பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பது போல் என்று சொல்வார்கள்.
இன்று பழைய பதிவுகளை நானே பார்த்துக்கொண்டிருந்தேன்!
(ஒரு முறை ஒரு சர்பத் கடையில் கூட்டமே இல்லாததால்.கடைக்காரர் தானே சர்பத் போட்டுக் குடித்ததைப் பார்த்த நினைவுதான் வருகிறது!)
அதிகப் பின்னூட்டங்களைப் பெற்ற ஒரு பதிவு ;இரண்டாண்டுகளுக்கு முன் எழுதியது,ஆனால் என்றும் நிலைக்கும் உண்மையைச் சொல்வது,என்னைக் கொஞ்சம் நிறுத்தியது.
இதில் நான் சொன்ன ஒரு செய்தியை இன்று உயர் நீதி மன்றமே சொல்லியிருக்கிறது! --------”
”பால் அபிஷேகம் செய்யும்போது,பட்டினியால் வாடும் மக்களை நினையுங்கள்” என்று
இதை மீள்பதிவாகத் தந்தால் என்ன?
(எழுத எதுவும் தோன்றாத நிலையில் இதைத்தவிர வேறு என்ன செய்ய?)
இதோ..............
கடவுள் பேசுகிறார்.........
//உனக்கு வேண்டுவன எல்லாம் என்னிடம் கேட்கின்றாய்
எனக்கு வேண்டுவ தென்ன வென்று நீ கேட்டதுண்டா?
பண்டிகைகள் கொண்டாடி படையல் படைக்கின்றாய்
உண்பதற்கு விதவிதமாய் செய்து மகிழ்கின்றாய்
பிள்ளையாராய்க் கும்பிட்டுக் கொழுக்கட்டை படைக்கின்றாய்
பிரப்பம் பழம் விளாம்பழமெனப் பலபழமும் கொடுக்கின்றாய்
கண்ணனாய் வணங்கி வெண்ணைய் வைக்கின்றாய்
எண்ணெய்ப் பலகாரம் பலவும் படைக்கின்றாய்.
கோவில்களில் எனக்கு பால் தயிர் பன்னீர் என்று
ஓய்வில்லாமல் அபிஷேகம் பலவும் செய்கின்றாய்.
உண்டியல் தேடிப் போய் பணம் நகை எனப் பலவும்
கொண்டு போய் நீ தவறாமல் கொட்டுகின்றாய்.
திருக் கல்யாணம் என்று சொல்லி யெனக்குத்
தினம் தினம் திருமணம் செய்விக் கின்றாய்
பட்டு வேட்டிப் புடவை கழுத்தில் தாலியெனப்
பலவும் வாங்கி யெனக்கு நீ அணிவிக்கின்றாய்
நான் உன்னை என்றுமே கேட்டதில்லை
எனக்கு இவையெல்லாம் கட்டாயம் வேண்டுமென்று
இன்று நான் சொல்கின்றேன் கேள் மனிதா
என் விருப்பம் என்னவென்று நீ அறிய.
நான் என்றுமே கொடுப்பவன்தான்,கேட்பவன் அல்ல!
படைக்கின்ற பழங்களெல்லாம் பசித்தவர்க்குக் கொடு
உடைக்கின்ற தேங்காயெல்லாம் நலிந்தவர்க்கு உண்ணக் கொடு.
குடம் குடமாய்க் கொட்டுகின்ற பாலெல்லாம் கொண்டு போய்
குடிக்கக் கஞ்சி கூட இல்லாக் குழந்தைகளுக்குக் கொடு.
எனக்குப் போர்த்துகின்ற வேட்டி சேலை இவை எல்லாம்
கனக்கின்ற குளிரில் வாடும் கணக்கற்றோருக்குக் கொடு.
கட்டுக்கட்டாய் உண்டியலில் கொட்டுகின்ற பணத்தில் நீ
கட்டித்தா இலவச கல்விச்சாலை,மருத்துவமனை இவையெல்லாம்.
திருக் கல்யாணம் செய்விக்கும் செலவினிலே
திக்கற்ற பெண்களுக்குத் திருமணம் செய்து வை!
என்னிடம் எப்போதும் நீ வரம் வேண்டி நிற்பாய்
இன்று நான் கேட்கின்றேன் இந்த வரம் நீ தா!
//
வழிபாடு நடக்கும் இடங்களில் எல்லாம் கடவுள் பேச்சை ஒளிபரப்பினால் வழி பிறக்கும் !
பதிலளிநீக்குத ம 2
பதிலளிநீக்குஎன்னிடம் எப்போதும் நீ வரம் வேண்டி நிற்பாய்
இன்று நான் கேட்கின்றேன் இந்த வரம் நீ தா!............ ஆஹா... அருமை அருமை
கடவளிடத்திலிருந்து கேட்டாளும் கிடைக்குமா...?
கடவுள் பேசவா போகிறார் என்றே நினைத்தாலும்...
நல்ல சிந்தனை பித்தன் ஐயா.