தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஜூலை 07, 2015

மாயா,மாயா! பாகம் இரண்டு!அண்ணே ! அண்ணே! என்ன தூக்கமா?நான் வந்துட்டேண்ணே..

அதானே என்னடா ஒரு அழுகின நாத்தம் வருதேன்னு பாத்தேன்!

போங்கண்ணே.புதுசா செண்டு போட்டிருக்கேன்! 

என்னடா திடீர்னு?

வலைப்பூவில வெளியிட போட்டோ பிடிச்சேன் அதுக்குத்தான் செண்டு!

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சரி சொல்லுங்கண்ணே.

எங்கடா விட்டேன்!

பின்னூட்டம் பத்திச் சொன்னீங்க!

இன்னைக்கு ஏதாவது எழுதினயா?

ஆமாண்ணே!சாத்தூர்ல கூடைல இனிப்புச்சேவு காராச்சேவு வாங்கிச்சாப்பிட்டதை அதன் ருசியை அதனோட தனிதன்மையை எழுதியிருக்கேன்.

தேறிட்டடா!

சரி அப்புறம் சொல்லுங்கண்ணே!

நம்ம பதிவுக்கு நிறையப்பேரை வரவைக்க ஒரு முக்கியமான விசயம் இருக்கு!

என்னண்ணே?சொல்லுங்கண்ணே.

ஏண்டா என் இடுப்பை சொறியறே!

கேட்டுக்கோ! இடுகையோட தலைப்பு!அது முக்கியம்.சுண்டி இழுக்கற மாதிரி தலைப்பு வைக்கணும்.ஆனா அதே சமயம் சொல்ற விசயத்துக்கும் தலைப்புக்கும் சம்பந்தமும் இருக்கணும்.அப்பத்தான் யாரும் குத்தம் சொல்ல முடியாது.எனக்குத் தெரிஞ்ச மூத்த பதிவர் ஒருத்தர் இருக்காரு.அவர் சில சமயம் தலைப்பை வச்சிட்டு அதுக்கு சரியாப் பதிவு எழுதுவாரு!!

இன்னைக்கு எழுதினயே!ஓட்டு ஏதாவது வந்ததா?

ரெண்டு ஓட்டு வந்திச்சண்ணே!

உன் ஓட்டையும் போட்டுக்கோ!

போடலாமாண்ணே!

உன் பதிவு உனக்கே பிடிக்கலன்ன போடாதே.முன்னால சில பதிவுக்கு 30 , 40 ஓட்டெல்லாம் வரும்.அப்புறம்தான் தெரிஞ்சது ஒரே ஆளே பல பேர்ல ஓட்டுப் போடறாருன்னு! 

அது எப்படிண்ண!

இன்னைக்கு வரைக்கும் எனக்கும்தெரியலே!அத்தனை மின்னஞ்சல் கணக்கு வேணுமில்ல!

கண்டுபிடிச்சுச் சொல்லுங்கண்ணே!

ஒழுங்கா பதிவு எழுதற வழியைப் பாரு.அப்புறம் உனக்கு யார் ஓட்டுப் போட்டாங்கன்னு கூடக் கண்டு பிடிக்க முடியும்!அப்பத்தான் அவங்களுக்கு நீயும் ஓட்டுப்போடலாம்!

எப்படிண்ணே?

இங்கே போய்ப்பாரு-
 

சரிண்ணே.


இதெல்லாம் நீ கடைப்பிடி அப்புறம் உன் ரேங்க் எங்கேயோ போகப்போகுது பாரு!

நெசம்மாவாண்ணே?

பின்ன என்னா ஜோக்கா அடிக்கறேன்?பகவான் மேல ஆணையா,பழனி சாமி மேல ஆணையா,எல்லாரையும் பின்னாலே தள்ளிட்டு ஒரு கில்லர் மாதிரி  பயமுறுத்தப்போறே
நீதான் நம்பர் 1.போ!

15 கருத்துகள்:

 1. // உன் பதிவு உனக்கே பிடிக்கலன்ன போடாதே // ஹா... ஹா... செம...

  பதிலளிநீக்கு
 2. ஹஹஹஹஹஹஹ்....அட நாமே நமக்கும் போட்டுக்கலாமா? இதுவரை போட்டதில்லை...அதெப்படி நம்ம பதிவுக்கு நம்மளே ஓட்டு போடறதுனு...மத்தவங்கதான் அதுக்குப் போடணும்...நல்ல்லாருந்தானு நினைச்சுருந்தோம்...இப்படியும் போகுதா ...அப்புறம் நிறைய ஓட்டு ஒரே ஆளா ஆச்சரியமா இருக்குது.... நிறையதெரிஞ்சுக்கிட்டோம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போட்டதே இல்லையா...? க்கும்...

   பல உண்மைகள் வெளியே வருது பாருங்க ஐயா...

   நீக்கு
  2. டிடி நிஜமாவே ....நாங்க எங்க பதிவுக்கு நாங்களே போட்டதில்லை...மத்தவங்க பதிவுக்கு ....போடறதுண்டு...அப்புறம் ஜி + பண்றதுண்டு எங்க பதிவும் மத்தவங்க பதிவும்....

   நீக்கு
 3. "
  பின்ன என்னா ஜோக்கா அடிக்கறேன்?பகவான் மேல ஆணையா,பழனி சாமி மேல ஆணையா,எல்லாரையும் பின்னாலே தள்ளிட்டு ஒரு கில்லர் மாதிரி பயமுறுத்தப்போறே!

  நீதான் நம்பர் 1.போ! "

  ஓகோ...

  அழகா எழுதியிருக்கீங்க.. ஏதோ திண்ணையில உக்கார்ந்து கவுண்டமனி செந்தில் பேசிக்கொள்கிறமாதிரி ஒரு பிம்பம் உருவாக்கியிருக்கீங்க..

  God Bless You

  பதிலளிநீக்கு
 4. #எனக்குத் தெரிஞ்ச மூத்த பதிவர் ஒருத்தர் இருக்காரு.அவர் சில சமயம் தலைப்பை வச்சிட்டு அதுக்கு சரியாப் பதிவு எழுதுவாரு!!#
  மூத்த பதிவர் என்று நீங்களே சொல்லி விட்டதால் ,நான் தப்பிச்சேன் :)

  பதிலளிநீக்கு
 5. //எனக்குத் தெரிஞ்ச மூத்த பதிவர் ஒருத்தர் இருக்காரு.அவர் சில சமயம் தலைப்பை வச்சிட்டு அதுக்கு சரியாப் பதிவு எழுதுவாரு!!//

  அவர் யார் என்று தெரிந்துகொள்ள ஒரு சின்ன ‘துப்பு’ கொடுங்களேன்! எனக்கு தெரிந்தவர்தானா என்று சரி பார்த்துக்கொள்வேன்.

  பதிலளிநீக்கு
 6. ரசிக்க : இன்று :

  http://dindiguldhanabalan.blogspot.com/2015/07/O-my-soul-PART-1.html

  பதிலளிநீக்கு
 7. ரொம்பவே ரசித்து சிரித்தேன். பல நல்ல விடயங்களையும் தெரிந்து கொண்டேன் நன்றி வாழ்த்துக்கள் ....!

  பதிலளிநீக்கு