தொடரும் தோழர்கள்

செவ்வாய், மே 17, 2011

வெற்றி ஊர்வலம் போகிறது!

தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளருடன்,திறந்த மகிழ்வுந்தில் அமர்ந்து,வெற்றி ஊர்வலம் போன அனுபவம் உங்களுக்குண்டா?

இருந்தால் நீங்கள் என்னோடு சேர்ந்தவர்!

இது நடந்தது 1952 ஆம் ஆண்டுத் தேர்தலில்.

அப்போது எனக்கு 7வயது முடிந்து 8ஆம் வயது நடந்துகொண்டிருந்தது.

சாத்தூரில் வசித்து வந்தேன்.

அந்த ஆண்டு நடந்த தேர்தலில் சட்டசபைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் திரு.எஸ்.ராமசாமி நாயுடு அவர்களும்,பாராளு மன்றத்துக்குத் திரு. காமராசர் அவர்களும், அபேட்சகர்கள்(அந்நாளில்,சட்டப் பேரவை, நாடாளுமன்றம், வேட்பாளர் என்ற சொல் வழக்குகள் கிடையாது!)

எதிர்க்கட்சி என்று எதுவும் கிடையாது.எதிர்த்து நின்றவர்கள் சுயேட்சை அபேட்சகர்கள்.

என்.ஆர்.கே.கே.ராஜரத்தினம் என்ற தொழிலதிபர்,கூஜா சின்னத்திலும், பா.ராஜாமணி என்பவர் பூ சின்னத்திலும் எதிர்த்துப் போட்டியிட்டனர்.

கான்கிரஸ் கட்சியின் சின்னம்-ரெட்டைக் காளை!

இது எப்படி நடந்ததோ தெரியாது!நாங்கள் வசித்த பகுதியில் இருந்த காங்கிரஸைச் சேர்ந்த இளைஞர்கள்,என்னைப் பிரசாரத்தில் ஈடுபடுத்தினர்.

விளையாட்டாக ஆரம்பித்தார்களோ என்னவோ,தெரியாது.ஆனால் எனது பிரசாரம் மக்களின் ஆதரவைப் பெறவே என்னையே தினமும் முக்கியப் பிரசாரகனாக ஆக்கி விட்டனர்.

கையில் மெகாஃபோனுடன், தினம் தெருத்தெருவாகச் சென்று.”vote for congress, எஸ்.ஆர்.நாயுடுவுக்கு ஓட்டுப் போடுங்கள்,உங்கள் ஓட்டு ரெட்டைக் காளைக்கே”
என்ற கோஷங்களுடன் என் பிரசாரம் சூடு பிடித்தது!

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்,ராஜரத்தினத்துக்காக, காங்கிரஸை எதிர்த்து,என் அண்ணன்,என்னை விட 11 வயது மூத்தவர், தேர்தல் பணியில் ஈடுபட்டார்.

சாத்தூரின் எல்லா வீதிகளிலும் நான் அறியப்பட்ட ஒரு முகமானேன்!

“ஹெட் மாஸ்டர் பேரனைப் பாரு எப்படிப் பேசுது” என்று எல்லோரும் வியந்தனர்!

காங்கிரஸ் வென்றது.

திரு எஸ்..ஆர்.நாயுடு அவர்கள் திறந்த காரில் சாத்தூர் வீதிகளில் வெற்றி ஊர்வலம் புறப்பட்டார். அங்கிருந்த தொண்டர்கள் சிலர் அவரிடம் என்னைப் பற்றிச் சொல்ல அவர் என்னையும் காரில் ஏற்றி விடச் சொன்னார்.

காரில் அவர் அருகில் நான் அமர்த்தி வைக்கப் பட்டேன்! வழியில் போடப்பட்ட மாலைகளில் சிலவற்றை அவர் என் கழுத்தில் அணிவித்தார்!

மக்கள் சில இடங்களில் அவருக்குக் குளிர் பானங்கள் வழங்கும்போது எனக்கும் வழங்கினார்கள்!திருஷ்டி கழித்தார்கள்!

காரில் போகும் போதே எனக்கு உறக்கம் வர ஆரம்பித்தது!

சில தெருக்களைக் கடந்த பின் அவர் தொண்டர்களை அழைத்து ஏதோ சொல்ல,அவர்கள் என்னைக் காரினின்றும் இறக்கினார்கள்.சில தொண்டர்கள் என்னை மணி சங்கர் பவன் என்ற ஓட்டலுக்கு அழைத்துச் சென்று, இனிப்பு(மைசூர்பாகு),மற்றும் தோசையெல்லாம் வாங்கிக் கொடுத்தனர்.

இரவு வைப்பாற்று மணலில் நடந்த விருந்துக்கு நான் செல்ல இயலவில்லை!

மறக்க முடியுமா அந்த வெற்றி ஊர்வலத்தை!

50 கருத்துகள்:

 1. தங்களின் நீங்காத நினைவுகளில் நானும் நீந்தினேன்...


  வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 2. வலைச்சரத்தில் இன்று..

  மாற்றான் தோட்டத்தில் மனம் வீசும் மலர்கள்...

  http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_17.html

  பதிலளிநீக்கு
 3. பழைய நினைவுகள். சரி, இப்போதுள்ள காங்கிரசுக்கு ஒருவேளை பிரச்சாராம் செய்யும்படி யாரும் வேண்டினால் இதே உற்சாகத்துடன் செய்வீர்களா அண்ணாதே ?! சும்மா வம்மிழுகத்தான் :)

  பதிலளிநீக்கு
 4. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

  // தங்களின் நீங்காத நினைவுகளில் நானும் நீந்தினேன்...


  வாழ்த்துக்கள்..//
  எனக்குச் சுகமான நீச்சல்!
  நன்றி சௌந்தர்!

  பதிலளிநீக்கு
 5. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  //வலைச்சரத்தில் இன்று..

  மாற்றான் தோட்டத்தில் மனம் வீசும் மலர்கள்...

  http://blogintamil.blogspot.com/2011/05/blog-//
  இதோ போயிட்டே இருக்கேன்!

  பதிலளிநீக்கு
 6. கக்கு - மாணிக்கம் கூறியது...

  //பழைய நினைவுகள். சரி, இப்போதுள்ள காங்கிரசுக்கு ஒருவேளை பிரச்சாராம் செய்யும்படி யாரும் வேண்டினால் இதே உற்சாகத்துடன் செய்வீர்களா அண்ணாதே ?! சும்மா வம்மிழுகத்தான் :)//
  அப்போது நான் ”கொழந்தெ”
  அப்போதிருந்த காங்கிரஸே வேறு!
  இப்போது?!
  நீங்களே சொல்லுங்கள் !
  நன்றி கக்கு!

  பதிலளிநீக்கு
 7. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  //மலரும் நினைவுகள்..
  பாராட்டுக்கள்..//
  வாடாத நினைவுகளே!
  நன்றி கருண்!

  பதிலளிநீக்கு
 8. அய்யா அந்த காலத்துலியே கலக்கி இருக்கீங்களா

  பதிலளிநீக்கு
 9. அப்போ காங்கிரஸ் இப்போ காங்கிரஸ் ஒரு பதிவு போடுங்கய்யா

  பதிலளிநீக்கு
 10. உங்களின் அனுபவ பகிர்வு அருமை சார்

  பதிலளிநீக்கு
 11. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

  //அய்யா அந்த காலத்துலியே கலக்கி இருக்கீங்களா//
  இளங்கன்று பயமறியாது!
  நன்றி சதீஷ்!

  பதிலளிநீக்கு
 12. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

  //அப்போ காங்கிரஸ் இப்போ காங்கிரஸ் ஒரு பதிவு போடுங்கய்யா//
  நல்ல ஆலோசனைதான்!

  பதிலளிநீக்கு
 13. Mahan.Thamesh கூறியது...

  //உங்களின் அனுபவ பகிர்வு அருமை சார்//
  நன்றி Mahan.Thamesh !

  பதிலளிநீக்கு
 14. எட்டு வயசிலே பெரியாளாகிட்டிங்கா ஐயா... மறக்க முடியாத நிகழ்வாக தான் இருக்கும்...

  பதிலளிநீக்கு
 15. நல்ல ஞாபகத்துடன் குறிப்பிடுகிறீர்கள்.
  மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 16. விஷயம் தெரியாத வயதில் தேர்தல்! நன்றாக இருந்தது உங்கள் நினைவலைகள்!

  பதிலளிநீக்கு
 17. நீங்கள் சொல்லி இருப்பது எல்லாம் ஒரு காலம் என்று சொல்லி நிலையில்தான் இன்றைய அரசியல் இருக்கிறது தலைவா .

  பதிலளிநீக்கு
 18. இதை வாசிக்கும்பொழுது நான் உணர்கிறேன் அப்பொழுது உங்களின் மனநிலை எவளவு சந்தோசத்தில் மூழ்கி இருக்கும் என்பதை பகிர்ந்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 19. உங்களுக்கு அவ்வளவு வயசா ஆச்சு. ஓகே ஓகே தெரிஞ்சுக்கிட்டேன்,

  பதிலளிநீக்கு
 20. அகவை ஏழிலேயே அரசியல் பரப்புரை செய்ததின் விளைவுதான், இன்றைய அரசியல் பற்றிய பதிவுகள் அனாசயமாக எழுதுகிறீர்களோ?

  பதிலளிநீக்கு
 21. அப்போ இருந்த காங்கிரசுக்கும் இப்போ இருக்குற காங்கிரசுக்கும் பெவிக்கால் வச்சி ஓட்டினாலும் ஒட்டாது இல்லையா தல.....???!!!!

  பதிலளிநீக்கு
 22. கந்தசாமி. கூறியது...

  //எட்டு வயசிலே பெரியாளா கிட்டிங்கா ஐயா... மறக்க முடியாத நிகழ்வாக தான் இருக்கும்...//
  அது ஒரு காலம்!நிச்சயமாக மறக்க முடியாத நிகழ்வே!
  நன்றி கந்தசாமி அவர்களே!

  பதிலளிநீக்கு
 23. அமைதி அப்பா கூறியது...

  //நல்ல ஞாபகத்துடன் குறிப்பிடுகிறீர்கள்.
  மகிழ்ச்சி.//
  பசு மரத்தாணி போல் பதிந்து விட்ட நினைவுகள்!
  நன்றி அமைதி அப்பா!

  பதிலளிநீக்கு
 24. வெங்கட் நாகராஜ் கூறியது...

  //விஷயம் தெரியாத வயதில் தேர்தல்! நன்றாக இருந்தது உங்கள் நினைவலைகள்!//
  அப்போதெல்லாம் ஒரு குஷிதான்!
  நன்றி வெங்கட்!

  பதிலளிநீக்கு
 25. ! ❤ பனித்துளி சங்கர் ❤ ! கூறியது...

  //நீங்கள் சொல்லி இருப்பது எல்லாம் ஒரு காலம் என்று சொல்லி நிலையில்தான் இன்றைய அரசியல் இருக்கிறது தலைவா .//
  உண்மைதான் சங்கர்!

  பதிலளிநீக்கு
 26. ! ❤ பனித்துளி சங்கர் ❤ ! கூறியது...

  //இதை வாசிக்கும்பொழுது நான் உணர்கிறேன் அப்பொழுது உங்களின் மனநிலை எவளவு சந்தோசத்தில் மூழ்கி இருக்கும் என்பதை பகிர்ந்தமைக்கு நன்றி//
  எங்கோ வானத்தில் பறந்தேன்!
  நன்றி சங்கர்!

  பதிலளிநீக்கு
 27. The reference to Sattur and Mani sankar Bhawan , tossed me into a nostalgic trip down memory lane, for I too have spent quite a few years in Sattur.
  Be that as it may,
  Probably you would have made a
  better politician than a banker.

  vasudevan

  பதிலளிநீக்கு
 28. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //அசத்தல் நினைவுகள்....!!!//
  நன்றி மனோ!

  பதிலளிநீக்கு
 29. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //அப்போ இருந்த காங்கிரசுக்கும் இப்போ இருக்குற காங்கிரசுக்கும் பெவிக்கால் வச்சி ஓட்டினாலும் ஒட்டாது இல்லையா தல.....???!!!!//
  அந்தமாதிரித் தலைவர்கள் இப்போது இல்லையே!அதுவும் காங்கிரஸ்,இப்போது இருப்பதும் காங்கிரஸா?!

  பதிலளிநீக்கு
 30. பாலா கூறியது...

  // உங்களுக்கு அவ்வளவு வயசா ஆச்சு. ஓகே ஓகே தெரிஞ்சுக்கிட்டேன்//
  உடலுக்குத்தான் வயசெல்லாம்!
  நன்றி பாலா!

  பதிலளிநீக்கு
 31. வே.நடனசபாபதி கூறியது...

  //அகவை ஏழிலேயே அரசியல் பரப்புரை செய்ததின் விளைவுதான், இன்றைய அரசியல் பற்றிய பதிவுகள் அனாசயமாக எழுதுகிறீர்களோ?//
  சில நேரங்களில் அரசியல் ஆசையும் எட்டிப் பார்த்ததுண்டு!
  நன்றி சபாபதி அவர்களே!

  பதிலளிநீக்கு
 32. Vasu கூறியது...

  //The reference to Sattur and Mani sankar Bhawan , tossed me into a nostalgic trip down memory lane, for I too have spent quite a few years in Sattur.
  Be that as it may,
  Probably you would have made a
  better politician than a banker.//
  politics is the last resort for the scroundrels,said Bernard Shaw!
  i did not want to be one!
  thank you vasu!
  (why are you not writing in tamil?)

  பதிலளிநீக்கு
 33. ஆஹா..ஐயா அப்பவே பெரிய்ய ஆளு போலிருக்கே..//இரவு வைப்பாற்று மணலில் நடந்த விருந்துக்கு நான் செல்ல இயலவில்லை!// இப்போ மாதிரி அப்போவும் அந்த ஆத்துல ஸ்பெஷல் விருந்து தானா?

  பதிலளிநீக்கு
 34. அப்புறம் என்ன ..அனுபவம் இருக்கு...அரசியல்ல இறங்கிடுங்க..

  http://zenguna.blogspot.com

  பதிலளிநீக்கு
 35. If you had continued in the same path, you would be ruling TN today! ?

  பதிலளிநீக்கு
 36. சாத்தூரின் எல்லா வீதிகளிலும் நான் அறியப்பட்ட ஒரு முகமானேன்!

  “ஹெட் மாஸ்டர் பேரனைப் பாரு எப்படிப் பேசுது” என்று எல்லோரும் வியந்தனர்!//

  சைட் கப்பிலை சாதனை பண்ணியிருக்கிறீங்க சகோ.

  பதிலளிநீக்கு
 37. மறக்க முடியாத வெற்றி ஊர்வலத்தை எங்களோடு பகிர்ந்திருக்கிறீர்கள். நன்றிகள் சகோ.

  பதிலளிநீக்கு
 38. செங்கோவி சொன்னது…

  //ஆஹா..ஐயா அப்பவே பெரிய்ய ஆளு போலிருக்கே..//இரவு வைப்பாற்று மணலில் நடந்த விருந்துக்கு நான் செல்ல இயலவில்லை!// இப்போ மாதிரி அப்போவும் அந்த ஆத்துல ஸ்பெஷல் விருந்து தானா?//
  அப்போது சின்னப் பையன்தான்! விருந்தில் சோறு வகைகள் (புளி,தேங்காய் etc .,)மட்டுமே பரிமாறப் பட்டதாக அறிந்தேன்!அது ஒழுக்கமான காலம் ஐயா!
  நன்றி செங்கோவி!

  பதிலளிநீக்கு
 39. குணசேகரன்... கூறியது...

  //அப்புறம் என்ன ..அனுபவம் இருக்கு...அரசியல்ல இறங்கிடுங்க..//
  முன்பே செய்திருக்க வேண்டும்!
  நன்றி குணசேகரன்!

  பதிலளிநீக்கு
 40. Indu கூறியது...

  //If you had continued in the same path, you would be ruling TN today! ?//
  what a pleasing thought!
  thank you indu!

  பதிலளிநீக்கு
 41. நிரூபன் கூறியது...

  //சாத்தூரின் எல்லா வீதிகளிலும் நான் அறியப்பட்ட ஒரு முகமானேன்!

  “ஹெட் மாஸ்டர் பேரனைப் பாரு எப்படிப் பேசுது” என்று எல்லோரும் வியந்தனர்!//

  // சைட் கப்பிலை சாதனை பண்ணியிருக்கிறீங்க சகோ.//
  சாதனை?!!
  நன்றி நிரூபன்!

  பதிலளிநீக்கு
 42. நிரூபன் கூறியது...

  // மறக்க முடியாத வெற்றி ஊர்வலத்தை எங்களோடு பகிர்ந்திருக்கிறீர்கள். நன்றிகள் சகோ//
  உண்மையில் மறக்கவே முடியாத நிகழ்வுதான்!மீண்டும் நன்றி!

  பதிலளிநீக்கு
 43. சில நினைவுகள் நெஞ்சம் மறப்பதில்லை.

  பதிலளிநீக்கு
 44. FOOD சொன்னது…

  // சில நினைவுகள் நெஞ்சம் மறப்பதில்லை.//
  எப்படி மறக்கும்?
  நன்றி,சங்கரலிங்கம்!

  பதிலளிநீக்கு
 45. கேப்டன் மாதிரி மிகவும் புள்ளிவிவரமாய் எழுதுகிறீர்களே. ஆச்சர்யம்தான். உங்கள் ஆசைப்படி அம்மா வந்துவிட்டார்களே. இனி மகிழ்ச்சி தானே.

  பதிலளிநீக்கு
 46. கே. ஆர்.விஜயன் கூறியது...

  //கேப்டன் மாதிரி மிகவும் புள்ளிவிவரமாய் எழுதுகிறீர்களே. ஆச்சர்யம்தான். உங்கள் ஆசைப்படி அம்மா வந்துவிட்டார்களே. இனி மகிழ்ச்சி தானே.//
  எதிர்பார்ப்பெல்லாம் பூர்த்தியானால், அதிக மகிழ்ச்சி!
  நன்றி விஜயன்!

  பதிலளிநீக்கு
 47. உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி!

  பதிலளிநீக்கு
 48. ஷர்புதீன் கூறியது...

  //உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி!//
  தோற்றத்துக்கு பாஸ் மார்க் கொடுத்து விட்டீர்கள்!நன்றி!

  பதிலளிநீக்கு