தொடரும் தோழர்கள்

செவ்வாய், மார்ச் 22, 2011

கூட்டு இல்லை!அம்மா அறிவிப்பு!!தலைவர் வருத்தம்!!

கூட்டு இல்லை என்று அம்மா கூறியதால் அ. இ.அ.பெ.கா.ரா.நெ. ஆ. தி.மு. மு.ம.ம.க. தலைவரும்,கட்சியின் ஒரே வேட்பாளருமான சென்னை பித்தன் வருத்தத்தில் இருப்பதாகச் செய்தி கசிந்ததை அடுத்து,’டுபாகூர் டைம்ஸ்’ தனது சிறப்பு நிருபராக சிறந்த அரசியல் விமர்சகரும்,அரசியல் செய்திகளைச் சுடசுடத் தருபவருமான கரீம் ஹசாரியைச் சென்னைப் பித்தனைப் பேட்டி காண அனுப்பியது!

சென்ன பித்தன் தன் வீட்டு ஹாலில் சோகமாக அமர்ந்திருந்தார்.

ஹசாரியைப் பார்த்ததும் ”வாருங்கள் ஹசாரி ”என்று அன்புடன் அழைத்து இருக்கையில் அமரச்செய்தார்.

ஹசாரி ஆரம்பித்தார்”அம்மா…....”

”பொறுங்கள்.வெயிலில் வந்திருக்கிறீர்கள்.முதலில் குளிர்ந்த நீர் அருந்துங்கள்”(’நீர்’தான்!) என்று, தானே ஃப்ரிஜ்ஜிலிருந்து நீர் எடுத்துக் குடிக்கக் கொடுத்தார்.

தண்ணீர் குடித்ததும் ஹசாரி தொடங்கினார்”கால தாமதமானதால் கூட்டு….”

சென்னை பித்தன் அவரை இடை மறித்தார்”சொல்கிறேன்,சொல்கிறேன்”

பின் கேட்டார்”சாப்பிட்டு விட்டீர்களா?சைவமா,அசைவமா?”

”இன்று சைவம்தான்.மெஸ்ஸில் சாப்பிட்டேன்”-ஹசாரி

”நிறைய காய் கறியோடு சாப்பிட்டீர்களா?” செ.பி. கேட்டார்

இதெல்லாம் ஏன் கேட்கிறார் என்று புரியாத ஹசாரி தலையசைத்தார்.பின் சொன்னார்”நான் வந்த விஷயம் ..”என இழுத்தார்.

”இதோ சொல்கிறேன்.இன்று கட்சிப்பணி அதிகமாக இருந்ததால்(!) மதிய உணவுக்கு வீட்டுக்கு வருவதற்கு நேரமாகி விட்டது.வந்து சாப்பிட அமர்ந்தேன்.அம்மா சாப்பாடு எடுத்து வைத்தார்கள்.சோறு குழம்புடன் இரண்டு அப்பளமும் வைத்தார்கள்.’என்னம்மா காய் ஏதும் இல்லையா’ எனக் கேட்டேன் ’நேரமாகி விட்டதால் முன்பே சாப்பிட்டவர்கள் கூட்டு நன்றாக இருந்தது என்று எல்லாக் கூட்டையும் சாப்பிட்டு விட்டார்கள்.’என்று சொன்னார்கள்.நான் நேரம் கழித்து வந்ததனால் கூட்டு இல்லை.நான் கூட்டு இல்லாமல் இன்று வரை சாப்பிட்டதே இல்லை” என்று சொல்லி முடித்தார் சென்னை பித்தன்!

ஹசாரி மயங்கி விழுந்தார்!

46 கருத்துகள்:

 1. பதிவை இரசித்துப்படித்தேன். வீட்டில் நேரம் கழித்து வந்ததனால் கூட்டு இல்லை என அம்மா சொல்லிவிட்டார்கள்.
  ஆனால் சிலருக்கோ முன்பே வந்திருந்து காத்திருந்தால் கூட கூட்டு கிடைப்பதில்லை.என்ன செய்வது. அவரவர்கள் இராசி அப்படி!!

  பதிலளிநீக்கு
 2. நான்கூட அரசியல் பதிவோன்னு நினைச்சேன்..

  பதிலளிநீக்கு
 3. எப்படியெல்லாம் கிளப்பராங்யா பீதியை..

  பதிலளிநீக்கு
 4. வே.நடனசபாபதி கூறியது...

  //ஆனால் சிலருக்கோ முன்பே வந்திருந்து காத்திருந்தால் கூட கூட்டு கிடைப்பதில்லை.என்ன செய்வது. அவரவர்கள் இராசி அப்படி!!//
  ஆமாம்!அல்வா கொடுத்து விடுகிறார்கள்!
  நன்றி நடனசபாபதி அவர்களே!

  பதிலளிநீக்கு
 5. நல்ல டைமிங் கதை...பரவாயில்லை இருப்பதை சாப்பிடுங்க சார்.சாப்பிடமாட்டேன்னு வைகோ மாதிரி அடம் பிடிச்சா எப்படி

  பதிலளிநீக்கு
 6. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  // வடையா?//
  :-(

  பதிலளிநீக்கு
 7. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  // படிச்சுட்டு வரேன்..//
  வாங்க!

  பதிலளிநீக்கு
 8. டும்டும்...டும்டும்...
  அவசரப்பட்டு தபால் ஓட்டு போட்டுவிட்டேனே!

  பதிலளிநீக்கு
 9. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  //முடிவு எதிர்பாராத ஒன்று...//
  :}.நன்றி!

  பதிலளிநீக்கு
 10. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  // நான்கூட அரசியல் பதிவோன்னு நினைச்சேன்..//
  இது அரிசியல்!

  பதிலளிநீக்கு
 11. சார் எனக்கொரு சந்தேகம்? கரீம் ஹசாரி என்ற பெயரை எங்கிருந்து பிடிச்சீங்க... என் பெயரை லேசா மாற்றி போட்டது போல ஒரு பீலிங்..

  பதிலளிநீக்கு
 12. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....நான் இந்த விளையாட்டுக்கு வரலை....

  பதிலளிநீக்கு
 13. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  // எப்படியெல்லாம் கிளப்பராங்யா பீதியை..//
  ஹா...ஹா!

  பதிலளிநீக்கு
 14. ஆரம்பத்திலே நான் யூகிச்சுட்டேன் நீங்க லொள்ளு பிளஸ் குசும்பு பண்ண போறீங்கன்னு ஹே ஹே ஹே ஹே....

  பதிலளிநீக்கு
 15. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  //இருந்தலும் நல்லாயிருக்கு..//
  நன்றி சௌந்தர்!

  பதிலளிநீக்கு
 16. ரஹீம் கஸாலி கூறியது...

  //நல்ல டைமிங் கதை...பரவாயில்லை இருப்பதை சாப்பிடுங்க சார்.சாப்பிடமாட்டேன்னு வைகோ மாதிரி அடம் பிடிச்சா எப்படி//
  சாப்பிட்டாச்சு,கஸாலி!நிருபர் யாரென்று பார்த்தீர்களா!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 17. நையாண்டி மேளம் கூறியது...

  //டும்டும்...டும்டும்...
  அவசரப்பட்டு தபால் ஓட்டு போட்டுவிட்டேனே!//
  வருத்தப் படாதீங்க!கள்ள ஓட்டுப் போட்டுடலாம்!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 18. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....நான் இந்த விளையாட்டுக்கு வரலை....//
  வரலைன்னா விட்டுடவமா!

  பதிலளிநீக்கு
 19. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //ஆரம்பத்திலே நான் யூகிச்சுட்டேன் நீங்க லொள்ளு பிளஸ் குசும்பு பண்ண போறீங்கன்னு ஹே ஹே ஹே ஹே....//
  லொள்ளு+குசும்பைப் புரிந்து கொண்டதற்குப் பாராட்டுக்கள்.
  நன்றி மனோ!

  பதிலளிநீக்கு
 20. ஹய்யோ ஹய்யோ தாங்க முடியல

  பதிலளிநீக்கு
 21. Gayathri கூறியது...

  //ஹய்யோ ஹய்யோ தாங்க முடியல//
  ரொம்ப நாட்களுக்குப் பின் வந்திருக் கிறீர்கள்!
  நன்றி காயத்ரி!

  பதிலளிநீக்கு
 22. ரஹீம் கஸாலி கூறியது...

  //சார் எனக்கொரு சந்தேகம்? கரீம் ஹசாரி என்ற பெயரை எங்கிருந்து பிடிச்சீங்க... என் பெயரை லேசா மாற்றி போட்டது போல ஒரு பீலிங்..//
  நீங்கதானே சுடச்சுட அரசியல் பதிவு போடறீங்க!
  அவர் உங்க சீடராக இருப்பார்!

  பதிலளிநீக்கு
 23. சரியான நேரத்தில் சூப்பரான பதிவு போட்டுயிருக்கீங்க... யோசனைக்கு சபாஷ்...

  பதிலளிநீக்கு
 24. அன்பான வேட்பாளரே... சென்னை பித்தனே... உங்களுக்காவது கூட்டுதான் கிடைக்கவில்லை, எனக்கு சோறே கிடைக்கவில்லை இப்படிக்கு வைகோ.

  பதிலளிநீக்கு
 25. பாரத்... பாரதி... கூறியது...

  //சரியான நேரத்தில் சூப்பரான பதிவு போட்டுயிருக்கீங்க... யோசனைக்கு சபாஷ்...//
  நன்றி பாரதி!

  பதிலளிநீக்கு
 26. //அன்பான வேட்பாளரே... சென்னை பித்தனே... உங்களுக்காவது கூட்டுதான் கிடைக்கவில்லை, எனக்கு சோறே கிடைக்கவில்லை இப்படிக்கு வைகோ.//

  தன்மானச் சிங்கமே! வாருங்கள்! நாம் கூட்டு வைக்கலாம்!

  பதிலளிநீக்கு
 27. ரசித்து படிக்கும்படி இருந்தது உங்கள் பதிவு. முடிவில் நல்ல திருப்பம்.

  பதிலளிநீக்கு
 28. FOOD சொன்னது…

  // ரசித்து படிக்கும்படி இருந்தது உங்கள் பதிவு. முடிவில் நல்ல திருப்பம்.//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 29. மஞ்சள் துண்டு காணவில்லை போன்ற பதிவு . ரசித்தேன் . பதிவும் அதை சார்ந்து வரும் கருத்துக்களும் கூட்டில் இடம் பெரும் ஒவ்வொரு காயை போல் சுவை .... வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 30. Vasu கூறியது...

  //மஞ்சள் துண்டு காணவில்லை போன்ற பதிவு . ரசித்தேன் . பதிவும் அதை சார்ந்து வரும் கருத்துக்களும் கூட்டில் இடம் பெரும் ஒவ்வொரு காயை போல் சுவை .... //
  ஆஹா!சுவையான கூட்டு சாப்பிட்டது போல் இருக்கிறது உஙள் கருத்து!
  நன்றி வாசு!

  பதிலளிநீக்கு
 31. என்னனனமோ சொல்லுறீங்க ஆனாலும் சுவாரஸ்சிமான சொல்லியிருக்கீங்க.

  பதிலளிநீக்கு
 32. அன்புடன் மலிக்கா சொன்னது…

  //என்னனனமோ சொல்லுறீங்க ஆனாலும் சுவாரஸ்சிமான சொல்லியிருக்கீங்க.//
  வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 33. சுவாரசியமா இருக்கு. என்னமோ சொல்லப்போரீங்காண்ணு பாத்தா வேற மாதிரியா இருக்கு.

  பதிலளிநீக்கு
 34. பாலா கூறியது...

  //சுவாரசியமா இருக்கு. என்னமோ சொல்லப்போரீங்காண்ணு பாத்தா வேற மாதிரியா இருக்கு.//

  நன்றி பாலா!

  பதிலளிநீக்கு
 35. ஜீவன்சிவம் கூறியது...

  //அப்படி போடு//

  :}.நன்றி ஜீவன்சிவம்!

  பதிலளிநீக்கு
 36. கூட்டு என்றாலே இப்போதெல்லாம் கூட்டணி ஆகிவிடுகிறது :) நல்ல நகைச்சுவை!

  பதிலளிநீக்கு
 37. வெங்கட் நாகராஜ் சொன்னது…

  //கூட்டு என்றாலே இப்போதெல்லாம் கூட்டணி ஆகிவிடுகிறது :) நல்ல நகைச்சுவை!//
  நன்றி நாகராஜ்!

  பதிலளிநீக்கு
 38. கூட்டுதானே இல்ல, பொரியலாவது வெக்கலாம்ல?

  பதிலளிநீக்கு
 39. பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

  //கூட்டுதானே இல்ல, பொரியலாவது வெக்கலாம்ல?//
  வாங்க!”பொரியல்,கூட்டு,பச்சடி என்று எல்லாம் செய்ய இது என்ன ஹோட்டலா?”-நான் கேட்கவில்லை; அம்மா கேட்கிறார்கள் !
  வருகைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 40. Pranavam Ravikumar a.k.a. Kochuravi கூறியது...

  // நல்ல பதிவுக்கு நன்றி//
  நன்றி ரவிகுமார்!

  பதிலளிநீக்கு