தொடரும் தோழர்கள்

தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஏப்ரல் 24, 2014

வாக்களிப்பதால் வரும் நன்மைகள்!



எனது சனநாயக உரிமையை நிலைநாட்டி,கடமையை நிறைவேற்றி விட்டேன்.

சென்றேன்;வாக்களித்தேன்; வந்தேன்.காத்திருப்பே இல்லை!

காலை மணி 9.25.ஒட்டுப்போட்டு விட்டு வரலாம் என முடிவெடுத்தேன்; புறப்பட்டேன். 

எதிர்ப்பட்ட எங்கள் குடியிருப்புப் பெண்மணியிடம் கேட்டேன்கூட்டம் எப்படி?”
பதில் நம்ம பூத்தில் கூட்டமில்லை

வெள்ளி, ஏப்ரல் 18, 2014

தேர்தல் பிரசாரமும் வாக்குப்பதிவும்!



ஒரு அரசியல்வாதி  விபத்தில் இறந்த பின் அவர் உயிர் மேலுலகம் சென்றது.

அங்கு வாயிலில் ஒரு தேவதை நின்று கொண்டிருந்தது.

தேவதை சொன்னது”நீங்கள் மிகப் பிரபலமானவர்.எனவே எங்கு செல்வது-சொர்க்கமா, நரகமா-எனத் தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.ஒவ்வொரு இடத்திலும் ஒரு நாள் இருந்து தாங்கள் முடிவு செய்யலாம்”

தலைவர் சொன்னார்”பார்க்கவே வேண்டாம்.நான் சொர்க்கத்துக்கே செல்ல விரும்புகிறேன்”

செவ்வாய், மே 17, 2011

வெற்றி ஊர்வலம் போகிறது!

தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளருடன்,திறந்த மகிழ்வுந்தில் அமர்ந்து,வெற்றி ஊர்வலம் போன அனுபவம் உங்களுக்குண்டா?

இருந்தால் நீங்கள் என்னோடு சேர்ந்தவர்!

இது நடந்தது 1952 ஆம் ஆண்டுத் தேர்தலில்.

அப்போது எனக்கு 7வயது முடிந்து 8ஆம் வயது நடந்துகொண்டிருந்தது.

சாத்தூரில் வசித்து வந்தேன்.

அந்த ஆண்டு நடந்த தேர்தலில் சட்டசபைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் திரு.எஸ்.ராமசாமி நாயுடு அவர்களும்,பாராளு மன்றத்துக்குத் திரு. காமராசர் அவர்களும், அபேட்சகர்கள்(அந்நாளில்,சட்டப் பேரவை, நாடாளுமன்றம், வேட்பாளர் என்ற சொல் வழக்குகள் கிடையாது!)

எதிர்க்கட்சி என்று எதுவும் கிடையாது.எதிர்த்து நின்றவர்கள் சுயேட்சை அபேட்சகர்கள்.

என்.ஆர்.கே.கே.ராஜரத்தினம் என்ற தொழிலதிபர்,கூஜா சின்னத்திலும், பா.ராஜாமணி என்பவர் பூ சின்னத்திலும் எதிர்த்துப் போட்டியிட்டனர்.

கான்கிரஸ் கட்சியின் சின்னம்-ரெட்டைக் காளை!

இது எப்படி நடந்ததோ தெரியாது!நாங்கள் வசித்த பகுதியில் இருந்த காங்கிரஸைச் சேர்ந்த இளைஞர்கள்,என்னைப் பிரசாரத்தில் ஈடுபடுத்தினர்.

விளையாட்டாக ஆரம்பித்தார்களோ என்னவோ,தெரியாது.ஆனால் எனது பிரசாரம் மக்களின் ஆதரவைப் பெறவே என்னையே தினமும் முக்கியப் பிரசாரகனாக ஆக்கி விட்டனர்.

கையில் மெகாஃபோனுடன், தினம் தெருத்தெருவாகச் சென்று.”vote for congress, எஸ்.ஆர்.நாயுடுவுக்கு ஓட்டுப் போடுங்கள்,உங்கள் ஓட்டு ரெட்டைக் காளைக்கே”
என்ற கோஷங்களுடன் என் பிரசாரம் சூடு பிடித்தது!

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்,ராஜரத்தினத்துக்காக, காங்கிரஸை எதிர்த்து,என் அண்ணன்,என்னை விட 11 வயது மூத்தவர், தேர்தல் பணியில் ஈடுபட்டார்.

சாத்தூரின் எல்லா வீதிகளிலும் நான் அறியப்பட்ட ஒரு முகமானேன்!

“ஹெட் மாஸ்டர் பேரனைப் பாரு எப்படிப் பேசுது” என்று எல்லோரும் வியந்தனர்!

காங்கிரஸ் வென்றது.

திரு எஸ்..ஆர்.நாயுடு அவர்கள் திறந்த காரில் சாத்தூர் வீதிகளில் வெற்றி ஊர்வலம் புறப்பட்டார். அங்கிருந்த தொண்டர்கள் சிலர் அவரிடம் என்னைப் பற்றிச் சொல்ல அவர் என்னையும் காரில் ஏற்றி விடச் சொன்னார்.

காரில் அவர் அருகில் நான் அமர்த்தி வைக்கப் பட்டேன்! வழியில் போடப்பட்ட மாலைகளில் சிலவற்றை அவர் என் கழுத்தில் அணிவித்தார்!

மக்கள் சில இடங்களில் அவருக்குக் குளிர் பானங்கள் வழங்கும்போது எனக்கும் வழங்கினார்கள்!திருஷ்டி கழித்தார்கள்!

காரில் போகும் போதே எனக்கு உறக்கம் வர ஆரம்பித்தது!

சில தெருக்களைக் கடந்த பின் அவர் தொண்டர்களை அழைத்து ஏதோ சொல்ல,அவர்கள் என்னைக் காரினின்றும் இறக்கினார்கள்.சில தொண்டர்கள் என்னை மணி சங்கர் பவன் என்ற ஓட்டலுக்கு அழைத்துச் சென்று, இனிப்பு(மைசூர்பாகு),மற்றும் தோசையெல்லாம் வாங்கிக் கொடுத்தனர்.

இரவு வைப்பாற்று மணலில் நடந்த விருந்துக்கு நான் செல்ல இயலவில்லை!

மறக்க முடியுமா அந்த வெற்றி ஊர்வலத்தை!

சனி, மே 14, 2011

ஜெய பேரிகை கொட்டடா!கொட்டடா!

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
பலர் கவலை ஏதுமின்றி இருப்பார்!
- - - -
இந்நாளில் என் பழைய கவிதைகள் இரண்டை மீள் பதிவாக அளிப்பது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்!
- - - - - - - - - - - -

இதோ அவை!

உதயசூரியனும்,இரட்டை இலையும்! (06-11-2010 தேதியிட்ட பதிவு)
- - - - - - - - - - - - - - -
அம்மா அழைத்தார்
”உடனே வா தோட்டத்துக்கு” என்று
சிறிது தாமதித்தேன்
”வந்து பார்” என்று மீண்டும் அழைப்பு.
கை வேலையெல்லாம் காக்கப் போட்டு விரைந்தேன்.
தோட்டம் சென்றேன்.
ஆஹா! என்ன காட்சி!.
கம்பளம் விரித்தது போல்
தரையெங்கும் இலை மூடல்.
தரையெங்கும் கொட்டிக் கிடந்தது இலை!
நிமிர்ந்து பார்த்தேன்
மொட்டையாய் இலயுதிர்த்து நின்றது மரம்!
ஆயினும் சில நாட்களில்
மீண்டும் இலைகள் துளிர்க்கும்
இதுவன்றோ இயற்கை நியதி?
இருள் பிரிந்தும் பிரியா அக்காலையில்
மீண்டும் மரத்தைப் பார்த்தேன்.
அதோ ஒரிரு இலைகள் அசைகிறதோ?
அவை விழக்காத்திருக்கும் இலைகளா?
அன்றி விழுந்த பின் முளைக்கும் துளிர்களா?
உதித்தான் சூரியன்
மெள்ளப் பரவியது வெளிச்சம்
உதய சூரியனின் ஒளியிலே
பளிச்சென்று தெரிந்தது அந்தத்
துளிர்த்து வந்த இரட்டை இலை!




சூரியாஸ்தமனம்!(கவிதை) (01-03-2011 தேதியிட்ட பதிவு)
- - - - - - - - - - - - -
”அடிவானத் தேயங்கு பரிதிக் கோளம்
…………..
………….
பார்சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில்
என்னடீயிந்த வன்னத்தியல்புகள்!
எத்தனை வடிவம்!எத்தனை கலவை!
----------------------(பாஞ்சாலி சபதம்)

ஆம் அய்யா பாரதி அத்தனையும் சரி
மலை வாயில் சூரியன் விழும் நேரம் வந்தாச்சு!

மெல்ல மறைகின்றான் கதிரவன் அங்கே!!

படர் முகில் வடிவங்கள் என்ன என்ன அவற்றின்
சுடர் விடும் வண்ணங்கள் என்ன என்ன!
சிவந்த வானத்தில் கரு நிற முகில்கள்!

சிவப்பும் கருப்பும் என்னவொரு கலவை!

மஞ்சள் வண்ணத்தில் துண்டு துண்டாய்
பஞ்சுப் பொதி போன்ற மேகங்கள்

அதோ ஒரு மேகம்!மாம்பழம் போல் தோற்றம்!
சிறுத்தை பாய்வது போல் மற்றுமொரு மேகம்!

மறைகின்ற சூரியனை தடுக்கவா முடியும்
வெறும் கை கொண்டு நிலைமையை மாற்றவா முடியும்!

சுட்டெரிக்கும் சூரியன் மறைந்திடுவான்

கொட்டு முரசே! குளிர்ந்த நிலவொளியில்

பாலகர்கள் பம்பரம் விளையாட தீப்பந்த ஒளியினிலே

அம்மா பரிமாற

இரட்டை இலை போட்டு நிலாச் சோறு நடக்குதென்று!

- - - - - - - - -
எனது 12-05-2011 தேதியிட்ட பதிவில் நான் சொன்னது-
//முடிவுகள் அறிவிக்கும் தினத்தன்று கோசார நிலைமை----ராசி நாதன் சூரியன் ராசிக்கு 9 இல் உச்சம்;ராசிக்கு யோகன் செவ்வாய்,ராசிக்கு 9 ஆம் வீடாகிய சொந்த மேஷத்தில்,ராசிக்குத் தொழில் ஸ்தானாதிபதியான சுக்ரன்,ராசிக்கு 9 இல்,(தர்ம கர்மாதிபதி யோகம்),ராசிக்குத் தன லாபாதிபதியாகிய புதன்,ராசிக்கு 9 இல்,அனைத்துக்கும் மேலாக,ராசிக்குப் பஞ்சமன் குரு 9 இல்.;வேறென்ன வேண்டும்,வெற்றியை அளிக்க!//

//.எனவே ஆட்சி அமைப்பது நிச்சயம் //

கேப்டனுடன் கூட்டு சேர்ந்ததனால் இந்த இமாலய வெற்றி சாத்தியமாயிற்று!

எனவே கருப்பு ராகுவின் பலம் நிச்சயம் துணை செய்திருக்கிறது!




அம்மாவுக்கு வாழ்த்துகள்!

மக்கள் மிகப்பெரிய வெற்றியை அளித்திருக்கிறார்கள்-உங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து!

அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன்!

மீண்டும் வாழ்த்துகள்!

புதன், ஏப்ரல் 13, 2011

தேர்தல்!49(ஓ)!ஓட்டுப் போட்டாச்சு!

”ஏண்டா பேமானி!நீ என்ன பெரிய பருப்பா(பிஸ்தாவா,----------வா)!49(ஓ) விலே ஓட்டுப் போடறே!-----------,வெளில வா,வகுந்துடறேன்”

இப்படி,இது போன்ற,தொலைபேசி அழைப்புகள் எனக்கும் வர ஆரம்பித்திருக்கும்; நான் 49(ஓ) வின் கீழ் ஓட்டுப் போட்டிருந்தால்!

ஏன் இவ்வாறு சொல்கிறேன் என்றால்,காரணம் இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் படித்த ஒரு செய்தியே!சரவணகுமார் என்ற ஒருவர் சென்ற தேர்தலில்,அவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர்,,49(ஓ) வின் கீழ் வாக்களித்த பின்,அன்றே, பல அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், இந்த முறை வாக்களிக்கப் போவதில்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

எனவே 49(ஓ) வை மறந்து விட்டேன்!

வாக்களிக்காமல் இருப்பதில் உடன்பாடில்லை.


காலை 9 மணிக்கெல்லாம் வாக்குச் சாவடி சென்று,45 மணித்துளிகள் வரிசையில் நின்று,வாக்களித்து விட்டு வந்தேன்!

பாருங்கள் அத்தாட்சி!(சத்தியமாக என் விரல்தான்).



நான் என் ஜனநாயகக் கடமையைச் செய்துவிட்டேன்! நீங்கள்?

விரலில் அவர்கள் மை வைத்தார்கள்.

நெற்றியில் நானே பட்டையாய் நாமம் போட்டுக் கொண்டேன்.(இதுதானே இன்றைய நிலை)

எல்லா அரசியல் வாதிகளும் சேர்ந்து மக்களுக்குப் போடும் நாமம் வாழ்க!

வியாழன், மார்ச் 24, 2011

முக்கிய செய்தி!-மயிலையில் ஆன்மீக வேட்பாளர்!

காஞ்சி சங்கராசாரியார் ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் ” தமிழ்நாடு தேசிய ஆன்மீக மக்கள் கட்சி” என்றொரு புதிய கட்சியைத்துவக்கியிருப்பது அனைவரும் அறிந்ததே.அது பற்றிய பத்திரிகைச் செய்தியை நான் இங்கே வெட்டி ஒட்டப் போவதில்லை!

ஆனால் நான் சொல்லப் போவது அதற்கு சம்பந்தமுடைய ஒரு முக்கிய செய்தி.!

புதிய கட்சி தொடங்கப் பட்டதைப் பற்றி ஆன்மீகச் செல்வரான சென்னை பித்தனின் கருத்தை அறிய ‘டுபாகூர் டைம்ஸ்’ நிருபரான ஹசாரி அவரைக் காணச் சென்றார்.

இது குறித்து சென்னை பித்தன் கொடுத்த பேட்டியிலிருந்து--------

“இன்று நாடு இருக்கும் நிலையில் ஆன்மீகத்துக்கு என்று ஒரு தனி அமைப்பு அவசியம்தான்.எனவே இதை நான் வரவேற்கிறேன்.உண்மையான ஆன்மீகச் சேவையாற்றும் ஒரு அமைப்பாக இது விளங்க வேண்டும்.நாட்டில் போலி ஆன்மீகவாதிகள் மிகுந்த விட்ட நிலையில்,உண்மையான ஆன்மீகவாதிகள் யாரென்று பார்த்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.நீங்கள் கேட்டீர்கள்,ஆன்மீகவாதி தேர்தலில் போட்டியிடலாமா என்று.நிச்சயமாகச் செய்ய வேண்டும் என்று நான் சொல்வேன். ”

”’இந்த நேரத்தில் பல ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவில் வருகிறது.
அப்போது நான் மதுரையில் பணியாற்றி வந்தேன்.தேர்தல் சமயம்.சிறந்த ஆன்மீகச் சொற்பொழிவாளரும் சிலகாலம் என்னுடன் தனிப் பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றியவருமான புலவர் அவர்களும் சில நண்பர்களும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவர் சொன்னார்”ஆன்மீகத்துக்காக ஒரு தொகுதி ஒதுக்கித்தர வேண்டும் என்று முதல்வரைக் கேட்கலாம்” என்று.அனைவரும் ஆமோதித்தோம்.”

”இப்போது,தேர்தல் நேரத்தில்,புதிய கட்சி தொடங்கப் பட்டிருப்பது ஒரு நல்ல வாய்ப்பே!இரண்டு கூட்டணித்தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி ஆன்மீகத்துக்காக ஒரு சீட் கேட்கலாம்.”

”கற்பகாம்பாளும்,கபாலீச்வரரும் அருள் புரியும் ,ஆன்மீக மணம் கமழும் மயிலைத்தொகுதியை ஆன்மீகத்துக்கு ஒதுக்கச் சொல்லிக் கேட்கலாம்.அங்கு போட்டியிட நான் தயார்”

“வளர்க ஆன்மீகம்”

இதையடுத்து உடனடிப் பேச்சு வார்த்தை நடந்திருப்பதாகவும்,சென்னைப் பித்தன் மயிலை சட்டமன்றத் தொகுதியில் கட்சி சார்பின்றி, ஆன்மீகத்தின் சார்பில் போட்டியிடுவாரென்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன!


(அவருடைய நீ--ண்ட பெயருடைய கட்சி கலைக்கப் பட்டு விட்டதா என்பது தெரியவில்ல!)