தொடரும் தோழர்கள்

புதன், மார்ச் 12, 2014

விளக்குமாறு!
விளக்குமாறு!

வீட்டைக் குப்பையின்றி வைக்க உதவும்

கூட்டிப் பெருக்கும்போது அதற்குத் தெரியாது

குப்பைக்கும் ரூபாய் நோட்டுக்கும் வேறுபாடு

எல்லாம் சேர்த்துப் பெருக்கித் தள்ளும்

கூட்டுபவருக்குத் தேவை,கவனம்

வேண்டியது வேண்டாதது  பிரித்து அறியும் தன்மை.

பூசை முடிந்து போன பின்

தரையில் அட்சதை இருக்கலாம்

தாமரை மலர் இருக்கலாம்

இரட்டை இலைகளும் இருக்கலாம்!

பெருக்கும் கை பார்த்துப் பெருக்க வேண்டும்!

உதய சூரியனையே உதிக்காமல் செய்த

 பெண்ணொருத்தி நாடு இது

வாசலில் நீர் தெளித்து

விளக்குமாற்றால் பெருக்கிக்

கோலமிடவேண்டும் விடியும் முன்

 வீட்டுக் குப்பையைச் சேர்த்தெடுத்துத்

தொட்டியில்தான் கொட்ட வேண்டும்.

பார்க்கச் சுத்தமாயிருக்கக் குப்பையை

கட்டிலுக்கு அடியிலும் தள்ளலாம்

அதனால் என்ன பயன்?

பெருக்குவதற்கு மட்டுமே விளக்குமாறு!

பைத்தியக்காரன் கையில்

விளக்குமாறு கிடைத்தால்

தன்னையும் அடித்துக் கொள்வான்

பார்க்கும் பிறரையும் சேர்த்து அடிப்பான்!

அதற்கல்லவே விளக்குமாறு!


22 கருத்துகள்:

 1. ஐயா... அசத்தல் (உண்மைகள்)... உங்கள் பாணியே தனி...

  பதிலளிநீக்கு
 2. ஐயா... தங்களுக்கும் பயன் தரலாம்...

  http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisdom-4.html

  பதிலளிநீக்கு
 3. விளக்குமாறு எனும் சொல்லைப் புரிந்தவர்கள் சென்னையில் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. உங்கள் கருத்துகளும் கவிதையும் அருமை.

  பதிலளிநீக்கு
 4. விளக்குமாறு மூலம் நல்லாவே விளக்கிவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 5. உதய சூரியனையே உதிக்காமல் செய்த
  பெண்ணொருத்தி நாடு இது“

  எங்கிருந்தோ எங்கோ முடிச்சிப்போட்டு
  விளங்குமாறு கொடுத்த அசத்தல் விளக்குமாறு.
  அருமை பித்தன் ஐயா.

  பதிலளிநீக்கு
 6. வித்தியாசமான கருப்பொருள்

  பதிலளிநீக்கு
 7. நீங்கள் யாரை விளாசுகிறீர்கள் என்பதை சரியாக ‘விளக்குமாறு’ கேட்டுக்கொள்கிறேன்!

  பதிலளிநீக்கு
 8. நீங்கள் சொல்ல வந்த கருத்தை இன்னும் கொஞ்சம் விளக்குமாறு நானும் கேட்டுக்கிறேன் !
  த ம 5

  பதிலளிநீக்கு
 9. நன்மை தீமை இரண்டையும் உணரப் பெற்ற ஆறிவாலே
  விளக்குமாறு எதனையும் விளக்கிச் சென்ற கவிதை அருமை ஐயா !

  பதிலளிநீக்கு
 10. விளக்குமாறு.... :) தாமரை மலர், கை - என அசத்தி இருக்கீங்க!

  பதிலளிநீக்கு
 11. இப்பொழுது இதுஎல்லாம் காணாமல்போய்விட்டது.

  பதிலளிநீக்கு
 12. விளக்குமாறு பற்றி தாங்கள் விளக்கு மாறு நன்று!

  பதிலளிநீக்கு