தொடரும் தோழர்கள்

திங்கள், மார்ச் 28, 2011

உலகம் அழியப்போகிறது!

உங்களுக்கு நிறைவேறாத ஆசைகள் ஏதாவது இருக்கின்றதா?

இதை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்து அது முடியாமற் போனவை ஏதாவது உண்டா?

முக்கியமான சில செயல்களைச் செய்யாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே வருகிறீர்களா?

வாழ்க்கையில் நாலு பேருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தும் எதுவும் செய்யாமல் இருக்கிறீர்களா?

எல்லாவற்றையும் உடனே செய்து முடித்து விடுங்கள்!இனிக் கால தாமதம் வேண்டாம்! ஏனெனில் உங்கள் வசம் இருக்கும் காலம் மிகக் குறைவு!

ஆம்! இந்த உலகம் அழியப்போகிறது!

வரும் மே மாதம்,21ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு உலகம் அழியப் போகிறது!

உலகில் உள்ளவர்களில் 2 விழுக்காடு மக்கள்,அந்த நேரத்தில் சொர்க்கம் சென்றடைவர்!மற்றவர்,மறு உலகம் சேர்வர்!

இது நான் சொல்லவில்லை;ஓக்லேண்ட்,கலிஃபோர்னியாவில் இருக்கும்,89 வயதான ஹரால்ட் கேம்பிங்க் என்ற மதபோதகர் கூறுகிறார்.

ஒரு பொறியாளராக இருந்து,போதகராக மாறிய இவர்,இவரைத்தொடர்பவர்களின் நன்கொடையினால் தொடங்கிய 66 வானொலி நிலையங்கள் மூலமாகப் பிரசாரம் செய்து வருகிறார்.அந்தப் பிரசாரத்தில் அவர் கூறியதே இது!யு.எஸ்.ஸில் 2000 விளம்பர அட்டைகள் மூலமும் இது விளம்பரப்படுத்தப் பட்டுள்ளது!

சிலஆறுதல்கள்—

உலககோப்பை கிரிக்கெட் முடிந்து விடும்!

தமிழ்நாட்டில் தேர்தல் முடிவு தெரிந்து புதிய ஆட்சி மலர்ந்து விடும்!

இப்போதைக்கு இவைதானே நம் முக்கிய கவலைகள்!

29 கருத்துகள்:

 1. சீரியஸ்ஸா பதிவு போட்டுட்டு காமடியா முடிச்சிட்டிங்களே? சில ஆறுதல்கள் என்று போடாமல் இருந்திருந்தால் சுவாரஸ்யமான பின்னூட்டங்களை படித்திருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 2. அய்யயோ... அப்போ IPL யாரு win பண்ணுவாங்கன்னு தெரியாதா? :(

  பதிலளிநீக்கு
 3. //சிலஆறுதல்கள்—

  உலககோப்பை கிரிக்கெட் முடிந்து விடும்!

  தமிழ்நாட்டில் தேர்தல் முடிவு தெரிந்து புதிய ஆட்சி மலர்ந்து விடும்!

  இப்போதைக்கு இவைதானே நம் முக்கிய கவலைகள்!//

  //THOPPITHOPPI கூறியது...
  சீரியஸ்ஸா பதிவு போட்டுட்டு காமடியா முடிச்சிட்டிங்களே? சில ஆறுதல்கள் என்று போடாமல் இருந்திருந்தால் சுவாரஸ்யமான பின்னூட்டங்களை படித்திருக்கலாம்.

  28 மார்ச், 2011 12:01 pm

  முத்துசிவா கூறியது...
  அய்யயோ... அப்போ IPL யாரு win பண்ணுவாங்கன்னு தெரியாதா? ://

  ஏன் அழியக் கூடாது (?) என்ற கேள்வியும் உண்டு

  பதிலளிநீக்கு
 4. THOPPITHOPPI கூறியது...

  //சீரியஸ்ஸா பதிவு போட்டுட்டு காமடியா முடிச்சிட்டிங்களே? சில ஆறுதல்கள் என்று போடாமல் இருந்திருந்தால் சுவாரஸ்யமான பின்னூட்டங்களை படித்திருக்கலாம்.//

  உலகம் அழிஞ்சா என்னங்க?நமக்கு முக்கியம் எது?கிரிக்கெட்தான்!
  வருகைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 5. முத்துசிவா கூறியது...

  //அய்யயோ... அப்போ IPL யாரு win பண்ணுவாங்கன்னு தெரியாதா? :(//

  கவலைப் படாதீங்க!HPL (heaven/hell) premier leaague நடக்கும்!
  வருகைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 6. ஆகாயமனிதன்.. கூறியது...

  //ஏன் அழியக் கூடாது (?) என்ற கேள்வியும் உண்டு//
  ஏன் அழிய வேண்டும் என்ற கேள்வியும் அதில் அடக்கமல்லவா? வருகைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 7. //இப்போதைக்கு இவைதானே நம் முக்கிய கவலைகள்! //

  ஹா ஹா ஹா ஹா டச்சிங் டச்சிங்...

  பதிலளிநீக்கு
 8. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //இப்போதைக்கு இவைதானே நம் முக்கிய கவலைகள்! //

  // ஹா ஹா ஹா ஹா டச்சிங் டச்சிங்...//
  நன்றி மனோ!

  பதிலளிநீக்கு
 9. அய்யய்யோ!உலகம் மே மாதம் 21 ஆம் தேதி அழியப்போகிறதா? எனக்கு ஒரே ஒரு நிறைவேறாத ஆசை உண்டு.
  அது வேறொன்றும் இல்லை. பதிவர்களில் சிலர் தரக்குறைவாகவும், தனக்குப்பிடிக்காதவர்களை தரம் தாழ்ந்து வசை பாடி பதிவிடுகிறார்கள்.இவை எல்லாம் மறைந்து எல்லோரும் ஒருவரை ஒருவர் நேசிக்கும் நாள் வருமா என்ற ஆசைதான்.
  அது மே மாதம் 21 ஆம் தேதிக்குள் நடக்குமா? சொல்லுங்களேன்!!

  பதிலளிநீக்கு
 10. வே.நடனசபாபதி கூறியது...

  அய்யய்யோ!உலகம் மே மாதம் 21 ஆம் தேதி அழியப்போகிறதா? எனக்கு ஒரே ஒரு நிறைவேறாத ஆசை உண்டு.
  அது வேறொன்றும் இல்லை. பதிவர்களில் சிலர் தரக்குறைவாகவும், தனக்குப்பிடிக்காதவர்களை தரம் தாழ்ந்து வசை பாடி பதிவிடுகிறார்கள்.இவை எல்லாம் மறைந்து எல்லோரும் ஒருவரை ஒருவர் நேசிக்கும் நாள் வருமா என்ற ஆசைதான்.
  அது மே மாதம் 21 ஆம் தேதிக்குள் நடக்குமா? சொல்லுங்களேன்!!


  இது ஆசையா,பேராசையா?
  அடிப்படை மனித குணம் மாறுமா?
  உங்கள் ஆசை நிறைவேறினால் நல்லதுதான்!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 11. என்னங்க இப்படி சொல்லிட்டிங்க...


  மனிதனின் ஆசை இப்படி கொஞ்ச காலத்தில் எப்படி தீர்த்துக் கொள்வது...

  பார்ப்ப்போம் என்வாகிறது என்று...
  அழிந்துவிட்டால் என்ன பார்ப்பது?...

  பதிலளிநீக்கு
 12. அப்போ நான் வாங்கின வங்கிகடன் எல்லாம் கட்ட வேண்டாம். ஐயோ ஜாலி..ஜாலி.

  பதிலளிநீக்கு
 13. தாத்தாவின் இலவசங்களை வாங்காமல் சாவதில் வருத்தம் உண்டு. அந்த குடும்பம் அழிவதால் அடுத்து தோன்றும் உலகமாவது நன்றாக இருக்கும். அது போதும்.

  பதிலளிநீக்கு
 14. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  // என்னங்க இப்படி சொல்லிட்டிங்க...
  மனிதனின் ஆசை இப்படி கொஞ்ச காலத்தில் எப்படி தீர்த்துக் கொள்வது...
  பார்ப்ப்போம் என்வாகிறது என்று...
  அழிந்துவிட்டால் என்ன பார்ப்பது?...//

  வாழ்க்கையே அநித்யமானது தானே,ஐயா!
  எந்த ஆசை ,எந்ததேவை, முக்கியமோ அதற்கு முன்னிரிமை கொடுத்து முடித்து விட வேண்டியதுதான்!
  (தேர்வு காலையில் மட்டுமா?)
  நன்றி சௌந்தர்!

  பதிலளிநீக்கு
 15. கே. ஆர்.விஜயன் கூறியது...
  //அப்போ நான் வாங்கின வங்கிகடன் எல்லாம் கட்ட வேண்டாம். ஐயோ ஜாலி..ஜாலி.//

  கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கிறது பார்த்தீர்களா!
  நன்றி விஜயன்!

  பதிலளிநீக்கு
 16. கே. ஆர்.விஜயன் கூறியது...

  // தாத்தாவின் இலவசங்களை வாங்காமல் சாவதில் வருத்தம் உண்டு. அந்த குடும்பம் அழிவதால் அடுத்து தோன்றும் உலகமாவது நன்றாக இருக்கும். அது போதும்.//

  அவர் பரமாத்மா மாதிரி-சம்பவாமி யுகே யுகே!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 17. நேத்து வரைக்கும் நீங்க மட்டும் தான் "பித்தன்" ஆக இருந்தீங்க ! இப்ப என்னடான்னா, அந்த அராத்து...சாரி, ஹரால்டு கூட சேந்துகிட்டு எங்க எல்லாரையுமே "பித்தர்களா" மாத்திடுவீங்க போலிருக்கே? இது உங்களுக்கே நல்லா இருக்கா?

  பதிலளிநீக்கு
 18. ஏன் சார், இப்படி வயத்துல புளிய கரைகிறீங்க..! இன்னும் என்னன்னவோ இருக்கு , அதை எல்லாம் முழுக்க இல்லாட்டியும் கொஞ்சமாவது பார்த்துட்டு அப்புறமா செத்து போகலாம்னு இருக்கேன். நாசமா போகட்டும் அந்த ஹரால்ட் கேம்பிங்க்ம் அந்த ஆளோட மத போதனையும். போங்க சார் மூட் அவுட் ஆகிடீங்க....!

  பதிலளிநீக்கு
 19. நல்லா சொன்னீங்க. இது நல்லவர்களுக்கு தகவல். பொல்லாதவர்களுக்கு எச்சரிக்கை.

  பதிலளிநீக்கு
 20. மனம் திறந்து... (மதி) கூறியது...

  //நேத்து வரைக்கும் நீங்க மட்டும் தான் "பித்தன்" ஆக இருந்தீங்க ! இப்ப என்னடான்னா, அந்த அராத்து...சாரி, ஹரால்டு கூட சேந்துகிட்டு எங்க எல்லாரையுமே "பித்தர்களா" மாத்திடுவீங்க போலிருக்கே? இது உங்களுக்கே நல்லா இருக்கா?//
  பித்து இல்லாதவர் யார்? இறைவனே பித்தன்தானே!
  வருகைக்கு நன்றி மதி!

  பதிலளிநீக்கு
 21. வெட்டிப்பையன்...! கூறியது...

  // ஏன் சார், இப்படி வயத்துல புளிய கரைகிறீங்க..! இன்னும் என்னன்னவோ இருக்கு , அதை எல்லாம் முழுக்க இல்லாட்டியும் கொஞ்சமாவது பார்த்துட்டு அப்புறமா செத்து போகலாம்னு இருக்கேன். நாசமா போகட்டும் அந்த ஹரால்ட் கேம்பிங்க்ம் அந்த ஆளோட மத போதனையும். போங்க சார் மூட் அவுட் ஆகிடீங்க....!//

  கிட்டத்தட்ட இரண்டு மாதம் பாக்கி இருக்கிறது.திடீரென்று வரும் முடிவை விட முன்னமே தெரிவது நல்லதுதானே! இதுக் கெல்லாம் மூட் அவுட்டாகலாமா?

  நன்றி வெட்டிப் பையன்!

  பதிலளிநீக்கு
 22. FOOD கூறியது...

  // நல்லா சொன்னீங்க. இது நல்லவர்களுக்கு தகவல். பொல்லாதவர்களுக்கு எச்சரிக்கை.//
  ஏதாவது ஒரு பிறவியில் எப்போதாவது நடக்கத்தானே போகிறது!

  வருகைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 23. நீங்க கிளப்பின பீதியிலேயே பாதிப்பேர் காலியாயிடுவாங்கன்னு நெனைக்கிறேன்! அப்படீன்னா .... May 23, Monday நம்ப Blog Traffic Rank 20க்குள்ள வந்துடுங்கிறீங்க! ஹூம்ம் ...அப்போ சரி ! ரைட்... ஓகே !

  பதிலளிநீக்கு
 24. போகும் போது கொண்டு போக முடியாது, அதனால் எனக்குத் தெரிந்த ஒரு அப்பாவியின் பேங்க் அகவுண்டில் எல்லாவற்றையும் இப்பவே ட்ரேன்ஸ்பர் செய்தால் 2 விழுக்காடுக் கூட்டத்தில் நீங்கள் சேர வாய்ப்புண்டு. சொல்லிவிட்டேன். பேங்க் அகவுன்ட் விவரம் அனுப்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 25. மனம் திறந்து... (மதி) கூறியது...

  // நீங்க கிளப்பின பீதியிலேயே பாதிப்பேர் காலியாயிடுவாங்கன்னு நெனைக்கிறேன்! அப்படீன்னா .... May 23, Monday நம்ப Blog Traffic Rank 20க்குள்ள வந்துடுங்கிறீங்க! ஹூம்ம் ...அப்போ சரி ! ரைட்... ஓகே !//
  கவுண்ட் டௌன் ஆரம்பமாகி விட்டது!இன்று முதல் எழுதிக் குவிங்க!20க்குள்ள என்ன, முதலாவதாகவே வந்துடலாம்! வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 26. அப்பாதுரை கூறியது...

  //போகும் போது கொண்டு போக முடியாது, அதனால் எனக்குத் தெரிந்த ஒரு அப்பாவியின் பேங்க் அகவுண்டில் எல்லாவற்றையும் இப்பவே ட்ரேன்ஸ்பர் செய்தால் 2 விழுக்காடுக் கூட்டத்தில் நீங்கள் சேர வாய்ப்புண்டு. சொல்லிவிட்டேன். பேங்க் அகவுன்ட் விவரம் அனுப்புகிறேன்.//

  எப்படியெல்லாம் யோசிக்கறாங்க?
  எல்லாமே போகப் போகுதாம்!வங்கிக் கணக்கு மட்டும்?!
  நன்றி அப்பாதுரை!

  பதிலளிநீக்கு
 27. ஹும்.. நல்லாவே டெவலப் ஆயிட்டாய்ங்கப்பா.

  அதுசரி போஸ்ட் கார்டுலதான் டர்ராக்கிட்டிருந்தாய்ங்க - அப்பாறம் மெயிலுக்கு வந்தாய்ங்க

  இப்ப ரேடியோ வேறயா. நல்லாவே வெளங்கும்யா..

  பதிலளிநீக்கு
 28. உலகம் அழியப்போகுது அகவுன்ட் என்ன அகவுன்ட்னு எல்லாருமே அப்படி நெனச்சு அகவுன்ட் ட்ரான்ஸ்பர் பண்ணமாட்டாங்களா (நப்பாசை)...

  பதிலளிநீக்கு
 29. அப்பாதுரை கூறியது...

  //உலகம் அழியப்போகுது அகவுன்ட் என்ன அகவுன்ட்னு எல்லாருமே அப்படி நெனச்சு அகவுன்ட் ட்ரான்ஸ்பர் பண்ணமாட்டாங்களா (நப்பாசை)..//

  கணக்கு எண் கொடுத்திருந்தால் இன்று ஒரு நல்ல தொகை அஉப்பியிருக்கலாம்!(ஏப்ரல் 1)

  பதிலளிநீக்கு