தொடரும் தோழர்கள்

திங்கள், மே 23, 2011

கோபம் என்னவெல்லாம் செய்யும்?-ஒரு குட்டிக் கதை!

சென்ற பதிவில் கோபம் பற்றி எழுதியிருந்தேன்.

கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் பற்றிய ஒரு ஜாலியான குட்டிக் கதை, நான் பள்ளி நாட்களில் கேட்டது , என் நினைவுக்கு வருகிறது.

ஓர் ஊரில் ஒரு கணவன் மனைவி இருந்தனர்.வறுமை நிறைந்த வாழ்க்கை .

ஒரு நாள் அக்கணவன் அரசரமரத்தடிப் பிள்ளையார் முன் அமர்ந்து தன் நிலை குறித்துப் புலம்பிக்கொண்டிருந்தான்.

அப்போது அங்கு ஒரு சாது வந்தார்.அவனைப்பார்த்து என்ன விஷயம் என்று கேட்க அவன் தன் வறுமை நிலையைச் சொன்னான்.

சாது அவனிடம் மூன்று தேங்காய்கள் கொடுத்துச் சொன்னார்”.உனக்கு வேண்டியதைக் கேட்டு ஒரு காயை உடைத்தால்,அது உடனே கிடைக்கும். கவனமாகப் பயன் படுத்து ” என்று.

அவன் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்தான்.மனைவியிடம் தேங்காய்களைக் காட்டி செய்தியைச் சொன்னான். அவனுக்கு ஒரு பெரிய மாளிகை வேண்டும் என்று ஆசை. எனவே அதுவே முதலில் கேட்கலாம் எனச் சொன்னான்.

மனைவிக்கு நகை வேண்டுமென்று ஆசை;எனவே அதுவே முதலில் கேட்க வேண்டும் என்று சொன்னாள்.

இருவருக்கும் விவாதம் வலுத்தது.சண்டை உச்சக்கட்டத்தை அடைந்தபோது அவன் அதிகக் கோபமடைந்து,கையில் இருந்த தேங்காயைத் தூக்கிப் போட்டு உடைத்துக் கத்தினான் ”மயிர்தான் கிடைக்கும் போடீ” என்று.

உடனே எங்கு பார்த்தாலும் முடி;அவர்கள் உடலெல்லாம் முடி.வீடு முழுவதும் முடி.என்ன செய்வது.ஒரே வழிதான்.

இன்னொரு தேங்காயை உடைத்துக் கொண்டே சொன்னான்” முடியெல்லாம் போகட்டும்”

உடனே எல்லா முடியும் போய்விட்டது.இருவர் தலையிலும் இருந்த முடியும் போய் வழுக்கைத்தலை ஆகி விட்டது. மீண்டும் பிரச்சினைதான். இப்போது என்ன செய்வது?

மூன்றாவது தேங்காயை உடைத்துக் கொண்டே சொன்னான்”முன்பு இருந்த முடியெல்லாம் வந்து, பின் வந்த முடியெல்லாம் போகட்டும் “ என்று.

நிலைமை முன்பு போலவே ஆயிற்று.

அவர்கள் வறியவர்களாகவே இருந்தனர்.

மூன்று தேங்காய் உடைத்தும் எந்த மாற்றமும் இல்லை.

என்ன காரணம்?

இக்கதை சொல்லும் நீதிகள் என்ன?

உங்கள் கருத்துக்களுக்குக் காத்திருக்கிறேன்.

ஒழுங்காகக் கருத்துச் சொல்லிவிட்டுப் போங்கள்(ஓட்டும்தான்).

இல்லையேல் உங்களுக்காக ஒரு தேங்காய் உடைத்து விடுவேன்,ஜாக்கிரதை!!

42 கருத்துகள்:

 1. இன்று குட்டி கதையா? படிச்சிட்டு வாரேன்.

  பதிலளிநீக்கு
 2. தனக்கு என்ன வேண்டும், என்ன வேண்டாம் என்பதில் மிக தெளிவான புத்தி ஆணுக்கும் பெண்ணுக்கும் வேண்டும். இல்லையேல் எவ்வளவு கிடைத்தும் ஒன்றும் பலனில்லாமல் போகும்.

  பதிலளிநீக்கு
 3. ஹா..ஹா..நல்ல கருத்துள்ள ஜாலியான கதை..//ஒழுங்காகக் கருத்துச் சொல்லிவிட்டுப் போங்கள்(ஓட்டும்தான்).// ஆஹா, ஐயாவும் இப்படி மிரட்டுனா எப்புடி?

  பதிலளிநீக்கு
 4. //ஒழுங்காகக் கருத்துச் சொல்லிவிட்டுப் போங்கள்(ஓட்டும்தான்).//
  தமிழ்மணம், இண்ட்லி வேலை செய்யல.

  பதிலளிநீக்கு
 5. நல்ல கருத்தை நயமா சொல்லிருக்கீங்க.

  பதிலளிநீக்கு
 6. நல்ல பகிர்வு.

  இருப்பதைக்கொண்டு நலமுடன் வாழவேண்டும்!

  இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படக்கூடாது!

  மனம்போல் வாழ்வு!

  உடம்பெல்லாம் எண்ணையைத் தேய்ச்சிக்கிட்டு மண்ணுல உருண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்!!

  இப்படி இன்னும் இன்னும் சொல்கிக்கொண்டே போகலாம்.

  பதிலளிநீக்கு
 7. வாழ்கையில் வெற்றி பெற வேண்டும் என விரும்புபவர்கள் அவர்களது தேவை எது என்பதை தெளிவாக உணர்ந்து விட்டாலே வெற்றி தானாக வரும் என்ற கருத்தை அற்புதமாக விளக்கியுள்ளீர்கள் ...

  பதிலளிநீக்கு
 8. FOOD கூறியது...

  //இன்று குட்டி கதையா? படிச்சிட்டு வாரேன்.//
  வாங்க,வாங்க!

  பதிலளிநீக்கு
 9. கக்கு - மாணிக்கம் கூறியது...

  // தனக்கு என்ன வேண்டும், என்ன வேண்டாம் என்பதில் மிக தெளிவான புத்தி ஆணுக்கும் பெண்ணுக்கும் வேண்டும். இல்லையேல் எவ்வளவு கிடைத்தும் ஒன்றும் பலனில்லாமல் போகும்.//
  சரியாகச் சொன்னீர்கள்.
  நன்றி கக்கு!

  பதிலளிநீக்கு
 10. ஹா..ஹா..நல்ல கருத்துள்ள ஜாலியான கதை..//
  நன்றி செங்கோவி!
  ஒழுங்காகக் கருத்துச் சொல்லிவிட்டுப் போங்கள்(ஓட்டும்தான்).// ஆஹா, ஐயாவும் இப்படி மிரட்டுனா எப்புடி?
  சும்மா ஜாலிதான்!

  பதிலளிநீக்கு
 11. FOOD கூறியது...

  //ஒழுங்காகக் கருத்துச் சொல்லிவிட்டுப் போங்கள்(ஓட்டும்தான்).//
  //தமிழ்மணம், இண்ட்லி வேலை செய்யல.//
  என் நேரம்!

  பதிலளிநீக்கு
 12. FOOD கூறியது...

  //நல்ல கருத்தை நயமா சொல்லிருக்கீங்க.//
  நன்றி சங்கரலிங்கம்!

  பதிலளிநீக்கு
 13. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

  //நல்ல பகிர்வு.

  இருப்பதைக்கொண்டு நலமுடன் வாழவேண்டும்!

  இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படக்கூடாது!

  மனம்போல் வாழ்வு!

  உடம்பெல்லாம் எண்ணையைத் தேய்ச்சிக்கிட்டு மண்ணுல உருண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்!!

  இப்படி இன்னும் இன்னும் சொல்கிக்கொண்டே போகலாம்.//
  எத்தனை சொல்லிவிட்டீர்கள்!
  நன்றி குணசீலன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 14. koodal bala கூறியது...

  //வாழ்கையில் வெற்றி பெற வேண்டும் என விரும்புபவர்கள் அவர்களது தேவை எது என்பதை தெளிவாக உணர்ந்து விட்டாலே வெற்றி தானாக வரும் என்ற கருத்தை அற்புதமாக விளக்கியுள்ளீர்கள் ...//
  வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி கூடல் பாலா!

  பதிலளிநீக்கு
 15. கூரையை பிச்சிக்கிட்டு யாரவது வந்து நம்ம கஷ்டத்தை தீர்க்க மாட்டாங்களான்னு ஏங்கிகிட்டு இருந்தா, புத்தி வேலை செய்யாது ..

  நம்ம நிலைமைக்கு நாமே காரணம்ன்னு நினைத்து உழைத்தால் மட்டுமே மாறும் நிலை ..

  பதிலளிநீக்கு
 16. கூரையை பிச்சிக்கிட்டு யாரவது வந்து நம்ம கஷ்டத்தை தீர்க்க மாட்டாங்களான்னு ஏங்கிகிட்டு இருந்தா, புத்தி வேலை செய்யாது ..
  நம்ம நிலைமைக்கு நாமே காரணம்ன்னு நினைத்து உழைத்தால் மட்டுமே மாறும் நிலை

  பதிலளிநீக்கு
 17. ஒழுங்காகக் கருத்துச் சொல்லிவிட்டுப் போங்கள்(ஓட்டும்தான்).


  ..... தமிழ் மணம் ப்லாக் ஓபன் ஆக....வோட்டு போட மக்கர் பண்ணுதே... ம்ம்ம்....
  இன்ட்லியில் போட்டாச்சு....

  பதிலளிநீக்கு
 18. ரியாஸ் அஹமது சொன்னது…

  //கூரையை பிச்சிக்கிட்டு யாரவது வந்து நம்ம கஷ்டத்தை தீர்க்க மாட்டாங்களான்னு ஏங்கிகிட்டு இருந்தா, புத்தி வேலை செய்யாது ..

  நம்ம நிலைமைக்கு நாமே காரணம்ன்னு நினைத்து உழைத்தால் மட்டுமே மாறும் நிலை ..//
  அதே அதே!
  நன்றி ரியாஸ் அஹமது!

  பதிலளிநீக்கு
 19. Chitra கூறியது...

  ஒழுங்காகக் கருத்துச் சொல்லிவிட்டுப் போங்கள்(ஓட்டும்தான்).


  // ..... தமிழ் மணம் ப்லாக் ஓபன் ஆக....வோட்டு போட மக்கர் பண்ணுதே... ம்ம்ம்....
  இன்ட்லியில் போட்டாச்சு....//
  போனாப் போகுது, விட்டுத் தள்ளுங்க!
  நன்றி சித்ரா!

  பதிலளிநீக்கு
 20. ஹி,ஹி,ஹி.......... நான் வோட்டு போட்டேன் ...... பேசாம முதல் தேங்காய உடைக்கும் போது இதே மாதிரி இன்னும் பத்து தேங்காய் வேணுமின்னு கேட்டு உடைச்சா என்ன ஆகும் ? # டவுட்டு

  பதிலளிநீக்கு
 21. கலைஞரை மறைமுகமாக கிண்டல் செய்துவிட்டீர்கள்!!

  பதிலளிநீக்கு
 22. மங்குனி அமைச்சர் கூறியது...

  //ஹி,ஹி,ஹி.......... நான் வோட்டு போட்டேன் ...... பேசாம முதல் தேங்காய உடைக்கும் போது இதே மாதிரி இன்னும் பத்து தேங்காய் வேணுமின்னு கேட்டு உடைச்சா என்ன ஆகும் ? # டவுட்டு//
  இந்த மாதிரியெல்லாம் யோசனை சொல்லத்தான் ’அமைச்சர்’ வேணுங்கிறது!
  நன்றி-வருகைக்கும், கருத்துக்கும்---ஓட்டுக்கும்!

  பதிலளிநீக்கு
 23. ஹா ஹா ஹா ஹா செம செம சூப்பர் தல...

  பதிலளிநீக்கு
 24. தல மிரட்ட ஆரம்பிச்சிட்டாரு, எலேய் சிபி, நீ ஜாக்கிரதையா போயி ஒளிஞ்சிக்கோ....

  பதிலளிநீக்கு
 25. நானும் கேள்விபட்ட கதைதான் ஹே ஹே ஹே...

  பதிலளிநீக்கு
 26. கோபம வந்தால் நஷ்டம் யாருக்கு நமக்குதான் இல்லையா...?

  பதிலளிநீக்கு
 27. அருமையான கதை..
  கருத்துள்ள கதை..
  பகிர்வுக்கு நன்றி..
  கருத்து சொல்லிட்டோங்கோ..

  பதிலளிநீக்கு
 28. ! சிவகுமார் ! கூறியது...

  //கலைஞரை மறைமுகமாக கிண்டல் செய்துவிட்டீர்கள்!!//
  எப்படி??!!
  நன்றி சிவகுமார்!

  பதிலளிநீக்கு
 29. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //ஹா ஹா ஹா ஹா செம செம சூப்பர் தல...//
  நன்றி மனோ!

  பதிலளிநீக்கு
 30. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //தல மிரட்ட ஆரம்பிச்சிட்டாரு, எலேய் சிபி, நீ ஜாக்கிரதையா போயி ஒளிஞ்சிக்கோ....//
  அவர் ஏன் ஒளியணும்? வருவார், கருத்துச் சொல்வார்,ஓட்டும் போடுவாரில்ல!

  பதிலளிநீக்கு
 31. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //நானும் கேள்விபட்ட கதைதான் ஹே ஹே ஹே...//
  நான் கேட்டு 50 வருசம் ஆச்சுன்னு நினைக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 32. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //கோபம வந்தால் நஷ்டம் யாருக்கு நமக்குதான் இல்லையா...?//
  உண்மை,உண்மை,உண்மை!(தேவையற்ற கோபம்)

  பதிலளிநீக்கு
 33. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  //அருமையான கதை..
  கருத்துள்ள கதை..
  பகிர்வுக்கு நன்றி..
  கருத்து சொல்லிட்டோங்கோ..//
  நன்றிங்கோ!

  பதிலளிநீக்கு
 34. கோபத்தினால் கிடைத்த பலன் பூஜ்யம்... அழகாய் சொல்லியது இந்த கதை. பகிர்வுக்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 35. வெங்கட் நாகராஜ் கூறியது...

  //கோபத்தினால் கிடைத்த பலன் பூஜ்யம்... அழகாய் சொல்லியது இந்த கதை. பகிர்வுக்கு நன்றி ஐயா.//

  நன்றி வெங்கட்!

  பதிலளிநீக்கு
 36. இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், உள்ளதை வைத்து சந்தோசமாக வாழ வேண்டும் என்பதே!

  பதிலளிநீக்கு
 37. Selvaraj கூறியது...

  // இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், உள்ளதை வைத்து சந்தோசமாக வாழ வேண்டும் என்பதே!//
  உண்மை!ஆனால் எத்தனை பேர் அப்படி இருக்கிறார்கள்?
  நன்றி செல்வராஜ் அவர்களே!

  பதிலளிநீக்கு
 38. ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.’ என்ற பழமொழியை ஒரு குட்டிக் கதை மூலம் புரிய வைத்துள்ளீர்கள். .

  பதிலளிநீக்கு
 39. வே.நடனசபாபதி கூறியது...

  //‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.’ என்ற பழமொழியை ஒரு குட்டிக் கதை மூலம் புரிய வைத்துள்ளீர்கள். .//
  நன்றி சபாபதி அவர்களே!

  பதிலளிநீக்கு
 40. இருக்கிறதை வைத்துக் கொண்டு வாழ வேண்டும், பறப்பதற்கு ஆசைப் படக் கூடாது என்பதனை உங்கள் கதை மூலம் புரிய வைத்துள்ளீர்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
 41. தேங்காய்க் கதை நிறைய கேட்டிருக்கிறேன். ஒரு சுவாரசியமான அடல்ட்ஸ் ஒன்லி கதை உள்பட. சுவாமி பித்தானந்தாவிடம் சொல்லி அனுப்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 42. அப்பாதுரை கூறியது...

  //தேங்காய்க் கதை நிறைய கேட்டிருக்கிறேன். ஒரு சுவாரசியமான அடல்ட்ஸ் ஒன்லி கதை உள்பட. சுவாமி பித்தானந்தாவிடம் சொல்லி அனுப்புகிறேன்.//
  ஸ்வாமியை அடுத்தமுறை பார்க்கும் போது கேட்டுத் தெரிந்துகொள்கிறேன்!
  நன்றி அப்பாதுரை!

  பதிலளிநீக்கு