தொடரும் தோழர்கள்

புதன், ஏப்ரல் 16, 2014

பதிவர் சந்திப்பும்,ஆப்பிள் பஜ்ஜியும்!சென்னையின் முக்கிய அடையாளங்களாகக் கருதப்பட்ட ,இன்று இல்லாமற்போய் விட்ட சில இடங்கள் பற்றி இன்று” இந்தியாவின் நேரங்கள்”நாளிதழில் ஒரு குறிப்பு படித்தேன்.அதில் சொல்லப்பட்ட இடங்களில் ஒன்று “உட்லாண்ட்ஸ் டிரைவ் இன்”.என் கல்லூரி வாழ்க்கை தொடங்கி சில ஆண்டுகள் முன் வரையான காலத்தைப் பற்றிய  பல இனிய நினைவுகளைத் தந்து கொண்டிருக்கும் இடம்.

இடம் இல்லை;நினைவுகள் இருக்கின்றனவே!

எப்படி ப்ளூ டைமண்டையும்,சாந்தோமையும்,எல்ஃபின்ஸ்டைன் ஜஃபார்கோவையும் என்னால் மறக்க இயலாதோ அது போலவே எனக்கு மட்டுமல்ல,பல சென்னைவாசிகளுக்கு டிரைவ் இன் உட்லாண்ட்ஸை மறக்க முடியாது.

நான் பதிவுலகில் புகுந்திருந்த நேரம்.ஒரு முறை டிரைவ் இன்னில் பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.அப்போது பாலபாரதியும் ,மா.சிவகுமாரும் தலைமையேற்று வழி நடத்திக் கொண்டிருந்தார்கள்.சிறு தயக்கத்துடன் நானும் அச் சந்திப்புக்குச் சென்றேன்.ஒரு தனி அறையில் வட்ட வடிவில் இருக்கைகள் போடப்பட்டிருந்தன.எனக்கு அப்போது யாரையும் தெரியாது.அன்று முக்கியமானவர்களாக எனக்குத் தெரிந்தவர்கள்-பாலபாரதி,மா,சிவகுமார்,யுவகிருஷ்ணா(லக்கி லுக்),பொன்ஸ் பூர்ணா இன்னும் ஓரிருவர்.டோண்டு அவர்கள் வரவில்லை.தமிழ் மண நிர்வாகிகள் சிலர் வந்திருந்தனர்.யாழ் பதிவர் ஒருவரும் வந்திருந்தார்.பெயர் நினைவில்லை.

அன்று என்ன செய்யலாம் என்று பேசும்போது துறை சார்ந்த பதிவுகள் அதிகம் வருவதில்லை என்று சொன்ன பால பாரதி   திரு.டி.பிஆர்.ஜோசப் அவர்கள் வங்கி நடைமுறைகள் பற்றி எழுதுவதாகச் சொல்லியிருக்கிறார் என்றார்.பின்னர் எழுதினாரா எனத் தெரியவில்லை இல்லையெனில் இப்போது எழுதலாமே!அவரைத்  தவிர அதைச் சுவாரஸ்யமாக எழுதக்கூடிய மற்றொருவர் திரு. வே.நடனசபாபதி என நான் நினைக்கிறேன்.

அன்று தமிழ்மணத்தினர் அளித்த அன்பளிப்பு ஒரு டீ சர்ட்!படத்தில் நான் அணிந்திருப்பது!


மிக இனிமையான ஒரு சந்திப்பு,அந்த என் முதல் சந்திப்பு!

என்ன ஆப்பிள் பஜ்ஜி பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்கிறீர்களா?

அன்று ஆப்பிள் பஜ்ஜி கொடுக்கப்படவில்லை!

ஆனால் அங்கு ஆப்பிள் பஜ்ஜி பிரசித்தம்.

பல முறை சாப்பிட்டிருந்தாலும்,குறிப்பாக நான் எம்,எஸ்ஸி . இல் தேர்ச்சி பெற்றபின் என் உறவினர் ஒருவர் பார்ட்டி கேட்டார், டிரைவ்இன்னில்.

அன்று சாப்பிட்ட முக்கியமான ஐட்டம்---ஆப்பிள் பஜ்ஜி,மசால்தோசை .

செய்து சாப்பிட்டுப் பாருங்கள் ஆப்பிள் பஜ்ஜி!

இனிப்பும் காரமும் சேர்ந்த அந்தக் கலவை!

அந்தக் காப்பியையும் மறக்க முடியுமா?

(பதிவர் சந்திப்பு அன்று கூடக் கூட்டம் தொடங்கும் முன் ஒரு காப்பி குடித்து விட்டே சென்றேன்)

ஈடு செய்ய முடியாத இழப்பு!


34 கருத்துகள்:

 1. யார் அங்கே எங்கள் சென்னைப் பித்தன் ஐயாவுக்கு மூணு செட்டு ஆப்பிள்
  பஜ்ஜி கொடுங்கள் .(ஆனா ஆப்பிள் பஜ்ஜி எப்படி இருக்கும் ?..ஐ திங்கிங் :)) )
  மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் ஆப்பிள் பஜ்ஜியே தங்களைத் தேடி வர வாழ்த்துக்கள்
  ஐயா .

  பதிலளிநீக்கு
 2. சுவாரஸ்யமான நினைவுகள்
  சொல்லிப்போனவிதம் போலவே
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. நான் கூட அங்கே ஆப்பிள் பஜ்ஜி சாப்பிட்டிருக்கிறேன் . நன்றாகவே இருக்கும் .
  ஞாபகம் வருதே !ஞாபகம் வருதே !

  பதிலளிநீக்கு
 4. இதைப்பற்றி சொல்லவே இல்லையே !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த சந்திப்பு நடந்தது 2008 இல் என நினைவு!
   முதுகு வலி எப்படி இருக்கிறது?
   நன்றி.

   நீக்கு
 5. ஆப்பிள் ரசம் சாப்பிட்டிருக்கிறேன். இப்போதுதான் ஆப்பிள் பஜ்ஜி பற்றி கேள்விப்படுகிறேன். அதை சாப்பிட்டு பார்க்கலாமென்றால் டிரைவ் இன் உட்லாண்ட்ஸ் தான் இப்போது இல்லையே. நீங்கள் தான் புதுப்புது உணவு வகை தயாரிப்பு பற்றி வலைப் பதிவிலும், முக நூலிலும், கூகிள் பிளஸ்ஸிலும் ஆலோசனை தருபவராயிற்றே. ஆப்பிள் பஜ்ஜி தயாரிப்பது எப்படி என்பதை விரைவில் உங்களிடம் எதிர்பார்க்கலாமா?

  ஏதோ எழுதுவதாக நான் நினைத்துக் கொண்டிருந்தேன். நான் சுவாரஸ்யமாக எழுதுவதாக சொல்லியிருக்கிறீர்கள். அது உண்மையா எனத் தெரியவில்லை. இருப்பினும் நன்றி உங்கள் பாராட்டிற்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மற்ற பஜ்ஜி போல்தான் ஆப்பிள் பஜ்ஜியும்!
   எழுதும் செய்தியைப்பற்றிய முழு அறிவும்,சுவாரஸ்யமாக எழுதும் திறமையும் வேண்டும்;அது உங்களிடம் இருக்கிறது.
   நன்றி

   நீக்கு
 6. ஆப்பிள் பஜ்ஜி செய்து பார்க்க வேண்டும்! இனிய நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செய்து சப்பிட்டுப் பார்த்துச் சொல்லுங்கள்!
   நன்றி

   நீக்கு
 7. ஆப்பிள் பஜ்ஜியும்
  அபூர்வ சந்திப்புகளும்
  இனிய நினைவுகளும் அருமை..!

  பதிலளிநீக்கு
 8. ஹ்ம்ம் ... செம செம ... நான் என்னம்மோ இடையில் ஏதும் சந்திப்பு நடந்தைதா என்று பார்த்தேன் ... அய்யா ...

  பதிலளிநீக்கு
 9. இதில் கலந்து கொண்டு ,உற்சாகமாக எழுதித்தான் 2 ௦ 1 1 ம ஆண்டு தமிழ்மண ரேங்கில் 3 வது இடத்தைப் பிடித்து விட்டீர்கள் போலிருக்கிறது !
  த ம 8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போது சில நாட்களாகத்தான் உற்சாகம் காணாமல் போய்விட்டது!
   நன்றி

   நீக்கு
 10. டிரைவ் இன் உணவகத்தில் நானும் மறைந்த நண்பர் டோண்டுவும் இன்னும் சில பதிவுலக நண்பர்கள் மாதம் ஒரு முறை கூடி உரையாடியுள்ளோம். அன்று அந்த கூட்டங்களில் பங்குகொண்ட பலரும் இப்போது பதிவுலகில் ஆக்டிவாக இல்லை. நான் 'திரும்பிப் பார்க்கிறேன்' என்ற தலைப்பில் என்னுடைய வங்கி அனுபவங்களை தொடர்ந்து இருநூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகளில் எழுதியுள்ளேன். என்னுடைய ப்ளாகிலுள்ள கூகுள் தேடு பெட்டியில் திரும்பிப்பார்க்கிறேன் என்று அடித்தால் அவை வரக்கூடும். படித்துப் பாருங்கள். அதாவது நான் கிளைகளில் மேலாளராக பணியாற்றிய காலக்கட்டத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அவை. கிளைகளிலிருந்து மாற்றலாகி நிர்வாக அலுவலகங்களுக்கு சென்றபிறகு எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அத்தை சுவாரஸ்யமாக இருக்காது என்பதால் நிறுத்திவிட்டேன்.

  பதிலளிநீக்கு
 11. நானும் உங்கள் காலத்தில் பதிவராக இருந்திருந்தால் ஆப்பிள் பஜ்ஜி சுவைக்கும் வாய்ப்பைப் பெற்றிருப்பேன். சந்திப்பில் கொடுக்கவில்லை என்றாலும் சொந்தக் காசு போட்டு வாங்கலாம் அல்லவா?

  பதிலளிநீக்கு
 12. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  பதிலளிநீக்கு
 13. I tasted Apple Bajji in Hotel Aradhana at Cuddalore in the year 1973 (I think).

  பதிலளிநீக்கு
 14. நன்றாக இருந்திருக்க வேண்டும்!
  நன்றி

  பதிலளிநீக்கு
 15. ஆப்பிள் பஜ்ஜி.... இதுவரை சாப்பிட்டதில்லை. :(

  இனிய நினைவுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழைக்காய்,உருளைக் கிழங்கு போலத்தான்!
   நன்றி வெங்கட்

   நீக்கு
 16. ஆப்பிள் பஜ்ஜி.... இதுவரை சாப்பிட்டதில்லை பார்க்கவும் இல்லை ஐயா.

  பதிலளிநீக்கு