தொடரும் தோழர்கள்

புதன், மே 25, 2011

18 + தகவல்கள்!

1) பிறப்பிலிருந்து நமது கண்கள் ஒரே அளவில்தான் இருக்கின்றன!ஆனால் காதுகளும்
மூக்கும் வளர்கின்றன!

2) பூனையின் ஒவ்வொரு காதிலும் 32 தசைகள் உள்ளன!

3) தங்க மீனுக்கு ஞாபக சக்தி அளவு மூன்று நொடிகளே!

4) மீன்களில் சுறா மட்டுமே இரண்டு கண்களையும் சிமிட்டக் கூடியது!

5) நத்தையால் மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ந்து உறங்க முடியும்!

6) நெருப்புக் கோழியின் கண் அதன் மூளையை விட அளவில் பெரியது!

7) 1865 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் ஒரு பௌர்ணமி கூட வரவில்லை!

8) கத்தரிக் கோலைக் கண்டு பிடித்தவர் லியனார்டோ டி வின்சி!

9) வேர்க் கடலை டைனமைட் செய்ய உபயோகப் படும் பொருள்களில் ஒன்று!

10) 1932 ஆண்டு நயகாரா நீர் வீழ்ச்சி உறைந்து போய் விட்டது;அந்த அளவு குளிர்!

11) நயகாரா நீர் வீழ்ச்சியைக் கண்டு பிடித்தவர் லூயி ஹென்னெபின்.

12) வாகுவம் க்ளீனரைக் கண்டு பிடித்தவர் ஹ்யூபெர்ட் பூத்


13) ரப்பர் பேண்டுகளை குளிர் பதனப் பெட்டியில் வைத்தால்,அதிக நாள் பயன்படும்!

14) குழந்தைகள் முழங்கால் மூட்டுக் கவசம் இன்றிப் பிறக்கின்றன.2-6 வயதுக்குள்
தான் அது தோன்றுகிறது.

15) பெண்கள் ,ஆண்கள விட இரண்டு மடங்கு கண் சிமிட்டுகிறார்கள்!

16) ஆஸ்திரேலியாவைக் கண்டு பிடித்தவர் ஜேம்ஸ் குக்.

17) எறும்புகள் தூங்குவதில்லை.

18) மரங்கொத்தி விநாடிக்கு இருபது முறை கொத்தும்.

19) கரப்பு தலையின்றி ஒன்பது நாள் வரை உயிர் வாழும்.

மொத்தம் 19 தகவல்கள்--அதாவது 18+1 !!

50 கருத்துகள்:

 1. //எறும்புகள் தூங்குவதில்லை.//

  அதனால்தான், சுறுசுறுப்புக்கு எறும்பை உதாரணம் சொல்கிறார்களோ?

  நல்ல பல தகவல்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 2. தலைபபை கொண்டு என்ன ஒரு விளையாட்டு..

  இருந்தாலும் துணுக்கு தகவல்கள் அருமை...

  பதிலளிநீக்கு
 3. இன்று பல தகவல்களோ!!
  நன்றி பல!!!

  பதிலளிநீக்கு
 4. 15) பெண்கள் ,ஆண்கள விட இரண்டு மடங்கு கண் சிமிட்டுகிறார்கள்!//

  ஓஹோ இப்பிடியும் ஒரு விஷயம் இருக்கா....??/

  பதிலளிநீக்கு
 5. கரப்பு தலையில்லாமல் ஒன்பது நாட்கள் உயிர் வாழும்...

  அட அப்படியா... நிறைய பேர் தலைக்குள்ளே ஒண்ணும் இல்லாமல் ரொம்ப நாட்கள் வாழறாங்களே....

  ஆனாலும் 18+ தகவல்கள் ரொம்ப நல்லா இருக்கு....

  பதிலளிநீக்கு
 6. என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை .....

  பதிலளிநீக்கு
 7. எல்லாமே நல்ல தகவல்கள். நீங்களும் 18+ பதிவர் ஆகிட்டீங்க வாழ்த்துக்கள். :)

  பதிலளிநீக்கு
 8. நல்லாத்தான் இருக்கு. தாத்தாக்கள் 18 + போட்டா பின்ன எப்படி இருக்கும்? அதனால்தான் நான் 18 + போடுவதே இல்லை.

  பதிலளிநீக்கு
 9. அமைதி அப்பா சொன்னது…

  //எறும்புகள் தூங்குவதில்லை.//

  //அதனால்தான், சுறுசுறுப்புக்கு எறும்பை உதாரணம் சொல்கிறார்களோ?//
  இருக்கலாம்!

  நல்ல பல தகவல்கள். நன்றி.
  நன்றி அ.அ!

  பதிலளிநீக்கு
 10. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  //ஐயா தாங்களுமா..
  முடியவில்லை...//
  சும்மா ஒரு முறை!
  நன்றி சௌந்தர்!

  பதிலளிநீக்கு
 11. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  // தலைபபை கொண்டு என்ன ஒரு விளையாட்டு..

  இருந்தாலும் துணுக்கு தகவல்கள் அருமை...//
  நன்றி!

  பதிலளிநீக்கு
 12. வே.நடனசபாபதி கூறியது...

  //இன்று பல தகவல்களோ!!
  நன்றி பல!!!//

  நன்றி சபாபதி அவர்களே!

  பதிலளிநீக்கு
 13. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  15) பெண்கள் ,ஆண்கள விட இரண்டு மடங்கு கண் சிமிட்டுகிறார்கள்!//

  //ஓஹோ இப்பிடியும் ஒரு விஷயம் இருக்கா....??///
  அப்படித்தான் சொல்கிறார்கள்!

  பதிலளிநீக்கு
 14. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  // தகவல் எல்லாம் சூப்பர் தல...!!!//

  நன்றி மனோ!

  பதிலளிநீக்கு
 15. வெங்கட் நாகராஜ் கூறியது...

  கரப்பு தலையில்லாமல் ஒன்பது நாட்கள் உயிர் வாழும்...

  //அட அப்படியா... நிறைய பேர் தலைக்குள்ளே ஒண்ணும் இல்லாமல் ரொம்ப நாட்கள் வாழறாங்களே....//
  சூப்பர்!

  //ஆனாலும் 18+ தகவல்கள் ரொம்ப நல்லா இருக்கு....//
  நன்றி வெங்கட்!

  பதிலளிநீக்கு
 16. koodal bala கூறியது...

  //என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை .....//
  என்னிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்!
  நன்றி கூடல் பாலா!

  பதிலளிநீக்கு
 17. FOOD கூறியது...

  // நீங்களுமா?//
  அடித்து ஒழுங்காக ஒரு சீரியஸ் பதிவு போட்டு விடுகிறேன்! பொறுத்தருள்க!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 18. பாலா கூறியது...

  // எல்லாமே நல்ல தகவல்கள். நீங்களும் 18+ பதிவர் ஆகிட்டீங்க வாழ்த்துக்கள். :)//
  :-) நன்றி பாலா!

  பதிலளிநீக்கு
 19. கக்கு - மாணிக்கம் கூறியது...

  // நல்லாத்தான் இருக்கு. தாத்தாக்கள் 18 + போட்டா பின்ன எப்படி இருக்கும்? அதனால்தான் நான் 18 + போடுவதே இல்லை.//
  சரி!நான்தான் தாத்தா! நீங்களுமா?
  நன்றி கக்கு!

  பதிலளிநீக்கு
 20. Chitra கூறியது...

  // :-)))//
  ஹா,ஹா,ஹா!
  நன்றி சித்ரா!

  பதிலளிநீக்கு
 21. இராஜராஜேஸ்வரி கூறியது...

  //அருமையான தகவல்கள். நன்றி//
  நன்றி இராஜராஜேஸ்வரி!

  பதிலளிநீக்கு
 22. ரியாஸ் அஹமது கூறியது...

  // 18+ நன்றி//
  நன்றி +1,ரியாஸ்!

  பதிலளிநீக்கு
 23. ஆஹா..அய்யாவும் நமக்கு ஈகுவலா இறங்கி அடிக்காரே!

  பதிலளிநீக்கு
 24. செங்கோவி சொன்னது…

  //ஆஹா..அய்யாவும் நமக்கு ஈகுவலா இறங்கி அடிக்காரே!//
  முடிந்த வரை ஆடிப் பார்க்கலாம்! முடியவில்லை என்றால் “retired hurt" ஆயிடலாம்!
  நன்றி செங்கோவி!

  பதிலளிநீக்கு
 25. தங்களின் நிறை அனுபவங்களுக்கு வேறுமாதிரியான பதிவுகளை எழுதலாமே. அந்தக் காலத்து நினைவுகளை-காங்கிரஸ் கட்சி வெற்றி ஊர்வலம்போனது பற்றி எழுதியிருந்தீர்களே அதெல்லாம் மிகவும் ரசிக்கும்படி இருந்தது.

  பதிலளிநீக்கு
 26. --மரங்கொத்தி விநாடிக்கு இருபது முறை கொத்தும்.

  விநாடியா நிமிடமா?

  பதிலளிநீக்கு
 27. பெயரில்லா26 மே, 2011 அன்று AM 12:46

  ///பெண்கள் ,ஆண்கள விட இரண்டு மடங்கு கண் சிமிட்டுகிறார்கள்!/// ஹிஹிஹி எல்லாம் கவிழ்க்க தான்,

  பதிலளிநீக்கு
 28. பெயரில்லா26 மே, 2011 அன்று AM 12:46

  பல தகவல்களை தந்துள்ளீர்கள் நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 29. அதிரடியான தலைப்போடு, அசத்தலான ஒரு பொது அறிவுத் தகவல் பகிர்வினைத் தந்திருக்கிறீர்கள்.

  உண்மையிலே 18+++++
  தகவல்கள் தான்.

  பதிலளிநீக்கு
 30. Amudhavan கூறியது...

  //தங்களின் நிறை அனுபவங்களுக்கு வேறுமாதிரியான பதிவுகளை எழுதலாமே. அந்தக் காலத்து நினைவுகளை-காங்கிரஸ் கட்சி வெற்றி ஊர்வலம்போனது பற்றி எழுதியிருந்தீர்களே அதெல்லாம் மிகவும் ரசிக்கும்படி இருந்தது.//
  என் நண்பர்கள் பலரது எண்ணமும் அதுவே!இது ஒரு மாறுதலுக்காக .அவ்வளவே.நன்றி அமுதவன்!

  பதிலளிநீக்கு
 31. குணசேகரன்... கூறியது...

  // 18+ meaning ???//
  18+1=19 தகவல்கள்
  நன்றி குணசேகரன்!

  பதிலளிநீக்கு
 32. arunrajamani கூறியது...

  --மரங்கொத்தி விநாடிக்கு இருபது முறை கொத்தும்.

  // விநாடியா நிமிடமா?//
  60 விநாடிக்கு 20 முறை என்பது too... slow இல்லை!
  நன்றி அருண்ராஜாமணி!

  பதிலளிநீக்கு
 33. கந்தசாமி. கூறியது...

  ///பெண்கள் ,ஆண்கள விட இரண்டு மடங்கு கண் சிமிட்டுகிறார்கள்!///
  //ஹிஹிஹி எல்லாம் கவிழ்க்க தான்,//

  ஹா ஹா ஹா!
  நன்றி கந்தசாமி!

  பதிலளிநீக்கு
 34. கந்தசாமி. கூறியது...

  //பல தகவல்களை தந்துள்ளீர்கள் நன்றி ஐயா...//
  மீண்டும் நன்றி!

  பதிலளிநீக்கு
 35. நிரூபன் கூறியது...

  //அதிரடியான தலைப்போடு, அசத்தலான ஒரு பொது அறிவுத் தகவல் பகிர்வினைத் தந்திருக்கிறீர்கள்.

  உண்மையிலே 18+++++
  தகவல்கள் தான்.//
  :-) நன்றி நிரூபன்!

  பதிலளிநீக்கு
 36. தகவல்கள் அருமை, நிறைய தெரிஞ்சுகிட்டேன் சார்.

  பதிலளிநீக்கு
 37. //60 விநாடிக்கு 20 முறை என்பது too... slow இல்லை!

  1 விநாடிக்கு 20 முறை என்பது too... fast இல்லை?!!
  நடை முறையில் உயிரினத்தால் சாத்தியமா? எந்திரத்தால் வேண்டுமானால் சாத்தியம் ஆகலாம்.

  பதிலளிநீக்கு
 38. ஜ.ரா.ரமேஷ் பாபு கூறியது...

  //தகவல்கள் அருமை, நிறைய தெரிஞ்சுகிட்டேன் சார்.//
  நன்றி ரமேஷ் பாபு!

  பதிலளிநீக்கு
 39. arunrajamani கூறியது...

  //60 விநாடிக்கு 20 முறை என்பது too... slow இல்லை!

  1 விநாடிக்கு 20 முறை என்பது too... fast இல்லை?!!
  //நடை முறையில் உயிரினத்தால் சாத்தியமா? எந்திரத்தால் வேண்டுமானால் சாத்தியம் ஆகலாம்.//

  விக்கி ஆன்ஸர்ஸில் தேடிப் பார்த்தேன்.விடை--about 20 times per second என்பதே .
  ஆர்வத்துக்கு நன்றி அருண்ராஜாமணி!

  பதிலளிநீக்கு
 40. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  //நீங்களுமா? ஹா ஹா ஹா//

  காலத்தின் கட்டாயம்?!ஹி ஹி ஹி!
  நன்றி சிபி!

  பதிலளிநீக்கு
 41. அப்பாதுரை கூறியது...

  // தலைப்பு நல்ல ரசனை.//
  ஹிட்டுக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது?!
  நன்றி அப்பாதுரை!

  பதிலளிநீக்கு
 42. ஐயா உங்க குசும்புக்கு ஒரு அளவே இல்லையா இப்படி பேர போட்டு எமாதிட்டிங்களே

  பதிலளிநீக்கு