன்.

காரணங்கள் என்ன என்று யோசிக்கிறீர்களா?

சொல்கிறேன்.

புதன், ஏப்ரல் 16, 2014

பதிவர் சந்திப்பும்,ஆப்பிள் பஜ்ஜியும்!



சென்னையின் முக்கிய அடையாளங்களாகக் கருதப்பட்ட ,இன்று இல்லாமற்போய் விட்ட சில இடங்கள் பற்றி இன்று” இந்தியாவின் நேரங்கள்”நாளிதழில் ஒரு குறிப்பு படித்தேன்.அதில் சொல்லப்பட்ட இடங்களில் ஒன்று “உட்லாண்ட்ஸ் டிரைவ் இன்”.என் கல்லூரி வாழ்க்கை தொடங்கி சில ஆண்டுகள் முன் வரையான காலத்தைப் பற்றிய  பல இனிய நினைவுகளைத் தந்து கொண்டிருக்கும் இடம்.

சனி, ஏப்ரல் 12, 2014

உடன்பிறப்பே! இன்று உங்கள் தினம்!



உடன் பிறப்பே!

இன்று உங்கள் நாள்! 

ஆம்.இன்று உடன் பிறப்புகள் தினமாம்.

அண்ணா,தம்பி,அக்கா.தங்கை என்ற உறவுகள் அனைவருக்கும் வாய்த்திடுவதில்லை.

வியாழன், மார்ச் 13, 2014

இறைவன் கேட்ட வரம்!

பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பது போல் என்று சொல்வார்கள்.

இன்று  பழைய பதிவுகளை நானே பார்த்துக்கொண்டிருந்தேன்!

(ஒரு முறை ஒரு சர்பத் கடையில் கூட்டமே இல்லாததால்.கடைக்காரர் தானே சர்பத் போட்டுக் குடித்ததைப் பார்த்த நினைவுதான் வருகிறது!)

அதிகப் பின்னூட்டங்களைப் பெற்ற ஒரு பதிவு ;இரண்டாண்டுகளுக்கு முன் எழுதியது,ஆனால் என்றும் நிலைக்கும் உண்மையைச் சொல்வது,என்னைக் கொஞ்சம் நிறுத்தியது.

இதில் நான் சொன்ன ஒரு செய்தியை இன்று உயர்  நீதி மன்றமே சொல்லியிருக்கிறது! --------”


”பால் அபிஷேகம் செய்யும்போது,பட்டினியால் வாடும் மக்களை நினையுங்கள்” என்று

இதை மீள்பதிவாகத் தந்தால் என்ன?

(எழுத  எதுவும் தோன்றாத நிலையில் இதைத்தவிர வேறு என்ன செய்ய?)

இதோ..............

கடவுள் பேசுகிறார்.........



//உனக்கு வேண்டுவன எல்லாம் என்னிடம் கேட்கின்றாய்
எனக்கு வேண்டுவ தென்ன வென்று நீ கேட்டதுண்டா?

பண்டிகைகள் கொண்டாடி படையல் படைக்கின்றாய்
உண்பதற்கு விதவிதமாய் செய்து மகிழ்கின்றாய்

பிள்ளையாராய்க் கும்பிட்டுக் கொழுக்கட்டை படைக்கின்றாய்
பிரப்பம் பழம் விளாம்பழமெனப் பலபழமும் கொடுக்கின்றாய்

கண்ணனாய் வணங்கி வெண்ணைய் வைக்கின்றாய்
எண்ணெய்ப் பலகாரம் பலவும் படைக்கின்றாய்.

கோவில்களில் எனக்கு பால் தயிர் பன்னீர் என்று
ஓய்வில்லாமல் அபிஷேகம் பலவும் செய்கின்றாய்.

உண்டியல் தேடிப் போய் பணம் நகை எனப் பலவும்
கொண்டு போய் நீ தவறாமல் கொட்டுகின்றாய்.

திருக் கல்யாணம் என்று சொல்லி யெனக்குத்
தினம் தினம் திருமணம் செய்விக் கின்றாய்

பட்டு வேட்டிப் புடவை கழுத்தில் தாலியெனப்
பலவும் வாங்கி யெனக்கு நீ அணிவிக்கின்றாய்


நான் உன்னை என்றுமே கேட்டதில்லை
எனக்கு இவையெல்லாம் கட்டாயம் வேண்டுமென்று

இன்று நான் சொல்கின்றேன் கேள் மனிதா
என் விருப்பம் என்னவென்று நீ அறிய.

நான் என்றுமே கொடுப்பவன்தான்,கேட்பவன் அல்ல!

படைக்கின்ற பழங்களெல்லாம் பசித்தவர்க்குக் கொடு
உடைக்கின்ற தேங்காயெல்லாம் நலிந்தவர்க்கு உண்ணக் கொடு.

குடம் குடமாய்க் கொட்டுகின்ற பாலெல்லாம் கொண்டு போய்
குடிக்கக் கஞ்சி கூட இல்லாக் குழந்தைகளுக்குக் கொடு.

எனக்குப் போர்த்துகின்ற வேட்டி சேலை இவை எல்லாம்
கனக்கின்ற குளிரில் வாடும் கணக்கற்றோருக்குக் கொடு.

கட்டுக்கட்டாய் உண்டியலில் கொட்டுகின்ற பணத்தில் நீ
கட்டித்தா இலவச கல்விச்சாலை,மருத்துவமனை இவையெல்லாம்.

திருக் கல்யாணம் செய்விக்கும் செலவினிலே
திக்கற்ற பெண்களுக்குத் திருமணம் செய்து வை!

என்னிடம் எப்போதும் நீ வரம் வேண்டி நிற்பாய்
இன்று நான் கேட்கின்றேன் இந்த வரம் நீ தா! //