தொடரும் தோழர்கள்

சனி, மார்ச் 19, 2011

நீ இல்லாத வீதி!

நீ இல்லாத வீதி

வெறிச்சோடிக் கிடக்கிறது!

நேற்றிருந்த நிலைமையே வேறு;

நீ கருப்புத்தான்!

ஆனால் அதுவும் ஒரு அழகுதான்.

உரத்த குரல்தான் உனக்கு

ஆனால் அதுவும் ஒரு இனிமைதான்!

பயம்தான் பலருக்கு உன்னிடம்!

ஆனாலும் என்னிடம் உனக்கு

அன்பு அதிகம்தான்!

சிறுவர்கள் சீண்டினால் சீறுவாய்

பைக் இளைஞர்களை நீ சாடுவாய்!

கலகலப்பாய் இருந்த வீதி

இன்று களையிழந்து நிற்கிறது!

நீ இல்லாத வீதி வெறிச்சோடிக் கிடக்கிறது!

கார்ப்பரேஷன் நாய் வண்டி
நேற்றுன்னைப் பிடித்ததால்!

22 கருத்துகள்:

 1. காதல் கவிதை மாதியே ஆரம்பித்து...... கடைசியில்????
  ஏமாந்துபோனேன்..

  பதிலளிநீக்கு
 2. ஹா ஹா ஹா ஹா ஹ ஹா ஹா ஹா ஹா எப்பிடியோ ஆரம்பிச்சி இப்பிடி முடிச்சிட்டீங்களே ஹா ஹா ஹா சிரிப்பாக இருக்கு போங்க....

  பதிலளிநீக்கு
 3. நல்ல நகைச்சுவையும் கற்பனை வளமும்.
  உங்களிடம் நிறைய விஷயங்கள் இருக்கு.
  வெகு சீக்கிரத்தில் இங்கு அனைவரையும் கவர்ந்து விட்டீர்கள்.

  அதுசரி ......

  இது என்ன நாய் மீதும் காதலா??
  சும்மா நக்கல் :))))

  பதிலளிநீக்கு
 4. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  //காதல் கவிதை மாதியே ஆரம்பித்து...... கடைசியில்????
  ஏமாந்துபோனேன்..//
  :-D
  சிரித்தீர்களா?

  பதிலளிநீக்கு
 5. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  //எப்படி இப்படியல்லாம்...//
  தெரியலைய்யா!

  பதிலளிநீக்கு
 6. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  // உண்மையிலே சூப்பரா இருக்கு தல..//
  நன்றி சௌந்தர்!

  பதிலளிநீக்கு
 7. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //ஹா ஹா ஹா ஹா ஹ ஹா ஹா ஹா ஹா எப்பிடியோ ஆரம்பிச்சி இப்பிடி முடிச்சிட்டீங்களே ஹா ஹா ஹா சிரிப்பாக இருக்கு போங்க....//
  சிரிங்க!நல்லதுதான்!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 8. கக்கு - மாணிக்கம் கூறியது...

  //நல்ல நகைச்சுவையும் கற்பனை வளமும்.
  உங்களிடம் நிறைய விஷயங்கள் இருக்கு.
  வெகு சீக்கிரத்தில் இங்கு அனைவரையும் கவர்ந்து விட்டீர்கள்.//
  மிக்க நன்றி மாணிக்கம் !
  //அதுசரி ......

  இது என்ன நாய் மீதும் காதலா??
  சும்மா நக்கல் :))))//

  காதல் என்பது பல பொருள்களை உள்ளடக்கியது!
  ”ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும்” என்கிறார் வள்ளலார்!
  ”உயிர்களிடத்து அன்பு வேணும்” என்கிறார் பாரதி!
  எல்லா உயிர்களையும் காதலிக்க,நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!
  நன்றி மாணிக்கம்!

  பதிலளிநீக்கு
 9. ஆனாலும் உங்கள் பார்வை ரொம்ப வித்தியாசம்தான்! முடிவு, எதிர்பாராத திருப்பம். நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 10. FOOD கூறியது...

  //ஆனாலும் உங்கள் பார்வை ரொம்ப வித்தியாசம்தான்! முடிவு, எதிர்பாராத திருப்பம். நல்ல பகிர்வு.//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 11. ரசிக்க தெரிந்தவன் ரசிகன்... அதனை எழுத தெரிந்தவன் கவிஞன்....

  நீங்கள் இங்கே கவிஞராக... நான் ரசிகனாக...

  பதிலளிநீக்கு
 12. Thanjai Vasan (தஞ்சை.வாசன்) கூறியது...

  //ரசிக்க தெரிந்தவன் ரசிகன்... அதனை எழுத தெரிந்தவன் கவிஞன்....

  நீங்கள் இங்கே கவிஞராக... நான் ரசிகனாக.//
  நன்றி வாசன்!

  பதிலளிநீக்கு
 13. நன்றியுள்ள ஜீவனைப்பற்றிய நல்ல கவிதை. சூப்பர்.

  பதிலளிநீக்கு
 14. கே. ஆர்.விஜயன் கூறியது...

  //நன்றியுள்ள ஜீவனைப்பற்றிய நல்ல கவிதை. சூப்பர்.//
  நன்றி விஜயன்!சில நாட்களாக வலைப்பதிவுகளில் காணோமே?

  பதிலளிநீக்கு
 15. நன்கு நன்கு ... கற்பனை வளம் உள்ளவனுக்கு இதெல்லாம் ஜுஜுபி ! மேலும் பல சிறு கவிதைகள் இது போல் எதிர்பார்கிறேன் ... பிராணிகளுக்கு பஞ்சமா என்ன ?! வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 16. Vasu கூறியது...

  //நன்கு நன்கு ... கற்பனை வளம் உள்ளவனுக்கு இதெல்லாம் ஜுஜுபி ! மேலும் பல சிறு கவிதைகள் இது போல் எதிர்பார்கிறேன் ... பிராணிகளுக்கு பஞ்சமா என்ன ?!//
  காக்காய் பிடிக்கலாமா அடுத்ததாக!
  நன்றி வாசு!

  பதிலளிநீக்கு
 17. காக்கை குருவி எங்கள் ஜாதி
  என்ற பாரதியை நினைவு படுத்தியது கவிதை
  அருமை

  பதிலளிநீக்கு
 18. கவிதையின் ஆரம்பத்தை படிக்கும்போது நீங்கள் நிச்சயம் வழக்கம்போல் பொடி வைத்து எழுதியிருக்கிறீர்கள் என நினைத்தேன்.
  என் நினைப்பு சரியாக இருந்தது.
  கவிதைக்கும் கற்பனைக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 19. சிவகுமாரன் கூறியது...

  //காக்கை குருவி எங்கள் ஜாதி
  என்ற பாரதியை நினைவு படுத்தியது கவிதை
  அருமை//
  நன்றி கவிஞரே!

  பதிலளிநீக்கு
 20. வே.நடனசபாபதி கூறியது...

  //கவிதையின் ஆரம்பத்தை படிக்கும்போது நீங்கள் நிச்சயம் வழக்கம்போல் பொடி வைத்து எழுதியிருக்கிறீர்கள் என நினைத்தேன்.
  என் நினைப்பு சரியாக இருந்தது.
  கவிதைக்கும் கற்பனைக்கும் வாழ்த்துக்கள்.//
  நன்றி நடனசபாபாதி அவர்களே!

  பதிலளிநீக்கு