தொடரும் தோழர்கள்

திங்கள், மார்ச் 21, 2011

தினம் ஒரு புதுப் பிறவி!

சென்ற பதிவில்-”நான் என்னும் அகந்தை”-ஸ்வாமி பித்தானந்தாவின் வெளிவராத அருளுரையை வெளியிட்டிருந்தேன்.அதற்கு நல்ல வரவேற்பு இருந்ததைப் பார்த்து மீண்டும் ஸ்வாமி அவர்களின் வெளிவராத ஓரருளுரையை வெளியிட முடிவு செய்தேன்.இதோ அந்த உரை!
---------------------------------------

ஒரு கிராமவாசி இருந்தான்.ஒரு முறை வெளியூருக்கு ரயிலில் போக எண்ணினான். அதுவே அவனுக்கு ரயிலில் முதல் முறை.பயணச்சீட்டு வாங்கும்போது அவனிடம் சொன்னார்கள் ’20 கிலோ எடையுள்ள பொருள்தான் எடுத்துச் செல்லலாம்’ என்று! அவனிடம் இரண்டு பொருள்கள் இருந்தன.ஒன்று பத்து கிலோ எடை;மற்றது 20 கிலோ எடை!

அவன் ரயிலில் ஏறி இருக்கையில் அமர்ந்தான்.20 கிலோ எடையுள்ள பெட்டியைக் கீழே வைத்தான்.அதிக பட்சம் 20 கிலோ எடையைத்தான் ரயிலில் கொண்டு செல்லலாம் என்று சொல்லப்பட்டதால்,10 கிலோ எடையுள்ள பையைத் தன் தலை மீது வைத்துக் கொண்டான்.

டிக்கட் பரிசோதகர் வந்தார்,தலையில் பையுடன் அமர்ந்திருக்கும் மனிதனை பார்த்துத் திகைத்தார்.கேட்டார்”ஏன் இப்படிப் பையைத்தலையில் வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறீர்கள்”

அவன் சொன்னான்”ஐயா! 20 கிலோ எடைதான் எடுத்துச் செல்லலாம் என்று சொன்னார்கள்.பெட்டி மட்டுமே 20 கிலோ.எனவே அதை ரயிலில் வைத்துவிட்டு இந்தப் பையைத் தலையில் சுமக்கிறேன்!”

அவருக்குச் சிரிப்பு வந்தது!அவன் தலையில் இருக்கும் எடையையும் ரயில்தானே சுமக்கிறது என்று உணராத அவன் அறியாமையை எண்ணி ,’இப்படியும் ஒரு மனிதனா’ என வியந்தார்!

நம்மில் பலரும் அந்த மனிதன் போலத்தான் இருக்கிறோம்!வேண்டாத கவலைகளை, எண்ணங்களைச் சுமந்து கொண்டு நம்மை நாமே வருத்திக் கொள்கிறோம்!நமது கவலைகளச் சுமப்பதற்கு அவன் ஒருவன் இருக்கிறான் என்பதை மறந்து,நாம் சுமந்தாலும் அவனும் அவற்றைச் சுமக்கிறான் என்பதை உணராது காலம் தள்ளுகிறோம்.

"சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே,என்னிடத்தில் வாருங்கள்;நான் இளைப்பாறுதல் தருவேன்”—ஏசு பிரான் கூற்று.

”எல்லாவற்றையும் என்னில் அர்ப்பணித்து என்னையே சரணடைபவர்களை அவர்கள் தளைகளிலிருந்து விலக்கி அமைதி தருகிறேன் “என்கிறார் கிருஷ்ண பரமாத்மா!

வள்ளுவர் அழகாகச் சொல்கிறார்--

“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது”

வாருங்கள்.நம் வருத்தங்களைக்,கவலைகளை,மனச்சுமைகளை அவன் காலடியில் போட்டு விட்டு நாம் சுமையின்றி இளைப்பாறுவோம்!


’நான் கடவுளை நம்பவில்லை’ என்று சொல்பவர்களாக இருப்பினும் கவலையில்லை!

நார்மன் வின்சன்ட் பீல் சொல்கிறார்”ஒவ்வொரு நாளும் படுக்கப் போகுமுன் உங்கள் கவலைகளை, வருத்தங்களை, ஒரு கற்பனையான கைக்குட்டையில் கட்டி அவற்றை வெளியே தூக்கி எறிந்து விடுங்கள். மனம் இலேசாகும்.மறு நாளைப் புதிதாகத் துவக்குங்கள்.”வாருங்கள்!தினம் தினம் புதியவர்களாகப் பிறப்போம்!

48 கருத்துகள்:

 1. //நமது கவலைகளச் சுமப்பதற்கு அவன் ஒருவன் இருக்கிறான் என்பதை மறந்து,நாம் சுமந்தாலும் அவனும் அவற்றைச் சுமக்கிறான் என்பதை உணராது காலம் தள்ளுகிறோம்.//
  அருமை, அருமை. அனைவரும் அறிந்திட அருமையான கருத்து பகிர்வு.

  பதிலளிநீக்கு
 2. இளைபாற விரும்பாத உள்ளங்கள் உள்ளனவோ!

  பதிலளிநீக்கு
 3. //நம்மில் பலரும் அந்த மனிதன் போலத்தான் இருக்கிறோம்!வேண்டாத கவலைகளை, எண்ணங்களைச் சுமந்து கொண்டு நம்மை நாமே வருத்திக் கொள்கிறோம்!நமது கவலைகளச் சுமப்பதற்கு அவன் ஒருவன் இருக்கிறான் என்பதை மறந்து,நாம் சுமந்தாலும் அவனும் அவற்றைச் சுமக்கிறான் என்பதை உணராது காலம் தள்ளுகிறோம்.//

  அருமையாக சொன்னீர்கள்.... இதை படித்ததுமே மனசு லேசாகி விட்டது....

  பதிலளிநீக்கு
 4. FOOD கூறியது...

  // வந்துட்டேன்!//

  வாங்க,வாங்க!

  பதிலளிநீக்கு
 5. FOOD கூறியது...

  //படித்துவிட்டு வருகிறேன்//
  படிங்க!

  பதிலளிநீக்கு
 6. FOOD கூறியது...

  //அருமை, அருமை. அனைவரும் அறிந்திட அருமையான கருத்து பகிர்வு.//
  நன்றி!

  பதிலளிநீக்கு
 7. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

  //அருமையாக சொன்னீர்கள்.... இதை படித்ததுமே மனசு லேசாகி விட்டது....//
  நன்றி மனோ!

  பதிலளிநீக்கு
 8. ஜோதிடத்தில் சரபேந்திர முறை சற்று வித்தியாசமானது:
  ஆறாம் வீட்டில் சனியும், ஒன்பதாம் வீட்டில் மகரமும் இருந்தால் மக்கள் சிரமப்படுவார்கள்
  பச்சை புடவை ஒன்பதாம் கதவு இலக்கமும்
  மஞ்சள் துண்டுவின் கதவு இலக்கம் ஆறும் எனக்கு தெரியாது!
  ஈரோட்டு ஜோசியர்தான் அலசி ஆராய வேண்டும்!
  ஒரு பக்கம் காபரா டான்சர்!
  இன்னொரு பக்கம் கதை விசனகர்த்த!
  இடையில் இத்தாலிய பிசா
  தமிழ்நாட்டின் நிலையை எண்ணி கண்ணிற் வடிக்கிறேன்

  பதிலளிநீக்கு
 9. ஆஹா திருக்குறள் எடுத்துக்காட்டுடன் அருமையான கதை

  பதிலளிநீக்கு
 10. ஓட்டு சேர்த்துவிட்டேன் அய்யா

  பதிலளிநீக்கு
 11. அற்புதமான விஷயங்களை இந்த பதிவு சுமந்த விதம் அருமை
  -ஸ்வாமி பித்தானந்தாவின் சீடன்..

  பதிலளிநீக்கு
 12. வாழ்க்கை என்பது மிக நீண்ட பயணம் என்பதால் நிச்சயம் இளைப்பாறுதல்கள் தேவைதான்..

  பதிலளிநீக்கு
 13. மறு நாளைப் புதிதாகத் துவக்குங்கள்.”
  //

  அதேதான் ஜப்பானியர்கள் பார்த்து கத்துக்கணும் நம்பிக்கையை...

  பதிலளிநீக்கு
 14. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

  //ஆஹா திருக்குறள் எடுத்துக்காட்டுடன் அருமையான கதை//
  நன்றி சதீஷ் குமார்!

  பதிலளிநீக்கு
 15. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

  // ஓட்டு சேர்த்துவிட்டேன் அய்யா//

  இதற்கு மீண்டும் நன்றி!

  பதிலளிநீக்கு
 16. பாரத்... பாரதி... கூறியது...

  //அற்புதமான விஷயங்களை இந்த பதிவு சுமந்த விதம் அருமை
  -ஸ்வாமி பித்தானந்தாவின் சீடன்..//
  ஸ்வாமிக்கு மெத்த மகிழ்ச்சி! உங்களை பிரதம சீடராக ஏற்றுக் கொண்டார்!
  நன்றி பாரதி!

  பதிலளிநீக்கு
 17. பாரத்... பாரதி... கூறியது...

  //வாழ்க்கை என்பது மிக நீண்ட பயணம் என்பதால் நிச்சயம் இளைப்பாறுதல்கள் தேவைதான்..//

  அதை எப்படிப் பெறுவது என்பதைத்தான் நாம் உணர வேண்டும்!
  நன்றி பாரதி!

  பதிலளிநீக்கு
 18. விக்கி உலகம் கூறியது...

  //பகிர்வுக்கு நன்றி//
  வருகைக்கு நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
 19. எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

  //அதேதான் ஜப்பானியர்கள் பார்த்து கத்துக்கணும் நம்பிக்கையை...//
  சரியாகச் சொன்னீர்கள்!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 20. பல நல்ல நல்ல தகவல்கள் அடங்கியத் தொகுப்பு...

  பதிலளிநீக்கு
 21. நாளைய விடியல்கள் கவலைகள் இல்லாமல்... அருமை நன்பரே...

  பதிலளிநீக்கு
 22. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  //முதலில் மன்னிக்கவும் தாமதத்திற்கு...//
  உங்கள் ’மதம் தாமதமா?
  ஸ்வாமி பித்தானந்தா கேட்கிறார்”அவரவர்க்கு ஆயிரம் வேலை!இதில் ஏன் மன்னிப்பு?” என்று.

  பதிலளிநீக்கு
 23. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  //பல நல்ல நல்ல தகவல்கள் அடங்கியத் தொகுப்பு...//
  நன்றி கருன்!

  பதிலளிநீக்கு
 24. மறு நாளைப் புதிதாகத் துவக்குங்கள்.”

  உறங்குவது போலும் சாக்காடு
  உறங்கி விழிப்பது போலும் பிறப்பு..

  பதிலளிநீக்கு
 25. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  //நாமும் கவலைகளை விளக்குவோம்..//
  அதே ஸ்வாமியின் விருப்பமும்!

  பதிலளிநீக்கு
 26. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  // நாளைய விடியல்கள் கவலைகள் இல்லாமல்... அருமை நன்பரே...//
  நன்றி கருன்!

  பதிலளிநீக்கு
 27. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

  மறு நாளைப் புதிதாகத் துவக்குங்கள்.”

  //உறங்குவது போலும் சாக்காடு
  உறங்கி விழிப்பது போலும் பிறப்பு..//
  உண்மை!
  வருகைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 28. நம்மால் தான் நம் கவலைகளை சுமக்கமுடியும் என்ற எண்ணமே தவறானது ... நமக்கு துன்பங்களை தருபவனும் அவனே ...அதை களைவதும் அவனே ... இதனை புரிந்து கொண்டு செயல் பட்டாலே போதும் ... நாத்திக வாதம் புரிபவர்களுக்கு இதை ஒத்துகொள்ளுவது சிறுது கடினமாக இருக்கும் . வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 29. உண்மைதான் நம் அறியாமை என்னும் குப்பைப் கூளங்களை அகற்றி விட்டால் நாம் தெளிவாகி விடலாம்...

  பதிலளிநீக்கு
 30. தலைவரே உண்மையிலே அருமையான பதிவு..
  நன்று தொடருங்கள்...

  தேர்வு பணியின் காரணமாகத்தான் உடனே வரமுடியவில்லை...

  தாமதத்திற்கு மன்னிக்கவும்..

  பதிலளிநீக்கு
 31. Vasu சொன்னது…

  //நம்மால் தான் நம் கவலைகளை சுமக்கமுடியும் என்ற எண்ணமே தவறானது ... நமக்கு துன்பங்களை தருபவனும் அவனே ...அதை களைவதும் அவனே ... இதனை புரிந்து கொண்டு செயல் பட்டாலே போதும் ... நாத்திக வாதம் புரிபவர்களுக்கு இதை ஒத்துகொள்ளுவது சிறுது கடினமாக இருக்கும் .//
  அவர்களுக்கு நார்மன் வின்சண்ட் பீலின் வழி!
  நன்றி வாசு!

  பதிலளிநீக்கு
 32. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  // உண்மைதான் நம் அறியாமை என்னும் குப்பைப் கூளங்களை அகற்றி விட்டால் நாம் தெளிவாகி விடலாம்...//
  அகற்றத்தானே வழி தெரிவதில்லை!
  நன்றி சௌந்தர்!

  பதிலளிநீக்கு
 33. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  // தலைவரே உண்மையிலே அருமையான பதிவு..
  நன்று தொடருங்கள்...

  தேர்வு பணியின் காரணமாகத்தான் உடனே வரமுடியவில்லை...

  தாமதத்திற்கு மன்னிக்கவும்..//
  தயவு செய்து மன்னிப்பெல்லாம் வேண்டாம்!
  கருத்துக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 34. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  //இன்னும் என் கமாண்ட் வரல..//
  5.00 மணிக்கு வெளியே போய் 6.30க்கு வீடு திரும்பினேன். எனவே தாமதம்!

  பதிலளிநீக்கு
 35. Maheswaran.M கூறியது...

  //nalla irukkunga thozhar..
  ithupola ezhuthungal

  thodarum en vaasippugal//
  வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி,Maheswaran.
  எழுத முயல்வேன்!தொடருங்கள் .நன்றி!

  பதிலளிநீக்கு
 36. நல்ல பகிர்வு. மனது என்னமோ ஒரு வங்கி என நினைத்து கவலை என்னும் தேவையற்ற குப்பைகளை மனதில் வைத்து வைப்பு நிதி போல பூட்டிக்கொண்டு விடுகிறோம். ஸ்வாமி பித்தானந்தா மூலம் அதைத் தெளிய வைத்ததற்கு மிக்க நன்றி அய்யா. உங்கள் வலைப்பூவினைத் தொடர ஆரம்பித்து விட்டேன்.

  பதிலளிநீக்கு
 37. "ஒவ்வொரு நாளும் படுக்கப் போகுமுன் உங்கள் கவலைகளை, வருத்தங்களை, ஒரு கற்பனையான கைக்குட்டையில் கட்டி அவற்றை வெளியே தூக்கி எறிந்து விடுங்கள். மனம் இலேசாகும்.மறு நாளைப் புதிதாகத் துவக்குங்கள்.”

  அருமையான பதிவு. கடவுள் மறுப்பாளர்களுக்கு மட்டுமல்ல, கடவுள் மேல் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் உகந்த கருத்து.

  பதிலளிநீக்கு