தொடரும் தோழர்கள்

வியாழன், மார்ச் 31, 2011

வலைப்பூக் கவுஜ!

நான் நினைத்துப் பார்க்கிறேன் இப்போது

என் நினைவில் நின்றவை எவையெல்லாம் என்று!

பொன்மாலைப் பொழுது தனில் பூத்த றோஜாக்கள் போல்

என்னருகில் நீயிருந்த இனிய பொழுதுகள்!

உன் பாதம் பட்ட இடமெல்லாம்,கவிதைப் பூமலர

மென்மையாய் நீ நடந்த உன் கவிதை வீதி!

உன்னை நான் முதல் முதலாய் சந்தித்து

என்னை உன்னிடத்தில் இழந்த அந்த நல்லநேரம்!

என்னைப் பார்க்கையில் ரோஜாப் பூந்தோட்டம் போல்

என்றும் மலர்ந்திடும் உன் அழகு முகம்!

நன்னாளில் கோயிலுக்கு வேடந்தாங்கல் பறவைகள் போல்

உன் தோழியர் புடை சூழ நீ வரும் தருணங்கள்!

என் மன வானில் குறிஞ்சிப் பூக்கள் போல்

என்றும் குடியிருக்கும் உன் இனிய நினைவுகள்!

உணவு உலகமா?இல்லை உன் உணர்வே உலகம்!

உன் மனமென்னும் கடலில் வலைவீசி

அன்பென்னும் மீன் பிடிக்கும் வலைஞன் நான்

என்ன பிதற்றல் இவையெல்லாம் என்றால்

ஒன்றுமில்லை கொஞ்சம் வெட்டிப்பேச்சு!

நன்றாக இருக்கிறதா?இது just for laugh!

என்ன செய்ய நாஞ்சில் மனோ?எங்கும் ஃபிட் ஆகவில்லை!

45 கருத்துகள்:

 1. கவுஜ கவுஜன்னு எல்லோரும் எழுதறாங்களே அப்டினா என்னான்னு எனக்கு இன்று வரை தெரியாது.....

  இன்றுதான் உணர்ந்துகொண்டேன்..

  நன்றாகவுள்ளது..

  பதிலளிநீக்கு
 2. என்னருகில் நீயிருந்த இனிய பொழுதுகள்!

  உன் பாதம் பட்ட இடமெல்லாம்,கவிதைப் பூமலர

  மென்மையாய் நீ நடந்த உன் கவிதை வீதி!


  நன்றாகவுள்ளது..

  பதிலளிநீக்கு
 3. வலைப்பதிவுகளின் பெயரிலிருந்தே கவிதை புனைந்திருக்கிறீர்கள்.மிக அருமை.

  நீங்கள் பேச நினைத்ததெல்லாம் சொல்லிவிட்டதால் “நான் பேச நினப்பதெல்லாம்” என்பதை கவிதையில் சேர்க்கவில்லையோ?

  பதிலளிநீக்கு
 4. நான் முன்னமே சொல்லிவிட்டேன். தங்களிடம் நிறைய உள்ளது . எடுத்துவிடுங்கள்.
  வலையில் கவிஜை பக்கம் நான் போவதே இல்லை. நமக்கும் அதற்கும் ரொம்ப தூரம்.

  "என்ன செய்ய நாஞ்சில் மனோ?எங்கும் ஃபிட் ஆகவில்லை! " அது ஆகாது. சைஸ் கொஞ்சம் ஓவர் இல்லையா?

  பதிலளிநீக்கு
 5. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

  //கவுஜ கவுஜன்னு எல்லோரும் எழுதறாங்களே அப்டினா என்னான்னு எனக்கு இன்று வரை தெரியாது.....

  இன்றுதான் உணர்ந்துகொண்டேன்..

  நன்றாகவுள்ளது..//

  நன்றி குணசீலன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 6. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

  // என்னருகில் நீயிருந்த இனிய பொழுதுகள்!

  உன் பாதம் பட்ட இடமெல்லாம்,கவிதைப் பூமலர

  மென்மையாய் நீ நடந்த உன் கவிதை வீதி!//


  //நன்றாகவுள்ளது..//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 7. வே.நடனசபாபதி கூறியது...

  //வலைப்பதிவுகளின் பெயரிலிருந்தே கவிதை புனைந்திருக்கிறீர்கள்.மிக அருமை.

  நீங்கள் பேச நினைத்ததெல்லாம் சொல்லிவிட்டதால் “நான் பேச நினப்பதெல்லாம்” என்பதை கவிதையில் சேர்க்கவில்லையோ?//
  சரியாகச் சொல்லி விட்டீர்கள்!
  நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 8. டைட்டில் கவிதையா இருக்கு.. பார்ப்போம் அண்ணன் என்ன சொல்லி இருக்கார்னு..

  பதிலளிநீக்கு
 9. நாஞ்சில் மனோ .. எங்ங்கிருந்தாலும் அண்னன் கடைக்கு வந்த அவமானப்படவும் .. ஹா ஹா

  பதிலளிநீக்கு
 10. Chitra சொன்னது…

  //SUPER!!!!!!! அசத்திட்டீங்க :-)//
  நன்றி சித்ரா!

  பதிலளிநீக்கு
 11. கக்கு - மாணிக்கம் கூறியது...

  // நான் முன்னமே சொல்லிவிட்டேன். தங்களிடம் நிறைய உள்ளது . எடுத்துவிடுங்கள்.//
  நன்றி மாணிக்கம்.எல்லாம் நீங்கள் தரும் ஊக்கம்தான்!
  //"என்ன செய்ய நாஞ்சில் மனோ?எங்கும் ஃபிட் ஆகவில்லை! " அது ஆகாது. சைஸ் கொஞ்சம் ஓவர் இல்லையா?//

  அய்யய்யோ!நான் சொன்னதே வேறு!

  பதிலளிநீக்கு
 12. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  //அருமையான, அசத்தலான கவுஜ கவுஜ...//
  நன்றி,நன்றி,கருன்!

  பதிலளிநீக்கு
 13. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  //டைட்டில் கவிதையா இருக்கு.. பார்ப்போம் அண்ணன் என்ன சொல்லி இருக்கார்னு..//
  நன்றி செந்தில் குமார்!

  பதிலளிநீக்கு
 14. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  //நாஞ்சில் மனோ .. எங்ங்கிருந்தாலும் அண்னன் கடைக்கு வந்த அவமானப்படவும் .. ஹா ஹா//
  ஏங்க பாவம்,அவரைக் கலாய்க்கறீங்க! மனோ இவர்கள் கமெண்டுக்கெல்லாம் நான் பொறுப்பில்லை!

  பதிலளிநீக்கு
 15. அடப்பாவமே எனக்கு அல்வாவா அவ்வ்வ்வ்வ்வ்.....

  பதிலளிநீக்கு
 16. //கக்கு - மாணிக்கம் கூறியது...
  நான் முன்னமே சொல்லிவிட்டேன். தங்களிடம் நிறைய உள்ளது . எடுத்துவிடுங்கள்.
  வலையில் கவிஜை பக்கம் நான் போவதே இல்லை. நமக்கும் அதற்கும் ரொம்ப தூரம்.

  "என்ன செய்ய நாஞ்சில் மனோ?எங்கும் ஃபிட் ஆகவில்லை! " அது ஆகாது. சைஸ் கொஞ்சம் ஓவர் இல்லையா?//

  யோவ் கக்கு பிசிபுடுவேன் பிச்சி. இன்னைக்கு உங்களுக்கு நான்தான் ஊறுகாயா...நான் போலீஸ் ஸ்டேசன் போறேன் பெட்டிஷன் குடுக்க...

  பதிலளிநீக்கு
 17. //சி.பி.செந்தில்குமார் கூறியது...
  நாஞ்சில் மனோ .. எங்ங்கிருந்தாலும் அண்னன் கடைக்கு வந்த அவமானப்படவும் .. ஹா ஹா//

  கொக்காமக்கா உமக்கு அம்புட்டு சந்தோஷமாய்யா ஹா ஹா ஹ ஹா...
  நம்ம எங்கிட்டு நின்னாலும் ஒன் மேன் ஆர்மின்னு தல சொல்லாமல் சொல்றாரு தெரிஞ்சிக்கோங்க ஹே ஹே ஹே ஹே ஹே...

  பதிலளிநீக்கு
 18. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

  அடப்பாவமே எனக்கு அல்வாவா அவ்வ்வ்வ்வ்வ்.....


  வாடி.. வா

  பதிலளிநீக்கு
 19. //சென்னை பித்தன் கூறியது...
  சி.பி.செந்தில்குமார் கூறியது...

  //நாஞ்சில் மனோ .. எங்ங்கிருந்தாலும் அண்னன் கடைக்கு வந்த அவமானப்படவும் .. ஹா ஹா//
  ஏங்க பாவம்,அவரைக் கலாய்க்கறீங்க! மனோ இவர்கள் கமெண்டுக்கெல்லாம் நான் பொறுப்பில்லை!//

  நம்ம நண்பனுங்க நம்மளை கலாயிப்பது சந்தோஷம்தானே தல....

  பதிலளிநீக்கு
 20. >>Your comment has been saved and will be visible after blog owner approval.

  அண்னே... பிரபல பதிவர்னா இந்த மாதிரி சோதனைகள் வரத்தான் செய்யும்.. ஹா ஹா

  பதிலளிநீக்கு
 21. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  // அடப்பாவமே எனக்கு அல்வாவா அவ்வ்வ்வ்வ்வ்.....//
  என்ன செய்ய?க்விதையில் எந்த இடத்திலும் சேர்க்க முடியவில்லை!so,last,but not the least!

  பதிலளிநீக்கு
 22. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //நான் போலீஸ் ஸ்டேசன் போறேன் பெட்டிஷன் குடுக்க...//
  குடுத்தாச்சா?

  பதிலளிநீக்கு
 23. MANO நாஞ்சில் மனோ கூறியது

  //நம்ம எங்கிட்டு நின்னாலும் ஒன் மேன் ஆர்மின்னு தல சொல்லாமல் சொல்றாரு //
  கரெக்டா சொல்லிட்டீங்க!

  பதிலளிநீக்கு
 24. சி.பி.செந்தில்குமார் கூறியது...
  //வாடி.. வா//
  உங்க மேலேயும்தான் பெட்டிசன் குடுத்திருக்கிறாராம்!

  பதிலளிநீக்கு
 25. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  //அண்னே... பிரபல பதிவர்னா இந்த மாதிரி சோதனைகள் வரத்தான் செய்யும்.. ஹா ஹா//
  மனோ!எவ்வளவு அன்பு பாருங்க!உங்களைப் பிரபல பதிவர் என்று பாராட்டுகிறார்,cps!

  பதிலளிநீக்கு
 26. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  // நம்ம நண்பனுங்க நம்மளை கலாயிப்பது சந்தோஷம்தானே தல....//
  ஆஹா!

  பதிலளிநீக்கு
 27. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //அட்டகாசமா ஒரு பதிவு. சூப்பர்....//
  நன்றி மனோ!

  பதிலளிநீக்கு
 28. இப்படியும் கவிதை எழுதலாமா? அட்ரா சக்க....அட்ரா சக்க...(எப்படி நான் ஒரு வலைப்பூவை இணைத்தேன்)

  பதிலளிநீக்கு
 29. இப்படியும் கவிதை எழுதலாமா? அட்ரா சக்க....அட்ரா சக்க...(எப்படி நான் ஒரு வலைப்பூவை இணைத்தேன்)

  பதிலளிநீக்கு
 30. ரஹீம் கஸாலி கூறியது...
  //இப்படியும் கவிதை எழுதலாமா? அட்ரா சக்க....அட்ரா சக்க...(எப்படி நான் ஒரு வலைப்பூவை இணைத்தேன்)//
  அருமை சிஷ்யா!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 31. இதோ நானும் வந்திட்டன். ஆஹா, இப்படி கூட கவிதை எழுதலாமா? அசத்திடேங்க போங்க!
  கவுஜ கவுஜன்னு எல்லோரும் எழுதறாங்களே அப்டினா என்னான்னு எனக்கு இன்று வரை தெரியாது. சொல்லுங்களேன்.

  பதிலளிநீக்கு
 32. FOOD கூறியது...

  //இதோ நானும் வந்திட்டன். ஆஹா, இப்படி கூட கவிதை எழுதலாமா? அசத்திடேங்க போங்க!
  கவுஜ கவுஜன்னு எல்லோரும் எழுதறாங்களே அப்டினா என்னான்னு எனக்கு இன்று வரை தெரியாது. சொல்லுங்களேன்.//
  கவிதைதான்;ஆனால் கவிதை இல்லை!அதுதான் கவுஜ!
  வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நன்றி!

  பதிலளிநீக்கு
 33. கவுஜ சூப்பரா... இருக்குங்க... தலைவா..!!!

  பதிலளிநீக்கு
 34. பிரவின்குமார் சொன்னது…

  //கவுஜ சூப்பரா... இருக்குங்க... தலைவா..!!!//

  நன்றி பிரவின்குமார்!

  பதிலளிநீக்கு
 35. நல்ல கவிதை தலைவா ! ஆனால் கவுஜனு சொல்லி தமிழ் மொழியை கொச்சப்படுத்தாதீங்க .. முடிந்த வரை நல்ல தமிழில் தலைப்பு வையுங்க.. தல !

  பதிலளிநீக்கு
 36. இக்பால் செல்வன் கூறியது...

  // நல்ல கவிதை தலைவா ! ஆனால் கவுஜனு சொல்லி தமிழ் மொழியை கொச்சப்படுத்தாதீங்க .. முடிந்த வரை நல்ல தமிழில் தலைப்பு வையுங்க.. தல !//

  அது கவிதைதான்;ஆனால் கவிதை இல்லை;கவிதை மாதிரி;அதுதான் கவுஜ!

  நீங்கள் சொல்வதை நிச்சயம் கருத்தில் கொள்வேன்!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 37. வார்த்தைகளை அழகாய்க் கோர்த்து ஒரு கவிதை படைத்து விட்டீர்களே! நன்று.

  பதிலளிநீக்கு
 38. சிவகுமாரன் கூறியது...

  //நம்ம கவுஜயை மறந்திட்டீங்களே//
  மறக்க முடியுமா!கவிதை என்பதன் மறு பெயர் சிவகுமாரன் அல்லவா? சேர்க்க முயன்றும் இயலவில்லை!இப்போது மீண்டும் ஒரு முயற்சி!
  தேன் சொட்டும் சிவகுமாரன் கவிதைகள் போல்
  என் நெஞ்சில் நாளும் நிறைந்தி
  ருக்கும் உன் ’வடிவு’!
  (இலைங்கைத்தமிழில் எனக்குப் பிடித்த சொல் வடிவு)

  நல்லாருக்கா,கவிஞரே!

  பதிலளிநீக்கு