தொடரும் தோழர்கள்

சனி, ஏப்ரல் 12, 2014

உடன்பிறப்பே! இன்று உங்கள் தினம்!உடன் பிறப்பே!

இன்று உங்கள் நாள்! 

ஆம்.இன்று உடன் பிறப்புகள் தினமாம்.

அண்ணா,தம்பி,அக்கா.தங்கை என்ற உறவுகள் அனைவருக்கும் வாய்த்திடுவதில்லை.

உடன் பிறப்புகளை அடைந்திடுதலும் அவரவர் நல்லூழ்!

நமக்கு ஊழில் நம்பிக்கை என்றுமே இருந்திட்டதில்லை.

ஆயினும் அய்யன் வள்ளுவர் சொல்லிச் சென்றிட்டார்”ஊழிற்பெருவலி யாவுள” என்று

மக்களுக்கு நல்லதையே நினைத்திட்டு,நல்லதையே செய்திட்டு வரும் நம்மை அம்மக்களே தூக்கி எறிந்திடும் நிலை என்றால்,ஊழ் என்று ஒன்றுளதோ எனும் ஐயம் எழுந்திடுகிறது.

இராமகாதையிலும்,மகாபாரதத்திலும் உடன் பிறப்புகளின் ஒற்றுமை,பாசப் பிணைப்பு.விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை என்றிவையெல்லாம்,சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டன.

கட்டுக்கதைகளை நம்பிடாத போதும் அதில் காணும் நீதியை மறுத்திட இயலாது.

எனவே உடன் பிறப்பே! ஒற்றுமையைக் கைவிடாதிருந்திடுவீர்.

உடன்பிறப்புகளுக்குள்  மன வருத்தங்கள் வந்திட்டாலும் அது பெரும் சண்டையாக மாறிடுதல் கூடாது.

மக்களால் மக்களுக்காகவே என்றும் நடந்திட்ட மக்கள் அரசு நம்முடையது.

அதை நினைவில் கொண்டிட்டு ஒற்றுமையாய் உழைத்திடுங்கள்.

வெற்றிக்கனி பறித்திடுங்கள்!

உடன் பிறப்புகளுக்கு உடன்பிறப்புகள் தின வாழ்த்துகள்!

.* * * *

8 கருத்துகள்:

 1. உடன் பிறப்புகளுக்கு உடன்பிறப்புகள் தின வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு

 2. உடன்பிறப்புகள் தின வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 3. அனைத்து உடன் பிறப்புகளுக்கும் தங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்
  ஐயா .

  பதிலளிநீக்கு
 4. தாமதமாக சொன்னாலும் உடன்பிறப்புகளுக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. உடன்பிறப்பே! படிக்கும்போதே பரவசமாக இருக்கிறது! :)

  அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு