தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஜூலை 07, 2015

முத்தத்தில் என்னதான் இருக்கிறது?!



முத்தம்!!

சொல்லும்போதே,கேட்கும்போதே,நினைக்கும்போதே மனசெல்லாம் ஒரு மகிழ்ச்சியை, உடலெல்லாம் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும் ஒரு சொல். நாம் முத்தம் என்றவுடன் நினைப்பது உதடுகள் இணையும் முத்தத்தையே.ஆனால் முத்தத்தில் எத்தனை வகை?

பாசத்தின் வெளிப்பாடாக நெற்றியின் உச்சியில் இடும் முத்தம்.

குழந்தையை அணைத்துக் கன்னத்தில் இடும் முத்தம்.(கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி)

ஒரு மரியாதைக்காகக் கையில் இடும் முத்தம்.(இங்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. மங்களூரில் ஒரு கிறித்துவ நண்பரின் திருமணத்துக்கு சர்ச்சுக்குப் போயிருந்தோம்.திருமணம் முடிந்ததும் அனைவரும் மணப்பெண்ணின் கையில் முத்தமிட்டனர்.நாங்களும்தான்.எங்கள் நண்பர் ஒருவர் நேரம் கழித்து வந்தார்.நாங்கள் சொன்னதைக் கேட்டு மிஸ், பண்ணி விட்டேனே என்று வருத்தப்பட்டார்!)

முன்பெல்லாம் ஆங்கிலப் படங்களில்தான் முத்தத்தைப் பார்க்க முடியும்.ஆனால் இப்போதெல்லாம் தமிழ்ப் படங்களிலும் அவ்வப்போது முத்தத்தைப் பார்க்க முடிகிறது-உபயம்-உலகநாயகன்.

அப்படி என்னதான் இருக்கிறது இந்த முத்தத்தில்?அதன் சுவை என்ன?

வள்ளுவர் சொல்கிறார்---

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.

மென்மையான மொழிகளைப் பேசுகின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர்,பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும் (டாக்டர்.மு.வ.-உரை).

நான் ரசித்த சிவகுமாரனின் கவிதை ஒன்று

“ஆரஞ்சுத் தேன்சுளையா !
அங்கென்ன தத்தையொன்று
கூரலகால் கொத்திவந்த
கோவையா- யார்தான்
பவளத்தைக் கீறிவைத்தார்
பார்ப்போம் ! அடடா
அவளின் இதழா
அவை.

இப்படியிருந்தால் சுவைக்காமல் இருக்க முடியுமா?


முடிப்பதற்கு என் பழைய கவிதை ஒன்றிலிருந்து சில வரிகள்,இதழின் பெருமை பேசுபவை!

//என்னிடம் இருக்கும் செல்வங்கள் ஏராளம்
அடைந்தவை சில,அபகரித்தவை சில
அனைத்துமே விலை மதிப்பற்றவை
பார்த்தால் நீங்கள் சிரிப்பீர்கள்
அதன் மதிப்புத் தெரியாத காரணத்தால்
பார்க்கலாம் வாருங்கள்.
இதோ இப்பெட்டியில் பட்டுத்துணியில்
படுத்திருக்கும் இந்த ஸ்பூன்.
ஐஸ்க்ரீம் பார்லரில் ஆட்டையைப் போட்டது.
ஐஸ்க்ரீமைத் துளிதுளியாய் அவளெடுத்து
செம்பவள இதழ் திறந்து உண்ணும்போது
அவள் உதட்டில் உரசும் பாக்கியம் பெற்றது.
இன்றைக்கும் அவள் இதழின் இனிமை
இதை விட்டு நீங்கவில்லை!
இந்த டம்ப்ளரில் எழுதியிருக்கிறது
சாந்தி விஹாரில்  திருடப்பட்டதென்று
சாயம் பூசாமலே சிவந்திருக்கும்
அவள் உதடுகள் தழுவிய சுகம் கண்டவை.
வேறு யார் உதடும் இதில் படக்கூடாது.
எனவே நான் எடுத்து வந்து விட்டேன்.
அந்தக் கசங்கிய டிஷ்யூக் காகிதம்!
சாப்பிட்ட பின் நளினமாய் அவள்
இதழொற்றிக்  கசக்கியெறிந்த  காகிதம்
சட்டைப் பையில் வைத்து எடுத்து வரும்போது
அவள் இதழ் என் மார்பில் பதிவதாய் உணர்ந்த நாள்.//

எல்லா இளைஞர்களுக்கும்  இந்த முதிய இளைஞனின் முத்த தின வாழ்த்துகள்! 

(முத்தத்துக்கு என்று தனியாக ஒரு தினம் வேண்டுமா என்ன!)

மாயா,மாயா! பாகம் இரண்டு!



அண்ணே ! அண்ணே! என்ன தூக்கமா?நான் வந்துட்டேண்ணே..

அதானே என்னடா ஒரு அழுகின நாத்தம் வருதேன்னு பாத்தேன்!

போங்கண்ணே.புதுசா செண்டு போட்டிருக்கேன்! 

என்னடா திடீர்னு?

வலைப்பூவில வெளியிட போட்டோ பிடிச்சேன் அதுக்குத்தான் செண்டு!

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சரி சொல்லுங்கண்ணே.

எங்கடா விட்டேன்!

பின்னூட்டம் பத்திச் சொன்னீங்க!

இன்னைக்கு ஏதாவது எழுதினயா?

ஆமாண்ணே!சாத்தூர்ல கூடைல இனிப்புச்சேவு காராச்சேவு வாங்கிச்சாப்பிட்டதை அதன் ருசியை அதனோட தனிதன்மையை எழுதியிருக்கேன்.

தேறிட்டடா!

சரி அப்புறம் சொல்லுங்கண்ணே!

நம்ம பதிவுக்கு நிறையப்பேரை வரவைக்க ஒரு முக்கியமான விசயம் இருக்கு!

திங்கள், ஜூலை 06, 2015

மாயா!மாயா!தமிழ்மணம் ரேங்க் எனும் மாயா!!



வாங்கண்ணே!

ஏண்டா பனை மட்டைத் தலையா!என் வூட்டுக்கு வந்து என்னையே வாங்கன்னு கூப்பிடறே?

அது இருக்கட்டும்ணே! ஒரு சந்தோசமான சமாசாரம்.

என்னடா? ஒன் பொண்டாட்டி ராமசாமியோட ஒடிப்போயிட்டாளா?

அட சும்மா இருங்கண்ணே.நான் ஒரு வலைப்பதிவு ஆரம்பிசிட்டேண்ணே!

ஞாயிறு, ஜூலை 05, 2015

ஹாலிடே,ஜாலிடே!

ஓர் ஆன்மீகப் பேச்சாளர் பள்ளிச் சிறுவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றிக் கொண்டிருந்தார். பாவம்,புண்ணியம் பற்றி எல்லாம் விளக்கிய அவர் சிறுவர்களிடம் கேட்டார்”நான் என்னிடம் இருக்கும் பணத்தையெல்லாம் ஏழைகளுக்குத் தானம் செய்து விட்டால் சொர்க்கம் போவேனா?”

சிறுவர்கள் கோரஸாகச் சொன்னார்கள்”முடியாது”


”நான் தினமும் கோவிலுக்குச் சென்று கோவிலைச் சுத்தம் செய்து பக்தர்களுக்குப் பணிவிடை செய்தால் சொர்க்கம் போவேனா” அவர் கேட்டார்

“மாட்டீர்கள்” சிறுவர்கள் பதில்

”பின் என்ன செய்தால்  நான் சொர்க்கம் போவேன்”

உரத்த குரல் எழுந்தது”செத்துப்போனால்”!

வெள்ளி, ஜூலை 03, 2015

பாபநாசம்



இன்று வெளியாகியுள்ள படம் பாபநாசம்.

முதலில் உலகநாயகனுக்கு வாழ்த்துகள்,இந்தப் படம் வெற்றியடைய.

சிவாஜியை விடக் கமல் சிறந்த நடிகர் எனச் சிலர் சொல்கிறார்கள்

இருக்கத்தானே வேண்டும்?

வியாழன், ஜூலை 02, 2015

தேடல்



செல்வம் ஒன்றைத் தொலைத்து விட்டேன்

எல்லா மிடங்களிலும் தேடிக் களைத்தேன்

வீடு வீடாய்

தெருத் தெருவாய்

ஊர் ஊராய்

நாடு நாடாய்

கிடைக்கவேயில்லை!

ஏன்?

சென்றன பல ஆண்டுகள் 

கிடைத்தது எனக்கும் ஒரு போதி
புரிந்தது அந்நாள்

எல்லா இடங்களிலும் தேடியிருக்கிறேன்

தொலைத்த இடம் தவிர!



புதன், ஜூலை 01, 2015

என்னைப்பார்,யோகம் வரும்!



இன்று ஸ்வாமி ஒரு கடையில் ஒரு போர்டைப் பார்த்தார்

அதில் எழுதியிருந்த வாசகம்”என்னைப்பார் யோகம் வரும்”

படம் வேறு போட்டிருந்தது.என்ன படம் என்று பார்த்தால் ஒரு கழுதையின் படம்!

அந்தப்பத்தைப் போட்டு, பார்த்தால் யோகம் வரும் என்றால்,யாருக்கு யோகம் வரும்?

போர்டைப் பார்ப்பவருக்கா?

போர்டைத் தொங்க விட்ட கடைக் காரருக்கா?

அல்லது கழுதைக்கா?