தொடரும் தோழர்கள்

வியாழன், மார்ச் 24, 2011

முக்கிய செய்தி!-மயிலையில் ஆன்மீக வேட்பாளர்!

காஞ்சி சங்கராசாரியார் ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் ” தமிழ்நாடு தேசிய ஆன்மீக மக்கள் கட்சி” என்றொரு புதிய கட்சியைத்துவக்கியிருப்பது அனைவரும் அறிந்ததே.அது பற்றிய பத்திரிகைச் செய்தியை நான் இங்கே வெட்டி ஒட்டப் போவதில்லை!

ஆனால் நான் சொல்லப் போவது அதற்கு சம்பந்தமுடைய ஒரு முக்கிய செய்தி.!

புதிய கட்சி தொடங்கப் பட்டதைப் பற்றி ஆன்மீகச் செல்வரான சென்னை பித்தனின் கருத்தை அறிய ‘டுபாகூர் டைம்ஸ்’ நிருபரான ஹசாரி அவரைக் காணச் சென்றார்.

இது குறித்து சென்னை பித்தன் கொடுத்த பேட்டியிலிருந்து--------

“இன்று நாடு இருக்கும் நிலையில் ஆன்மீகத்துக்கு என்று ஒரு தனி அமைப்பு அவசியம்தான்.எனவே இதை நான் வரவேற்கிறேன்.உண்மையான ஆன்மீகச் சேவையாற்றும் ஒரு அமைப்பாக இது விளங்க வேண்டும்.நாட்டில் போலி ஆன்மீகவாதிகள் மிகுந்த விட்ட நிலையில்,உண்மையான ஆன்மீகவாதிகள் யாரென்று பார்த்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.நீங்கள் கேட்டீர்கள்,ஆன்மீகவாதி தேர்தலில் போட்டியிடலாமா என்று.நிச்சயமாகச் செய்ய வேண்டும் என்று நான் சொல்வேன். ”

”’இந்த நேரத்தில் பல ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவில் வருகிறது.
அப்போது நான் மதுரையில் பணியாற்றி வந்தேன்.தேர்தல் சமயம்.சிறந்த ஆன்மீகச் சொற்பொழிவாளரும் சிலகாலம் என்னுடன் தனிப் பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றியவருமான புலவர் அவர்களும் சில நண்பர்களும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவர் சொன்னார்”ஆன்மீகத்துக்காக ஒரு தொகுதி ஒதுக்கித்தர வேண்டும் என்று முதல்வரைக் கேட்கலாம்” என்று.அனைவரும் ஆமோதித்தோம்.”

”இப்போது,தேர்தல் நேரத்தில்,புதிய கட்சி தொடங்கப் பட்டிருப்பது ஒரு நல்ல வாய்ப்பே!இரண்டு கூட்டணித்தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி ஆன்மீகத்துக்காக ஒரு சீட் கேட்கலாம்.”

”கற்பகாம்பாளும்,கபாலீச்வரரும் அருள் புரியும் ,ஆன்மீக மணம் கமழும் மயிலைத்தொகுதியை ஆன்மீகத்துக்கு ஒதுக்கச் சொல்லிக் கேட்கலாம்.அங்கு போட்டியிட நான் தயார்”

“வளர்க ஆன்மீகம்”

இதையடுத்து உடனடிப் பேச்சு வார்த்தை நடந்திருப்பதாகவும்,சென்னைப் பித்தன் மயிலை சட்டமன்றத் தொகுதியில் கட்சி சார்பின்றி, ஆன்மீகத்தின் சார்பில் போட்டியிடுவாரென்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன!


(அவருடைய நீ--ண்ட பெயருடைய கட்சி கலைக்கப் பட்டு விட்டதா என்பது தெரியவில்ல!)

20 கருத்துகள்:

 1. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  // ம்..ம்.. நடத்துங்க.. நடத்துங்க..//
  நான் யார் அப்பனே நடத்துவதற்கு?நடப்பதெல்லாம் நமச்சிவாயம் செயல்!

  சுடசுட வருகைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 2. //காஞ்சி சங்கராசாரியார் ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் ” தமிழ்நாடு தேசிய ஆன்மீக மக்கள் கட்சி” என்றொரு புதிய கட்சியைத்துவக்கியிருப்பது அனைவரும் அறிந்ததே.அது பற்றிய பத்திரிகைச் செய்தியை நான் இங்கே வெட்டி ஒட்டப் போவதில்லை//

  ஓகோ; இப்படியும் ஒரு கூத்து நடந்துள்ளதா? அப்போ கொள்கைபரப்புச் செயலாளர்- சொர்ணமாலிகா தானே!

  பதிலளிநீக்கு
 3. இதையடுத்து உடனடிப் பேச்சு வார்த்தை நடந்திருப்பதாகவும்,சென்னைப் பித்தன் மயிலை சட்டமன்றத் தொகுதியில் கட்சி சார்பின்றி, ஆன்மீகத்தின் சார்பில் போட்டியிடுவாரென்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன!


  ..........உங்கள் வோட்டு, "சென்னை பித்தருக்கே!" ...... கொடுத்த காசுக்கு மேல கூவிட்டேன், எசமான்!

  பதிலளிநீக்கு
 4. //இதையடுத்து உடனடிப் பேச்சு வார்த்தை நடந்திருப்பதாகவும்,சென்னைப் பித்தன் மயிலை சட்டமன்றத் தொகுதியில் கட்சி சார்பின்றி, ஆன்மீகத்தின் சார்பில் போட்டியிடுவாரென்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன!//
  என்ன சார்
  ஓய்வு காலத்த உருபடியா தேத்த முடிவு பண்ணியாச்சா ?

  பதிலளிநீக்கு
 5. எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன்....ஹா ஹா ஹா ஹா...

  பதிலளிநீக்கு
 6. உங்களுக்கு தில்லியிலிருந்தே ஓட்டு போடமுடியுமா? சொன்னா போட்டுடுவோம்ல!

  பதிலளிநீக்கு
 7. மயிலைத்தொகுதியில் சென்னை பித்தன் போட்டியிட்டால் பணியாற்ற தொண்டர்கள் நாங்கள் ரெடி. ஆனால் தற்போதைய ச.ம. உ. எஸ்.வி.சேகருக்கே அல்வா கொடுத்துவிட்டபின் என்ன சொல்வது?

  பதிலளிநீக்கு
 8. போடுங்கம்மா ஓட்டு
  சென்னை பித்தனை பார்த்து..

  -----

  ஆட்டோகிராஃப் பிளீஸ் சார்.

  பதிலளிநீக்கு
 9. யோகன் பாரிஸ்(Johan-Paris) கூறியது...

  //ஓகோ; இப்படியும் ஒரு கூத்து நடந்துள்ளதா? அப்போ கொள்கைபரப்புச் செயலாளர்- சொர்ணமாலிகா தானே!//
  அது பற்றிப் பத்திரிகைச் செய்தி எதுவும் இல்லை யோகன்!
  வருகைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 10. Chitra கூறியது...


  //..........உங்கள் வோட்டு, "சென்னை பித்தருக்கே!" ...... கொடுத்த காசுக்கு மேல கூவிட்டேன், எசமான்!//
  தாய்க்குலமே தலை வணங்குகிறேன்!உங்கள் ஆதரவு தொடர வேண்டுகிறேன்.
  நன்றிகள்

  பதிலளிநீக்கு
 11. FOOD கூறியது...

  //என்ன சார்
  ஓய்வு காலத்த உருபடியா தேத்த முடிவு பண்ணியாச்சா ?//

  மக்கள் சேவையே மகேசன் சேவையல்லவா!
  மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 12. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன்....ஹா ஹா ஹா ஹா...//

  காலத்தின் கட்டாயம் !
  நன்றி மனோ!

  பதிலளிநீக்கு
 13. வெங்கட் நாகராஜ் கூறியது...

  //உங்களுக்கு தில்லியிலிருந்தே ஓட்டு போடமுடியுமா? சொன்னா போட்டுடுவோம்ல!//
  தபால் ஓட்டு இருக்கிறதே! இல்லையெனில் தில்லி-சென்னை பயணக்கட்டணம் திருப்பிக் கொடுத்து விடலாம்---ஜெயித்தால்!

  பதிலளிநீக்கு
 14. வே.நடனசபாபதி கூறியது...

  // மயிலைத்தொகுதியில் சென்னை பித்தன் போட்டியிட்டால் பணியாற்ற தொண்டர்கள் நாங்கள் ரெடி. ஆனால் தற்போதைய ச.ம. உ. எஸ்.வி.சேகருக்கே அல்வா கொடுத்துவிட்டபின் என்ன சொல்வது?//
  அஞ்ச வேண்டாம்!இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்!?
  நன்றி!

  பதிலளிநீக்கு
 15. எண்ணங்கள் 13189034291840215795 கூறியது...

  //போடுங்கம்மா ஓட்டு
  சென்னை பித்தனை பார்த்து..

  -----

  ஆட்டோகிராஃப் பிளீஸ் சார்.//

  ஆதரவுக்கு நன்றி தாய்க்குலமே!

  ஆட்டோகிராஃப்?--எத்தனை ஓட்டு என்று சொல்லுங்கள்; அத்தனை நோட்டுக்களுடன் அனுப்புகிறேன்!
  ’பயணம்’ எங்கே ?

  பதிலளிநீக்கு
 16. ’பயணம்’ எங்கே ? //

  அந்த கதை தெரியாதா சார்,..

  என் பெயரில் போலி பின்னூட்டம் போட்டுள்ளார்.. அதான் இப்ப என் பதிவு எண்கொண்டு பின்னூட்டம்..

  "எண்ணங்கள் 13189034291840215795 " க்கு மேல் மவுஸ் வைத்தால் கீழே அதே எண் வரும்.. போலி என்றால் வராது..


  பதிவுலகின் இன்னொரு சாபக்கேடுதான் என்ன செய்ய ?:))

  இது பற்றி என் பதிவு.
  http://punnagaithesam.blogspot.com/2011/03/blog-post_15.html
  (என் பேரில் நடமாடும் போலிகள் கவனம்)

  பதிலளிநீக்கு
 17. when comrade baladhandaaudham was studied in annamalai university he was suspended from the university for his anti british activities by vice chansellor right honourable srinivasa shastry.bala angrily told his vice chansellor,you are neighther right nor honourable.how is it

  பதிலளிநீக்கு