தொடரும் தோழர்கள்

திங்கள், மே 30, 2011

தூண்டில் மீன்கள்

மீன்!
வலை வீசியும் பிடிக்கலாம்
இல்லை தூண்டில் போட்டும் பிடிக்கலாம்!

மொத்தமாய்ச் சிக்கும் மீன் வலை வீசினால்!
ஒற்றையாய்த் தான் கிடைக்கும் தூண்டிலில்!

மீன் கூட்டத்தில் வலைவீசி ஒரு வீச்சில்
வலை நிறைய அள்ளுகிறான் வலைஞன்!
தூண்டில் வீசி காத்திருக்கிறான் கொக்கு போல்
உறு மீன் வரவுக்காகத் தூண்டில்காரன்!

வலை மீன் செல்கிறது சந்தைக்கு ஏனெனில்
வலைஞனுக்கு அது தொழில்!
தூண்டில் மீன் செல்கிறது வீட்டு அடுப்புக்கு
இல்லையேல் மீண்டும் நீர் நிலைக்கு!
ஏனெனில் அவனுக்கு அது உணவு தேடல்
இன்றேல் பொழுதுபோக்கு.

வலை மீன் விரும்பி வந்து வலையில் விழுவதில்லை!
தூண்டில் மீன் கொக்கி இரைக்காய்த் தானே மாட்டுகிறது!

கடல் மீன்,ஆற்று மீன்,குளத்து மீன்,ஏரி மீன்
என்று எங்கெல்லாம் மீன்?

கடல் மீனைப் பிடிக்கத் தூண்டில் பயனில்லை
மற்ற மீனுக்கு வலையும் வீசலாம்!

வஞ்சிரம்,கொடுவா,வாளை,இறால் என்று
கொஞ்சமா மீன் வகைகள் நீர் நிலையில்!

எல்லா மீனும் உணவாகப் போவதில்லை!

கண்ணாடிப் பெட்டிக்குள் குறுக்கும் நெடுக்குமாய்
என்னாளும் நீந்தி ஓடும் சில மீன்கள்!
சுதந்திரத்தை இழந்த பின்னும் சுதந்திரமாய் இருப்பதாய்!

பெண்களின் கண்களுக்கு உவமையாய்ச் சொல்வர் மீனை
உண்மையில் உவமை சரி ஆனாலும் வேற்றுமை-
மீன் தூண்டிலில் மாட்டும்,
கண் தூண்டில் போடும்!


நட்சத்திரங்களை விண்மீன்கள் என்றுரைப்பர்.
வானப் பெருங்க்கடலில் நீந்துவதாலா?

பெண்ணின் கண்ணுக்கும் விண்மீனுக்கும் ஒப்பிடுவான் செகப்பிரியர்
ரோமியோ சொல்கிறான் ஜூலியட் கண்கள் பற்றி


"வானில் ஜொலிக்கும் இரு விண்மீன்களுக்கு வெறோதோ வேலையாம் ;
அவள் கண்களை தங்களுக்குப் பதிலாய் அங்கு வரச் சொல்கின்றன!
அவ்வாறு கண்கள் அங்கும்,விண்மீன்கள் அவள் முகத்திலும் இருந்தால்?
அவள் கன்னத்தின் ஒளியில் விண்மீன்கள் ஒளியற்றுப் போகும்,
பகலொளியில் விளக்கொளி பயனற்றுப்போவது போல்.
அவள் கண்களால் வான முழுவதும் ஒளி மயமாய்த் தகதகக்க
பறவைகள் குரலெழுப்பும் வானம் வெளுத்ததென்று!"

(ரோமியோவும் ஜூலியட்டும்)


எத்தனையோ சொல்லலாம் இத்தகைய மீன் பற்றி!
அத்தனைக்கும் இடமில்லை இனி நேரமுமில்லை/

ஏதேனும் சொல்வதற்குப் பாரதியே அடி தருவான்
“வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க
யாதானுஞ் சற்றே யிடமிருந்தாற் கூறீரோ? “

32 கருத்துகள்:

 1. வெறும் மீனை மட்டும் தான் சொன்னீங்களா? எனி உள் குத்து? #டவுட்டு

  பதிலளிநீக்கு
 2. //கண்ணாடிப் பெட்டிக்குள் குறுக்கும் நெடுக்குமாய்
  என்னாளும் நீந்தி ஓடும் சில மீன்கள்!
  சுதந்திரத்தை இழந்த பின்னும் சுதந்திரமாய் இருப்பதாய்!//

  ஆஹா எத்தனை உண்மை இந்த வரிகளில்...

  //பெண்களின் கண்களுக்கு உவமையாய்ச் சொல்வர் மீனை
  உண்மையில் உவமை சரி ஆனாலும் வேற்றுமை-
  மீன் தூண்டிலில் மாட்டும்,
  கண் தூண்டில் போடும்!//

  கவிதை நயமாய் வேற்றுமை... தூண்டில் போட்ட கண்களே மீன்கள் எனும்போது சிக்குவது எது?

  நல்ல பகிர்வு ஐயா.

  பதிலளிநீக்கு
 3. பெண்களின் கண்களுக்கு உவமையாய்ச் சொல்வர் மீனை
  உண்மையில் உவமை சரி ஆனாலும் வேற்றுமை-
  மீன் தூண்டிலில் மாட்டும்,
  கண் தூண்டில் போடும்!//

  ஐயா, இந்த வரிகளில் பின்னிட்டீங்க போங்க,

  மீன் பற்றிய பல விடயங்களை, மனித வாழ்க்கையோடு ஒப்பிட்டு அருமையான ஒரு வசன கவிதை மூலம் தந்துள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 4. மீன் ....தூண்டில்.........கண்.............தூண்டில் .......????

  பதிலளிநீக்கு
 5. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  // மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா..//
  தாமரை மலரில் தவழ்ந்திருக்கும் மீன்கள்!
  நன்றி சிபி!

  பதிலளிநீக்கு
 6. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  //வெறும் மீனை மட்டும் தான் சொன்னீங்களா? எனி உள் குத்து? #டவுட்டு//
  கடைசி வரி என்ன சொல்கிறது? மறைபொருள் உண்டென்றால் உண்டு,இல்லையென்றால் இல்லை!அவரவர் புரிதல்!

  பதிலளிநீக்கு
 7. வெங்கட் நாகராஜ் கூறியது...
  //
  கவிதை நயமாய் வேற்றுமை... தூண்டில் போட்ட கண்களே மீன்கள் எனும்போது சிக்குவது எது?//
  சூப்பர் வெங்கட்!சிக்குவதும் அதுவே,சிக்கவைப்பதும் அதுவே!
  /கண்ணாடிப் பெட்டிக்குள் குறுக்கும் நெடுக்குமாய்
  என்னாளும் நீந்தி ஓடும் சில மீன்கள்!
  சுதந்திரத்தை இழந்த பின்னும் சுதந்திரமாய் இருப்பதாய்!//

  //ஆஹா எத்தனை உண்மை இந்த வரிகளில்...
  நல்ல பகிர்வு ஐயா.//
  நன்றி வெங்கட்!

  பதிலளிநீக்கு
 8. நிரூபன் கூறியது...

  பெண்களின் கண்களுக்கு உவமையாய்ச் சொல்வர் மீனை
  உண்மையில் உவமை சரி ஆனாலும் வேற்றுமை-
  மீன் தூண்டிலில் மாட்டும்,
  கண் தூண்டில் போடும்!//

  //ஐயா, இந்த வரிகளில் பின்னிட்டீங்க போங்க,//
  நன்றி,நிரூபன்!

  //மீன் பற்றிய பல விடயங்களை, மனித வாழ்க்கையோடு ஒப்பிட்டு அருமையான ஒரு வசன கவிதை மூலம் தந்துள்ளீர்கள்.//
  அப்படியா?!:-);நன்றி!

  பதிலளிநீக்கு
 9. koodal bala கூறியது...

  //மீன் ....தூண்டில்.........கண்.............தூண்டில் .......????//
  தூண்டில்,வலை எல்லாம் !
  நன்றி கூடல்பாலா!

  பதிலளிநீக்கு
 10. கூடவே மீன் வறுவல் செய்வது எப்படி என்று ஒரு விளக்கமும் போட்டிருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும். சரி, அடுத்த பதிவில் மீன் வறுவல்?

  ஏதாவது வந்து மேலே விழும் முன்னே நா எஸ்கேப்..................

  பதிலளிநீக்கு
 11. கக்கு - மாணிக்கம் கூறியது...

  // கூடவே மீன் வறுவல் செய்வது எப்படி என்று ஒரு விளக்கமும் போட்டிருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும். சரி, அடுத்த பதிவில் மீன் வறுவல்?

  ஏதாவது வந்து மேலே விழும் முன்னே நா எஸ்கேப்...............//
  மீன் வறுவல்?வாழைக்காய் வறுவல் பற்றி எழுதலாம்!கடல் வாழை வறுவல் பற்றி கக்கு எழுதட்டும்.
  நன்றி!

  பதிலளிநீக்கு
 12. தல சிபி உள்குத்துன்னு சொல்றானே உண்மையா..??

  பதிலளிநீக்கு
 13. பெயரில்லா30 மே, 2011 அன்று PM 12:44

  ///பெண்களின் கண்களுக்கு உவமையாய்ச் சொல்வர் மீனை
  உண்மையில் உவமை சரி ஆனாலும் வேற்றுமை-
  மீன் தூண்டிலில் மாட்டும்,
  கண் தூண்டில் போடும்!// அசத்திரிங்க ஐயா ...

  பதிலளிநீக்கு
 14. தூண்டில் போடும் மீன்கள் அழகு.

  பதிலளிநீக்கு
 15. //மீன் தூண்டிலில் மாட்டும்,
  கண் தூண்டில் போடும்!//
  அய்யா, அனுபவங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன!

  பதிலளிநீக்கு
 16. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //"ஜாமீன்" கிடைக்குமா இன்று...???//
  ஜாமீன்?நோ மீன்!

  பதிலளிநீக்கு
 17. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  // தல சிபி உள்குத்துன்னு சொல்றானே உண்மையா..??//
  நிரூபன் என்ன சொல்றாரு?
  திரும்பத்திரும்பப் படியுங்கள்.புதுப் புது அர்த்தங்கள் புரியலாம்!

  பதிலளிநீக்கு
 18. கந்தசாமி. கூறியது...

  // அசத்திரிங்க ஐயா ...//
  நன்றி கந்தசாமி!

  பதிலளிநீக்கு
 19. இராஜராஜேஸ்வரி கூறியது...

  //தூண்டில் போடும் மீன்கள் அழகு.//
  நன்றி இராஜராஜேஸ்வரி!

  பதிலளிநீக்கு
 20. FOOD கூறியது...

  //மீன் தூண்டிலில் மாட்டும்,
  கண் தூண்டில் போடும்!//
  //அய்யா, அனுபவங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன!//
  தூண்டலில் மாட்டாதவர் யார்?
  நன்றி சங்கரலிங்கம்!

  பதிலளிநீக்கு
 21. இது வெறும் மீன் பற்றிய கவிதையாகத் தெரியவில்லையே.

  பதிலளிநீக்கு
 22. ஜாமீனில் வெளி வராத மீன்கள் பற்றி எழுதவில்லையே?

  பதிலளிநீக்கு
 23. செங்கோவி சொன்னது…

  // இது வெறும் மீன் பற்றிய கவிதையாகத் தெரியவில்லையே.//
  வேறு எப்படித் தெரிகிறது?!
  புதுப் புது அர்த்தங்கள் புரியட்டும்!
  நன்றி செங்கோவி!

  பதிலளிநீக்கு
 24. ! சிவகுமார் ! கூறியது...

  //ஜாமீனில் வெளி வராத மீன்கள் பற்றி எழுதவில்லையே?//
  ஜாமீன்?யூ மீன்?தொட்டி மீன்!
  நன்றி சிவகுமார்!

  பதிலளிநீக்கு
 25. அமர்க்களம் ... கவிதை பாணியில் மீனையும் கண்ணையும் பற்றிய கருத்துகள் .. வளமான கற்பனை . சொற்களை கையாளுவதில் ஒரு தனித்தன்மை ... சகலகலா வல்லவராக உள்ளீர்களே ! வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 26. Vasu கூறியது...

  //அமர்க்களம் ... கவிதை பாணியில் மீனையும் கண்ணையும் பற்றிய கருத்துகள் .. வளமான கற்பனை . சொற்களை கையாளுவதில் ஒரு தனித்தன்மை ... சகலகலா வல்லவராக உள்ளீர்களே !//
  jack of all trades?!
  ரசித்துப் படித்துப் பின் கருத்து உரைத்ததற்கு நன்றி வாசு!

  பதிலளிநீக்கு
 27. எல்லாரும் இந்நாட்டு டின்னர்.

  மீனைப் பற்றி எப்பவோ எழுதியது நினைவுக்கு வந்தது.

  மீன் பற்றி எத்தனை சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள்!

  பதிலளிநீக்கு
 28. அப்பாதுரை கூறியது
  //எல்லாரும் இந்நாட்டு டின்னர்.//
  :-)

  //மீனைப் பற்றி எப்பவோ எழுதியது நினைவுக்கு வந்தது.

  மீன் பற்றி எத்தனை சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள்!//
  நன்றி அப்பாதுரை!

  பதிலளிநீக்கு
 29. நீரில் வாழும் மீனில் ஆரம்பித்து, பின் தொட்டி மீனுக்கு வந்து, பிறகு விண் மீனுக்குத்தாவி, அதை காதலியின் கண் மீனோடு ஒப்பிட்ட கவிஞர் செகப்பிரியன் பற்றி கூறி பின் நம்மூர் தேசியக்கவி பாரதியுடன் முடித்த உங்கள் திறமையை பாராட்ட வார்த்தைகளை தேடுகிறேன்!

  பதிலளிநீக்கு